ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

இளையராஜாவைக் குறி வைத்திருக்கும் கனெடிய விடுதலைப்புலிகள்

12:01 AM - By ம.தி.சுதா 6


வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
சம்பவம்
இசைத்துறையில் இன மொழி பேறுபாடின்றி அனைவராலும் ரசிக்கப்படுபவர்களில் இளையராஜாவும் மிக முக்கியமானவர். அப்படிப்பட்ட இசைஞானியை கனடிய தேசத்தை பிரதானமாகக் கொண்டியங்கும் TRINITY என்ற பொறியியல் நிறுவனம் கனடாவின் மிகப்பெரும் அரங்கங்களில் ஒன்றான rogers centre ல் பெரிய செலவீட்டுடனும் மிகப் பெரும் பண வசூலுடனும் நிகழ்ச்சிக்காக அழைத்திருக்கின்றது. இவரோடு திரையுலகின் மிகப் பெரும் பாடகர்களும் பங்கேற்க உள்ளார்கள்.
மேலே இடைவெளியில் உள்ள பாடகர் யாரென்று கணிக்க முடிகிறதா? முடியாவிடில்  எனது தனிமடலுக்கு வாருங்கள்.
வழமையாக இப்படியான நிகழ்ச்சிகள் நடக்கும் போது சிலர் தாமாகவே ஈழப் போராட்டத்துக்காகவும் கொஞ்ச நிதியை ஒதுக்குவார்கள். அல்லாவிடில் குறிப்பிட்ட குழுவொன்றால் இதற்கான பணம் வசூலிக்கப்பட்டு ஈழத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆனால் 2009 ற்குப் பிறகு இந்த நிலமை தலைகீழக மாறியதுடன் பலர் சுயலாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு நிகழ்ச்சிகளை நடாத்த ஆரம்பித்தனர். ஆனால் இப்போதும் சிலர் இதிலிருந்து ஒரு பகுதியை ஈழ மக்களின் மேம்பாட்டிற்காக ஏதாவது அமைப்பூடாகவோ அல்லது தன்னிச்சையாகவோ ஒரு தொகைப் பணத்தை வழங்கி வந்திருக்கின்றனர்.
இச் செயற்பாட்டினால் ஈழத்தை சாக்காக வைத்து பண வசூலிப்பில் ஈடுபட்டு வந்தவர்களின் பிழைப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதே ஆதிக்கம் தான் இந்நிகழ்வில் மூக்கை நுழைத்திருக்கின்றது.
ஆனால் நேற்றைய தினம் நான் முகநூலில் பகிர்ந்திருந்த மடலானது ஒரு பெரியவரால் உருவாக்கப்பட்டிருந்தாலும் அம்மடலை சில விசமிகளே மின்னஞ்சல் ஊடாக விநியோகித்து வருவது மட்டுமல்லாமல் அந்நிகழ்ச்சிக்கெதிராக பல வழிகளில் சதி வலைகளைப் பின்னியும் வருகிறார்கள்.
அந்நிறுவனத்தைச் சார்ந்த ஒரு பிரமுகருடன் தொடர்பை ஏற்படுத்திய போது அறிய முடிந்த விடயங்கள் இவை தான்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரை பயன்படுத்தி வரும் கனெடியக் குழு ஒன்று இவர்களிடம் பண வசூலிப்பிற்காக அணுகியிருக்கின்றது. ஆனால் இந்நேரம் உங்கள் அமைப்பிற்கு கொடுக்க வேண்டிய தேவை இல்லை. என உறுதியாக கூறிய பின்னர் பல வழிகளில் முயன்றும் முடியாத நிலையில் பல்வேறு வகையில் கனடிய மக்களிடையே பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இறுதியாக இவர்கள் எடுத்துள்ள ஆயுதம் என்னவென்றால் நிகழ்வு நடைபெறும் கார்த்திகை மாதமானது மாவீரர் நாள் அனுஷ்டிக்கும் மாதம் என்பதால் இம்மாதம நிகழ்த்தக் கூடாது என நேரடியான அழுத்தத்தையும் பிரச்சாரத்தையும் வழங்கி வருகிறார்கள்.
முன்னணி வரிசைக்கான ரிக்கட்டுக்கள் அனைத்தும் விற்கப்பட்டதன் பின்னர் இந்தப் பரப்புரை எடுபடுமா என்ற கேள்விகளுக்கு அந்நாட்டு ரசிகர்களே முடிவெடுக்க வேண்டும்.
பிற்சேர்க்கை
ஒரு முதியவர் எழுதிய மடல் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். உண்மையில் அவர் உணர்வையும் ஈழமக்களுக்கான ஆர்வத்தையும் வரவேற்கிறேன். இருந்தாலும் ஐயா இளையராஜாவிடம் நாம் எமக்கு உதவி செய் என்று கேட்பதில் எந்த வகையில் நியாயம். எத்தனை ஈழத்தவரே தம் மக்களை மறந்து போய் வாழ்கையில் நல்ல வசதியாக வாழ்கையில் அவரிடம் இரப்பது எமக்கான தன்மானக்கேடாகவே என்னால் உணர முடிகிறது என்பதை இச்சிறியவன் தன் உணர்வுக்கெட்டிய வகையில் கூறிக் கொள்கிறேன்.

நன்றியுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
(இப்பதிவை இணையத்தளங்கள் பயன்படுத்த விரும்பின் பயன்படுத்தலாம். ஆனால் சின்ன வேண்டுகொள் mathisutha56@gmail.com என்ற முகவரிக்கு தங்கள் பதிவுத் தொடுப்பைத் தெரியப்படுத்தி உதவவும்)

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மதி நான் சேமம்.உங்கள் சேமம் எப்படி? இந்த பதிவை கூகிள்சிறியிலும் பகிருங்களேன்?

ம.தி.சுதா சொன்னது…

கூகிள்சிறி .கொம்

க்கு.........

தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் சகோ

பெயரில்லா சொன்னது…

மிகவும் நல்ல பதிவு சகோ. முன்னாள் தமிழ் புலி ஆதரவாளர்கள் கடைசி யுத்தக் காலத்தின் போது வசூலித்த பெரும்பங்கு பணத்தை இங்கே முடக்கிக் கொண்டார்கள், அதன் பராபலனாக பல்வேறு வணிகத் தளங்களை உருவாக்கி வருகின்றார்கள்.

இந்த நிகழ்ச்சிக் கூட நவம்பர் 3-ம் தேதி தான் நடக்கின்றது .. அது கார்த்திகை மாதத்தில் அடங்காது தானே !!! ஐப்பசியில் தானே வரும் ...

கொண்டாட்டம் நிகழ்ச்சியின் போது இந்தியாவில் இருந்து பல்வேறு கலைஞர்களை அழைக்க முற்பட்டனர், அவர்கள் ஊடாக எடுபிடி என்ற சாக்கில் சிலருக்கு விசாக் கோரி இருந்தார்கள் ( இங்கு வந்து அகதி அந்தஸ்து கோர ) அதற்காக தலா. 40,000 டாலர்கள் இங்கு சம்பந்தபட்ட சொந்தங்களிடம் வாங்கி இருந்தார்கள். ஆனால் உசாரான கனடிய அரசு ஒரு இருவருக்கு தவிர ஏனைய அனைவருக்கும் ( இந்தியக் கலைஞர்களுக்கும் ) விசா ரத்து செய்து விட்டது ...

எப்படி எல்லாம் சம்பாதிக்கலாம் என்பதை கனடிய தமிழர்களிடம் தான் கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.. வெள்ளைக்காரன் ரொம்ப பாவமுங்க .

Yoga.S. சொன்னது…

வணக்கம்,ம.தி.சுதா!"இவர்களிடம்" சிறீ-லங்கா அரசு தோற்று விடும்,போங்கள்!

தனிமரம் சொன்னது…

எல்லா இடத்திலும் வியாபாரம் தான்!ம்ம்

ஊர்சுற்றி சொன்னது…

இளையராஜாவின் கச்சேரி என்றாலென்ன இங்கிலீஸ் காரனின் கச்சேரி என்றாலென்ன ஈழமக்கள் உணர்ச்சிவசப்பட்டு சில முடிவுகள் எடுப்பது வழமையாகிவிட்டது. அதனை எதிர்த்து மாற்றுக்கருத்துக்கோஷ்டிகள் கருத்துச் சுதந்திரம் ஜனநாயகம் எனும் போர்வையில் போர்த்து மூடி தமக்கு விருது கொடுப்பதும் வழக்கம். இப்போ அப்படிப்பட்ட முகமுடிகள் கிழிந்து தொங்குவது காலத்தின் கோலமா?

நிற்க இளையராஜாவின் இந்த நிகழ்வை ரினிற்றி இவென்ற்ஸ் என்கின்ற துணை நிறுவனம் நடத்துகிறது. தாய் நிறுவனம் பொறியியல் நிறுவனமாம். அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ போன்ற் அநாடுகளில் 500 நிறுவனங்களுக்கு பொறியியல் ஆலோசனை வழங்குகிறார்களாம். இப்படி வட அமெரிக்காவெங்கும் மற்றும் ஆசியநாடுகளுக்கும் பொறியியல் ஆலோசனை வழங்கியும் அவர்களுக்கு நேரம் மிச்ச்மாய் இருக்கிறது இளையராஜாவுக்கு ‘என்கேயும் எப்போதும்’ என எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைப்பாடலுக்கு நடனமாட!

பரவாயில்லை பிழைப்புக்கு என்ன வழியையும் நாடலாம். ஆனால் இளையராஜாவிடம் கையைச் சுட்டுக்கொள்ளப்போகிறார்கள் என நினைக்கிறேன். திருவாசகம் சிம்ஃபொனியால் கையை மட்டுமல்ல மனதையும் சுட்டுக்கொண்டவர்களை அமெரிக்காவில் சந்தித்திருக்கிறேன். வெளியில் சொன்னால் வெட்கக்கேடு எனச் சொன்னார்கள். முதலில் அரசல் புரசலாக கேட்டதை உறுதி செய்து கொண்டேன்.
எப்படித் திட்டமிட்டு தனது மகளை திருவாசகம் சி.டியில் நுழைத்தாரோ அதேபோலவே ரொரொன்ரோ கச்சேரியிலும் குடும்ப பட்டாளமே மேலோங்கி உள்ளது.
அப்புறம் ஒரு பட்டாளம் சினிமா தாரகைகள்.
கசேரியில் பாரதிராஜா, பார்த்திபன் என்ன பாடுவார்கள்? என் இனிய தமிழ் மக்களே என ஈழத்தமிழரை அழைப்பார்களா? இளையராஜா கச்சேரியில் இவர்கள் ஏன்? ஈழத்தமிழருக்கு ஐஸ் வைக்கவா?
இப்படித்தான் வைரமுத்து ஐஸ் வைத்தகாலம் ஒன்றிருந்தது. 2009 மே மாததுடன் ஆளைக்காணோம்!

சினேஹாவும் அவர் கணவரும் என்ன செய்வார்கள்? வந்து மேடையில் சிரித்துவிட்டு பொவார்களா? அதென்ன walk-in celebrities? புது விளையாட்டாய் இருக்கே?

லிஸ்டில் சித்திரா மட்டுமே தற்போது இந்தப்பக்கம் (அமெரிக்கா) இருக்கிறார். அமெரிக்காவில் எஸ்.பி/அவரது தங்கை ஷைலஜா/மகன் சரண் குடும்ப கோஷ்டியோடு கச்சேரி வைத்துக்கொண்டிருக்கிறார். அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ள்முகமாயில்லை சனக்கூட்டம் என்கிறார்கள் போய் வந்தோர்!
இன்னும் இரு கிழமைகளில் நியூயோக்/நியூ ஜேசி ஏரியாவில் நடக்க இருக்கிறது! அதைப் பார்க்கும் போது தெரியும் நிலமை!
விஜய் டிவி இதனை இந்தியாவில் காட்டி கல்லா கட்டப்போகிறார்கள். இப்படியான நிகழ்வு ரொரொண்டோவிலேயே நடைபெறவில்லை..அலைகடல் எனக்கூட்டம்...ஈழமக்கள் புல்லரித்தார்கள் வெள்ளைக்காரனே எழுந்து ஆடினான் என கதை அளப்புகளுக்கு குறைவிருக்காது.

இப்படித்தான் ரஹ்மான கச்சேரி நியூயோக்கில் நடந்தபோது குமுதம் அள்ளி விட்டிருந்தது.

இதனை புலி தடுக்கிறது எனச் சொல்லியாவது ஓட்டலாம் என நினைக்கிறார்களோ என்னவோ!

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top