வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
அவ்வப்போது உருவாகி வரும் எம்மவர் பாடல்களில் சிலது அப்படியே எம்மனதில் நிலைத்து விடுகிறது.
அந்த வகையில் நேற்று ஒரு சகோதரர் மூலம் எனக்கு கிடைத்த இப்பாடலானது தொண்டைக் குழியில் தங்கிஇடையிடையே வாய்வழியே எட்டிப் பார்க்கத் தவறவில்லை.
அப்பாடலுக்கான இசையை துஸ்யந்தன் செல்வராசா என்ற மலையகத்தைச் சேர்ந்தவர் இசையமைத்திருக்கிறார்.
ரஸ்லான் பாடலை பாடியிருக்க,
வயலின் சுறங்க ராஜபக்ச,
வீணை சரவண சுந்தரி முருகன் (கொழும்பு விஞ்ஞான பீட மாணவி)
பியனோ வி.செந்தூரன்
போன்றவரின் கூட்டணியுடன் கிட்டாரை துஸ்யந்தனே மீட்டியிருக்கிறார்.
இவர் நுவரெலியாவைச் சேர்ந்தவர் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவனாக இருக்கிறார்.
.இதில் ரஸ்லான் சக்தி சுப்பர் ஸ்டார்களில் ஒருவராவார்.
மிகவும் நேர்த்தியான இசைக் கோப்புடன் உருவாகியுள்ள இப்பாடலானது மலையக மண்ணின் ஒரு தடமாக இருக்கும் என்பது என் நம்பிக்கையாகும்.
இவர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்காக இசையமைத்த தமிழ் வாழ்த்துப்பாடல் கீழே இணைத்துள்ளேன்.. அப்படியே லயிக்க வைக்கும் ஸ்வரங்கள் இவர் விரல்களுக்கும் ஒளிந்திருப்பதை உணர அதுவும் ஒரு நல்ல உதாரணமாகும்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
3 கருத்துகள்:
மிகவும் கருத்துச்செரிவும் இசையாளுமையும் மிக்க நம்மவர்கள் பாடலின் இன்னொரு முகத்தை மலையகம் கடந்து வலையுலகுக்கு அறிமுகம் தந்த மதி சுதாவுக்கு மனமார்ந்த வாழ்த்துககளும் நன்றிகளும் அருமையான ஒரு அறிமுகம்!
பகிர்வுக்கு நன்றி,ம.தி.சுதா!அருமையான நம்மவர் பாடல்&இசையமைப்பு!
பாடலும் இசையும் நன்றாக இருக்கிறது. ஒரு கோரிக்கை. பாடலின் வரிகளையும் எழுதி இருந்தீர்களானால் முதலிலிருந்தே லயித்து ரசிக்கலாம். வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக