பாடல் என்பது மனித வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தாலும் எல்லா வகைப் பாடல்களையும் எல்லா நேரத்திலும் கேட்க முடிவதில்லை. ஆனால் அதற்கு விதிவிலக்காக அமைந்த பாடல்களும் இருக்கவே செய்கிறது. அந்த வகையில் முதலிடத்தைப் பிடித்துக் கொண்ட பாடல்களில் தாயிற்காக அமைந்த பாடல் மிக முக்கியமாகும்.
யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டிருந்த இந்த அம்மா பாடல் ஒவ்வொரு தாயின் மகவையும் கட்டிப் போடும் என்பதில் ஐயம் எழ வாய்ப்பில்லை.
பாடல் தயாரிப்பளரான ஐஸ்வர்யன் எண்டர்ரெயின்மெண்டைச் சேர்ந்த உமாமகேசின் சிரத்தையால் இப்பாடல் தென் இந்தியப் பாடகர் மதுபால கிருஷ்ணனின் மதுரக் குரலில் ஒலிக்கிறது. இப்பாடலை யாழ்ப்பாணத்தில் வைத்து ஒலிப்பதிவு செய்திருப்பதும் இன்னும் சிறப்பைக் கூட்டும் விடயமாகும். அவருடன் சேர்ந்து றொசிற்றாவும் பாடியிருக்க பின்னணி இசையை ஈழத்து முன்னோடி இசைக் குழுவான அருணா இசைக்குழு ஸ்தாபகரின் மகனான அருணா கேதிஸ் வழங்கியிருக்கிறார். ஏற்கனவே பிரபலமான அம்மா பாடல் ஒன்றின் லயத்துடன் பாடல் நகர்த்திச் செல்லப்பட்டிருந்தாலும் எள்ளளவு கூட அலுக்க வாய்ப்பில்லை.
இது தான் பாடல் வரிகள்...
ஆரிராரோ பாட்டுச் சத்தம் கேட்குது
அம்மாவின் ஞாபகங்கள் தாலாட்டுது
ஆராரோ பாடி என்னை வளர்த்தாய் என் தாயே
ஆனாலும் நம் உறவை பிரிக்க முடியாதே
உதிரத்தை ஊட்டி என்னை வளர்த்ததாய் என் தாயே
(ஆரிராரோ)
ஈரைந்து மாதங்கள் கருவினில் சுமந்தாயே
ஈரேழு ஜென்மத்திலும் தாயாய் வரவேணும்
ஆலயங்கள் செல்வதில்லை நான் தாயே
தெய்வமாய் இருக்கின்றாய் என் தாயே
உதிரத்தை ஊட்டி என்னை வளர்த்ததாய் என் தாயே
(ஆரிராரோ)
கண்ணே கண்மணியே கண்ணுறங்கு
கானகத்து பூங்குயிலே கண்ணுறங்கு
கானகத்து வெண்ணிலவே கண்ணுறங்கு
அழுகின்ற என் மகனே நீயுறங்கு
தாய் மடி தேடி வந்தேன் உன் பிள்ளை நான் தானே
தாய் புகழ் பாடி வந்தேன் கவிப்பிள்ளை நான் தானே
அம்மாவின் அன்பாலே ஆனந்தம் காண்பேனே
அப்பாவின் ஆசியுடன் அகிலத்தை ஆழ்வேனே
உதிரத்தை ஊட்டி என்னை வளர்த்ததாய் என் தாயே
(ஆரிராரோ)
இந்த அருமையும் ஆழம் நிறைந்ததுமான வரிகளை கமலநாதன் மற்றும் றஜித் வரைந்திருக்க கிருத்திகன் கமராவால் வர்ணம் தீட்டியிருக்கிறார்.
இப்பாடலை சயன் இயக்க நடிகர்களாக கவிமாறன் மற்றும் சுகந்தினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தொகுப்பை டனா செய்திருக்கிறார்.
எம்மவர் முயற்சிக்கு சான்று பயற்கும் இப்படியான படைப்புகளை மென் மேலும் வாழ்த்துக்களுடன் எதிர் பார்க்கிறோம்
எம்மவர் முயற்சிக்கு சான்று பயற்கும் இப்படியான படைப்புகளை மென் மேலும் வாழ்த்துக்களுடன் எதிர் பார்க்கிறோம்
அந்த அழகிய பாடலை ரசித்துப் பாருங்கள்
5 கருத்துகள்:
கிருத்திகன் மட்டுமே எனக்குத்தெரிந்த பெயர்வழி.மற்றையவர்கள் புதியவர்கள்.எனினும் பாடல் வரிகள் எனக்கு பிடித்து விட்டது.அவர்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
பாடல், குரல், இசையமைப்பு எல்லாமே அருமை. படங்கள், அதிலும் காலில் போட்டுத் தாலாட்டி நித்திரை கொள்ள வைப்பது எல்லாம், இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு அவர்களின் அம்மாவை நினைவூட்டிக் கண்களில் நீரை வரவழைத்து விடுமளவுக்கு உங்களின் பாடலுள்ளது.
அருமையான பாடல்..
சிறப்பான பாடல் நேர்த்தியாக இருக்கின்றது.
பாராட்டுக்குரிய முயற்சி,தொடர்ந்து சாதிக்க வாழ்த்துகின்றேன்
கருத்துரையிடுக