Featured Articles
All Stories

திங்கள், 28 ஜூன், 2010

சங்ககார ஒரு ராசியற்ற தலைவர்



பகுதி—02
என்ன நச்சுப் பல்லி மீண்டும் வந்துவிட்டது என்று நினைக்கிறிங்களா. இல்லிங்க நான் போன வாரம் சொன்னதில் ஏதாச்சும் பொய்யிருக்கா. நான் இலங்கை போட்டிகளை நுணுக்கமாகப்பார்க்கும் தீவிர ரசிகனுங்க. அந்த உரிமை தாங்க இப்படி சொல்ல காரணம்.
எல்லாம சரிங்க இப்படியே போனால் உலகக்கிண்ணத்தில் ”பழைய குருடி கதவ திறவடி” கதை தானா யாருமே இதை தட்டி கேட்க மாட்டார்களா. இந்த இறுதிப் போட்டி ஒரு வெல்ல கூடிய அருமையான போட்டி ஒன்று. அதுவும் சொந்த நாட்டில் சரி போன பேருந்து போனது தான் அதுதான் வரும் பேருந்துக்காச்சும் கை காட்ட வேண்டாமா. சரி நம்ம முரளிக்கு என்ன தகுதியில்லை. உலக லெவன் அணிக்கே தலைமை தாங்கியவர் என்பதை யாரும் மறக்க வெண்டாம்.

4:23 PM - By ம.தி.சுதா 0

0 கருத்துகள்:

செவ்வாய், 22 ஜூன், 2010

சங்ககார ஒரு ராசியற்ற தலைவர்

           இலங்கை அணியின் தற்போதைய தலைவர் குமார் சங்ககாரா உலகிலேயே சிறந்த துடுப்பாட்ட பாணி கொண்டவர்களில் ஒருவராவார். அனால் அவரது தமையில் தான் எனக்கு என்றும் ஒரு காழ்ப்பு. ஏனெனில் அவர் எடுக்கும் முடிவுகள் பார்க்கும் எமக்கே திருப்தி அழிப்பதில்லை. அப்படியிருக்கையில் கூட விளையாடுபவர்களுக்க எப்படி இருக்கும்.

                         முக்கியமாக சென்ற வருட T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டி பார்த்தவர்களுக்க தெரியும். இறுதி பந்துப் பரிமாற்றத்தில் 18 ஓட்டம் பெற வேண்டும். அந்த நேரத்தில் முன்னர் சரியாக பந்து வீசாத இசுறு உதானவை கொண்டு வந்தார் அந்த பந்துப் பரிமாற்றத்திலேயே போட்டி முடிந்து விட்டது.


4:40 PM - By ம.தி.சுதா 0

0 கருத்துகள்:

செவ்வாய், 15 ஜூன், 2010

இராவணன்

விமர்சனம்
இராவணன்


பாடல் என்றால் பிடிக்காதவர் யாருமே இருக்க முடியாது. அதுவும் இப்போது வரும் பாடல்களில் கவிநயத்தை ரசிக்கக் கூடியவாறு ஓரு சில பாடல்களே வருகிறது.
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை (அங்ககாடித்தெரு) என்ற பாடலுக்குப்பிறகு கேட்டவுடனேயே பிடித்த பாடல் என்றால் இதுதான்.
வைரமுத்துவின் இன்னுமொரு சித்திரம் என்றே சொல்லலாம். இராவணன் திரைப்படத்தில் முழுப்பாடலையும் அவரே ஒரே நாளில் எழுதிக்கொடுத்ததாக நண்பர் ஒருவர் சொன்னார். நம்பக்கூடிய விசயம் தான். இனிபடலுக்கு வருவோம்.

6:12 PM - By ம.தி.சுதா 1

1 கருத்துகள்:

என் முதல் பதிவு - அம்மா மகேஸ் தில்லையம்பலத்திற்கு....




உயிர் தந்ததே போதுமம்மா

உனை உருக்கித் தானே
எனக்கு ஊன் கொடுத்தாய்
அன்புத்தாயே
வறுமை தான் நமக்கு
வாழ்வென்றானபோதும்
இருள் நீக்கவெனத்தானே
எனை ஈன்றெடுத்தாய்
கடவுள் என்று பேரிருந்தும்
தான் நினைப்பதை மட்டுமே
எமக்காய் செய்வான்
உன்னால் தான்
என் நெஞ்சிலொரு
துளை ஒன்று வந்ததாய்
உலகம் சொல்லுது
அன்புத்தாயே
என் இதயம் இப்போது
இதயமாய் இல்லை
குருதிப்பாய்ச்சலில்
உன் பெயர் ஒலிப்பதால்
அது ஒரு புல்லாங்குழலாய்
உன் பெயர் மட்டுமே
தருகிறது.
(சுடர்ஒளி 2008)

5:46 PM - By ம.தி.சுதா 9

9 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top