விமர்சனம்
இராவணன்
பாடல் என்றால் பிடிக்காதவர் யாருமே இருக்க முடியாது. அதுவும் இப்போது வரும் பாடல்களில் கவிநயத்தை ரசிக்கக் கூடியவாறு ஓரு சில பாடல்களே வருகிறது.
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை (அங்ககாடித்தெரு) என்ற பாடலுக்குப்பிறகு கேட்டவுடனேயே பிடித்த பாடல் என்றால் இதுதான்.
வைரமுத்துவின் இன்னுமொரு சித்திரம் என்றே சொல்லலாம். இராவணன் திரைப்படத்தில் முழுப்பாடலையும் அவரே ஒரே நாளில் எழுதிக்கொடுத்ததாக நண்பர் ஒருவர் சொன்னார். நம்பக்கூடிய விசயம் தான். இனிபடலுக்கு வருவோம்.
பாடியவர்- கார்த்திக், இர்பான்
இசை - A.R. ரகுமான்
படம் - இராவணன்
அடி தேக்கு மரக்காடு பெரிசுதான்
சின்ன தீக்குச்சி உயரம் சிறிசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கடும் தேக்கு மரக்காடு வெடிக்குதடி
உசிரே போகுதே உசிரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
மாமன் தவிக்கிறன் மடிப்பிச்சை கேட்கிறன்
மனசை தாடி என் மணிக்குயிலே
அக்கரைச் சீமையில் நீயிருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமென்று தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைச்சு ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேட்கல
தனியா தவிச்சு உசிர் தடம் கெட்டு திரியுதடி
தனியா குறுகி என்னை தள்ளிவிட்டு சிரிக்குதடி
இந்த மன்மத கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என்மயக்கத்தை தீர்த்து வச்சு மன்னிச்சிடும்மா
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கொட்டி வருகுதே
சத்தியமோ பத்தியமோ
இப்ப தலை சுத்திக்கிடக்குதே
(உசிரே போகுது)
இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதிசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பிப் போகும் ஒழக்கத்தில
விதி சொல்லி வழி போட்ட மனசுக்குள்ள
விதி விலக்கில்லாத விதியுமில்ல
எட்ட இருக்கும் சூரியன் பார்த்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமோ போகல
பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலயே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே
என் கட்டையும் ஒருநாள் சாயலாம்
என் கண்ணில உன்முகம் போகுமா
நாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணிருந்து மனசுக்குள்ள
சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கொட்டி வருகுதே
சத்தியமோ பத்தியமோ
இப்ப தலை சுத்திக்கிடக்குதே
(உசிரே போகுது)
இப்பாடலிலும் வைரமுத்த தானனது விசேட சொற்களுக்கு பஞ்சம் வைக்கல. கவி ஆர்வலரை கவரக் கூடிய இந்த சொற்பிரயோகம் வைர வரியோனுக்கு கை வந்த கலை மன்மத கிறுக்கு, மந்திரிச்சு விட்ட கோழி, அக்கினி பழம் என ஒரு ரவுண்டு அடித்திருக்கிறார்.
இப்பாடலில் வைரமுத்து பல விசயத்தை ஆணித்தரமாக மீள ஞாபகப்படுத்தியுள்ளார். உதாரணமாக ஐவிரல் தீண்டிட நினைக்குதடி என்ற வரியில் தீண்டல் சுகத்தை மீள ஞாபகப்படுத்தியிருக்கிறார். முதல் முறை கிள்ளிப்பார்த்தேன் என்று சித்திராவைப்பாட வைத்து விருது பெற்றது ஞாபகமிருக்கா ?
உவமைகள் சில முன்னர் அறிந்தது போல் இருந்தாலும் அதற்கான எடுகோள்கள் புதிதாய் கவர்ந்திளுக்கிறது. அதிலும்
எட்ட இருக்கும் சூரியன் பார்த்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமோ போகல
என்ற இந்த வரியே பாடலின் ஆழத்தையும் திரைப்படத்தின் கதையையும் உணர வைக்கிறதல்லவா.
செவ்வாய், 15 ஜூன், 2010
இராவணன்
About the Author
நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →
Share This Post
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
மொத்தப் பக்கக்காட்சிகள்
பின்பற்றுபவர்கள்
About Me
இடக்கு முடக்கு கண்டுபிடிப்பு
- சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.
- சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு
- கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு
- வாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....!!!
- காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...???
- வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி..???
- பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்
- தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்
என் திரைப்பட முன்னோட்டம்
இந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்
- ”வல்வைப்படுகொலை ” ஆவணப்படம்
- cinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்
- இலங்கை கிரிக்கேட் அணியும் தமிழீழ தேசியத் தலைவரின் திட்டங்களும்
- குறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி
- இதுவும் என்னுடைய காதல் கதைகளில் ஒன்று தான்....
- எமது உம்மாண்டி திரைப்படத்தின் பாடல் காணொளி வடிவமாக..
- NGK செல்வராகவன் படமே இல்லை என்பதற்கு ஒரே ஒரு ஆதாரம் - திரை ரசனை 3
- இறுதிப் போர் வலியைச் சொல்லி சர்வதேச விருதுகள் வென்ற என் குறும்படம்
- உங்கள் இல்லத்திரையில் ஈழத்தின் வெந்து தணிந்தது காடு
- Darak Days of Heaven - Official Announcement
Popular Posts
பலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்
Blog Archive
-
►
2014
(24)
- ► செப்டம்பர் (4)
-
►
2013
(27)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(37)
- ► செப்டம்பர் (4)
-
►
2011
(72)
- ► செப்டம்பர் (5)
-
▼
2010
(75)
- ► செப்டம்பர் (17)
!—continous>
Powered by Miraa Creation.
1 கருத்துகள்:
பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே... எந்த காலத்திலயும் பொருந்க் கூடிய வரிகள்...
கருத்துரையிடுக