வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
நாளுக்கு நாள் வளர்ந்து செல்லும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது மனிதனை ஒவ்வொரு பரிமாணத்திற்கும் சடுதியாக இட்டுச் செல்கிறது.
ஸ்மாட் போன் பாவனையாளர்கள் தங்களிடையேயான இலவச தொடர்பாடலுக்கு பாவித்து வந்த viber என்ற அப்ளிகேசனானது புதிய மாற்றத்துடன் பலரை தன்வசப்படுத்தியுள்ளது.
இந்த அப்ளிகேசன் ஆனது ஏற்கனவே துல்லியம், குறைந்தளவு தரவுச் செலவீடு, போனுக்கு வேலைப்பளுவைக் கொடுக்காத மென் பொருள் என பல விடயங்களால் பலரை கவர்ந்திருந்த ஒரு அப்ளிகேசனாகும்.
இதில் குறையென்று பெரிதளவாக சொல்ல முடியாவிட்டாலும் புதிய பதிப்பு திறப்பதற்காக எடுக்கும் நேரம் அதிகம் அதோ போல எதிர் முனையில் உள்ளவர் கைப்பேசி அணைந்திருந்தாலும் றிங் பண்ணுதல் போன்ற குறைகள் இருக்கவே செய்தது.
ஆனால் இத்தனைக்கும் மேலாக கடந்த சில நாட்களுக்க முன்னர் இந்த அப்ளிகேசன் ஆனது கணணிகளுக்கு ஏற்றது போலவும் வெளியிடப்பட்டுள்ளது வெகு சிறப்பாகும். இதன் மூலம் கைப்பேசியில் இருந்தபடி கணிணியில் உள்ள ஒருவருடன் தகவல் பறிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். இவை ஏற்கனவே ஸ்கைப் போன்ற மென் பொருள்களின் மூலம் கிடைத்தாலும் தரவுச் சிக்கன பாவனையாளருக்கு இது பெரும் சாதகமான ஒரு விடயமாகும்.
ஆனால் இக்கணக்குத் திறப்பதற்கு ஏற்கனவே ஒரு ஸ்மாட் போனில் viber கணக்கு திறந்திருக்க வேண்டும். அந்த இலக்கத்தைக் கொண்டு தான் ஆரம்பிக்க முடியும் அதே போல ஒருவர் அழைப்பெடுத்தால் இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் றிங் பண்ணுகின்றது.
http://www.viber.com/ இந்த இணையத்தளம் சென்றால் அங்கே தரவிறக்குவதற்கான நேரடித் தொடுப்பு கொடுத்திருக்கிறார்கள் இலகுவாக இறக்கி நிறுவிக் கொள்ளலாம்.
இன்னும் ஒரு சில நாளில் இன்னும் இம் மென் பொருள் மேம்படுத்தப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா
3 கருத்துகள்:
நல்லதொரு இணையத்தள அறிமுகத்திற்கு நன்றி...
நானும் இப்போது செமையாக வைபர் யூஸ் பண்ணுகிறேன்! சுதா உங்கள் நம்பர் இருந்தால் கொடுங்களேன்!
அட..!
வைபர் வைத்திருந்தாலும் இவ்வளவு பயன் இருக்கின்றது என்பது தெரிந்திருக்கவில்லை.
கருத்துரையிடுக