வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
சரியாக ஒரு மாத இடைவெளியின் பின்னர் ஒரு அவசர உதவிக்காக என் தளம் மீண்டிருக்கிறேன். (தற்காலிகமாக)
காரணம் என்னவென்றால் என் கண்ணில் பட்ட ஒரு மாணவனுக்காகத் தான் இங்கு வந்திருக்கிறேன். இங்கு அவனது பெயரை நான் பகிரவில்லை. ஆனால் ஊரையும் பாடசாலையையும் தருகின்றேன். யாராவது உதவ விரும்பினால் அவர்களுக்கு நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
இம் மாணவன் யாழ் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் சாதாரண தரம் படித்துக் கொண்டிருக்கிறான். இவன் வல்வெட்டித் துறையிலுள்ள தீருவில் பகுதியை சார்ந்த மாணவன்.
இவனது சாதனை என்னவென்றால் இந்த பாடசாலைக்குள் நுழைந்த குறிப்பிட்ட சில நாளிலேயே அனைத்து மாணவர்களையும் முந்தி முழுப்பாடத்திலும் முதன்மைப் பெறுபேறைப் பெற்றிருக்கிறான். ஆனால் இவனது குடும்பப் பின்னணி சற்று மனதை நெருடுவது ஆகும்.
இறுதிப் போரில் போரிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அண்ணனின் முகவரி தெரியாது. தந்தை ராணுவ பகுதிக்குள் வரும் போது மறுமணம் செய்து இக் குடும்பத்தை கைவிட்டு விட்டார். தாயும் ஒரு தங்கையும் தம்பியுமே எஞ்சி நிற்பவர்கள். ஆனால் இப்படி சாதனை புரியும் இம் மாணவன் இடியப்பம், தோசை போன்றன விற்றுத் தான் பாடசாலையே வருகிறான். இது தான் இவர்களது நாளாந்த வருமானமும் கூட.
பழைய காலங்களில் இவை சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றைய நாளில் ஒரு சாதாரண தர மாணவனின் முழுமையான கற்கை நெறிக்கே மாதம் 2000 ரூபாய் தேவைப்படும். நிச்சயம் எதிர்காலத்தில் நல்லதொரு நிலைக்கு வரக் கூடியவன் என இவனது விஞ்ஞான பாட ஆசிரியரே தெரிவிக்கின்றார்.
யாராவது இவனை பொறுப்பேற்று கற்பிக்க விரும்புபவர்கள் முன்வாருங்கள். தங்களால் இயலாவிடினும் பரவாயில்லை இத்தகவலை மற்றவருக்கு சேர்ப்பதன் மூலம் இவனுக்கு உதவுங்கள்
நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா
குறிப்பு - இது என் மீள் வருகையல்ல இன்னும் சில நாளில் ஓய்வின் பின்னர் மீண்டும் ஒரு புதிய மனிதனாக சந்திக்கிறேன். பழைய ம.தி.சுதா நிச்சயம் மீண்டும் வரமாட்டான். அன்பு உறவுகளின் வேண்டுகைக்கமைவாக மீண்டும் ஆரம்ப கால ம.தி.சுதாவாகவே மாறிக் கொள்கிறேன்.
21 கருத்துகள்:
பகல் வணக்கம்,ம.தி.சுதா!அந்த மாணவனுக்கு நிச்சயம் உதவி கிட்டும்!கிட்ட வேண்டும்,முயற்சிப்போம்!
இறைவன் அவன் பக்கம் இருக்கட்டும்!
ada daa!
eppadiyaavathu uthavi kittum-
iraivanai vendukiren!
மாதா மாதா பணம் கொடுக்கும் நிலையில் நான் இல்லை ஆனால் முடிந்த ஏதோ சிறு தொகையை வழங்க நினைக்கின்றேன்.
ஏதாவது வங்கி இலக்கம் இருக்குமா??
nichchajama engalalana uthavijai seikirom anna.
நிச்சயம் அவருக்கு உதவி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் !
நிச்சயம் அந்த மாணவருக்க்கு நல்ல உதவி கிட்டும் என்னால் முடிந்தது பேஸ் புக்கில் பகிருவது!
உங்களது இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ .நன்றி பகிர்வுக்கு .
இப்படி எத்தனை உறவுகள் எங்கள் தேசத்தில்
அந்த மாணவனுக்கு நல்ல எதிர்காலம் அமைய இறைவனை பிராத்திக்கின்றேன்
நான் முகப்புத்தகத்தில் பகிர்வதுடன் எனது உறவினர்களுக்கும் அறியப்படுத்தியிருக்கிறேன். நிச்சயம் உதவி கிட்டும்.
நிச்சயம் உதவி கிட்டும்
அண்ணா கட்டாணம் இத்தகவலை இயலுமானவர்களுக்கு பகிர்கிறேன்..
நிச்சயம் அவனுக்கு நல்ல உள்ளங்கள் உதவவேண்டும்!
நிச்சயம் அந்த மாணவருக்கு தகுந்த உதவி கிடைக்கும் மேன்மேலும் படித்து நன்கு முன்னுக்குவர பிரார்த்தனைகள்.
உதவி செய்யக்கூடிய நிலையில் தற்பொழுது இல்லை சகோ. கூடிய விரைவில் நிலைமை மாறும். நான் உதவுவேன். தற்பொழுது மற்றவர்களுக்கு பகிர்ந்து இயலுமானவரை முயற்சிக்கிறேன்.
நிச்சயம் அந்த மாணவருக்க்கு உதவி கிடைக்கும்.... பகிர்வுக்கு நன்றி...
நிச்சயம் அவருக்கு உதவி கிடைக்கும்..உங்கள் நல்ல மனதுக்கும்,ஆரோக்கியமான பதிவுக்கும் வாழ்த்துக்கள்
நிச்சயம் அவருக்கு உதவி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்...உங்களது நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரரே...
பேங்க் அக்கவுண்ட் நம்பர்...2000 ரூபாய்-என்பது இலங்கை ரூபாயா?..என்பது போன்ற விவரங்களும் கொடுத்தால்தானே உதவ நினைப்போர் உதவுவர் சுதா?
நல்ல பதிவு...நன்றி....
பின்ன நம்ம மேட்டர்....
அட ஆமாங்க......நீங்க சொன்னதுக்கு பின்ன அந்த சைட்டுக்கு போய் பாத்தேன்..
என்னோட பதிவுகள் மாத்திரம் இல்லை.., சில பிரபல பதிவர்களோட பதிவுகளும் அப்படியே ஃபுல்லா இருக்குது...
அட பாவிங்களா யாருங்க அது? இப்படி காப்பி பன்னி வச்சுருக்கது....எப்படிங்க தடுப்பது?
அடுத்து..,
தேடல் ஆப்சனை எப்படி ஆக்டிவேட் பன்னுவது?
தங்களது இந்த பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிஅண்ணா.
அந்த மானவனுக்கு தகுந்த உதவிகள் கிடைக்க எனது பிரார்த்தனைகள்!
நானும் எனது முகநூலில் பகிர்கிறேன் அண்ணா!
கருத்துரையிடுக