இலங்கை அணியின் தற்போதைய தலைவர் குமார் சங்ககாரா உலகிலேயே சிறந்த துடுப்பாட்ட பாணி கொண்டவர்களில் ஒருவராவார். அனால் அவரது தமையில் தான் எனக்கு என்றும் ஒரு காழ்ப்பு. ஏனெனில் அவர் எடுக்கும் முடிவுகள் பார்க்கும் எமக்கே திருப்தி அழிப்பதில்லை. அப்படியிருக்கையில் கூட விளையாடுபவர்களுக்க எப்படி இருக்கும்.
முக்கியமாக சென்ற வருட T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டி பார்த்தவர்களுக்க தெரியும். இறுதி பந்துப் பரிமாற்றத்தில் 18 ஓட்டம் பெற வேண்டும். அந்த நேரத்தில் முன்னர் சரியாக பந்து வீசாத இசுறு உதானவை கொண்டு வந்தார் அந்த பந்துப் பரிமாற்றத்திலேயே போட்டி முடிந்து விட்டது.
அவருக்கு அரசியல் அழுத்தங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும். தற்போதைய தேர்வுக்குழு (அரவிந்த டி சில்வா) சிறப்பானது தான். இம்முறை T20 உலகக்கிண்ணத்துடன் பதவி விலகப் போவதாக சொல்லியிருந்தார். அப்பதவி கப்புக்கெதராவிற்கு போகுமென்றும் எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் என்ன நடந்ததோ தெரியாது. இன்னமொரு பிரச்சனை தலைவர் தகுதியுடன் தகுந்த ஒரு இளம் வீரர் இல்லை. (வருங்காலத் தலைவர் அஞ்சலோ மத்தயுசை விடுங்க).
இம்முறை T20 உலகக்கிண்ணத்தில் அரையிறுதி வந்தவர்கள் தானே என்று கூட வாதிட முடியாது ஏனெனில் அவர்கள் விளையாடியா 6 போட்டிகளி்ல 3 தான் வென்றார்கள். அத்துடன் 2 போட்டி படு பயங்கரத் தோல்வியாகும். அரையிறுதியில் டில்ஷான் முதலாவது ஓவரில் ஐந்தே ஓட்டங்கள் கொடுத்தும்,பின்னர் அவரை உபயோகிக்காததன் மர்மம் யாருக்குமே தெரியாது.
இன்னுமொரு காரணம் என்னவென்றால் அவரது ராசியற்ற தலமையை கூறவேண்டும். இது சிலரால் மூடநம்பிக்கை என்று சொல்லப்பட்டாலும் விளையாட்டை பொறுத்த வரை பலர் மூடநம்பிக்கைக்கு அடிமையானவர்கள்.
1- கபில்தேவ் சிம்பாப்வேற்க எதிராக 175 அடிக்கும் போது போட்டி முடியும் வரை அமர்நாத் நின்றது நின்றபடியே அசையாமல் நின்றாராம்.
2- கங்கூலி ஒவ்வோரு போட்டியிலும் ஏதாவது புதிதாகக் கொண்டு வருவார்.
3- சச்சினின் கால் காப்புக்குள் ஏதாவது சிவத்த பொருளிருக்கும்.
இப்படி பல இருக்கின்றன.
எனக்கு இம்முறை ஆசியக்கிண்ணம் வரும் என்ற நம்பிக்கை கூட இல்லை காத்திருப்போம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக