உறவுகள் தொலைத்தோம்
உணர்வுகள் வளர்த்தோம்
ஆண்டாண்டு தோறும்
அடிமை அடிமை இல்லையென
உரக்க ஊர்முழக்கி
வீரப்பட்டம் பெறுகிறோம்.
இதுவரை எது செய்தோம்
உணர்வினில் தவம் செய்தோம்
இனிவரை எது செய்வோம்
சிதைவழிந்த அஸ்திவாரம் செதுக்கி
சுவர்களை சீரக்கி முகடெழுப்பிய பின்
கொடிக் கம்பங்களை நடுவோம்
மீள முடியாதவர்
வரலாறு தந்து போய் விட்டார்
மீண்டவர் வரலாறு சொல்ல வாழ்கின்றார்
அடுத்த தலை முறை
எதற்காக வாழப் போகிறது
மடியில் கனமிருந்தவர்
கடல் தூர பறந்து விட்டார்
காலிற்கு செருப்பற்றவன்
பற்றை கடக்க வழியின்றி அழுகிறான்
ஒரு முறை நினைப்போம்
உறவினை வளர்ப்போம்
உணர்வுகள் சிரஞ்சீவியாகும்
நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா
நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா
இன்றைய நாள் ஒவ்வொரு உணர்வுள்ள தமிழன் வாழ்விலும் உருக்குலைந்த நாளாகும். மரணத்தைக் கடந்தவரோ மரணத்தை தேடி அடைய முடியாமல் வாழ்கின்றார். அவரையும் ஒருகணம் எம் உணர்வால் அரவணைப்போமா?
இன்றை இந் நாளில் சகோதரன் மதீசனின் இசை மற்றும் வரி உருவாக்கத்தில் உருவான இப்பாடல் நல்ல ஒரு உதாரணமான பாடலாகும். அதிலும் இந்த இடம் என்னை ஒரு தடவை நிற்க வைத்து விட்டது
ஃஃஃஃகடவுளுக்கு பணம் இறைக்கும் கொடையாளரே இவனுக்கும் உதவுங்கள் அருளாகுமேஃஃஃஃ
4 கருத்துகள்:
மீள முடியாதவர்
வரலாறு தந்து போய் விட்டார்
மீண்டவர் வரலாறு சொல்ல வாழ்கின்றார்
அடுத்த தலை முறை
எதற்காக வாழப் போகிறது//
விடை தெரியாத வினாக்களில் இதுவும் ஒன்று
ரணங்கள் ஆயிரமாம்
நம் மனதில்...
கணங்களை சாதகமாக்க
மனதில் உறுதி ஏற்போம்....
உறவுகளுக்கு வீர வணக்கமும் அஞ்சலிகளும்....
நெஞ்சை சுடும் வரிகள்! வீர வணக்கங்கள் தோழர்களுக்கு! நன்றி!
கருத்துரையிடுக