வெள்ளி, 23 செப்டம்பர், 2011

7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்


    தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்த வரை அத்திரைப்படங்களுக்கான இலவச ஆரம்ப விளம்பரங்களாக பாடல்களே இருக்கின்றன.
அந்த வகையில் 7 ம் அறிவுப் பாடல்களும் அந்த தேவையை பூர்த்தி செய்திருக்கின்றன. ஆனால் வழமை போல இம்முறையும் அப்பாடல்களுக்கு இசை வழங்கிய ஹரிஷ் ஜெயராஜ் மீது அரைத்த மா, சுட்ட வடை என்ற பெயர்கள் அடிபட ஆரம்பித்து விட்டன.

    ஆனால் என்ன இருந்தாலும் அந்த இசை மனதை மிகவும் ரம்மியப்படுத்தி ரசிக்க வைப்பதில் அவர் ஒரு கை தேர்ந்த கலைஞர் என்பதை நிருபிக்கிறார்.
      அதிலும் இந்த சீன மொழிப் பாடல் ஆனது மறைவில் ஏதோ ஆழமான மென்மையை மனதை வருடும் ஏகந்தத்துடன் ஒலிக்கிறது. இப்பாடலை எழுதிய கார்க்கியை ஆரம்பத்தில் தந்தையின் செல்வாக்கில் வந்ததாக கூறப்பட்டாலும அத்தனை விமர்சனத்தையும் எந்திரனில் வந்த “இரும்பிலே ஒரு இருதயம்” பாடல் மூலம் தவிடு பொடியாக்கினார்.
     ஆனால் இம்முறை தனது சீன மொழிப் புலமையை முற்று முழுதாகக் காட்டியுள்ளார். முருகதாஸ் ஆரம்பத்தில் இவரின் புலமை தெரியாமல் பலரிடம் சீன மொழி தெரிந்தவர்கள் இருக்கிறார்களா? என தேடியிருக்கிறார். அதன் பின தான் கார்க்கிக்கு அம்மொழி தெரியும் என்பதை கண்டறிந்திருக்கிறார்.
   எழுதிய பாடலைக் கூட ஒரு சீன மொழி ஆசரியரிடம் திருத்தத்திற்காகக் காண்பித்த போது 2 இலக்கணத் தவறுகள் மட்டுமே இருந்ததாக கூறினாராம். உண்மையில் இப்புலமையானது பெருமைப்படக்கூடியதும் பாரட்டுதலுக்கும் ஒரு விடயமாகும்.
   இப்பாடலுக்குத் தேவையான இசைக் கருவிகள் தற்போது உற்பத்தி செய்யப்படாமையால் சீனாவில் உள்ள பழைய கடைகளுக்குச் சென்று அக்கரவிகளை ஏலத்தில் பெற்று அதன் பின் இசைக் கலைஞர்களுக்கு அதைப் பற்றி பழக வைத்த பின் தான் இப்பாடல் உருவாக்கப்பட்டாதாம்.
சரி அந்த பாடலை ஒரு முறை கேட்டுப் பாருங்கள். குரு திரைப்படத்தில் ரகுமானின் பாடலான
தம் தர தம் தர மஸ்தி மஸ்தி 

தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி 

தர தம் தம் தர தம் 
என் ஆசை தாவது உன்மேலே 

   என்ற வரிகளை நினைவு படுத்துவது போல உள்ளது. (சீனத்துப் பாடலின் ஆரம்பமல்ல அப்பாடலின் இரண்டாம் பந்தி குரு படத்தின் ஆரம்ப தீம் போல உள்ளது)
   எது எப்படியிருப்பினும் இசை என்பது எத்தனை முறை எப்படிக் கேட்டாலும் வெறுக்காத ஒன்று. உதாரணத்திற்கு ஒப்பாரியை எடுத்துக் கொள்ளுங்களேன். அது பிடிக்காவிடில் பிணம் எழும்பி ஓடியல்லவா இருக்கணும் எரியும் வரை பேசாமல் தானே இருக்கிறது.
(மக்கள்ஸ் கடுப்பாகாதிங்க அந்த இடத்தில் உதாரணத்திற்கு தாலாட்டு என்று தான் வரணும் சும்மா கலாய்ப்பதற்காக போட்டேன்)

இதோ 7 ம் அறிவு சீனத்துப் பாடல்
Zhe yindu nanzi shi shui? | யார் இந்த இந்தியன் 
ta waisheme lai? | ஏன் இங்கு வந்தான் 
youren ma ta shi hehang. | இவனை முனிவன் என்பர் சிலர் 
youren shuo ta shi shen | கடவுள் என்பர் பலர் 

ta zhi hao ni de wo de bing | நாம் கொண்ட நோய்கள் தீர்த்தான் 
ta wei women zuo wanju | விளையாட பொம்மை செய்தான் 
ta jiao women da jia waiyu | அயல் மொழி ஒன்று சொல்லி தந்தான் 
women chang tai mier | தமிழில் என்னை பாட வைத்தான் 

"thaaye tamil-e vanangugiren | "தாயே தமிழே வணங்குகிறேன் 
unnoda thodangugiren | உன்னோடே தொடங்குகிறேன் 
ezhai enthan naavil neeye | ஏழை எந்தன் நாவில் நீயே 
kovil kondaaiye!" | கோவில் கொண்டாயே!"

ta hen qiguai hen qiguai hen qiguai | அவன் மிக மிக விசித்திரமானவன் 
ta chang ding zhe qiangbi. | வேற்று சுவரை பார்த்துகிடப்பான்  
ta yu niao lei he dongwu jiaoten. | பறவை விலங்கோடு பேசிக்கிடப்பான் 
women hen ai hen ai ta | அவனை அதீதமாக நேசித்தோம் 

damo hui bu huilai? | தமோ திரும்பி வருவானா
damo hui bu huilai? | மீண்டும் அவனைக் காண்போமா


About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

35 கருத்துகள்:

நிகழ்வுகள் சொன்னது…

எனக்கு தான சுடு சோறு ))

நிகழ்வுகள் சொன்னது…

இசையை ரசிக்க மொழி தேவையில்லை என்பார்களே ))அந்த பாடல்- இசை மனதை வருடுகிறது ...

மகேந்திரன் சொன்னது…

அரைத்தமாவும் சுட்டவடையும் நல்லாத்தான் இருக்கு...

பெயரில்லா சொன்னது…

அரைத்தமாவும் சுட்டவடையும்...நல்லாயிருந்தது...

sinmajan சொன்னது…

நன்றாகத்தான் இருக்கிறது

குரு பாடலையா சுட்டார் . கேட்டுவிடுகின்றேன்.

ஆஹா அண்ணன் பிரிச்சி எடுத்துட்டாரே....!

பிரணவன் சொன்னது…

நல்ல பாடல். . நல்ல பதிவு. . .இந்த படத்தில் எஸ்.பி.பி. sir பாடிய பாடல் மிக அழகாக இருக்கின்றது. . .

கோகுல் சொன்னது…

இன்னும் எவ்வளவு மாவ அரைச்சு எவ்வளவு வடய சுடப்போராங்களோ?

மாய உலகம் சொன்னது…

சூப்பரா இருக்கு நண்பா

தனிமரம் சொன்னது…

இசை மனதை வருடிச் செல்கின்றது சீனா இசை ரம்மியமான மனக்கிழர்ச்சியைத் தர்க்கூடியது சில மெட்டுக்கள் வேற மொழியில் போனாலும் ரசிக்கத்தக்கது. நல்ல ஒரு பாடலைக் கேட்டிருக்கின்றேன் இன்று!

K.s.s.Rajh சொன்னது…

நல்லாச்சொல்லி இருக்கீங்க பாஸ்..ஆனா அரைச்சமாவு என்றாலும் ஸ்ருதிஹாசனுக்காக பார்க்கலாம்..ஹி.ஹி.ஹி.ஹி

Krubhakaran சொன்னது…

எனக்கு "Twinkle Twinkle" Nursery Rhyme ட்யூன் போல கேட்டது சீன மொழ்ஹி பாட்டு. அப்புரம் டாக்சி டாக்சி பாடல் தளங்களும் கேட்டன இன்னொரு பாட்டில். அக மொத்தம் Hariis Jayaraj தன் வேலைய கமிச்சுட்டார்

Unknown சொன்னது…

:)super..

நிரூபன் சொன்னது…

இனிய காலை வணக்கம் மச்சி,

ஏனோ தெரியவில்லை எம் தமிழ் சினிமாவில் வர வர எல்லாவற்றுக்குமே பஞ்சம் ஏற்படுகின்றது.
கொஞ்சம் வித்தியாசமா யோசித்தால் மக்களும் சலிப்பின்றி அதிக வரவேற்புக் கொடுப்பார்கள் எனும் யதார்த்தம் இவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்?

SURYAJEEVA சொன்னது…

இயக்குனர்கள் இந்த பாடலின் சாயலில் வேண்டும் என்று கேட்கும் பொழுது இந்த பிரச்சினை வருகிறது என்று இசை இயக்குனர்கள் புலம்புவதாக கேள்வி...

ஆமா, பாட்டெல்லாம் கேட்ட மாதிரியே ஒரு பீலிங் வருது...

பிரிச்சி மேஞ்சாச்சு போங்க ஹி ஹி...

ஆமினா சொன்னது…

காப்பி மன்னன் என்றே பேர் வைக்கலாம். சமீபத்தில் தெலுங்கு பாடல் கேட்டேன். ஹாரிஸ் தான் இசை.
அதுல அலைபாயுதே ல வரும் தீம் தீம் தனனன தீம் தீம் தன வானமே எல்லையோ ஒரு லைன் மியூசிக் மட்டும் வந்துவிட்டு போய் மீண்டும் பாடலுக்கான மியூசிக் வரும். எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவரின் மியூசிக் உடன் காப்பி மியூசிக்கை கலப்பார் என்பது தான் அவரின் தனிதிறமை

இன்டலி அடிக்கடி காணாம போகுது??

Unknown சொன்னது…

உண்மைதான் மாப்ள!

கவி அழகன் சொன்னது…

என்கை ஐயா இன்டலி
வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

உங்கள் விமர்சனம் போலவே தான் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். உங்கள் ரசனைக்கு பாராட்டுகள் சகோ. படம் வெளி வந்த பிறகு திரைப்பட விமர்சனத்திலும் இறங்குவீர்கள் போல..

Unknown சொன்னது…

ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்திலும் தன்னை நிரூபிப்பார் என நம்புகிறேன்..

F.NIHAZA சொன்னது…

மிக மிக அருமை பதிவு

IlayaDhasan சொன்னது…

இப்ப தான் கேட்டேன் , எனக்கென்னமோ , டுவின்குள் டுவின்குள் லிட்டில் ஸ்டார்,அப்புறம் லண்டன் ப்ரிட்ஜு பாலிங் டௌன் தான் முதல்ல தோணிச்சு.

உனக்கு பெரிய "ரஜினி" ன்னு நெனப்பா?

Muruganandan M.K. சொன்னது…

நான் பாடலைக் கேட்கவில்லை. ஆனாலும் சீன மொழியில் தமிழ் திரைப்படத்தில் பாடல் என அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

காட்டான் சொன்னது…

உள்ளேன்னையா ஹி ஹி நான் இன்னும் பாட்டை கேக்கல...

உணவு உலகம் சொன்னது…

நல்லாத்தான் பிரிச்சு மேஞ்சிருக்கீங்க.

சத்ரியன் சொன்னது…

தகவல் தொழில் நுட்பம் தான் வளர்ந்து காடு,மேடெல்லாம் பரவிப்போச்சே!

சுட்டா கண்டு பிடிச்சி கும்மிடுவாங்களேன்ற பயம் இருக்காதா? காப்பி வேலைய நிப்பாட்ட மாட்டாங்களா? .

நல்லதொரு பகிர்வு. நன்றி சகோ பகிர்வுக்கு ...........

Mathuran சொன்னது…

ஆஹா... சுதா அண்ணா இருக்கிறவரைக்கும் எவனும் காப்பி பண்ண முடியாது போலிருக்கே

கார்த்தி சொன்னது…

7ம் அறிவு பாடல்கள் எனக்கு பிடித்திருக்கின்றது.
ஹாரிஸின் பாணி அந்தக்காலத்திலிருந்தே இதுதானே. தனது இசையில் மக்களை கட்டிப்போட்டிருக்க புதிதாக வித்தியாசமாக எல்லாப்பாடல்களையும் உருவாக்க வேண்டுமென்றில்லையே? சைனிஸ் பாடல் ஒரு புது முயற்சிதான். #நான்ஹரிஸின்தீவிரரசிகன்

ஆமா இசையை ரசிக்க மொழி தடை இல்லியே. நல்லாதான் இருக்கு.

Jaleela Kamal சொன்னது…

நல்ல இருக்கு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top