சனி, 11 மே, 2013

எனக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் தந்த யாழ்ப்பாண வெளியீடான ”விட்டில்கள்” குறும்படம்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?


வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்கள் விபத்துக்கள் போலவே அமைந்து விடுகிறது. எமக்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையாவிடினும் சில விடயங்களில் எமக்கிருக்கும் ஆர்வம் என்றும் குன்றாமல் இருக்கும்.

அந்த வகையில் எனக்குத் தொற்றிக் கொண்ட ஆர்வத்தில் ஒன்று தான் இந்த குறும்படப் பைத்தியம் ஆனால் எவையும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் செய்ய வேண்டியவையே... அந்தக் காலம் கடந்தால் மிகவும் சிரமமானதே..

வீடியோ தொகுப்பாளரான நண்பன் வேல் முருகனிடம் எப்போதோ காணும் போது சொல்லியிருந்தேன். ”எங்காவது படப்பிடிப்பு நடந்தால் சொல்லுங்கள் நேரம் கிடைத்தால் பார்க்க வருகிறேன் என்று“ நான் அதை மறந்தாலும் அவர் மறக்க வில்லை.
சில நாட்களின் முன்னர் நவிண்டிலில் ஒரு படம் செய்யுறம் நேரம் கிடைத்தால் வந்திட்டுப் போங்கோ என்றார் சரி பிற்பகல் தானே போவோம் என போனால் நடந்த இடம் எனக்கு நினைவு தெரிவதற்கு முன்னமே எம் குடும்ப நண்பராக இரந்த செல்லாஅண்ணாவின் ஸ்ருடியோ அங்கே பார்த்தால் என்னுடன் முன்பள்ளியிலிருந்து ஒன்றாகப் படித்த பிரதீப் அவனுடன் ஏற்கனவே பழகிய நண்பனான தர்சன் என ஒரு பட்டாளம் நிற்க படத்தின் இயக்குனர் யாரெனப் பார்த்தால் அவரும் பழைய நண்பராகவே இருந்தார்.
செல்லா அண்ணா, தர்சன், பிரதீப், நான்

அப்புறம் என்ன மச்சான் நீயும் ஒரு சீனில் நடிக்கிறாய் என்றால் எனக்கு எந்த ஆயத்தமும் இல்லை. சரி என்ன தெரியாத ஒன்றா செய்திட்டுப் போவோமென இறங்கியது தான் இந்த விட்டில்கள் குறும்படம்.
அடுத்து காட்சிகள் முடிந்து டப்பிங்கிற்கு போன போது தான் அதன் சாவால் தன்மை புரிந்தது. ஆனால் இயக்குனர் ஜெயதீபன் எனக்கு தந்த வசன சுதந்திரம் என் சிரமத்தைக் குறைந்தது. ஏன் என்றால் நான் பேசிய வசனங்கள் எனக்கு காட்சி விளங்கப்படுத்திய பின்னர் எனது சொன்ன மொழியில் பேசியவையே.. ஒரு சில காட்சிகளைத் தவிர மற்றையவை அனைத்திற்கும் ஒரு சந்தர்ப்பமே எடுத்துக் கொண்டது வியப்பாகவே இருந்தது அத்தனைக்கு காரணம் அனுபவசாலியான வீடியொ தொகுப்பாளர் செல்வம் அண்ணை தான்.

இப்படத்தில் 1993 -1994 ல் சின்ன விழிகள் போன்ற ஈழப்படங்களில் நாயகனாக கலக்கிய செல்வம் அண்ணையுடன் நடித்தது வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது. அத்துடன் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி ஆசிரியரான பரணிதரன் சேரும் எம்மோடு இருந்தது சந்தோசமாக இருந்தது.

டப்பிங்கில் மிக அதிக கவனம் செலுத்திக் கொண்ட விடயம் என்னவென்றால் எமது பிராந்திய மொழிவழக்கைத் தான் காரணம் பல தென்னிந்திய திரைப்படங்களும் நடிகர்களும் பேச முனைந்து தோற்றுப் போன விடயங்களில் இதுவும் மிக முக்கியமான ஒன்றாகும். பாயும்புலி அனோரமா தொடக்கம் தெனாலி கமல், நந்தா லைலா, ராமேஸ்வரம் ஜீவா மணிவண்ணன் என ஒரு பெரும் பட்டாளமே அந்த வரிசையில் நிற்கிறது.
 படத்தில் கதை என்று சொல்லப் போனால் நீங்கள் அறியாத ஒன்றல்ல ஆனால் 4 நாட்களுக்குள் வடமாகாண குறும்படங்களுக்கான போட்டிக்கு அனுப்பியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் எடுக்கப்பட்டதால் ஒரு சில வழுக்களை நாமும் அறிந்திருந்தாலும் மீள் திருத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போய் விட்டது.

தங்களது மனம் திறந்த முகஸ்துதியற்ற விமர்சனங்களை எதிர்பாரத்த நிற்கிறோம் ஏனென்றால் அடுத்தடுத்த படைப்புக்களில் எம்மைச் சீர்ப்படுத்த இவை தான் ஏதுவாக அமையும்

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா


About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

12 கருத்துகள்:

Unknown சொன்னது…

வணக்கம்,ம.தி.சுதா!நலமா?////பார்த்தேன்.இக்காலத்திற்கு வேண்டிய படிப்பினையூட்டும் அருமையான கருத்து.குறையொன்றுமில்லை.வாழ்த்துக்கள்!!!!(ஸ்ட்ரோங் பியர் குடிக்காதையுங்கோ,ஹி!ஹி!!ஹீ!!!!)

K.s.s.Rajh சொன்னது…

நல்ல ஒரு கருத்தை சொல்லி நிற்கும் அருமையான படைப்பு

ஒரே ஒரு சின்னகுறை வசன உச்சரிப்புக்கள் சில இடங்களில் நாடக பாணியில் இருப்பதை போல தோனுக்கின்றது மற்றும் படி சிறப்பாக இருக்கு

படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்

K.s.s.Rajh சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
K.s.s.Rajh சொன்னது…

//// சில விடயங்களில் எமக்கிருக்கும் ஆர்வம் என்றும் குன்றாமல் இருக்கும்.

அந்த வகையில் எனக்குத் தொற்றிக் கொண்ட ஆர்வத்தில் ஒன்று தான் இந்த குறும்படப் பைத்தியம் ஆனால் எவையும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் செய்ய வேண்டியவையே... அந்தக் காலம் கடந்தால் மிகவும் சிரமமானதே..

வீடியோ தொகுப்பாளரான நண்பன் வேல் முருகனிடம் எப்போதோ காணும் போது சொல்லியிருந்தேன். ”எங்காவது படப்பிடிப்பு நடந்தால் சொல்லுங்கள் நேரம் கிடைத்தால் பார்க்க வருகிறேன் என்று“ ////

எனக்கும் இப்படி ஒரு ஆர்வம் இருக்கு குறும்பட படப்பிடிப்பு நடந்தால் சொல்லுங்க பாஸ் பார்க்க வருகின்றேன்

Unknown சொன்னது…

அண்ணா படம் சூப்பர்!!


Subramaniam Yogarasa ///////ஸ்ட்ரோங் பியர் குடிக்காதையுங்கோ,ஹி!ஹி!!ஹீ!!!!)//////////இப்பிடி சொன்னால் எப்படி அண்ணன்/ எதை அடிக்கோணும் என்றும் தெளிவா சொல்லுங்க. மதி அண்ணன் குழம்பி போய் இருக்கார் :-)

Tamil CC சொன்னது…

அதில வந்தது பரணீதரன் சேர் தானே... அவர் கதைக்கவே இல்ல..
படம் சோக்கா இருக்கு.. இப்ப lap மட்டும் இல்ல, போன் வழியையும் ஏதோ app போட்டுக்கொண்டு போற வாற இடமெல்லாம் chat பண்ணுறாங்கள்..

mathu0777 சொன்னது…

நடிகனாக பதவி உயர்வு பெற்றிருக்கும் நண்பனுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகின்றேன் சுதா.....

Unknown சொன்னது…

தங்களை குறும்படத்தில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி தம்பி.
வாழ்த்துக்கள் தொடர்ந்து முயற்ச்சி செய்யுங்கள்.

வாழ்த்துக்கள் நண்பா, மிக துல்லியமான ஒலி ஒளிப்பதிவுகள்,கதை பரவலாக பேசப்பட்ட ஒன்றாக இருந்தாலும் இன்றைய காலடட்டத்தில் மிக தேவையான செய்தியுடன் நிறைவு பெறுவது சிறப்பாக இருக்கு. அடுத்த குறும்படத்தில் இன்னும் உங்களின் உழைப்புகளை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள் மீண்டும்

வாழ்த்துக்கள் சகோ மென்மேலும் சிறந்த படைப்புகளில் தங்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டட்டும் .இந்தக் குறும்படமும்
இன்றைய காலத்திற்கு ஏற்ப சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது !

உண்மை தான் சட்டங்கள் வலுவாக்கப் பட்டு தண்டணைகள் கடுமையாக இருக்க வேண்டும் இவாறு உயிர்ப்பலி எடுக்கும்
அரக்கர்களுக்கு எதிராக .பெண்களும் இங்கு தான் விழிப்புணர்வோடு
நடத்தால் வேண்டும் .மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய
சிறப்பான படைப்பு இதற்கும் என் வாழ்த்துக்கள் .

vimalanperali சொன்னது…

நல்ல கருத்தைச்சொன்ன அருமையான படைப்பு.வாழ்த்துக்கள்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top