இதை கதையாகவே சொல்லட்டுமா?.........
வட நாட்டில் ஒரு கடை இருந்தது. அங்கே இட்லி போன்ற சிறப்பான புளித்த உணவுகள் தயாரிப்பார்கள். ஒரு நாள் இரவு மாவைக்கரைத்து விட்டு போய்விட்டார்கள். காலையில் வந்து பார்த்த போது தண்ணீர் அதிகமாக விடப்பட்டிருந்தது.
அதை ஒன்றுமே செய்ய முடியவில்லை கொட்டுவது என்ற முடிவுக்கு வந்த போது ஒரு முயற்சியாக அதை றொட்டித் தட்டில் வார்ப்போம் என முடிவெடுத்து வார்த்தார்கள். “சை” என்ற சத்தம் வந்த்து. ஆனால் ஒரு புறம் சுவையாகவும் மறுபுறம் வேகாமலும் இருந்தது. பின்னர் மறுபுறமும் போட்ட போது . “சை” என்ற சத்தம் வந்தது. இப்போது இரு புறமும் வெந்து மிக அழகாக இருந்த்து. அத்துடன் நல்ல சுவையாகவும் இருந்தது.
இதற்கு என்ன பெயர் வைப்பது என்றபோது தான் அந்த யோசனை வந்தது. இரண்டு தரம் . “சை” என்ற சத்தம் வந்த்தால் ”தோசை” என்று வைத்தார்கள். ”தோ” என்றால் வடமொழியில் இரண்டு என்று பொருள் படும்.
என்னங்க தோசை நல்லாயிருக்கா இல்லாவிடில் புளித்து விட்டதா. சொல்லீட்டு போங்க.
குறிப்பு - இது ஒரு நகைச்சுவைக்காகப் பகிரப்பட்ட கதை மட்டுமே.
குறிப்பு - இது ஒரு நகைச்சுவைக்காகப் பகிரப்பட்ட கதை மட்டுமே.
19 கருத்துகள்:
அதெல்லாம் சரி தலைப்பில் தோசையை தேசை ஆக்கி வச்சிருக்கிங்களே........
இதுக்குள் இம்புட்டு விசயமிருக்கா நன்றி சுதா.
நன்றி சகோதரா மாத்திக்கிறேன்
சுதா ரொம்ப சுவையாக இருக்கிறது
சுதா எங்கிருந்து உதெல்லாம் பிடிக்கிறாய்
ரொம்ப சுவை.... படத்தை பார்த்த உடன் பசிக்குதுங்க...
@ மிக்க நன்றி கரன், சஞ்சேய்
@ சங்கவி மின்னுவதெல்லாம் பொன்னில்லை. வருகை தந்ததற்க மிக்க நன்றி
ச்சே, என்னவொரு கண்டுபிடிப்பு...
நான் கூட சீரியஸா ஏதோ சொல்ல போறீங்க’ன்னு வந்தேன். ம்ம்ம்...
சரி, அப்படியே மற்ற உணவு பண்டங்களுக்கு பேர் வந்ததையும் சொல்லுங்க. :-)
தோசை வடயிந்தியரின் உணவு வகைகளில் ஒன்றல்ல. வடயிந்தியரின் கடைகளிலும் அவை இல்லை.
அது தமிழரின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றாகும். சுவையாக எழுதுவதாக நினைத்து பிழையான தகவல் அளித்தம் நன்றல்ல.
தோசை தென்னிந்திய உணவு வகைகளில் ஒன்று தான். அது வட இந்தியர்களின் உணவுகளில் ஒன்றல்ல. வட இந்தியாவில் மட்டுமல்ல, வட இந்தியர்கள் கடை வைத்திருக்கும் எந்த நாட்டிலும் தோசை இல்லை. ஆனால் சிலர் தென்னிந்திய உணவகங்களில் அல்லது தென்னிந்திய மக்களுடன் இணைந்து சாப்பிட்டோர் இருப்பர். அவர்களும் "தோசை" என்பதை "தோசா" என்று தான் அழைப்பர்.
நீங்கள் குறிப்பிடும் படியான பெயர் வழங்கள் முறை கற்பிதம் மட்டுமே ஆகும்.
இங்கேயும் பார்க்கவும்:
http://en.wikipedia.org/wiki/Dosa
மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் தோசைக்கு பெயர் பெற்ற கடைகளே தென்னிந்திய தமிழ் கடைகள் தான்.
பின்னூட்டத்திற்கு ஆட்டையைப் போட்ட நண்பா நீ வாழ்க!
Anonymous said...
சகோதரா உங்களது ஊட்டத்தை ஆட்டையை போட எனக்கொன்றும் விருப்பமில்லை... எனக்கு இந்த உலகத்தில் இப்போது எதிரியும் இல்லை நண்பனும் இல்லை அப்படியிருக்கையில் நீங்கள் மட்டும் ஏன் பதுங்கியபடி ஊட்டம் இடுகிறீர்கள்... நீங்கள் இட்ட 3 ஊட்டமும் வெவ்வேறு பெயரில் வந்துள்ளது.. ஏன் இந்த உருமறைப்பு ஒரு உண்மையை சொல்வதற்கு ஏன் இப்படி ஒரு உருமறைப்பு.. பரவாயில்லை தங்களிடம் சில தகவல் பெற வேண்டியிருப்பதால் தான் இன்னும் பிரசுரிக்கல என் தனிப்பட்ட மடலுக்கு தொடர்பு கொள்ளவும்
mathisutha56@gmail.com
மொக்கைப் பதிவுகளாக எதனை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் எந்த ஒரு வரலாற்றுத் தகவலையும் அளிப்பதானால், அதற்கான சரியான சான்றுகளுடன் எழுதுதல் அவசியம். தக்கச் சான்றுகளுடன் எழுதும் கலைக்களஞ்சியங்களில் கூட பலக் கேள்விகள் எழுகின்றன. எனவே தகவல்களை ஆர்வக் கோளாறினால் எழுதித்தள்ளுதல் அறிவுடமை அல்ல.
அனானிச் சகோதரனே நீங்கள் என்னை சீண்டுவதற்காகவே ஊட்டமிடுகிறீர்கள் என்பது தெரிகிறது. பரவாயில்லை. தாங்கள் தொடர்பு கொள்ள விரும்பியிருந்தால் புதிதாய் ஒரு கணக்குத் திறந்தே சொல்லியிருக்கலாம். ஏன் கோழை போல் ஒளித்து நின்று கருத்திடுகிறீர்கள். ஏற்கனவே தங்களுக்கு நான் மேலே பதிலளித்து விட்டேன்.
//அனானிச் சகோதரனே நீங்கள் என்னை சீண்டுவதற்காகவே ஊட்டமிடுகிறீர்கள் என்பது தெரிகிறது.//
சீண்டுவதற்கான ஊட்டமிட வேண்டிய தேவை ஒன்றும் எனக்கில்லை. உமது பதிவில் காத்திரமான தகவல்களை கொண்டுள்ளதாக நினைத்து உள் நுழைந்து வாசிக்க வந்த இடத்தில், பிழையான தகவல்களை சுட்டிக்காட்டினால், அதனை உணர்ந்து பிழையை திருத்திக்கொண்டு தம்மை மேலும் வளர்த்துக்கொள்ளாமல், என்னை கோழை என்கிறீர்.
//ஏன் கோழை போல் ஒளித்து நின்று கருத்திடுகிறீர்கள்.//
ஏதோ ஒரு பெயரை இட்டு எழுதுவதால் மட்டும் ஒருவன் வீரனாகி விடமுடியுமா? அவ்வாறு நீர் நினைத்தால் அதுவும் உமது அறியாமையாகவே இருக்கும். இன்னொரு வகையில் கூறுவதானால் பிழையை சுட்டிக்காட்ட வீரம் தேவையில்லை. சுட்டிக்காட்டும் மனது மட்டுமே தேவை. வாழ்க உமது வீரம்! பண்பாடு! அறிவு!
////ஏதோ ஒரு பெயரை இட்டு எழுதுவதால் மட்டும் ஒருவன் வீரனாகி விடமுடியுமா? அவ்வாறு நீர் நினைத்தால் அதுவும் உமது அறியாமையாகவே இருக்கும்./////
சகோதரா தங்களின் நிலைப்பாடு விளங்குகின்றது. நான் தமிழரையும் தமிழையும் உயிராக மதிப்பவன். நிங்கள் 3 வெவ்வேறு பெயரில் கருத்திட்டது தான் எனக்கு தாங்கள் கூறும் கருத்தில் சந்தேகம் வர வைத்தது. அதனால் தான் என்னுடன் தொடர்பு கொள்ள சொன்னென். எதற்கும் நீங்கள் எனது புறோபைலை பார்க்கவில்லை என நினைக்கிறேன்.
/////இன்னொரு வகையில் கூறுவதானால் பிழையை சுட்டிக்காட்ட வீரம் தேவையில்லை. சுட்டிக்காட்டும் மனது மட்டுமே தேவை. வாழ்க உமது வீரம்! பண்பாடு! அறிவு! /////
எனக்கு யாரும் தராத பட்டத்தை தந்ததற்கு கோடி நன்றி. ஒன்று மட்டும் உண்மை சகோதரா வாயில் வருவதல்ல வீரம் ரத்தத்தில் வருவது தான் வீரம்.. தவறை ஏற்கும் மனது என்னிடம் இருக்கிறது. அதை சுட்டிக்காட்டும் மனது இருப்பவரானால் நேரடியாக வரலாமே..
நான் அறிந்த வரை, தோசை என்ற சொல்லின் மூலச் சொல், தோய் அல்லது தோயை என்பதாகும். மாவைத் தோய்த்து உண்டாக்குவதால் வந்த பெயராயிருக்கலாம். குமரியில் என் வயதான உறவினர் வீட்டிலிருந்த நிகண்டு இதை உறுதிப்படுத்திற்று.
தோயை தோசையாவது மிக எளிது. மயிர் மசிராவது போல; நேயம் நேசமாவது போல.
உங்கள் பதிவு நகைச்சுவை மட்டுமே!
நல்ல பதிவு ஆனா
சை எண்ட சத்தம்தான் கொஞ்சம்........
கருத்துரையிடுக