அண்மைய காலங்களில் மிகப் பிரபலமாக அடிபடும் விடயம் இந்த மங்காத்தா என்ற திரைப்படமாகும்.
அதிலும் இந்த அஜித், விஜய் ரசிகர்கள் தொல்லையிருக்கிறதே ஸ்சப்பா தாங்கவே முடியவில்லை. ஒரு கலைஞனிடம் கலையை ரசிக்கலாம் அதற்காக அவனை இப்படி தூக்கிப் பிடிக்கக் கூடாது.
அவர்கள் உழைப்புக்காக நடிக்கிறார்கள் நாங்கள் பொழுத போக்கிற்காக ரசிக்கிறொம் அந்தளவும் மட்டும் தான். உண்மையிலேயே விஜய் ரசிகர்கள இல்லாவிடில் மங்காத்தா இந்தளவு வென்றிருக்காது. ஏனென்றால் தங்களை அறியாமலேயே இலவச விளம்பரம் கொடுத்தது அவர்கள் தான்.
அப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பிருந்தது மறுக்க முடியாத உண்மை. ஆனால் பட பூசை போட்ட நாளிலிருந்த ஆரம்பித்த விஜய் ரசிகள் புராணம் இன்னும் முடிந்தபாடில்லை.
நான் வழமையாக படம் பார்க்கின்றேனோ இல்லையா சில முக்கிய விமர்சக பதிவர்களது விமர்சனத்தை வாசித்தே தீருவேன். காரணம் அவர்களிடம் கட்டாயம் நடுநிலமைத் தன்மை இருக்கும். ஆனால் முக்கிய விடயம் என்னவென்றால் நான் படத்திற்கு முதலலே அவர்களது விமர்சனத்தை படித்தேன் அங்கே அஜித்தை பிடிக்கதவர் கூட படத்தை விட அஜித்தை ஒரு படி தூக்கி எழுதியிருந்தார்.
'எங்கேடா அஜித் இதில டான்சாடியிருக்கான்'
'ஆளும் அவர்ர தொப்பையும் இவனெல்லாம் நடிகனா?'
உடனே என்னுள் கேள்வி எழுத்தது. நடனமே தெரியாமல் தொப்பையுடன் தானே நடிகர் திலகம் செவாலியேர் விருது பெற்றார். இப்படியான கேவல வார்த்தைகள் ஒரு சிறந்த கலைஞனை பாதிக்காது. அதை சொல்பவனையும் அவன் தலைவனையும் தான் கேவலமாகப் பார்க்க வைக்கும்.
விமர்சகர்கள் எல்லாம் பாடத்தை விட அஜித்தையும் அவர் தனிப்பட்ட நடிப்பையும் ஒரு படி தூக்கி எழுத இவையே காரணமாக அமைந்ததெனாலாம். அதிலும் ஒரு விமர்சகர் அஜித்தின் கர்ஜனை குரலையே அடிக்கா தூக்கி கதைத்திருந்தார். ஏன் இப்படி எழுதுகிறார் எனும் போது தான் மூஞ்சிப் புத்தகத்தில் உள்ள ஒரு குழு நினைவுக்கு வந்தது 'விஜயை பார்த்தாலோ அவர் குரலை கேட்டாலோ விழுந்து விழுந்து சிரிப்போர் சங்கம்'.
அதுமட்டுமில்லாமல் விஜயின் தீவிர ரசிகரான ருவிட்டர் மன்னன் ஒருவர் படம் பார்க்க தியெட்டர் போனதும் 9 வது நிமிடம் கேவலமாக ருவிட்டர் போட ஆரம்பித்தவர் பட நேரம் முடிந்தும் ஓயவில்லை. விஜயின் 50 வது படம் அவர்களுக்கு எந்தளவு ஏமாற்றம் அழித்தது என்பதை உறுதிப்படுத்தகினார்.
விஜயின் கலாய்க்கும் நடிப்பும் நடனமும் மிகவும் ரசிக்க வைக்கும் ஒன்று ஆனால் அவரிடம் இல்லாத ஒன்றை அஜித்திடம் ரசிப்பதற்கு அவர்கள் ரசிகர்கள் தயங்குவது ஏன்?
உண்மையில் இவர்களது இந்த களோபாரத்தால் படம் பார்க்காத ஒவ்வொருவரையும் ஒரு முறையாவது பார்க்க வைத்து விட்டார்கள் அதே போல இனி வேலாயுதம் வரும் போதும் அஜித் ரசிகர்கள் இதோ போல ஓட வைப்பார்கள் என்றே நினைக்கிறேன்.
51 கருத்துகள்:
கண்டிப்பாக உண்மை .வேலாயுதத்தை அஜித் ரசிகர்கள் கண்டிப்பாக ஓட வைப்பார்கள் .
ரொம்ப முக்கியம்.. தியேட்டர்ல ஓடாம தியேட்டர விட்டே ஓடினா அவனவன் விலை வாசி பத்தி யோசிப்பன்.. சார் இன்னிக்கு பெட்ரோல் விலை மூணு ரூபா ஏறிடுச்சாம்.. விஜயும் அஜீத்தும் வாயே திறக்கலயாம்..
//
இப்படியான கேவல வார்த்தைகள் ஒரு சிறந்த கலைஞனை பாதிக்காது. அதை சொல்பவனையும் அவன் தலைவனையும் தான் கேவலமாகப் பார்க்க வைக்கும்.
//
100 % true
தல தலைதான்
அதில் என்ன சந்தேகம்
எலேய் சும்மா இருக்குற சங்கை ஊதி கேடுத்துராதீங்கலெய்...
வணக்கம் சார்! அருமையா சொல்லியிருக்கீங்க சார்! நடிகனை நடிகனாகப் பார்க்காமல், கடவுளாகப் பார்க்கும் கேவலம் என்றுதான் ஒழியுமோ?
ஆட்டுவித்தால் யாரொருவன்
ஆடுவதாரோ கண்ணா ......
அடிப்பொடி ரசிகர்களின் facebook கலவரம் சில சமயங்களில் எரிச்சல் தான் ஊட்டுகின்றது..
அட நீங்களுமா மாப்பிள இனி விஜய் படம் வந்தா பதிவு பக்கம் லீவு போட்டுட வேனுமையா.. அதிலும் தியேட்டர்களில் இவனுங்க பன்னுற அட்டகாசம் இருக்கேய்யா..!!!!!!???
எப்படியோ ரெண்டு பேர் படத்தையும் ஓட வச்சிருவாங்க!
///ஒரு கலைஞனிடம் கலையை ரசிக்கலாம் அதற்காக அவனை இப்படி தூக்கிப் பிடிக்கக் கூடாது.
அவர்கள் உழைப்புக்காக நடிக்கிறார்கள் நாங்கள் பொழுத போக்கிற்காக ரசிக்கிறொம் அந்தளவும் மட்டும் தான்.// கரெக்ட் பாஸ் என் மனநிலையை பிரதிபலிக்கும் வரிகள் ....
நல்ல கருத்து சுதா..கேட்கணுமே.
டெம்ளேட் அசத்தலாய் இருக்கு ...
பாஸ் சூப்பர் பாஸ்
நேரடி ரிப்போர்ட்
இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6
நேரடி ரிப்போர்ட்
இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6
//விஜயை பார்த்தாலோ அவர் குரலை கேட்டாலோ விழுந்து விழுந்து சிரிப்போர் சங்கம்'//
இதுக்கெல்லாம் காரணம் விஜயை விட அவரது ராகிகர்களே. இத சொன்னா நம்ம செம்பு நெளிந்சுடும்.
//அங்கே அஜித்தை பிடிக்கதவர் கூட படத்தை விட அஜித்தை ஒரு படி தூக்கி எழுதியிருந்தார்//
அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்ததும், வீணான வாய்ச்சவடால் ஹீரோயிசத்தை விட்டதும், தமிழ் சினிமா பேணி பாதுகாத்த ஹீரோ மரபுகளை கட்டுடைத்தும் இதற்க்கு காரணம் என தோணுது.
ஹிஹிஹி அண்ணா எல்லாத்தையும் பிறியா விடுங்கோ!! நீங்க மங்காத்தா பாத்திட்டீங்களா இல்லையா?
விடுங்க பாஸ்! இவிய்ங்க எப்பவுமே இப்பிடித்தான்!
உண்மையில் அஜித்தும்.விஜயும் நல்ல நண்பர்கள்..அவர்கள் கூடி கும்மி அடிக்க.......
அவர்களின் ரசிகர்கள்...அடிப்படுக்கொள்ளவேண்டியதுதான்....இதான் சாதாரண சாமானியனின் நிலமை...ஆனால் ரசிகர் மன்றங்களைக்கலைத்து...அஜித்..
டாக்குத்தரைவிட....நல்ல வேலை செய்துள்ளார்.....டாக்குத்தரால் ரசிகர்மன்றங்களை கலைப்பது பற்றி சிந்திக்கவே முடியாது............
அவர்கள் நடித்து அவர்கள் சம்பாதிக்கிறார்கள். அதில் இவங்க ஏன் இப்படி சண்டைப் போட்டுக்கொள்கிறார்கள் என்று தெரியல. யார் படம் நல்லா இருந்தாலும் அதை பார்த்து ரசிச்சுட்டு போக வேண்டியது தானே-- இப்படிக்கு நடு நிலை வகிப்போர் சங்கம்.
ஆய்..புது டெம்பிளேட்டு..
கலக்கலா இருக்கே மாப்பு.
Aim Of this site !♔ மதியோடை ♔!. must aviod the war and drugs
Design by ♔ம.தி.சுதா♔ - mathisutha56@gmail.com by mainly aim social service//
அடடா...இந்த நோக்கமும் நல்லா இருக்கே.
இது தான் சொல்வது...
காசில்லாமல் ஓசியில விளம்பரம் பண்ணிப் படத்தை வெற்றி பெற வைப்பதென்று..
அவ்...........
அப்புறம் நாநூறு பாலோவர்ஸ் பெற்ற அசராமல் அடித்தாடிக் கொண்டிருப்பதற்கு வாழ்த்துக்கள்.
//இனி வேலாயுதம் வரும் போதும் அஜித் ரசிகர்கள் இதோ போல ஓட வைப்பார்கள்//
இதென்ன பஸ்ஸா? ரயிலா? 'ஓட' வைப்பதற்கு. இது சினிமா. படம் நன்றாக இருந்தால் எந்த படமும் ஓடும். மங்காத்தா நன்றாக இருந்தது, படம் வெற்றி பெற்றது. வேலாயுதமும் நன்றாக இருந்தால், அதுவும் வெற்றி பெறும். ஆனால் ஒன்று. இப்போது தான் ரசிகர்கள், நடிகர்களை கொஞ்சம், கொஞ்சமாக புரிந்துகொண்டு வருகிறார்கள். இனி வரும் காலங்களில் 'சினிமா ஒரு பொழுதுபோக்குச் சாதனம்' என்று முழுமையாக புரிந்து கொள்வார்கள். பகிர்வுக்கு நன்றி.
இப்படித்தான் விசில் அடித்தான் குஞ்சுகள் தொழில்முறைக்கலைஞர்களை கடவுளாக்குவதன் மூலம் தம் அறியாமையை பறைசாற்றுகின்றனர்! சகோ!
சரிதான் நண்பரே, ஆனால் யார் கேட்க போகிறார்கள்
கண்டிப்பாக உண்மை.
இதனால் ரசிகர்களுக்கு எதுவித நன்மையையும் கிடையாது......
நடிகர்களுக்கு படம் ஓடினால் சரிதான...
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_18.html
ennaathu thoppaiyaa, p[icchipuduven picchi....
சூப்பர் பதிவு...
வியர்க்க விரு விருக்க வாசிச்சேன்...
//ஒரு கலைஞனிடம் கலையை ரசிக்கலாம் அதற்காக அவனை இப்படி தூக்கிப் பிடிக்கக் கூடாது.//
அனைத்து ரசிகர்களும் அறியவேண்டியது இதைத்தான்.
அன்பரே!
சினிமா பற்றி எதுவும்
எனக்குத் தெரியாது
மன்னிக்க!
புலவர் சா இராமாநுசம்
பகிர்வுக்கு நன்றி சகோ. என் தளத்தில் அனுதாபம் தெரிவித்ததற்கும்
மிக்க நன்றி ........
எம்.கே.டி-பி.யூ சின்னப்பா
எம்.ஜி.ஆர்-சிவாஜி
கமல்-ரஜினி
அஜித்-விஜய்
இப்படி வழிவழியே தொட்டுத்தொடருகிறது இந்தப் பாழாய்ப்போன பாரம்பரியம். :-)
Template - simply wonderful. :-)
உண்மைய அருமையா சொல்லி இருக்கீங்க!
அழகிய அவதானிப்பு.. நடு நிலைமை!!!!!!!!!!!!!
வித்தியாசமான பார்வை...
வாழ்த்துக்கள் சுதா !
அன்புடன்
யானைகுட்டி
பொழுதுபோக்கிற்கான கலை இப்போது கலவர பூமிக்குக் காரணமாகி விடுகிறது..
அஜித்தின் வித்தியாசமான நடிப்பைப் பாராட்டுகிற அதே நேரம் நெகட்டிவ் கதையம்சம் முகம சுளிக்க வைத்தது.
நீங்கள் சொல்வது மிகவும் சரி. தன் இயல்பான உடலைக் காட்டி நடிப்பதற்கும் தில் வேண்டும்.
உண்மையில் எனக்கு இந்த சினிமாத் தொழிலாளர்களில் ஈர்பு இல்லை . அவர்களும் எம்மைப் போன்று ஒர் உளைப்பாளர்களே . நாம் எவ்வளவோ செய்ய வேண்டியது எங்கள் முன் உள்ளது . முதலில் அதற்கு முன்னுரிமை கொடுப்போம் . நன்றி .
ம்ம்.. என்ன சொல்றதுன்னே தெரியல..!! உலகம் அப்படி போய்க்கிட்டு இருக்கு..!!
ஒருவருக்கொருவர் விளம்பரப்படுத்திக்க இப்படியொரு வித்தியாசமான வாய்ப்பு இருக்கா? பலே..பலே..!!
டைட்டில் கலக்கல்..
இப்படியான கேவல வார்த்தைகள் ஒரு சிறந்த கலைஞனை பாதிக்காது. அதை சொல்பவனையும் அவன் தலைவனையும் தான் கேவலமாகப் பார்க்க வைக்கும்.//
மிக உண்மை.
இதெல்லாம் சகஜம் சுதா அண்ணா..
விஜய் ரசிகர்கள் அஜித்தை கிண்டலடிப்பதும் அஜித் ரசிகர்கள் விஜயை கிண்டலடிப்பதும் சாதாரண விசயமாகிவிட்டது. சொன்னாலும் திருந்த மாட்டார்கள்
நீங்கள் சொல்வது மிகவும் சரி...
கருத்துரையிடுக