செவ்வாய், 10 ஜூலை, 2012

தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

முற்குறிப்பு - இப்பதிவானது எவருடைய உணர்வையோ நாட்டுப்பற்றையோ சீண்டும் விதமாக அமைக்கப்படவில்லை. தமிழன் பல தடவை சிந்திக்கமலும் தன்னிச்சையாகவும் நடந்ததன் விளைவுகளைத் தான் இன்று எம் இனம் அனுபவிக்கிறது. இப்பதிவானது ஒரு கருத்து அறிதலுக்காகவே இடப்படுகிறது. 



இன்று பலரால் விளங்கிக் கொள்ள முடியாமல் திக்கித் திணற வைத்துள்ள விடயங்களில் ஒன்று தான் இந்தியக் கலைஞர்களின் இலங்கை வருகைக்கான தடையாகும்.
இது சரியா? தவறா? என என்னாலும் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியாத நிலையில் இப்பதிவு இடுகிறேன். 3 நாட்களாக நண்பர் ஜீவனுடன் நடந்த விவாதத்தில் இருவருக்குமே திருப்தி ஏற்படவில்லை. நடிகர்கள் மீதான தடையிலும் சந்தேகமாகவே இருக்கிறது. குறிப்பிட்ட நடிகர்கள் மீதான தடையா? அல்லது குறிப்பிட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதான தடைய எனத் தெரியவில்லை.
இந்த வருட ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டுத் திருவிழா நிகழச்சி ஏற்பாட்டாளர்களில் எனது நண்பன் ஒருவனும் இருந்தான். அதில் வந்த கலைஞருக்கு இடப்பட்டிருந்த நிபந்தனை என்னவென்றால் அரசியல் சார்ந்த நிகழ்ச்சி என்றால் பங்குபற்றக் கூடாது என்பதாகும். ஆனால் கதிர்காமத்திற்கு நேர்த்தி செய்ய கிளம்பிய கருணாசிற்கு வழங்கிய தடை கூட இன்னும் விலக்கப்பட்டதாக அறியவில்லை.


முதலில் சாதக விளைவுகளை (என் அறிவுக்கு எட்டிய) குறிப்பிடுகிறேன்.

1. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவளத் துணைக்காக.

(இது பற்றி நண்பர் மருதமூரானும் தனது பதிவில் இன்று குறிப்பிட்டிருந்தார்). இது தொடர்பாக கடந்த மாதம் வன்னி மாணவரின் உளவியல் நிலை என்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இதில் PTSD (post trumetic stress disorder) என்ற வகையான மன நிலைப்பாதிப்புக்கு உள்ளான மாணவன் ஒருவனை நேரடியாகச் சந்தித்து அந்நிலை பற்றி வெளிப்படுத்தியிருந்தேன். உண்மையில் இந்நோயானது 10 வருடங்களின் பின்னரும் ஒருவருக்கு வெளிக் கொள்ளப்படலாம். இப்படியான நிலையில் அவர்களது மன நிலையை கருத்திக் கொண்டு இதை அனுமதிக்கலாம்.

2. ஈழத்து கலைஞர்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படுவர்.

ஈழ கலைஞர்களது செயற்பாடானது என்றுமே தமிழ்நாட்டுக்கு சளைத்ததாக இருந்ததில்லை. இதற்கு உதாரணமாக முதலாவது சக்தி சுப்பர் ஸ்டார் (sakthi super star) இறுதி நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த தென்னிந்தியக்கலைஞரான ஜெசி கிப்ட் தனக்கு ஏதுவான காரணிகள் அமையுமிடத்தில் இறுதிப் போட்டியில் வென்றவருக்கு பாட சந்தர்ப்பம் அளிப்பேன் என்று மேடையில் கூறியிருந்தார்.
எம்மிடம் சிறந்த கவிஞர்கள் இருக்கிறார்கள்.
சிறந்த இசையமைப்பாளர்களுடன் மிகவும் சிறந்த அறிவிப்பாளர்களும் இருக்கிறார்கள். இது போன்றவர்களுக்கு களமமைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.


3. எமது மொழி, கலாச்சாரத்தை தெரியப்படுத்தலாம்.


உலகத்திலுள்ள தமிழர்களுக்கே மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்றவற்றின் கலை, கலாச்சாரம் என்பவற்றில் தனி ஈர்ப்புண்டு. ஆனால் இவை சரியான முறையில் அவர்களுக்கு போய் சேர்வதில்லை. சமாதான காலப்பகுதியில் இங்கு வந்து சென்ற நடிகர் மணிவண்ணனால் கூட ராமேஸ்வரம் திரைப்படத்தில யாழ்ப்பாண மொழியை பேச முடியாமல் போய்விட்டது. அதுமட்டுமல்லாமல் தெனாலி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்றன எமது மொழிச்சறுக்கலுக்கு பெரும் உதாரணமாகும்.


பாதகமான விளைவுகளை நோக்கலாம்.


1. உலகநாடுகளில் ஆளும்தரப்பு மேற்கொள்ளும் பிரச்சாரங்களுக்கு சாதகமாக அமையலாம்.
அரசானது அசினின் வருகை மூலமே உலக அரங்கில் பெரும் பரப்புரை ஒன்றை மேற்கொண்டிருந்தது. இதன் மூலம் வடக்கின் சுமூக நிலை திரும்பிவிட்டது என்பதை கூறத்தலைப்பட்டது.


2. உலக அரங்கில் அகதியாய் தஞ்சம் புகுந்தோருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இந்த கருத்தை கண்டவுடனேயே உலகநாடுகள் ஒன்றும் கண்ணை மூடிக் கொண்டு செயற்படவில்லை என யாராவது கூறலாம். உண்மை தான் உலக நாடு கண்ணை மூடிக் கொண்டு செயற்படவில்லை ஆனால் தஞ்சம் கோடுவோர் கூறும் காரணங்களை ஏற்றுக் கொள்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் நாளை ஒரு கலைஞர் போய் “நான் ஒரு முன்னாள் போராளியை கண்டேன். அவர் இப்படி கூறினார்” என்று கூறினால் பல விடயம் கவலைக்கிடமாகி விடும்.


3. மக்களின் தாயக கனவுகள் கலைக்கப்பட்டு விடும்.
(இந்த கருத்தை நானும் துளி கூட ஏற்றுக் கொள்ளமாட்டேன்.) இந்தளவு நடந்த பின்னரும் எத்தனை பேருக்கு மீண்டும் ஒரு போருக்கான ஆர்வம் இருக்கிறது என சத்தியமாய் என்னால் கூற முடியாது. இந்தக் கருத்தை கூறி எம்மை பெரும் தியாகிகளாக மாற்ற நினைப்பவர்கள் தாம் எந்தளவுக்கு தியாகம் செய்கிறார்கள் எனச் சொல்லத் தெரியவில்லை.


எனது பக்க மனக்குழப்பங்களையும் சந்தேகங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறேன். உங்கள் கருத்துக்களையும் மனதில் பட்டதையும் சொல்லுங்கள். முக்கியமாக தனிப்பட்ட நபர்களின் உணர்வையும் பற்றையும் பற்றி சாடுவதை முடிந்தளவு தவிருங்கள்.


நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

24 கருத்துகள்:

TamilCC சொன்னது…

இதை விட மாணவர்களின் கல்வியை கூட கெடுக்கிறார்கள். நெல்லியடியில் போடும் கச்சேரி பருத்துறை வரை காதை பிளக்கிறது.

Athisaya சொன்னது…

தங்கள் வாதம் நியாயமானது.எமது கல்லியின் மூலமான மட்டுமே தான் நாம் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளக்கூடிய வாண்ப்பு எள்ளதாக அறிந்தேன்.
கலைஞர்கள் வளர்வது ஆரோக்கியமானதே.ஆனால் அவசியப்பாடான தேவை என்று 1 உள்ளது சகோ.இப்போதைக்கு தேவையாக இருப்பது எமக்கான அடையாளம்.பலவற்றை மீட்க முடியாவிட்டாலும் கல்வியின் மூலமாவது நாம் அறியப்பட வேண்டும்.இவையெல்லாம் கவனக்கலைப்பான்கள்...

போர் தான் வழியல்ல.ஆனால் உணர்வு தாகம் எப்போதும் இருக்கும் அண்ணா..!

இசை நிகழ்வுகளும் கானிவெல்களும் பட்ட காயத்திற்கு மருந்தாகுமா???

பாதிக்கப்பட்ட எம் உறவுகளை இயல்பான வாழ்வியலிற்குள் தீருப்ப வேறு வழி இல்லையா???

என்னால் ஒரு போதும் எற்க முடியாதண்ணா..இத்தனை நான் இல்லாத பாசமும் கலை வளர்ப்பும் திடீரென்று எதற்காக???

இவற்றின் மூலம் வடபகுதி மக்கள் தமிழ் பேசுவோர் இயல்பாக சந்தோஷமாக இருப்பதாக மாயையை விதைக்கிறார்கள்.இவற்றை புறக்கணிப்து ஓரளவு சரியே...!

கலாச்சராத்தையே திட்டமிட்டு அழிக்கிறார்கள்.பின்பு இங்கு கலை வளர்க்கிறார்களா????


சுதாண்ணா இவை என் பக்கக்கருத்து மட்டுமே..!

பெயரில்லா சொன்னது…

ஒன்று பட்ட இலங்கையோ...தமிழ் ஈழமோ...இலங்கை வாழ் தமிழ் சகோதரர் வாழ்வில் விரைவில் NORMALCY வேண்டும்...

அதற்கான எந்த முயற்சியும் அரசியல் சாயமின்றி...இலங்கை அரசு சார்பின்றி இருந்தால் நலம்...

சொந்த நாட்டில் அகதியாய்...சுவாசிக்கக்கூட மற்றவரின் அனுமதி கோரி வாழும் வாழ்க்கை முடிவுக்கு வர நடக்கும் எந்த முயற்சியும் நல்லதே...

நிறைய நேரங்களில் இதை ஒட்டுமொத்த தமிழகமும்...பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களும் புரிய மறுக்கிறார்கள் என்பதே என் எண்ணம்...

வீராவேச போராட்டம் மட்டுமே எப்போதும் வாழ்க்கை இல்லை...அதன் முடிவில் (வெற்றியோ/தோல்வியோ) கிடைக்கும் அமைதியும் வாழ்வின் ஒரு பெரும் பகுதி தானே...

அந்த சாதாரண வாழ்க்கை தானே அவர்களது இன்றைய தேவை...

தனிமரம் சொன்னது…

சிலர் மீது வைக்கும் கட்டுப்பாடு பொதுவாக அமைந்தால் நம்மவர்கள் திறமையை வளக்க முடியும் ஆனால் இனவாத ஆட்சிக்கு எதிர்ப்புக்காட்டுகின்றோம் என்று சொல்லும் குழுக்கள் ஏன் கையறுநிலையில் இருக்கும் மக்கள் பற்றி சிந்திப்பது இல்லை  எதிர்பதும் ஒரு விளம்பரத்திற்காக என்பது என் கருத்து ஆனால் இசை மூலம் மக்களுக்கு ஆற்றுப்படுத்தல் கிடைக்கும் நல்ல பாடகர்   சுதந்திரமாக தோன்ற முடியாத நிலையும் ஒரு சுதந்திரமீறல் ஆகும் !

Unknown சொன்னது…

அண்ணா எனக்கு இந்த அரசியல் பற்றி எல்லாம் எனக்கு அவ்வளவாக தெரியாது, ஆனால் எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன்.
யாரையும் வராமல் தடுப்பதால் யாருக்கும் எந்த நன்மையையும் கிடைக்கபோவது இல்லை.
தனி நாடு என்பது இப்போது பேசுவதற்கு மட்டுமே .
இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று சேர்ந்தாலே ஒரு அளவுக்கேனும் சிறந்த தீர்வை பெற முடியும் என்று தோணுகின்றது.

ரொம்ப தெளிவா எடுத்து சொல்லி இருக்கீங்க.

சீனு சொன்னது…

// தெனாலி, கன்னத்தில் முத்தமிட்டால்// அப்படியா அதில் தெளிவாக உச்சரிக்கப் படவில்லையா

பட்ட காயங்களை பாடு படி ஆற்றி விட முடியும் என்று நினைக்கிறார்களா, தமிழகத்தால் இன்னும் திடம் கொண்டு போராட முடியும், எங்கு காணினும் அரசியல், என்ன செய்வது நண்பா.

எனக்கு இலங்கைக்கு வரவேண்டும் போல் உள்ளது. அங்கு வந்து என் சகோதரர்களைப் பார்க்க வேண்டும்.
வாய்ப்பும் சந்தர்ப்பமும் ஒரு சேர அமைந்தால் இலங்கைப் பயணம் விரைவில்.


படித்துப் பாருங்கள்

தலைவன் இருக்கிறான்

http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_09.html

பாதகங்கள் இருக்கலாம். தாயக கனவு கலைக்கப்பட்டுவிடும் என்பது தொடர்பான எனது கருத்து, யாரையும் சீண்டுவதற்காக சொல்லவில்லை, வெளிநாடுகளில் உள்ள இரண்டாம் தலைமுறை இலங்கைத்தமிழ் மக்களில் எத்தனை பேருக்கு தமிழ் எழுத படிக்கத்தெரியும். தாய்மொழியையே எந்த வித புறச்சக்திகளும் இன்றி கைவிடும் மக்களுக்கு பாட்டுக்கார‌ன் தான் வந்து கனவைக் கலைக்க வேண்டும் என்றில்லை.

நல்லதொரு கட்டுரை... தொடர வாழ்த்துக்கள்... பகிர்வுக்கு நன்றி ! (த.ம. 4)

குட் ஒன்

கலைவிழி சொன்னது…

யார் குற்றியும் அரிசுயாகட்டும் என்பது இப்போதைய ஈழத் தமிழர்களின் நிலை. நடப்பவை நடக்கட்டும், எது எப்படி இருப்பினும். நெஞ்சுக் குழிக்குள் ஒரு ரணம் இருந்து கொண்டே இருக்கிறது.

வடக்கின் தமிழர்களிடத்தே எந்த கதையை ஆரம்பித்தாலும் இறுதியில் போரிற்கே சென்று முடியும். அந்த வேதனையான நாட்களை அவர்களால் மறக்க முடியவில்லை.

இது இப்படியிருக்க, தலைநகரில் ஆடல்பாடல்களை ஊடகங்கள் ஏற்பாடு செய்வது அன்றும் இன்றும், ஏன் வடக்கு மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படும் வரை எதிர்காலத்தில் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

இவர்கள் வன்னிச் சிறுவர்களுக்காக ஆர்க்கபூர்வமான செயற்திட்டங்களை ஒழுங்கு செய்து அவர்களது மனநிலையை மாற்றலாம். வெறும் வியாபாரத்திற்காக இலாப நோக்கம் கொண்டு ஒழுங்கு செய்யப்படும் கேளிக்கை நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டவர்களை மேலும் வேதனைக்குள் தள்ளும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களிலாவது, இன்னமும் பெரும்பாலான வடக்கு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை ஏனைய மக்கள் அறிந்து கொள்ளட்டும், இல்லா விட்டால் வன்னியிலும் ஒரு தொகுதி மக்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும்.

ஆத்மா சொன்னது…

கருத்துச் சொல்வது மிகவும் சிக்கலானது......

எதிர்ப்பவர்களில் அதிகமானவர்கள் இலங்கை மக்களின் நன்மையில் அக்கரை கொண்டு எதிர்க்கவில்லை.

அதிகமான வெளிநாடுகளில் இருக்கும் தாயக மக்கள் ஏன் தென்னிந்தியர்களும் கூட தங்களது மனக் குமுறல்களை ஒரு இனையத்தளம் அல்லது ஒரு ப்ளாக்கின் மூலமே எழுதுகிறார்கள்... சுருக்கமாக சொல்லப் போனால் சில உறவுகளுக்கு ப்ளாக் என்றால் வரும் விடயம் தாயகம் தான் அதன் போது மட்டும்தான் தாயக சிந்தனை .

மற்றய நேரங்களில் நிச்சயமாக தாயகம் பற்றி அவர்கள் கதைப்பது மிகக் குறைவு (முற்றிலும் எனது கருத்து)

நிறையப் பேருக்கு தமிழ் கூட பேச வராது ஆனால் எதிர்ப்பு, போராட்டம் ப்ளாக் எனும் போதுதான் தாயகப் பற்று வருகிறது...

உண்மையில் தாயகத்தின் மீதும் தாயக மக்களின் மீதும் அக்கரை கொண்டு இவர்கள் எதிர்ப்பார்களானால் இந்த எதிர்ப்புகளுக்கு முதல் எதிர்த்தவர்கள் தாயக மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள்..

தினமும் இலங்கை பத்திரைகளிலே வருகிறது தாயக மக்களின் மீள் குடியேற்றம் பற்றி தொழில் வளமில்லாத இடங்களில் குடியேற்றப் படுகிறார்கள்

எதிர்ப்பவர்கள் தொழில் வளமில்லாத மக்களுக்கு தன்னால் முடிந்த வாழ்வாதார உதவிகளை செய்யலாம் தானே...?

வெருமெனே தாயக மக்களுக்கு நாங்கள் உங்ளுடன் தான் இருக்கிறோம் என படம் காட்டுவதற்காகவே இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் எல்லாம் அரசியல் தந்திரம் தான்..

ஆனால் கலைஞர்களின் வருகையென்பது ஒரு சில பொழுதுகளில் உறவுகளுக்கு சந்தோஷமாக இருக்கும். அத்தருணங்களில் கலைஞர்களால் வெளிப்படுத்தப் படும் ஒரு சில வார்த்தைகள் மீண்டும் மக்களின் மனதினில் பழைய சிந்தனைகளைத் தோற்றுவித்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்றாகிவிடும்...

மன நிம்மதிக்கு கலைஞர்களின் வருகைதான் நிவாரணமாக முடியாது இது குறுகிய காலத்து நிம்மதி

அதன் பின் மீண்டும் பழைய நினைவுகளிலே மக்கள் திரும்பிவிடுவார்கள்.

நீண்ட கால மன நிம்மதி விடயங்களை பரிமாறிக் கொள்ள யாருமிருந்தால் அவர்களிக்கு நிச்சயமான இடம் கொடுக்கலாம்..

முற்றுமுழுதும் எந்து கருத்து பிழைகள் இருப்பின் அழகிய முறையில் சுட்டி காட்டவும்

வெளங்காதவன்™ சொன்னது…

அண்ணேன் சார்!!!

இங்கு நான் ஒரே ஒரு கருத்தை மட்டும் கொஞ்சம் இல்லை இல்லை பலமாகவே பதிய விரும்புகிறேன்..

மக்களின் வாழ்க்கை முறையும், கலாச்சாரமும் தொடரவேண்டுமெனில் கலை வளராவிடினும் அதை நசுக்காமலாவது இருக்கவேண்டும்...

எனினும், நீங்கள் ஆராய்ந்து இருப்பது, இந்தியக் கலைஞர்களின் இலங்கைப் பிரவேசம்...

இந்தியர்களாகிய நாங்களே, நம் இனத்தவர்க்கு செய்த துரோகத்துக்கு, ஞாயப்படி இந்தியர்கள் பிரவேசமே கூடாது என்பதுதான்!

*பிறிதொரு சமயத்தில் இன்னும் பேசுவோம்.

-வெளங்காதவன்.

வெளங்காதவன்™ சொன்னது…

அண்ணேன் சார்!!!

இங்கு நான் ஒரே ஒரு கருத்தை மட்டும் கொஞ்சம் இல்லை இல்லை பலமாகவே பதிய விரும்புகிறேன்..

மக்களின் வாழ்க்கை முறையும், கலாச்சாரமும் தொடரவேண்டுமெனில் கலை வளராவிடினும் அதை நசுக்காமலாவது இருக்கவேண்டும்...

எனினும், நீங்கள் ஆராய்ந்து இருப்பது, இந்தியக் கலைஞர்களின் இலங்கைப் பிரவேசம்...

இந்தியர்களாகிய நாங்களே, நம் இனத்தவர்க்கு செய்த துரோகத்துக்கு, ஞாயப்படி இந்தியர்கள் பிரவேசமே கூடாது என்பதுதான்!

*பிறிதொரு சமயத்தில் இன்னும் பேசுவோம்.

-வெளங்காதவன்.

Gobinath சொன்னது…

என்னை பொறுத்தவரைக்கும் இந்திய கலைஞர்களின் வருகையால் ஈழத்தமிழர்களுக்கு எந்தவித சாதகமோ பாதகமோ இல்லை. அது அவரவர் தனிப்பட்ட முடிவு. ஆனால் வருபவர்கள் தங்கள் தொழில் சார்ந்த விடயங்களோடு மட்டும் நின்றுகொண்டால் சரி.

Unknown சொன்னது…

மதிசுதா....நாங்களே (தமிழக தமிழர்களே) இந்தியரா என்கிற குழப்பம் நிலவுகின்றது! இதில் இந்திய கலைஞர்கள் இலங்கை போவதை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்கிற குழப்பம் வருகின்றது! என்னவோ போங்க...

மிக நன்றாக அலசி ஆராயப்பட்ட பதிவு! கலைஞர்களின் வருகையாலோ அல்லது அவர்களுக்கு தடைவிதிப்பதாலேயோ எந்த முன்னேற்றமும் இலங்கையில் ஏற்படும் என்று தோன்றவில்லை!

சிறப்பான ஆக்கம் தொடர வாழ்த்துக்கள் சகோ.

Yoga.S. சொன்னது…

வணக்கம்,ம.தி.சுதா!நலமா?இங்கே,புலம்பெயர் தேசத்தில் ஒரு காலத்தில் தமிழகக் கலைஞர்களை அழைத்து,சம்பாதித்த கூட்டம் ஒன்று இருந்தது.அப்போதும் சிலருக்கு எதிர்ப்புக் கிளம்பியது உண்மை!////இப்போது இலங்கையில் நிலையே வேறு.ஆற்றுப்படுத்துகை என்றால் பாடசாலைகள் கல்லூரிகளில் கலைகளைக் கற்றுக் கொடுப்போர் மூலம்,பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மூலம் பிள்ளைகளை,குழந்தைகளை பயிற்றுவித்து,மற்றும் ஈழக் கலைஞர்களை தொடர்பு கொண்டு பேசி நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்ய முடியுமே?////இலங்கையிலும் தென்னகக் கலைஞர்களை அழைத்துப்"பணம்" பார்க்கும் கைங்கரியம்(அதுவும் தலைநகரில் நிகழ்ச்சி ஒழுங்கு செய்கிறார்கள் என்றால்...............)தானே,நிகழ்கிறது?இலங்கை அரசின் பிரச்சாரத்துக்கும் துணை போவது தானே,இது?

Doha Talkies சொன்னது…

அருமையான பதிவு நண்பரே

ராஜ் சொன்னது…

If Indian delegates/personalties/officials visits Srilanka sucesfully and travel back saftely.. SL govt can tell that SL has become a safe country to live...
Also the T20 world cup in Sep is a good lead for SL to prove their safety to the World unlike Pakistan....
And TN Politicians doesnt want that to happen...thats y they create problem when some top personality tries to visit SL..
This is my opinion.... This is a very good analysis of current mentality of SL ppl..
sorry for typing in English..I dont have Tamil font now...

Unknown சொன்னது…

உங்கள் தளத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகசிறப்பான வடிவமைப்புடன் உங்களுக்கான ஓர் வலைத்திரட்டி.www.thiraddu.com

Unknown சொன்னது…

உங்கள் தளத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகசிறப்பான வடிவமைப்புடன் உங்களுக்கான ஓர் வலைத்திரட்டு.http://www.valaiththirattu.iniyathu.com/

FakeNews.lk சொன்னது…

சிறந்த பதிவு... நிகழ்வு நடைபெறவிருந்தன்று இரவு இருந்த கடுப்பில் நானும் இது பற்றிய பதிவொன்றை இடவேண்டுமென நினைத்தேன். ஆனால் அன்றயதினம் நன்பர்களின் சம்பாசனை என்னை திசைதிருப்பிவிட்டது... நன்றி சகோதரா எவ்வாரிருப்பினும் என்னால் உங்களைப்போல் இவ்வாறு ஆழமான பதிவொன்றை தந்திருக்கமுடியாது. எம்சமூகம் இவற்றைப் புரிந்து கொண்டாலும்.. தென்னிந்திய தமிழ் சமூகம் எப்போது மாறப்போகிறது என்ற கேள்விக்குறி எம் வாழ்முழுவதும் தொடரும்போலும்...

நீங்கள் கூறியதைப்போல் இதுவும் ஏதோ ஒரு வகையில் எமக்கு நன்மையே அழித்திருக்கிறது. ஆனாலும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வழிவகுக்குமா எமது ஊடகங்கள் என்பது சந்தேகமே... எம்மவர் கீதங்களும் இசைக்குமா அந்த நிறம் பீய்ச்சும் கலர்புல் ஸ்டேஜ்ஜில்... ஆவலுடன் காத்திருக்கிறேன்.
kindly SABA

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top