வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
நேரடியாக தலைப்பிற்குள்ளேயே
நுழைவோமா ?
இன்று இணைய உலகில்
வருமான நோக்கத்துடனும், பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும் உருவாக்கப்படும் இணையத்தளங்களிலிருந்து
போலி முகநூல் கணக்கு வரை பெரும்பாலானவை யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியே ஆரம்பிக்கப்படுகின்றன
என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய உண்மையாகும். இது பற்றி நண்பர் ஒருவர்
அண்மையில் விபரமாகவே ஒரு பதிவு போட்டிருந்தார்.
இப்படி மையப்படுத்தி
ஆரம்பிக்கப்பட்டதில் ஒரே ஒரு இணையத்தளம் தான் பலராலும் மிக மிக கேவலமாக நோக்கப்படுவது
இணைய உலகமே அறிந்த உண்மையாகும்.
அண்மையில் இத்தளத்தில்,
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கழகம் ஒன்றின் நடன நிகழ்வில் இடம்பெற்ற காட்சி ஒன்றை காணொளியாகப்
பிரசுரித்ததுமில்லாமல் யாழின் காலாச்சாரச் சீரழிவாக விபரணப்படுத்தியும் இருந்தார்கள்.
இப்படியான செய்திகள் பற்றி அந்த new Jaffna தள நிர்வாகியான சந்திரதேவன் பிரசாத்திடம்
முன்னரும் கதைத்த போது அவர் சொன்னது தன் நண்பர்கள் தான் இப்படியான செய்திகளைப் போட்டார்கள்
என்கிறார்.
யார் அவர்கள் என
விசாரித்துக் கொண்டு போனால் பலர் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தான்
மிக மிக கசப்பாக இருந்தது. தாம் குடித்து விட்டு அடிக்கும் கும்மாளங்களை இது வரை எந்தவொரு
பல்கலைக்கழக மாணவனாவது வெளியே சொல்லியிருப்பானா? என்ற கேள்விக்கு நான் இணையத் தேடலில்
பதில் தேடிக் கொண்டிருக்கிறேன்.
அவரை பற்றிய பேச்சு
ஒரு புறம் இருக்கட்டும் அந்த காணோளி பற்றிய விடயத்திற்குள் வருவோம்.
அதில் ஜீன்ஸ்-
ரீ சேர்ட் அணிந்த ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் மேற்கத்தைய நடனத்தை ஆடுகிறார்கள். நடனம்
கூட ஆபாச அசைவுகளைக் கொண்டிருக்கவில்லை. சரி உடலை பார்த்தோமானால் அப்பெண்ணின் இடுப்பில்
ஒரு நூல் கூட வெளியே தெரியவில்லை.
இதில் எங்கே ஆபாசம்
இருக்கிறது, சரி கலாச்சாரம் சீரழிகிறது என்ற ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். சரி அதை
ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் குற்றச்சாட்டை வைக்கும் ஒவ்வொருவரும் உங்கள் ஜட்டிகளை கழைந்து
எறிந்து விட்டு கோவணத்துடன் வந்து நின்று சொல்லுங்கள் அதன் பின்னர் தான் உங்களுக்கு
கலாச்சாரம் பற்றிக் கதைக்க தகுதியிருக்கிறது என்று ஏற்றுக் கொள்வேன்.
இதை ஆபாசமென்றால்
1980 ம் ஆண்டு காலப்பகுதிவரை யாழ்ப்பாணத்து ஆலயங்களில் சின்னமேளம் என்று ஒரு நடனக்
குழுவை பிடிப்பார்கள். அதில் சில நடனக் குழுக்கள் மூடிப் போர்த்துக் கொண்டு ஆடினாலும்
சில் குழுக்களில் இடை தெரியும் படியான உடையலங்காரத்துடனே தான் ஆடுவார்கள்.
அவர்களின் இடுப்பில்
காசு செருகிய இளம் பையன்கள் இப்போதும் பல் விழுந்த கிழவராக எம் சமூகத்தில் வாழ்ந்து
கொண்டு தான் இருக்கிறார்கள். அப்போது எங்கே போய் விட்டது உங்கள் கலாச்சாரமெல்லாம்.
இந்த காணொளியை
ஒரு பல்கலைக்கழகத்தில் உயர் பதவி வகிக்கும் ஒருவரும் தன் முகநூலில் பகிர்ந்து அத்தளம்
செய்தது சரி போலவே சுட்டிக் காட்டியிருந்தார். முதலில் எம்மவர்கள் எதைக் கலாச்சாரம்
எதை நாகரீகம் என வரையறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பொதுவாகவே எம்
சமூகத்தில் ஒரு கோட்பாடு இருக்கிறது. தாம் ஏதாவது மேற்கத்தைய உலகத்திற்கு மாறிக் கொண்டால்
அது நாகரீகம் என்ற முத்திரையை குத்தி விட்டது மற்றையதெல்லாவற்றையும் தப்பான நோக்கத்துடனே
நோக்குவார்கள்.
முதலில் படித்த
சமூகமே இவற்றுக்குத் துணை போவது தான் வருந்தத்தக்க விடயம்.
தேச, மொழிப் பற்றாளர்களிடம்
ஒரே ஒரு கேள்வி….. எம் ஈழத்தின் மானத்தை உலகுக்கு விற்கும் இத் தளத்தை புறக்கணிக்க
எத்தனை பேர் தயாராக இருக்கிறீர்கள்…. எப்போது இந்த விடுப்புகளுக்காக ஒட்டி நின்று பார்ப்பதும்,
அநியாய வதந்திகளுக்கு அதை பரப்ப உதவியாக நின்று துணை போவதையும் தமிழன் கை விடுகிறானோ
அன்று தான் எம் இனம் உருப்படும்….
இதையாவது ஒவ்வொரு
தமிழனும் உணர்ந்து கொள்ளுங்கள்..
குறிப்பு – இனி
நான் குறிப்பிடுவதை விளம்பரமாக நீங்கள் குறிப்பிட்டாலும் எனக்கு கவலையில்லை ஆனால் இச்
செய்தியை பகிர்வதன் மூலமும் எம் இழக்கப்பட்ட மானத்தை கொஞ்சமாவது மீள நிருபித்துக் கொள்ளலாம்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
15 கருத்துகள்:
பகல் வணக்கம்,ம.தி.சுதா!என்ன செய்ய?தங்கள் முதுகில் அழுக்கை வைத்துக் கொண்டு..........................
உண்மைதான்! ஊடகங்கள் பல யாழ்ப்பாண கலாசாரத்தை விற்று தம் பெருமை தேடிக்கொள்கின்றன. இன்னோர் உதாரணமாக நீங்கள் மேற்குறிப்பிட்ட ஊடகத்தில் ஓர் செய்தி தலைப்பு படித்தேன்,'திருமணத்திற்கு முன் தினம் யாழ்ப்பாணத்தில் மணப்பெண் கற்பழிப்பு' முழுமையாக செய்தியை வாசித்த போது தான் தெரியவந்தது அது கட்டடத்திறப்பு விழாக்கு முன் தினம் கட்டடம் அசிங்கப்படுத்தப்பட்டது தொடர்பான செய்திக்கு இப்படியோர் தலைப்பு. இவ்வாறு யாழ்ப்பாணத்தை விற்பதில் என்ன சந்தோசம் காண்கிறார்களோ??
////தேச, மொழிப் பற்றாளர்களிடம் ஒரே ஒரு கேள்வி… ///(எம் ஈழத்தின் மானத்தை உலகுக்கு விற்கும் இத் தளத்தை புறக்கணிக்க எத்தனை பேர் தயாராக இருக்கிறீர்கள்…. எப்போது இந்த விடுப்புகளுக்காக ஒட்டி நின்று பார்ப்பதும், அநியாய வதந்திகளுக்கு அதை பரப்ப உதவியாக நின்று துணை போவதையும் தமிழன் கை விடுகிறானோ அன்று தான் எம் இனம் உருப்படும்….)
இதில் தேசப்பற்றும் இல்லை ஒரு மண்ணும் இல்லை சகோ!...:( இதில்
அடங்கி உள்ளது அத்தனையும் தனி மனித சுயநலமே .சூடான இடுக்கை
என்ற பெயரில் தன் திறமைகளைக் காட்டுவாதாக எண்ணி உண்மைக்குப்
புறம்பான இன்னும் கொஞ்சம் சொல்லப் போனால் ஒட்டுக் கேக்கும் புலமை வடிவேலு சில படங்களில் விடும் காமடி மாதிரி கி .மு -கி .பி தெரியாமலே எழுந்தமானத்தில் பிறரது வாழ்வை நொடிப் பொழுதில் அழிக்க வல்ல
செயல்கள் இவை .இது போதும் கலையாவது கலாச்சாரமாவது அதற்க்கு அறுகதை அற்றவன் தமிழன் என பறை சாற்ற :(((( எப்போதும் நல்லதையே பேசி நல்லதையே நினைப்போர் இவ்வாறான செயலில் ஈடுபட மாட்டார்கள் என்பதே என் பணிவான கருத்து .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
பிரபல்யத்துக்காக தன்மானத்தை விற்று பிழைப்பு நடத்துபவர்கள். யாழ்ப்பாண புராணம் பாடும் இவர்கள் யாழ்ப்பாணத்தாரை விற்று பிழைக்கிறார்கள். இதற்கு துணைபோகும் கல்விச் சமூகத்தின் கண் மங்க காரணம்தான் தேட வேண்டும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுடன் ஒருவர் செய்தி கொடுக்கும் பட்சத்தில் அதனை தீர ஆராயாது பெண்களை ஒரு ஆபாச பொருளாக சித்தரித்து கதை வடிக்கிறார்கள். நிச்சயம் இவற்றிற்கு பதில் கூறியே ஆக வேண்டும்.
உண்மைதான் சகோ இவர்களை என்ன செய்ய முடியும்
உண்மைதான் சகோ...
அழுக்கடைந்த மனிதர்களை நாம் என்ன செய்யமுடியும் சொல்லுங்கள்.
கலாச்சார சீரழிவு என்ற பதத்தில் எனக்கு உடன்பாடே இல்லை ... !!! ஏன் தெரியுமா ? உலகம் முழுவதுமே கடந்த 1000 ஆண்டாக இருந்த கலாச்சாரங்கள் மாறி புதிய வளர்ச்சியைப் பெற்று வருகின்றது அவ்வளவே !!! பழம் தமிழ் சமூகத்தில் இருந்த கலாச்சாரத்தில் கள்ளுண்பது, பரத்தையரோடு கூடுவது, போரிடுவது, களவுக் காமம் புரிவது என்பது இருந்தன.. பௌத்த / சமண வருகைக்கு பின் அவை மாற்றம் கண்டன, பின்னாளில் எழுந்த நவ பக்தி இயக்கங்களால் ( இந்து மதம் ) அவை மேலும் மாற்றமடைந்தன, இன்று நாகரிக / பொருளாதார வளர்ச்சியால் மேலும் மாறுகின்றன ..
இதை விட்டு விட்டு யாழ்ப்பாணத்தில் மட்டும் கலாச்சாரம் கெடுகின்றது என சில இணையதளங்கள் செய்து போடுவே வேடிக்கையானது .. அதே யாழ்ப்பாணத்தவர்கள் மேற்கில் மேற்கு கலாச்சாரங்களை புறத்தில் ரகசியமாக பின்பற்றவும் செய்கின்றனர்.. மதுவருந்தல், களவுக் காமம் என்பது இயல்பான ஒன்றாகிவிட்டன.. ஆனால் பேசும் போடு மட்டும் யாழ்ப்பாணம் கெட்டுப் போய்விட்டது என சொல்வது வேடிக்கையான ஒன்று .. !!!
இவற்றை ஆதாயமாக்கி பிரச்சாரம் செய்வது கேவலத்திலும் கேவலமான ஒன்றாகும் .. !!! முகமூடி மனிதர்கள் தமது முகங்களையும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டால் அடுத்தவன் வீட்டுப் படுக்கையறையை எட்டிப் பார்க்கத் தோன்றாது !!!
தாய் நிலத்தில் இருக்கும் உங்களின் கருத்துக்களே யாதார்த்த நிலைகளை வெளிச்சொல்லும் தகுதி உடையவைகள்.உண்மையில் பக்க சார்பற்ற செய்திகளை புலம்பெயர்ந்த எந்த ஒரு தமிழ் உணர்வாளனாலும் அறியமுடியவில்லை.நண்பனே தயவு செய்து இது போன்ற பதிவுகளை அதிகம் எழுதுங்கள்.
Nan ninachathai nenka eluthiddinka mathi
உண்மை சுதா இவர்களை என்ன செய்ய முடியும்?
அவரவராக தான் மாற வேண்டும்...
ஹீ ஹீ நல்ல சாட்டையடி. இங்கே குடித்துக் கும்மாளம் அடிக்கவேண்டியது. பிறகு யாழ்ப்பாணத்தில் மட்டும் எதோ 'கெட்டது' நடக்குது என்று அழ்வேண்டியது. இதுதான் இணையப் போராளிகள்.
இப்படியான கேவலமான தளத்தை நிர்வகிகும் சந்திரதேவன் பிரசாத் எவ்வளவு கேவலமானவராக இருப்பார் என்பதை நண்பர்களே உணர்ந்துகொள்ளுங்கள். இதற்குத் தூணாக துணைநிற்கும் தாங்கள் குறிப்பிட்ட உயர்பதவியில் உள்ளவர் எல்லாவற்றிற்கும் மேலான கேவலமானவனான இருப்பானோ..............
//குற்றச்சாட்டை வைக்கும் ஒவ்வொருவரும் உங்கள் ஜட்டிகளை கழைந்து எறிந்து விட்டு கோவணத்துடன் வந்து நின்று சொல்லுங்கள்//
அப்பிடியானால் நீங்கள் ஜட்டியை கழட்டி எறிந்துவிட்டா இப் பதிவை எழுதுநீர்கள்??
no offence.
Its true Mathisutha. Can i post on my blog under ur name.....
கருத்துரையிடுக