Featured Articles
All Stories

சனி, 31 டிசம்பர், 2011

கல்விக்காய் ஏங்கும் பயிருக்கு கரம் கொடுக்க வாருங்கள்



முற்குறிப்பு - இப்பதிவானது சகோதரன் சந்துரு அவர்களின் வலைத் தளத்தில் பகிரப்பட்டிருந்தது. ஒரு பொது நோக்கிற்காக அவரின் அனுமதியுடனும். அந்தப் பாதிக்கப்பட்டவரின் ஒலிப்பதிவையும் பெற்று தங்களுடன் பகிர்கின்றேன். கல்வியில் சிறந்து விளங்கும் அந்தப் பையனை வாழ வைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். எனது முகவரிக்கோ (mathisutha56@gmail.com) அல்லது கீழே உள்ள சந்துருவின் முகவரிக்கோ தொடர்பு கொண்டால் அந்தப் பையனின் தொலைபேசி இலக்கத்தை தருகின்றோம்.
10:41 PM - By ம.தி.சுதா 12

12 கருத்துகள்:

செவ்வாய், 20 டிசம்பர், 2011

எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

     இப்பதிவானது 100 வீதம் எனது சுயபுராணமே. யாரும் தங்கள் பொன்னான நேரத்தை இதற்குள் வீணாக்க வேண்டாம். இது எனது நிலையை மட்டும் பறைசாற்றும் பதிவல்ல இங்கு நிற்கும் ஒவ்வொரு இளைஞனின் நிலையாகும்.
      இவ்வளவு காலமும் தங்களோடு ஒட்டி உறவாடிய நான் பல விடயங்களை மறைத்தே பழகினேன்.

52 கருத்துகள்:

திங்கள், 19 டிசம்பர், 2011

புலம்பெயர் மக்கள் ஈழத்திற்குச் செய்தது என்ன?

குறிப்பு - தயவு செய்து பதிவுக்கு மட்டும் கருத்திடுங்கள்.. கருத்துகளைப் பார்த்துக் கருத்திடுவதால் மீண்டும் பிரச்சனை திசை திரும்புகிறது...

சத்தியமாய் இது நான் தான் நம்பாவிடில் பதிவை படித்து முடியுங்கள்
        ஓயாது சுற்றும் இப்புவியில் மானுடனாய் அவதரித்த ஒவ்வொருத்தரும் ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் துடித்துக் கொண்டிருக்கிறோம்.
     கடந்த சில நாட்களாக ஆரம்பித்த கருத்துப் போரானது எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ வந்து நிற்கிறது. இது யாரால் திசை திருப்பப்பட்டது ஏன் திசை திரும்பியது என்பதை மறப்போம்.
      ஆனால் அதன் உச்சக்கட்டம் பல நல்ல தமிழின உணர்வாளர்களைப் பாதித்து விட்டது. அதற்கு நான் எழுதிய வரிகளும் காரணமாக அமைந்திருக்கலாம். எமக்குள் இருந்த சிறு சிறு கருத்து வேற்றுமைகள் வெறும் வாயை மென்றுகொண்டிருந்தவனுக்கு அவலைக் கொடுத்தது போலாகி விட்டது.
      இது ஒரு திடீர்ப் பதிவு தான் காரணம் இன்று இணைய உலகில் சஞ்சரிப்போம் என்று நுழைந்து பார்த்ததும் தான் இவற்றைக் கண்ணுற்றேன்.
சென்ற பதிவில் நான் சில கேள்விகளை கேட்டிருந்தது உண்மை தான் ஆனால் அக்கேள்வியே அவர்கள் மீதான தப்பான பார்வையாக மாற்றப்பட்டிருக்கிறது எனும் போது அக் களங்கத்தையும் கட்டாயம நான் தானே களைந்தாக வேண்டும். துசியந்தன், கந்தசாமி, ஐடியாமணி (A) ரஜீவன், நிருபன், நேசன் இத்தனை பேருக்குமிடையில் தான் இந்த உச்சக்கட்ட கருத்து மோதல் இடம்பெற்றது.
      ஆனால் கருத்தால் மோதிக்கொண்ட நானே ஏற்றுக் கொள்கிறேன் இவர்கள் அனைவரும் ஈழ உணர்வாளர்களே.. ஈழமக்களின் முன்னேற்றத்திற்காக ஏதோ ஒரு வகையில் உழைத்து வருகிறார்கள்.
  இவர்கள் மட்டுமல்ல இன்னும் சில பதிவர்களும் மும்முரமாக ஈடுபடுகிறார்கள். அதில் ஒருவர் என் ஊடாகத் தான் இங்குள்ள ஒருவருக்கு பண உதவி செய்தார். அவர் தன் பெயர் வெளிவரக் கூடாது எனக் கண்டிப்பாகச் சொன்னதால் தான் நான் வாய் திறக்கவில்லை. அதே போல் இன்னொரு பதிவர் (அச்சுவேலியை சேர்ந்தவர்) உதவ முன்வந்திருந்தார்.
   இதை புதிதாய் பார்ப்பவர்கள் கேட்கலாம் அப்புறம் ஏன்ரா அடிபட்டுக் குத்துப்படுகிறீர்கள் என்று?
யோவ் இது எங்கள் வீட்டில் புதிதாய் நடக்கும் ஒன்றல்ல இன்றைக்கு அடிபடுவோம் நாளைக்கு கட்டிப்பிடித்துக் கொண்டு படுப்போம்.
    இன்னும் இந்தப் போர் தொடர்ந்திருக்கும் ஆனால் அது எங்கேயோ போய் அவர்களை தேசத் துரோகி ரேஞ்சுக்கு கொண்டு வந்து அவர்களும் ஏதோ போர் ஆதரவாக குரல் கொடுப்பவர் என்ற கணக்கிற்குக் கொண்டு வந்து விட்டது.      
    இதன் பிறகும் விட்டால் எனக்கு ஒரு சிலரால் கொடுக்கப்பட்டுள்ள பட்டம் தான் அவர்களுக்கும் கிடைத்து விடும்.
      
என்னடா இவங்களுக்குள் நடந்தது என்று விழித்து விழித்துப் பார்ப்போருக்காக
   முன்கதைச் சுருக்கம் (மன்னிக்கணும் பிரச்சனைச் சுருக்கம்) -

reel - 1 நான் இந்திய சினிமாக்காரர் ஈழம் என்ற பெயரை வியாபார பொருளாகப் பாவிப்பதாகவும் அதை யாரும் சமூகத் தளங்களில் பிரபலப்படுத்த வேண்டாம் என்றும் சில கவிஞர்கள் போர் உணர்வைத் தூண்டுவதாகவும் பதிவிட்டேன். அதில் பலருக்கு உடன்பாடிருக்கவில்லை.

reel - 2 ரஜீவன் அவர்கள் ஒரு பதிவிட்டார் அதில் அவர் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் நல்ல படைப்புகள் வந்தால் நாங்கள் ஏன் இந்தியப்படைப்பை நாடுகிறோம் என்றார். நான் பதிலிட்டேன் தங்களுக்கு விரைவில் செயலில் காட்டுகின்றேன் என்றேன். உண்மையில் நான் குறிப்பிட்டது நான் எடுக்கப் போகும் குறும்படம் பற்றித் தான் அதன் பிறகு என் கீழே கருத்திட்டவர் அனைவரும் அதையே கருப்பொருளாக எடுத்து விட்டார்கள்.
reel - 3 மேலும் தேவைப்பட்டால் கருத்துப் பெட்டியில் பகிரப்படும்.

சரி தலைப்பிற்கு வருவோம்
    மேலேயே சில விடயங்கள் சொல்லப்பட்டாலும். இதே போலத் தான் சில காலத்திற்கு முன்னர் வெளிநாட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவர் தேவையற்ற புரிந்தணர்வு ஒன்றால் பிரிந்து போனார்.
     ஆனால் அவர் தனது பிள்ளையின் பிறந்த நாள் பணத்தைக் கூட நான் இருந்த அகதி முகாமிற்கு அனுப்பியவர் அதுமட்டுமல்ல சிறிய தூரம் பிரயாணம் செய்வதென்றால் நடந்து சென்று விட்டு அப்பணத்தை இங்கே அனுப்பும் ஒருவர்.
அப்படியானால் ஏன் மோதிக் கொண்டீர்கள்?
   ஒரு இணையத்தளம் ஒன்று ஒரு பொது விடயத்திற்காகப் பணம் சேர்த்தது. ஆனால் அப்பணம் சுருட்டப்படப் போகிறது என்பதால் நான் எதிர்த்துப் பதிவிட்டேன் அதை அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அதற்கு நான் என்ன செய்வது.
  அத்துடன் எனது உறவினர் ஒருவர் கனடாவில் இருக்கிறார். இளைஞரான அவர் தனது இளைஞர் குழுவுடன் இணைந்து நட்டாங்கண்டல் கிராமத்திலுள்ள பலருக்கு வாழ்வாதாரம் அளித்துள்ளார். அவர் மீண்டு செய்வதற்காக நான் ஆரம்பித்திருந்த அரவணைப்போம் திட்டத்தைக் கேட்டுள்ளார்.
    இப்படிப் பலர் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரையும் தொகுத்து தனிப்பதிவில் இடுகிறேன்.
  இவன் ஏன் இதைப் புலம்புகிறான் என கேட்கிறீர்களா?
  நானும் புலம்பெயர் தேசத்தில் நடக்கும் ஊழல்களை மட்டுமே அதிகமாகக் கதைப்பதால் ஈ-ழ-ம் ச-ம்-ப-ந்-த-ப்-ப-டா-த-வ-ர்-க-ள் புலம்பெயர்ந்தவர் அனைவரும் அப்படித் தானாக்கும் என நினைத்து விட்டார்கள். அதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன் என்று சொல்லும் போது வெட்கமடைகிறேன்.
          
   இந்தப் பதிவை திடீரென நான் எழுதக் காரணமானவர்களில் இன்னும் ஒருவர் இருக்கிறார்.
    ஒருத்தி என்னைக் கேட்டிருக்கும் கேள்வியின் தாக்கம் தான். இவ்வளவும் என் தங்கையாக பழகிய உரிமையில் தான் கேட்கிறாள் என்றாலும் அது என்னை உறுத்தியது. சுலக்சி என்ற அந்த ராட்சசியின் மடல் இது தான்.. தனிமடலை பகிரக் கூடாது என்ற விதிகளால் அழித்து விட்டே இட்டிருக்கிறேன்.

20 கருத்துகள்:

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

தமிழ்மண வாரமும் நான்பட்ட அவஸ்தைகளும்

      இந்த ஒரு வாரத்தில் எனக்கு புதுப் புது நட்புகளையும் அருமையான புரிந்துணர்வுகளையும் ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்மணத்திற்கு நன்றி சொல்லி என் வாரத்தை திருப்தியாக பூர்த்தி செய்து கொண்டு என் அடுத்த கட்டத்திற்கு நகர்கின்றேன்.

சக பதிவர்களிடம் சில கேள்விகளை கேட்டுவிட்டே மூடிவெடுக்கலாம் என இருக்கிறேன்.
      உண்மையில் ஏதோ ஒரு ஏமாற்றத்தில் இருந்த எனக்கு நேற்று திரு ஐடியாமணியின் பதிவு உண்மையிலேயே சிரிக்கவே வைத்தது. அதற்கு காரணமென்னவென்றால் அதன் தலைப்பும் அங்கு என்னோடு நெருங்கிப் பழகியவர்கள் இட்ட கருத்தும் தான்.
     அங்கே ஊடகங்களுக்குள் வருவதென்றால் மனோதிடம் வேண்டுமாம் எதையும் தாங்கப் பழகணுமாம். சொந்தக்காரன் செத்திருந்தால் கூட கலங்கக் கூடாதாம்.
ஊடகத்துறைக்கே இந்தளவு என்றால் எனக்கு எந்தளவு கற்பிக்கப்பட்டிருக்கும்.

      எனக்கு ஊடகக் கற்கை தெரியாது அதன் வாடையே எப்படியெனத் தெரியாது ஆனால் அதைக் கற்றவர் எழுதாததை என்னால் எழுத முடியும்.
   அந்த ஊடகதர்மத்தையே பல தடவை எதிர்க்கிறேன் காரணம் சில நாட்களுக்கு முன்னர் கூட குற்றப்புணர்வு மேற்கொள்ளப்பட்ட பெண்ணின் படத்தை ஒரு ஊடகம் பிரசுரிக்கிறது அப்போ அந்த ஊடகதர்மம் எங்கே போய்விட்டது.

 1.கஸ்டப்பட்டு உழைக்கும் நாங்கள் எமது காசில் படம் பார்க்கிறோம் அதற்கேன் வேலை வெட்டி இல்லாதவன் போல் எவன் எவனோ எல்லாம் காத்துறன்?
அதற்கு ஒருவர் கொடுத்த பதில் அவருக்கு அது தான் வேலை போலும்

இந்த இடத்திலேயே நான் நிறுத்தியிருக்கணும் ஏனென்றால் நானும் உங்களைப் போல காசு கொடுத்துப் படம் பார்க்கும் ஒருவன் தான் ஆனால் நான் யாரையாவது படம் பார்க்க வேண்டாம் என்று சொன்னேனா. அந்த வசனத்தை தூக்கிப் பிடித்து பிரபலப்படுத்த வேண்டாம் என்றேன்.

இவ்வளவு நாளும் என் கொள்கைகளை ஆதரித்து ஒட்டி உறவாடிய அவரே இவருக்கு இது தான் வேலை எனும் போது மற்றவன் “உங்க பார் ஒண்டா இருந்தவனே அப்படிச் சொல்லிட்டான் அப்ப உண்மை தானே” எனக் கேட்கிறான்

என்ன காரணத்துக்காக புலம்பெயர் தேசத்திலிருந்து போருக்காதரவாக குரல் கொடுப்போரை நான் எதிர்க்கையில் என்னை அடக்க முயல்கிறீர்கள்?

ஒவ்வொருத்தரும் தனித் தனி மலையில் இருக்கிறீர்கள். ஆனால் நான் ஆற்றுமுகத்தில் இருக்கிறேன் எனக்குள் வரும் அத்தனை நதி நீரையும் ஸ்பரிசித்தே உணர்கிறேன் அதனால் அதை தரும் அத்தனை மலைகளையும் நேசிக்கிறேன். ஆனால் அந் நீரைத் தடுக்கும் அணைகளை எதிர்க்கிறேன். இதை ஏன் உங்களால் புரிய முடியாமல் இருக்கிறது

2. ஒருவர் கேட்கிறார் ஏன்பலவீனமான பக்கத்தையே தாக்குகிறீர்களாம் பலமான பக்கத்தை தாக்கலாமே?

பலவீனமானவரை வைத்து வியாபாரம் செய்பவனும் பலவீனமானவனா?

3. இங்குள்ளவரை (புலம்பெயர்ந்தவரை) தாக்கி தாக்கி கதைக்கிறீர்களே. இலங்கை அரசாங்கத்தையும் தாக்கி எழுதலாமே?

சரி சில ஒப்பந்தம் செய்வோமா? நான் இங்குள்ளவரை பற்றி எழுதுகிறேன் நீங்கள் உங்குள்ளவரைப்பற்றி எழுதி ஏமாறுபவரை விழிப்புணர்வு அடையவையுங்களேன் அல்லது நீங்கள் இங்கு வந்திருந்து இங்குள்ளவரைப் பற்றி எழுதுங்கள் நான் உங்கு வந்திருந்து உங்குள்ளவரைப் பற்றி எழுதுகிறேன்.

4. ஊரில் இருப்பவர்கள் ஏன் யார் ஈழம் பற்றிக் கதைத்தாலும் மூர்க்கமாகத் தாக்குகிறார்கள்?

எதை வைத்து இக் கேள்வி எழுப்பப்பட்டதோ எனக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு தமிழனும் சீமான் ஐயாவை எந்தளவு மதிக்கிறோம் அதற்காக அவர் “அண்ணைக்கு இவர் படங்கள் பிடிக்காது“ என்று சம்பந்தமே இல்லாமல் சம்மந்தமே இல்லாத காலத்தில் சொல்லும் போது அவ்வசனத்தை ஆதரிக்க முடியுமா? அதை எதிர்த்தால் ஈழம் என்ற சொல்லை எதிர்ப்பது போலவா?

5.புலம்பெயர் மக்கள் சிலர் (இப்போதும் மறந்து கூட எல்லோரையும் உள்ளடக்கவில்லை) போர் போர் போர் எனக் கத்துகிறார்களே அவர்கள் எப்படியான பொருளில் கத்தணும் என்கிறீர்கள்?

இந்தக் கேள்வியை பாதிக்கப்பட் நீங்களே கேட்கலாமா? இங்கு வாழ வழியின்றி தொழில் துறை இன்றி நாம்படும்பாடு தாங்கள் அறியாததா? ஒரு நிறுவனத்தில் போய் வேலை கேட்டேன் (முகாமால் வந்த புதிதில்) வந்தவர்கள் அனைவரையும் தேர்வில் முந்தினாலும் நான் வன்னி என்று தெரிந்ததும் “தம்பி எமது நிறுவனத்துக்கு ஏதாவது பிரச்சனை வரும் கொஞ்கச் காலம் போக விட்டு வா” என்கிறான். அப்படியானால் நாங்கள் என்ன இரவில் போராடி விட்டு பகலில் பிச்சையா எடுப்பது.

6. தாமரையை தாக்கி எழுதுவதால் உணர்வோடு செயற்படும் அவர்களை தாழ்த்துவதாகுமே?

நான் அவர் சொன்னதை எல்லாம் எதிர்க்கவில்லையே இதை எப்படித் தங்களுக்குப் புரிய வைப்பது.

       எது எப்படியோ கருத்துக்கள் பெரிதுபடுத்தக் கூடாது என்று எல்லோரும் சொல்கிறீர்கள்.
     எனக்கும் எதிர்ப்பதிவோ உள் குத்துப் பதிவோ புதிதல்ல.
ஆனால்ஒருவரின் பதிவிலேயே சொல்லியிருந்தேன். முன்னால் வீட்டுக்காரன் அடிப்பதை விட சொந்த வீட்டுக்காரன் அடித்தால் அதிகமாய் நோகுமாம்.
   என்னோடு நெருங்கியது மட்டுமல்லாமல் ஓரளவு அறிந்ததாலோ தெரியவில்லை ஒருவர் எல்லோரிடமும் தர்க்கப்பட்டு எனக்காக தன்னிடம் இருக்கும் நன் மதிப்பையும் கெடுத்துக் கொள்ளுகிறார். அதை தொடர விடுவதும் எனக்கு சரியெனப்படவில்லை.
     ஏதோ கொள்கைளால் வேறுபட்டு விட்டோம். அதனால் ஒரே வீட்டில் இருக்க முடியாதென்றே நினைக்கிறேன். ஒருமைப்படும் போது வாருங்கள் ஒன்றாய்ப்பயணிப்போம்.

       சந்தர்ப்பம் கிடைத்தால் செவ்வாய்க் கிழமை 9 மணிக்கு பிரசுரமாகப் போகும் நான் ஏன் போரை வெறுக்கிறேன் என்ற என் தன்னிலை விளக்கப்பதிவையும் அங்கே தந்துள்ள ஆதாரப்படங்களையும் படியுங்கள். முடிந்தால் திரட்டியிலும் இணைத்துவிடுங்கள்.

   இப்பதிவுக்கான கருத்துப் பெட்டியை மூடுவோமா என நினைத்தாலும் எழுதுவது தான் என்னுரிமை அதற்கான கருத்துரிமை உங்களது அதற்காகவே திறந்து விட்டுள்ளேன்.

நன்றிச் செதுக்கலுடன்
x_3b8a66db

23 கருத்துகள்:

சனி, 17 டிசம்பர், 2011

உயிர் தந்தோருக்கு ஒரு வரியால் ஒரு குரல்

எம் மண் மாளுகையில்
உம் மண் போல் உயிர் நீத்திரே
உம்மை
கேட்க நாதியற்றவர் போல்
கேவி அழ வைத்து விட்டாரே
கேரளத்து மானுடர்கள்
11:15 PM - By ம.தி.சுதா 12

12 கருத்துகள்:

வெள்ளி, 16 டிசம்பர், 2011

வன்னியின் முதல் பதிவருடன் நடந்த ஒரு விபரீதச் சந்திப்பு

      சில அதிசயங்கள் ரகசியமாகவே நடந்தேறிவிடுகிறது. நடந்தேறிவிட்ட ரகசியங்கள் கூட சிலவேளைகளில் மட்டும் தான் எம் காதுகளுக்கு எட்டுகிறது.
யாரிந்தப் பதிவர் என்பதே இந்த வருட ஆரம்பத்தில் தான் எனக்குக் கிடைத்தது.

12:13 PM - By ம.தி.சுதா 27

27 கருத்துகள்:

வியாழன், 15 டிசம்பர், 2011

இலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பரதேசியின் பரிதவிப்பும்

வணக்கம் உறவுகளே
இப்பதிவானது எனது சொந்த அனுபவம் சார்ந்த கருத்துக்களை உள்ளடக்கியது. இதில் பலருக்கு கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அதற்கு நான் பொறுப்பு நிற்க முடியாது. எந்தக் கருத்திடுவதானாலும் முழுமையாக வாசித்து விட்டு இடவும்.

10:47 AM - By ம.தி.சுதா 40

40 கருத்துகள்:

புதன், 14 டிசம்பர், 2011

ஊரைப் பிரிந்த புலம்பெயர் தமிழனின் ஏக்கம் என்ன?

புலம்பெயர் தேசத்தில் வாழும் என் உறவினர் ஒருவரின் மேடை நிகழ்ச்சி ஒன்றுக்காக என்னால் புனையப்பட்ட வரிகளுக்கு அவரே குரல் வடிவம் கொடுத்துள்ளார். அதன் வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அக்காணொளியில் அவர் பிறந்த மண்ணே பின்னணியாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் காட்டப்பட்டுள்ள அரசமரம் இன்று எம்மோடு இல்லை.


ஒரு முறை
என் மண் போக வேண்டும்
விடுமுறை
தான் ஒன்று தாறீரோ


நான் தின்று வழ்ந்த மண்ணது
எனைத் தின்னும்
பாக்கியம் இழந்திடுமோ
எட்ட நின்று ஊர் பார்த்தால்
பச்சை கொடியசைக்கும் ஆலமரம்
காலாற ஒரு கல்
கவ்வுகின்ற தென்றல்
முப்பொழுது போனாலும்
முகம் சுழிக்கா திண்ணை அது


ஒரு முறை
என் மண் போக வேண்டும்
விடுமுறை
தான் ஒன்று தாறீரோ
திட்டம் போட்டு அறுந்த விழுதால்
பிட்டம் தெறித்து விட
சொட்ட சொட்ட அழுதது
மறக்கவில்லை


அங்கே
அற்ப காலம் தங்கினாலும்
என்னை
சிற்பம் போல் செதுக்கிய
கற்பகத் தான் காலடி தான் என் சொர்க்கம்
ஒரு முறை
என் மண் போக வேண்டும்
விடுமுறை
தான் ஒன்று தாறீரோ


நடு வளையில் ஏணை கட்டி
என்னை
சீரங்கம் சீராட்டிய மாளிகை
ஊரில் ஓரம் போய் இருப்பதாய் அறிந்தேன்
நெஞ்சு பதறுதம்மா
பிஞ்சுத் தோடம்பழத்தை
அஞ்சாமல் பிடுங்கியதும்
புழு தின்ற இலந்தையை கூட
புழுகி புழுகி சுவைத்ததும்
இதே கைகள் தானே


அந்த மண்ணில்
ஒரு பிடி அள்ளத் தவறின்
அறுத்தெறிவேன் என் கரங்களை
ஆண்டவனே
ஒற்றை வரம் தாரும்
ஒரு முறை என் மண் அள்ள
மறுப்பின்றி அனுமதி தாரும்
உன் கால் தொழுது
காலனிடம் கொடுத்திடுவேன்
என்னுயிரை


ஒரு முறை
என் மண் போக வேண்டும்
விடுமுறை
தான் ஒன்று தாறீரோ

குறிப்பு - நண்பர்கள் யாராவது இப்பதிவை திரட்டியில் இணைத்து விடுங்கள்.



ஈழத்து மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்களின் இன்றைய நிலையினைக் கருத்திற் கொண்டு; எம் அடுத்த சந்ததியிடமும், உலகெங்கும் பரந்து வாழும் எம் தமிழ் உறவுகளிடமும் இவ் விடயங்களை அழிவுறாது கொண்டு செல்லும் நோக்கிலும் ஆவணப்படுத்தும் நோக்கிலும் ஈழ வயல் எனும் வலைப் பதிவினைப் பதிவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.ஈழவயலில் வெளியாகும் பதிவுகளை நூலுருப்படுத்தும் முயற்சியிலும் பதிவர்கள் ஈடுபடுகின்றார்கள். இந்த ஈழ வயல் வலைப் பதிவினை நீங்களும் தரிசித்து உங்கள் ஆதரவினையும் இவ் வலைப் பதிவிற்கு வழங்கலாம் அல்லவா?
10:57 AM - By ம.தி.சுதா 25

25 கருத்துகள்:

செவ்வாய், 13 டிசம்பர், 2011

இந்திய சினிமாக்காரரிடம் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர் உணர்வுகள்

    கடந்த நூற்றாண்டிலிருந்து தமிழன் என்று ஒரு சொல் சொன்னால் ஈழம் என்ற ஒரு தேசம் தான் அனைவர் கண்ணிலும் வரும். அந்தளவுக்கு அந்தச் சொல்லுக்கே வலுச் சேர்த்தவர்கள் ஈழத்தமிழர்களே.
   இது என்றைக்குமே அழிக்க முடியாத வரலாறாகும். அந்தச் சொல்லுக்கு வலுச் சேர்க்க முழுத் தமிழர்களும் பங்கெடுத்தாலும் அதன் வடுக்களை முற்று முழுதாகத் தாங்கி நிற்பவர்கள் வன்னித் தமிழர்களே (வன்னியில் வசித்தோரும் உள்ளடங்கும்). அவர்களது மீள் கட்டுமானத்திற்காக பல புலம் பெயர்ந்த தமிழர்கள் உழைக்கிறார்கள்.
   சுவிற்சர்லாந்தில் உள்ள என் உறவினர் ஒருவர் எம் மக்களுக்கு உதவுவதற்காக சிறிய தூரம் பஸ்சில் செல்ல வேண்டியிருந்தால் அதை நடந்து கடந்து விட்டு அந்தப் பணத்தை இங்கு அனுப்புவதாகக் கூறும் போது என் மெய் சிலிர்த்தது.ஒரு சில புலம்பெயர்ந்தவர்கள் எம்மை வைத்து பணம் சேகரித்து ஏப்பம் விட்டுக் கொண்டிருப்பதும் மன வருத்தமே.
  இந்தத் தமிழ் நாட்டு பிரபலங்கள் இருக்கிறார்களே அவர்களில் பெரும்பாலனவர் என்ன செய்கிறார்கள் தெரியுமா? ஈழத்து ஏக்கத்தில் எம்மீது அப்பழுக்கற்ற பாசம் கொண்டிருக்கும் தமிழக மக்களை தம் பணம் சம்பாதிக்கும் கருவிகளாக மாற்றி விட்டார்கள்.இப்போது புதிய சந்தைப்படுத்தால் முறை என்னவென்றால் தம் படங்களில் எப்படியாவது ஈழத்தைப் புகுத்துவதாகும்.
7 ம் அறிவில் அந்த வசனத்தைப் புகுத்தும் போதே எனக்குக் கடுப்பேறியது. கடுப்பேறியதற்குரிய காரணம் அந்த வசனத்தில் வந்த ஒரு பகுதியான “அடிக்கணும் திருப்பி அடிக்கணும்” எல்லாரும் இதைத் தானே சொல்கிறீர்கள். அடிப்பதென்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இது ரம்போ படமல்ல கல்லெறிந்து ஹெலி (உலங்கு வானூர்தி) விழுத்துவதற்கு. எவ்வளவு காலம் தான் எங்களை உசுப்பேத்தி உசுப்பேத்தியே குளிர் காய்வீர்கள். அந்த வரிகளுக்காகவே புலம் பெயர் தேசத்தில் படம் பார்க்காதவனையும் உதயநிதி பார்க்க வைத்து விட்டார். அதற்காக நான் இட்ட முகநூல் கருத்து இது தான்.

7ம் அறிவு விளம்பரம் - அடிக்கணும் திருப்பி அடிக்கணும் ஒருத்தனை 9 பேர் தாக்கினது வீரமில்ல துரோகம்... அடுத்து உதய நிதியின் பெயர் ஒட்டல்.. எப்படி இருக்கிறது விளம்பரம்.. பணத்துக்காக எதுவும் செய்வாங்களாம் நாங்க அதைத் தூக்கி வச்சு வீர வசனம் பேசி சாகணுமாம்.. திரு உதயநிதி அவர்களே அந்த 9 பேரில் உங்க தாத்தாக்கும் அப்பனுக்கும் பெரும் பங்கிருக்கிறதை மறந்திட்டிங்களா? அந்த நேரம் ஒருவர் முதல்வர், மற்றவர் மேயராம் இப்ப வந்துட்டாங்க பணம் உழைக்க... தயவு செய்து மற்றவங்க உணர்வை வித்துப் பிழைக்காமல் உங்க உழைப்பை விற்று பிழையுங்கள்.

    ராஜப்பாட்டை படத்தில் யுகபாரதி ஒரு வசனம் எழுதியிருந்தார். அதுவும் காதல் பாடலில், அதை ஓரளவு நான் பொறுத்துக் கொண்டேன் காரணம் அந்தச் சொல்லை மறக்கப்படமூடியாத இசையுடன் கூடிய பாடல் வரிகளுக்குள் புகுத்தி விட்டாரே என பொறுத்துக் கொண்டேன். ஆனால் அதைக் கூட பலரால் ஏற்றுக் கொள்ள முடியாவில்லை. அதற்கு யுகபாரதி தனது வலைத்தளத்தில் என்ன கூறியிருக்கிறார தெரியுமா?
பூவெல்லாம் உன்வாசம் திரைப்படத்தில் காதல் வந்ததே பாடலில் கவிஞர்.வைரமுத்து இலங்கையில் நடக்கின்ற போரை நிறுத்து காதல் வந்ததே என்று எழுதியதைப் போலத்தான் இதுவும்.தனி நாடு என்னும் இலக்குக்காக முள்வேலியும் முடிவில்லா போரையும் தொடர வேண்டிய இச்சூழலில் பாடலின் அர்த்தத்தில் பிழை ஏற்படுத்தி தமிழ் உணர்வுகளின் இதயத்தை காயப்படுத்த வேண்டாமே.இப்பாடலை உச்சிமோர்ந்து வரவேற்கும் தோழர்களிடம் இப்பாடலுக்கான மெய்யான பொருளை கேட்டுத் தெளிவு பெறுங்கள்.கருத்துக் கூற வேண்டும் என்பதற்காகக் கூறப்படும் கருத்துக்கள் களங்கமுடையன என்பதை யாவரும் அறிவோம்
அப்படியானால் நீங்களும் போரை விரும்புகிறீர்களா யுகபாரதி. போர் என்றால் எப்படி இருக்குமென்று தெரியுமா? குருதி எப்படி ஒரு வெடுக்கு நாற்றம் வீசும் என்று மணந்திருக்கிறீர்களா?
   
     இதே போலத் தான் கவிஞர் தாமரையும் ஒரு கவியில் தலைவன் வரவேண்டும் மீண்டும் ஈழம் மலர வேண்டுமென்று ஒரு முறை கவி புனைந்திருந்தார். அதற்கு நான் கருத்திட்டிருந்தேன் அவர் வந்தால் உங்கள் கணவரை போருக்கு அனுப்பவிர்களா ? என்று கருத்திட்டேன். எதையும் சொல்லில் சொல்லி விட்டுப் போகலாம் அதை அனுபவிக்கும் போது தான் தெரியும்.
  அதற்காக கவிஞர்கள் போருக்கெதிராக கவி புனையவில்லை என்று நான் கூற வரவில்லை. “ஈழத்தில் போர் ஓய வேண்டும்“ “சந்திரிக்காவும் பிரபாகரனும் சம்மந்தியாகணும்“ என்றெல்லாம் பொதுமைப்பாடான வசனங்கள் எழுதப்பட்டிருக்கிறது.
   மேற்குறிப்பிட்டுள்ள கவிஞர்களே நான் உங்கள் கவி வரிகளை அதிகமாய் நேசிக்கிறேன்.ஆனால் போர் என்ற அந்தக் கொடிய அரக்கனை நான் என்றுமே வழி மொழியப் போவதில்லை. இது பற்றிக் கதைத்ததற்காக தந்தையுடனேயே கருத்து முரண்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் கதைக்காமல் இருந்திருக்கிறேன்.உங்கள் எழுத்துக்கள் என்றும் பலம் வாய்ந்தவை அதை போருக்கெதிராக மட்டுமே பிரயோகியுங்கள் இன்னும் உங்கள் கவி வலுப்படும்.
     என் சக தமிழ் உறவுகளுக்கும் ஒரு அன்பான வேண்டு கோள் இப்படியான வசனங்களைத் தூக்கிப் பிடித்து நீங்களும் பரப்புரையில் ஈடுபட்டு அவர்களை பணக்காரர்கள் ஆக்க முனையாதிர்கள். இது ஒவ்வொருவரதும் உணர்வு அது விலைமதிப்பற்றது அதை மற்றவன் பாழாக்க அனுமதிக்கக் கூடாது.
10:21 AM - By ம.தி.சுதா 57

57 கருத்துகள்:

திங்கள், 12 டிசம்பர், 2011

நாடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்


  திரைத்துறையின் தாக்கத்தால் நாடக மேடைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தாலும் நாடகங்களுக்கு இருக்கும் மவுசு என்றுமே குறைந்ததில்லை.
     ஒருவருடைய நடிப்புத் திறனை சரியாக வெளிப்படுத்தவும், திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் நாடக மேடைகளே சிறந்த களமாக இருக்கிறது.
   ஆனால் நாடக மேடைகளில் காட்சிக்குப் புறம்பான பல நகைச்சுவைகள் இடம்பெறுகின்றன. அவை காலாகாலத்திற்கும் அழியாத நகைச்சுவையாகவே இருக்கின்றது
   அதில் 2 நகைச்சுவைகள் பல தசாப்த்தத்திற்கு முன்னர் இடம்பெற்றாலும் இன்றும் அதை கூறி விழுந்து விழுந்து சிரிப்பதுண்டு.
முதலாவது நகைச்சுவை
   ஒரு அரச நாடகத்தில் தோன்றும் நாயகனுக்கு மேடை ஏறுவதானால் கள்ளுக் கொடுக்க வேண்டும் இல்லாவிடில் அரசனாக நடிக்கும் அந்த நாயகன் கடுப்பாகி விடுவான் நடிக்கவே மாட்டான்.
   ஒரு முறை நாடக தினத்தில் கள்ளுக் கிடைக்கவில்லை. வலுக்கட்டாயமாக அந் நாயகன் மேடை ஏற்றப்பட்டான்.
   அதில் ஒரு காட்சியில் அந்நிய நாட்டிலிருந்து அம் மன்னனுக்கு எச்சரிக்கை ஓலை அனுப்பப்டுகிறது. அதை காவலன் வந்து சொல்கிறான்
காவலன் - அரசே அந்நிய நாட்டில் இருந்து தங்களுக்கு ஓலை ஒன்று வந்திருக்கிறது. (அந்நிய மன்னனின் மடல்)
அரசன்  - கொண்டு போய் பொன்னம்மாக்கான்ர கோடிக்கை பறியடா.
(கோடி என்பது வீட்டின் கொல்லைப்|புறமாகும்)
மறு நாள் காவலன் - அரசே அந்நிய நாட்டுப்படைகள் நம் நாட்டின் மீது படையெடுத்துள்ளன.
அரசன் - எல்லாரும் போய் வேலை (ஈட்டி என்றும் சொல்லலாம்) டுங்கோடா
......... பார்த்துக் கொண்டிருந்தவருக்கு எப்படி இருந்திருக்கும்.

இரண்டாவது நகைச்சுவை
   ஒரு ஊரில் சிங்கன் என்ற றவுடி இருந்தான். அவனுக்கு எதிர்மறையான பாத்திரமே வழங்கப்பட்டிருந்தது.
அந் நாடகத்தின் இறுதிக் காட்சியின் உச்சக்கட்டத்தில் நாயகன் அந்த வில்லனை (சிங்கனை) கொல்கிறன்.
  கொன்று விட்டு தனது வெற்றியைக் கொண்டாடுகிறான், எக்காளமிட்டுச் சிரிக்கிறான், கொக்கரிக்கிறான், கத்தினான் இப்படி ஏராளம் செய்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களும் ஆரவாரம் செய்தார்கள். அவர்களுக்குகள் ஒருவன் 'சிங்கன் செத்தான்டா' என்றான்.
    இது சிங்கன் காதுக்கு வீழ்ந்தது தான் தாமதம் துள்ளி எழுந்து நின்ற சிங்கன் 'மயிரச் செத்தான்டா சிங்கன்' என்றான்
   அந்நாடகத்தின் உச்சக்கட்டக் காட்சியின் நிலை எப்படி இருந்திருக்|கும்.

  இப்படி பல நகைச்சுவைகள் இருக்கிறது. நாடகத்துறை மழுங்கடிக்கப்பட்டாலும் எத்தனை காலாகாலத்திற்கும் இப்படியான நகைச்சுவைகள் சாகாவரம் பெற்றவையாகவே இருக்கும்.


குறிப்பு - இது எனது தமிழ்மண வார நட்சத்திரத்துக்கான முதல் பதிவாகும். விரைவில் ஒரு அதிரடிப் பதிவை எதிர் பாருங்கள்.
10:36 AM - By ம.தி.சுதா 55

55 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top