வியாழன், 1 ஜூலை, 2010

GSP+ என்றால் என்ன?

AM 11:00 - By ம.தி.சுதா 14

                இது ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையே இருக்கும் ஒரு வர்த்தக உடன்படிக்கையாகும். இந்த GSP+ ஐ 1971 ல் ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியது.


           இது என்னத்துக்காகவென்றால்.அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், குறை அபிவிருத்தியை கொண்டிருக்கும் நாடுகள் என்பவற்றின் அபிவிருத்தியை கட்டி எழுப்புவதற்காக வழங்கப்படுவதாகும். இந்தச் சலுகையை 2005 ல் இலங்கை பெற்றுக்கொண்டது. இதனால் இலங்கையின் 7200 வகையான பொருட்களுக்கான வரிவிலக்கை ஐரோப்பிய ஒன்றிய வழங்கியது. இதில் முக்கியமானது தைக்கப்பட்ட ஆடைகளாகும்.



                    இச்சலுகை சும்மா யாருக்கும் கிடைக்காது நல்லாட்சி, சுற்றாடல், பாதுகாப்பு, மனித உரிமை, தொழிலாளர் உரிமை என 27 இம்சங்களுக்க கட்டுப்பட வேண்டும். இது கிடைக்காவிடில் இலங்கையின் 29% ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. அதிலும் ஐரோப்பிய ஒன்றியம் தைக்கப்பட்ட ஆடைகளுக்கு அதிக வரிவிதிப்பதால் இலங்கை பெரிய நெருக்கடிக்கு ஆளாக வேண்டி இருக்கிறது. சிலவேளை இந்த அழுத்தங்கள் தான் பொருட்களின் அதிரடி விலை உயர்வுக்க காரணமாக இருக்கலாம்.
இச்சலுகையை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் 15 நிபந்தனைகள் விதித்துள்ளது.
அவையென்னவென்றால்.


1-- அரசமைப்பின் 17வது திருத்த சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களை உறுதிப்படுத்தல்.


2— நடைமுறையிலுள்ள அவசர கால தடைச்சட்டத்தில் உள்ள மிகுதி பகுதிகளை நீக்கி விசாரணையின்றி தடுத்து வைத்தல், நடமாட்ட சுதந்திர கட்டுப்பாடு விதித்தல் ஆகிய செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்.


3— பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் சில பகுதிகளை நீக்க வேண்டும்.


4—பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 8ம் பிரிவிலுள்ள விலக்கல் கூற்றையும். 9ம் பிரிவிலுள்ளபாதிப்பின்மை கூற்றையும் நீக்குதல்.


5—சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்படும் இடத்தில் அவர் உடனடியாக ஒரு சட்டத்தரணியை அணுகும் உரிமை.


6—ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிற்கும், சித்திரவதைக்கு எதிரான ஐ.நா ஆணைக்குழுவிற்கும் தனிநபர்கள் முறைப்பாட்டை சமர்ப்பிக்கும் அனுமதி.


7—தனிப்பட்ட விசயங்கள் சம்பந்தமாக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் அபிப்பிராயத்தை ஏற்று செயற்படும் அனுமதி.


8—இலங்கை வரவிரும்பும் ஐ.நா விசேட ஆணைக் குழுவிற்கான அனுமதி.


9—காணாமற் போனோருக்கான ஐ.நா செயலாற்றுக் குழுவில் நிலுவையிலுள்ள குறிப்பிட்ட தனிமனித விசாரணைகளுக்கு தீர்வு.


10—2008ம் ஆண்டின் விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான இறுதி அறிக்கையை பிரசுரித்தல்.


11—அ.கா.த.சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் விபரத்தை வெளியிடல். தடுத்து வைக்கப்பட்டுள்ளவரின் வழக்கை ஒரு முடிவிற்கு கொண்டுவரல்.


12—I.C.R.C போன்ற நிறுவனங்களுக்கு முகாங்களுக்கு சென்று வர அனுமதி்.


13—தேசிற மனித உரிமைகள் செயற்திட்டத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.


14—ஊடகவியலாளர் எவ்வித தடங்கலுமின்றி செயற்படும் அனுமதி.


15—சிவில் மற்றம் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடனபடிக்கைக்கான பல மதிப்பு குறைப்புகளை மேற்கொள்ளல்.


(கட்டுரையின் தரம் கருதியே மிகச் சுருக்கமாக இடுகிறேன். பல்லைக்கடித்துக் கொண்டு கருத்திட்டுச் செல்லுங்கள்)

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

14 கருத்துகள்:

Think Why Not சொன்னது…

இதெல்லாம் நடக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்த்தா, அது கனவிலதான் என்று நெளிப்பு காட்ட முடியும்... ஏற்றுமதி போனா என்ன, உதவி தரத்தான் கன பேர் இருக்கினம் என்று மேலிடம் திருப்திபட்டு கொள்ளும். அது அவையிட ஆட்சிக்காலம் வரை போதுமெல்லோ!!!

Jana சொன்னது…

Nice

kishore சொன்னது…

very nice

kishore சொன்னது…

nice

kishore சொன்னது…

very nice

சுதர்ஷன் சொன்னது…

நல்லது ... வாழ்த்துக்கள் ....:) அமேரிக்கா போர்க்கப்பலையே கொண்டு வந்து நிப்பாட்டினாலும் இதுகல்ட பில்ட் அப் முடியாது ..

ம.தி.சுதா சொன்னது…

Thinks Why Not said...
வருகைக்க நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

Jana said...
வருகைக்க நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

kishore said...
வருகைக்க நன்றி சகோதரா..

ம.தி.சுதா சொன்னது…

S.Sudharshan said...
ஃஃஃஃஃஃநல்லது ... வாழ்த்துக்கள் ....:) அமேரிக்கா போர்க்கப்பலையே கொண்டு வந்து நிப்பாட்டினாலும் இதுகல்ட பில்ட் அப் முடியாது ..ஃஃஃஃஃ
அப்படியா சுதர்சன் ...
வருகைக்க நன்றி சகோதரா...

இன்றுதான் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த
இந்த 15 நிபந்தனைகள் பற்றி அறிந்துகொண்டேன் நன்றி நண்பரே . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

ம.தி.சுதா சொன்னது…

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
வருகைக்கு நன்றி சகோதரா...
என்றும் காத்திருப்பேன்.. எனக்காக தங்கள் தளமும் திறந்திருக்கட்டும்...

ஐரோப்பிய ஒன்றியம் விதித்த
இந்த 15 நிபந்தனைகள் பற்றி அறிந்துகொண்டேன் நன்றி தம்பி சுதா...

ம.தி.சுதா சொன்னது…

மிக்க நன்றி அக்கா...

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top