காலச்சக்கரமானது மனிதனை தன்பாட்டுக்கு ஆட்டு வித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையில் ஒருவனுக்கு நேரம் கிடைப்பதென்பது கல்லில் நாருரிக்கும் செயல் தான். அதற்கு நானும் விதி விலக்கல்ல.
ஆனால் இந்தப் பதிவுலகம் எனக்கு நல்ல பல வாசகர்களைத் தேடித் தந்திருக்கிறது. ஒரு வாரம் பதிவு போடவில்லையானால் ஏன் என்று கேட்குமளவுக்கு நான் வளர்ந்திருக்கிறேன் என்பது எனக்குப் பெருமையாக இருந்தாலும் அதற்கு ஏணியாக இருந்தவர்களை என்றும் மறக்கக் கூடாது.
அந்தவகையில் எனக்கு பதிவுலகத்தில் முதல் முதல் தேடி வந்து என்னை தூக்கி மேலே விட்டு ஆலோசனை தந்த பதிவர் ஜனா அண்ணாவை என்றும் மறக்க முடியாது. ஆரம்ப நாட்களில் எனது பல பதிவுகள் தேடுவார் அற்றுக் கிடந்தது. அதற்காக நான் போடி போக்ககா எழுதியவை என நினைக்க வேண்டாம். ஏனென்றால் ஒரு வருடமாக முகாமில் இத்தருணத்திற்காக காத்திருந்து தான் எழுத வந்தேன்.
பல பதிவர்களுக்கு கருத்துரை கூட இட்டிருக்கிறேன் ஆனால் பதிலுக்கு ஒரு தடவை கூட அவர்கள் திரும்பிப் பார்த்த்தில்லை. இன்றும் கூட இலங்கையில் என் தளப்பக்கம் எட்டிப் பார்க்காத பல பதிவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தனிமடல்களில் நாம் அவர்களதை படிக்க வேண்டும் என கேட்டுக் கொள்வார்கள்.
எதுவுமே தெரியாமல் இருந்த வேளையில் தான் ஒரு தனிமடல் வந்திருந்தது. “தம்பி உங்கள் எழுத்துக்கள நன்றாக இருக்கிறது. நீங்கள் எங்கிருக்கிறீர்கள். விரும்பினால் உங்கள் போன் நம்பரை தாருங்கள்” உடனே கொடுத்தேன்.
எதிர் முனையில் “வணக்கம் மதிசுதா” அந்த குழைவுடன் கூடிய குரலுக்குச் சொந்தக்காரரான ஜனா அண்ணா கதைத்தார். அடுத்த ஞாயிறே நல்லூரான் வாசலில் சந்தித்துக் கொண்டோம். அப்போது தான் சுபாங்கன், கிருத்திகனையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
அப்போது பல ஆலோசனைகளைத் தந்தார்கள். அப்போது தான் பதிவுலகம் என்றால் என்ன என்பதை அறிந்தேன். உதாரணத்திற்கு “மொக்கை“ என்ற சொல்லின் விளக்கமும் அப்போது தான் கிடைத்தது.
அவர் எனக்கு கூறியவற்றில் நான் நினைவில் வைத்திருப்பதில் முக்கியமானது “நீங்கள் விளையாட்டுப் பதிவுகளையும், மொக்கைப் பதிவுகளையும் கைவிடலாமே” என்றார். எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது யார் சொன்னாலும் ஆம் என்று கேட்பேன் ஆனால் எனக்குச் சரியென்று பட்டால் தான் அதைச் செய்வேன். “ஏன்” என்று கேட்டேன். “நீங்கள் அடிமட்ட மக்களுடன் இருந்து வந்தவர். எழுதுபவருக்குள் வித்தியாசமான தேடலுடன் இருக்கும் நீங்கள் அதற்குள் இறங்கினால் உங்கள் தேடல் பரப்பை சுருக்க வேண்டி வரும்” என்றார். அவர் சொல்வது நியாயமாகவே பட்டது.
ஆனால் அவர் சொன்னதில் (அவர் மட்டுமல்ல பலர் சொன்னது) ஒன்றை மட்டும் என்னால் நிறைவேற்ற முடியவில்லை. அடிக்கடி சொல்வார் உங்கள் பதிவின் அளவு சிறியதாகவே இருக்கிறது சற்று பெரிதாக எழுதலாமே என்பார். ஆனால் என்னால் இதுவரை அதைச் செய்ய முடியவில்லை. சராசரி 300 எழுத்துக்களை மட்டுமே பிரயோகிக்க முடிகிறது.
மிக நல்ல பதிவுகளை பகிர்ந்து வந்த அவரால் தொழில், மற்றும் குடும்பம் காரணமாக தற்போது எழுத முடிவதில்லை. இருந்தாலும் அவரது பிறந்த நாள் என்றும் பார்க்காமல் ஒன்றை வேண்டிக் கொள்கிறேன். அவருக்கு ஏற்கனவே முழங்கால் உபாதை ஒன்று உள்ளது அவ் உபாதை அதிகரித்து ஒரு நீண்ட மருத்துவ விடுமுறையுடன் வீட்டில் இருந்து மிக நல்ல பதிவுகளை அவர் தர வேண்டும். என்ன கடுப்பு ஏறுகிறதா என்ன செய்யவது பல நல்லது நடக்கணும் என்றால் ஒரு கெட்டது நடந்தால் பரவாயில்லையே.
இன்றைய பிறந்த நாள் நாளில் அவர் இன்று போல் என்றும் தொழிலிலும், குடும்பத்திலும் சீரும் சிறப்பும் பெற்று வாழ வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்.
குறும்படம்
யாழ்ப்பாணத்தை தற்போது குறும்படக் காய்ச்சல் ஆட்கொண்டு விட்டது. குழுக்களாகச் சேர்ந்து செய்த பல முன்னெடுப்புக்கள் ஸ்தம்பிதம் அடைந்திருக்கும் நிலையில் சென்ற வாரம் சிறகுகள் மதுரனும் நானும் ஒரு புகைப்படத்துறை சார்ந்த கடையில் சந்தித்து கதைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அப்போது கதைக்கும் போது ஒரு குறும்படம் இப்போது எடுத்தால் என்ன என்ற கருத்தை கடை முதலாளி குகரூபன்(இவர் ஒரு சிறந்த வலைப்பதிவு வாசகர்) அவர்கள் கேட்டார். சரி, செய்வோம் என எந்தவித முன்னாயத்தமும் இன்றி மதுரனின் தொழில் நுட்பத்தை மட்டும் நம்பி முதலாளியின் Nokia c7 கைப்பேசியில் ஒரு மணித்தியாலத்தில் 5 நிமிடத்திற்கான படம் ஒன்றை உருவாக்கி முடித்தோம்.
இதன் கரு ஒரு கிராமத்து விஞ்ஞானியின் ரொக்கெட் எய்யும் கனவானது எப்படி சாத்தியப்படுகிறது என்பதை நகைச்சுவைப் படமாக்கியுள்ளோம்.
இதை வரும் ஞாயிறு நாற்று முகநூல் குழுமத்தில் வெளியிடவுள்ளோம். அனைவரையும் அதில் கலந்து கொண்டு குறை நிறைகளை பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நாற்று குழுமத்தில் இணைய
நாற்று குழுமத்தில் இணைய
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
14 கருத்துகள்:
வணக்கம் ம.தி.சுதா!உங்களைக் கைதூக்கி விட்ட அந்த ஜனா அண்ணாவுக்கு என் வாழ்த்துக்களும்!குறும்படம் பார்ப்போம்,முடிந்தால்!(முகநூல் என்னிடம் இல்லை)
ஜனா அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு ஜனா அண்ணா போல எனக்கு முதல் கருத்துரை இட்ட பதிவர் நீங்கள்தான். நன்றி அண்ணா. நாற்று குழுமத்தில் இணைந்தாயிற்று. ராக்கெட்ராஜாவுக்காக காத்திருக்கிறேன்.
ஜனா அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள் எம் சார்பிலும்.. பதிவிடுதல் பற்றி,நல்ல நெறிகளைத்தான் உங்களுக்கு சொல்லியிருக்கிறார்.
அவரின் முழங்கால் வலி சீக்கிரம் சரியாகவும், அதிக பதிவுகளை தரவும் எமது பிரார்த்தனைகள்..
குறும்பட குழுவினருக்கு எம் வாழ்த்துகளும், பாராட்டுகளும்..
Valthukkal thampio
ஒரு மணி நேரத்தில் குறும்படம் -சாதனைதான்!
வணக்கம் மச்சி,
ஜனா அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
குறும்பட முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
ஞாயிற்று கிழமையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
குறும்பட முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
நன்றி மதிசுதா...
தங்கள் முதல் பதிவுகளும், சந்தித்த முதல்நாளும் மிக சந்தோசமான பொழுதுகள், எப்போதும் மறக்காததும் கூட. அதே போல தங்கள் விஸ்வரூபங்கள் கண்டு பலர் கொண்டாடும் போதெல்லாம் ஓரமாக இருந்து பெருமை பட்டிருக்கின்றேன்.
தாங்கள் சொன்னதுபோல காசை மட்டுமே குறியாக இல்லாமல் உயர்வு என்னும் இலட்சியங்களுடன் தொழிலில் சென்று கொண்டிருப்பதால், பதிவு, பதிவுலகம் என்பனபற்றி எண்ணுவதே முடியாமல் உள்ளது. (அதுவும் ஒரு வகையில் நல்லது என்றே கருதுகின்றேன்.) எமது முன்னேற்றத்தில் எவை எல்லாம் தடையாக உள்ளதோ அவற்றை குறைக்க வேண்டும் அல்லது கைவிட்டுவிட வேண்டும் என ஏற்கனவே ஒரு பதிவில் சுட்டிக்காட்டி ருககின்றேன்.
இருந்தபோதிலும் பதிவுலகம் உஙகளைப்போல நல்ல னிமையானவர்களையும் தம்பிகளாக தந்திருககின்றமை குறிப்பிடத்தககது.
வாழ்த்துக்கும், பதிவுக்கும் நன்றிகள் மதிசுதா.
அதே போல தங்கள் குறும்படத்தை காண ஆவல் அதேவேளை தங்கள் கனவுக்குறும்படம் பற்றிய தகவல்களை எதிர்பார்கின்றேன்
நண்பா...நீர் வலையுலகிக்கு அறிமுகமானது பற்றி அறிந்து கொண்டேன்.மிக அதிகமான நண்பர்கள் வட்டத்தினை நீர் கொண்டுள்ளீர்...பதிவுலக நண்பர்கள் உண்மையில் எமது ஆக்கங்களுக்கு தரும் கைதட்டல்தான் பதிவுலகில் உயர்வதுக்கு காரணமாய் அமைகிறது...வாழ்த்துகிறேன் தொடர்ந்தும் நல்ல பல பதிவுகளை பதிவிட
நண்பா உன் படமும் பார்த்தாச்சு அதுக்கு கமண்டும் போட்டாச்சு..பத்தாததுக்கு ஒரு நன்றியுரையும் போட்டிருக்குறன் போதுமா....
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
http://tamil.dailylib.com
To get vote button
http://tamil.dailylib.com/static/tamilpost-vote-button/
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …
நன்றி
தமிழ் போஸ்ட்
காலை வணக்கம் ம.தி.சுதா!இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்!!!!!!
கருத்துரையிடுக