வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
இப்போதெல்லாம் இணையப்பக்கம் எட்டிப் பார்க்கவே சரியாக நேரம் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும் மெயில்களை பார்ப்பதோடு காலம்கழிகிறது. சரி விடயத்திற்கு வருவோம்.
இந்தப் பதிவானது இஸ்லாமிய சகோதரர் பலருக்கு கடுப்பை ஏற்றும் ஆனால் ஒரு முறை ஆறுதலாக படித்த பின்னர் கருத்துக்களையும் உங்கள் தொடுப்புக்களையும் இடுங்கள்.
தமிழ் நாட்டு பதிவுலகத்தில் ஒரு சில அரைவேக்காட்டு இஸ்லாமிய மேதைகள் மற்றைய மதங்களை கொச்சைப்படுத்திக் கொண்டு அலைந்து திரிவது பலரும் அறிந்ததே.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்தது போல இந்தளவு நாளும் மதங்களைத் தாக்கி வந்தவர்கள் இன்று ஒரு இனத்தின் பண்பாட்டை கொச்சபை்படுத்தும் அளவுக்கு முன்னேறி விட்டார்கள்.
இஸ்லாமிய அமைப்புகள் பல இருந்தும் இதைக் கண்டும் காணாமல் விட்டு இருப்பது எதிர்காலத்தில் அம் மதத்தின் மீதான ஒரு பெரும் காழப்புக்கு வழிவகுக்கும் என்பது அசைக்கமுடியாத கருத்தாகும்.
பல பண்பாடுகளுக்கு பெயர் போனது எம் தமிழ் இனம். செம்மொழிகளுக்குள் அங்கீகரிக்கப்பட்டதுடன் தொல்காப்பியம் என்னும் பெரும் இலக்கணவிளக்கம் கொண்ட நூலையும் கொண்டிருக்கிறது. இவையனைத்தையும் கொண்டிருக்கும் எமக்குள் உள்ள பண்பாடுகளில் ஒன்று விருந்தோம்பல் என்ற பண்பாடாகும்.
அதில் உணவு பரிமாறல் என்பது மேற்கத்தையவரே வியக்கும் ஒரு ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகும். இப்படியான இடங்களில் வாழை இலை போட்டு பரிமாறுகையில் உணவு அருந்தி முடிந்ததும் ஒரு பழக்கத்தை கையாள்வார்கள். அதாவது திருமணம், பூப்புனித நீராட்டு விழா போன்ற சந்தோசமான இடங்களில் உணவருந்தி முடிந்ததும் தம் பக்கம் இலையை மடித்து விட்டு எழுந்து செல்வார்கள். அதே போல துக்க சம்பவம் நடந்த இடங்களானால் பரிமாறியவர் பக்கம் இலையை மடித்து விட்டு எழுந்து செல்வார்கள்.
இதன் விளக்கம் என்றால் சந்தோசத்தை நாங்களும் பெற்றுக் கொள்கின்றோம் அதே போல துக்க நிகழ்வென்றால் இப்படி ஒரு சம்பவம் இனியும் உங்களுக்கு வேண்டாம் என்பதற்காக இப்படிச் செய்வோம்.
இந்தச்சம்பவத்துக்கான ஆரம்பம் சென்னைப் பதிவர் சம்பவத்துடன் ஒரு சிறிய புகைப்படத்துடன் பிலேசபி பிரபாகரன் எதற்கோ போட்டதிலிருந்து ஆரம்பித்திருக்கிறது. இதற்கான விளக்கத்தை மகேந்திரன் அண்ணா கொடுத்திருந்த போது தரவிறக்கப்பட்ட அந்த குழு என்னவொரு வில்லங்கம் பண்ணுகிறது தெரியுமா?
துக்க வீடுகளில் இப்படி செய்வதால் செத்தவர் உயிர் கிடைத்து விடுமா? இதெல்லாம் ஒரு மூட நம்பிக்கை என ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். அதற்கு அஞ்சா சிங்கம் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். ”அப்படியானால் நீங்கள் போகும் இடம் எல்லாம் சாந்தியும் சமாதானமும் நிலவுக” என்கிறீர்களே நீங்கள் சொன்னதும் அப்படியே நடக்குமா?” என்றதற்கு யாருமே பதிலளிக்கவில்லை.
முதலில் ஒன்றை விளங்கிக் கொள்ளுங்கள் மூடநம்பிக்கை என்பது வேறு, பண்பாடு என்பது வேறு. இதையே ஒரு வேற்று மொழிக்காரன் சொல்லிருந்தால் பேசாமல் விட்டு விட்டு போகலாம். இல்லாவிடில் நீங்கள் அரபையோ அல்லது உருதையோ பேசிக் கொண்டு சொல்லியிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நீங்களே பேசும் ஒரு மொழியின் பண்பாட்டை கொச்சைப்படுத்தும் தகுதி உங்களுக்கு துளி கூட வழங்கப்படவில்லை. எத்தனை இஸ்லாமிய சகோதரர்கள் தமிழுக்காகவும் இலக்கியத்துக்காகவும் உழைக்கிறார்கள் என்பது தெரியுமா?
இன்று கூட இலங்கையில் தமிழ் மாணவர்களுக்கான அதிகளவு நூலை எழுதியவர் கூட ஒரு இஸ்லாமிய ஆசான் தான்.
அரைவேக்காட்டு இஸ்லாமிய மேதைகளே உங்கள் மதப்பரப்பல் மொக்கதை் தனத்துக்காக உங்கள் இனத்தவரின் உழைப்பையே கேள்விக்கிடமாக்காதீர்கள்.
இப்படி நீங்கள் செய்வதால் எங்கள் பண்பாடு என்றைக்குமே சீர்குலையாது. 1050 வருசமாக ஆடும் உங்களுக்கு இந்தளவு தார்ப்பரியம் என்றால் இதை விட பல மடங்கு தார்ப்பரியம் கொண்ட எங்களுக்கு எவ்வளவு இருக்கும்.
நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா
படங்கள் - நன்றி கூகுல்
56 கருத்துகள்:
well said
நீ ஒரு காமெடி பீசு..தமிழர் பண்பாடு எங்களுக்கும் தெரியும்ம்ம் http://marmayogie.blogspot.in/2012/08/2.html
மிக அருமை...
மர்மயோகி - நீ என்ன பெரிய அப்பாடக்கரோ ! இல்லை 'அவனா நீயி???'
முடிந்தால் கருத்துக்களுடன் அப்புறம் வருகிறேன்!!!
நல்ல விளக்கம்/சாட்டை!இவர்களெல்லாம் அறிஞர்கள் இல்லையே?அது தான் இப்படி!
இவர்களுக்கு பண்பாட்டுக்கும் மூடநம்பிக்கைக்கும் வித்தியாசம் தெரியாது அறீவிலிகள் அதிகம் மதநாத்தங்கள்§
Nice post sir
அடோய், நீ வேற, சிவபெருமானே ஒரு இஸ்லாமியர் அப்படீன்னு சொல்றாங்க இந்த லூசுப் புள்ளைங்க
மிகவும் நல்லதொரு பதிவு சகோ....
கலாச்சாரப் பழக்கம் என்பதில் நல்லவையும் இருக்கு கெட்டவையும் இருக்கு !!!
சிலக் கலாச்சாரப் பழக்கங்கள் காலத்துக்கு ஏற்றவாறு மாறிவிடுவதுண்டு, சில மாறாது இருக்கும்.
பெரும்பாலான சமயங்கள் கொண்டிருக்கும் சமயப் பழக்க வழக்கம் எல்லாம் தானாக உருவாகிவிடுவதில்லை. மாறாக அந்த சமயங்கள் தோன்றிய மண்ணின் கலாச்சாரப் பழக்கங்களைத் தான் எடுத்துக் கொள்கின்றன.
மூட நம்பிக்கை என்று நாம் எப்படி வரன் முறை செய்கின்றோம் என்பதில் தான் சிக்கலே !!!
ஒரு நம்பிக்கை கட்டாயமாக விரும்பப் படாதோர் மீது திணிக்கப்படும் போது,
ஒரு நம்பிக்கை மற்றவர்களின் உயிர், உடமை, வாழ்வு, சுதந்திரம் போன்றவற்றை பறிக்கும் போது,
ஒரு நம்பிக்கை ஒருக் குறிப்பிட்ட மக்களால் பின்பற்றப் பட விருப்பம் இல்லாத போதும் அதனைக் கட்டாயமாக கடைப்பிடிக்கச் சொல்லும் போது
இப்படியான சூழல்களிலேயே அவற்றை எதிர்க்கச் செய்கின்றோம் ...!!!
வாழை இலை மடிப்பு என்பது யாருக்கும் எந்த தொந்தரவு இல்லாத ஒரு பழக்க வழக்கம் - அத்தோடு அது ஒன்றும் கட்டாயப் படுத்தப் படும் பழக்கமல்ல !!! பெரும்பாலான தமிழர்கள் இன்று தட்டுக்களுக்கு மாறிவிட்டார்கள் !!!
வாலை இலையைத் தூக்கிப் பிடித்த பதிவர் அனைத்து பழக்க வழக்கங்களையும் சாடி இருப்பாரானால் எதோ நியாயம் என்றாவது சிந்திக்க வழியிருக்கு !!!
ஆனால் குரானில் சொல்லப்படாதவைகள் அனைத்தும் மூடப் பழக்கம் - சொல்லப்பட்டவைகள் மாத்திரம் முற்போக்குப் பழக்கம் என வாதிடுவதைக் கேட்டால் சின்னப் பிள்ளைகள் கூடு வாய் விட்டு சிரிக்கும் !!!
இஸ்லாமியர்களிடம் இருக்கும் மூடப் பழக்கங்களை பட்டியலிட்டால் ஒரு ஏரணமான பதில்களும் வருவதில்லை !!!
1. குறிப்பாக மெக்காவைப் பார்த்து முகம் கழுவாமல் இருப்பது !!!
2. கொட்டாவி விடுவது சாத்தானின் செயல்
3. சாத்தான் காதுகளில் உச்சாப் போவதால் ஒருவர் அதிக நேரம் தூங்குகின்றார்
4. கழிவறைக்கு செல்லும் போது இடதுக் காலை தான் முன் வைக்க வேண்டும்
5. வீட்டில் நாய் வளர்ப்பது தீட்டு
6. ஒருவன் எச்சில் துப்பும் போது இடதுப் பக்கத்தில் தான் துப்ப வேண்டும்
7. ஒன்றுக்கு போகும் போது ஆண்குறியை இடக் கையால் மட்டுமேத் தொட வேண்டும்
8. சாத்தான் மூக்கின் மேல் தூங்குவான்
9. கெட்டக் கனவுகளை துரத்தப் படுக்கையின் இடப்பக்கம் துப்ப வேண்டும்
10. காலணிகள் அணியும் போது வலக்காலில் தான் முதலில் அணிய வேண்டும் ... !!!
இது இன்னும் நீள்கின்றது ...
இவை எல்லாம் என்ன மூடப் பழக்கம் இல்லாமல் என்னப் பழக்கம் என்று அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள் ப்ளீஸ் !!!
எம் சடங்குகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கிறது.
வாழை இலை மடித்தல் பற்றிய கருத்தில் உறவுகளின் தன்மையையும் விளக்கி இருக்கிறார்கள் எம் முன்னவர்கள்.
நல்ல பதிவு,திருந்துவார்களா ?
சரியாச் சொன்னீங்க... பகிர்வுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்... (TM 9)
பொம்பளை பெயரில் ஒரு வலைத்தளம் இருந்தால் போதும் கூட்டம் கூட்டமாக பின்பற்றுவோரும், பொம்பளை பெயரில் பதிவிட்டுவிட்டால் அது எவ்வளவு கிறுக்குத்தனமாக இருந்தாலும் அஹா ஓஹு என்று சப்பைக்கட்டு கட்டும் முட்டாள்களும் இருக்கும்வரை இதுபோன்ற மூடக்கருத்துக்களை பதிவிட்டுக்கொண்டுதான் இருப்பீர்கள்.,.இக்பால் செல்வன் தன்னை ஏதோ பெரிய மாமேதை என்று நினைத்துக்கொண்டு பதிவை விட பெரிய பின்னூட்டம் இட்டுக்கொண்டிருக்கிறார்..அவர் உண்மையிலேயே அறிவாளி என்றால்....குர் ஆணை சிந்தித்திருப்பார்..மேலோட்டமாக பார்த்துவிட்டு தன அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார்......பாவம்...
padhivittamaikku nandri
surendran
இஸ்லாமியர்கள், இந்துக்களைச் சாடுவதை நிறுத்தும் வரை, இஸ்லாமியர்கள் மீதான விமர்சனமும்,கோபமும் எம்மை விட்டு நீங்கப் போவதில்லை!
நாம் ஆயிரம் கடவுளைத் தொழுகிறோம், அலகு குத்துறோம், பால் ஊத்துறோம், பல்லக்குத் தூக்குறோம்! இது எங்கள் பிரச்சனை!
நாம் அன்று சொன்னதைத்தான் இன்றும் சொல்கிறோம்! தங்களிடம் ஆயிரம் குறைபாடுகள் கொண்ட இஸ்லாமியர்கள், அவற்றைக் களைவதை விடுத்து, எதற்கு இந்து மதத்துக்குள் மூக்கை நுழைக்க வேண்டும்??
மதி.சுதா,
நல்லா சொன்னிங்க, தமிழக கலாச்சாரம் என நான் சொன்னதை இந்து மதக்கலாச்சாரம் என திரித்தது அவர்களே, தேவையே இல்லாமல் இந்து மத நூலில் ஆதாரம் இருக்கா என்கிறார்கள், அவர்களுக்கு தமிழக/தமிழர் கலாச்சாரம் என்பது மதம் சாராத ஒன்று என்பதே புரியவில்லை.
எல்லாவற்றையும் மதம் என்ற கண்ணாடிவழியே பார்க்கிறார்கள்.
------
இக்பால் ,
ஹா...ஹா அருமையாக அவர்களின் மூடப்பழக்க வழக்கத்தினை சுட்டிக்காட்டினீர்கள்,
எங்களுக்கும் தமிழ்க்கலாச்சாரம் தெரியும் எனவே பேசுகிறோம் என்கிறார்கள் அவர்கள் ஏன் எட்டு முழ வேட்டிக்கட்டவில்லை என கேட்டுப்பாருங்களேன் :-))
இதற்கு என்னப்பதில் சொல்வார்கள் எனக்கேட்டு வைத்தேன் நைசாக பதிலே சொல்லாமல் வேறு ஏதோ பேசுகிறார்கள்.
ஒரு பத்தியில் ஒரு வரியை மட்டும் எடுத்து படித்தால் ஒரு பொருள் வரும் அதை வைத்தே காலம் தள்ளுகிறார்கள்.
முஸ்லிம் மதவாதிகள் அரேபியாவின் கலாசாரத்தையும், அங்கு செய்யப்படும் பழக்கங்களையும் தூக்கிப்பிடித்து அவை மட்டுமே கடவுளுக்கு உகந்தது என்று சொல்வது ஒன்றும் புதிதல்ல. இவர்களுக்கு மொழிப்பற்று,இனப்பற்று,குடும்பப்பற்று போன்றவைகளைவிட மதப்பற்று ஒன்றே பிரதானம்.தமிழை வெறுப்பார்கள்.ஆனால் அதை வெளியில் சொல்லமாட்டார்கள். (காரணம் பெரும்பான்மையான தமிழர்கள் இந்துக்களாக இருப்பதால்).ஒரு மண்ணின் பண்பாட்டை நக்கலடிக்கும் இந்த வினோத மதவெறியர்கள் உலகின் எந்த மக்களின் பண்பாட்டையும் விரும்பமாட்டார்கள்.இவர்களின் மனம் பூரா இருப்பது மதம் மட்டுமே.மதத்தால் நிறைந்த மனிதர்கள்.இப்படி இல்லாமல் இருக்கும் இயல்பான முஸ்லிம்களை இவர்கள் ஒரு முஸ்லிம் என்றே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒரு இஸ்லாமிய பதிவாளர் எ ஆர் ரகுமான் இசை அமைப்பதை கடுமையாக் சாடி இது அல்லாவுக்கு பிடிக்காத ஒரு தொழில் என்றும் ரகுமான் இசை துறையை விட்டு விலகி அல்லாவுக்கு விருப்பமானதை செய்ய வேண்டும் என்றும் எழுதிஉள்ளார். உலகமே இஸ்லாமிய மயமாக ஆக வேண்டும் என்பதே இவர்களின் எண்ணம். இப்படி எழுதும் இஸ்லாமிய பதிவர்களை ஓரம் கட்டினால் நல்லது.
தேவையான கருத்து...
வாழ்த்துக்கள்..
நன்றி...
மர்மயோகி said...
பொம்பளை பெயரில் ஒரு வலைத்தளம் இருந்தால் போதும் கூட்டம் கூட்டமாக பின்பற்றுவோரும், பொம்பளை பெயரில் பதிவிட்டுவிட்டால் அது எவ்வளவு கிறுக்குத்தனமாக இருந்தாலும் அஹா ஓஹு என்று சப்பைக்கட்டு கட்டும் முட்டாள்களும் இருக்கும்வரை இதுபோன்ற மூடக்கருத்துக்களை பதிவிட்டுக்கொண்டுதான் இருப்பீர்கள்.,.///
நல்லா சொன்னீங்கப்பு... ஆனா இங்க வந்து இதை ஏன் சொல்லுரிங்க என்று தான் புரியல்ல?
நன்றாக சொன்னீர்கள் சுதா பகிர்விற்கு நன்றி.
தனிப்பட்ட கருட்த்துக்களை பகிருங்கள் சகோதர்ரர்களே,,,
இதில் மதத்தையும் , இனத்தையும் இணைத்து கேவலப்படுத்த வேண்டாம்..
உங்களின் சுயநலத்திற்காக பொதுப்பெயர்களை உபயோகிக்காதீர்கள்,,
ஆரோக்கியமான சமூகத்தை வலைத்தளங்களால் உருவாக்க முடியும், இதை மாசுபடுத்தாதீர்கள்...
இது விண்ணப்பம் அல்ல,,,
மன்னிக்க வேண்டும் உறவுகளே இன்று எவருக்கும் பதில் இட முடியவில்லை... நாளை வருகிறேன்..
மீண்டும் ஒரு முறை...
மன்னிக்கவும்
சகோதரரே முஸ்லீம்களை எல்லாம் தறவிறக்கப்பட்டவர்கள் என்று நீங்கள் சொன்னதற்க்குப் பிறகு உங்களிடம் பேச ஒன்றுமில்லை ஆனால் இந்தப்பிரச்சினையை ஆரம்பம் முதலே நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன் அதில் எனக்குப் புரிவது முஸ்லீம்கள் ஒன்றேச் சொல்லிவிட்டால்போதும் இஸ்லாமிய எதிர்ப்பு மொத்தத்தையும்.கொண்டுவந்து கொட்டிவிடுவது சகோ பிரபு காமடியாக போட்ட அந்தப்பதிவில் கூட எல்லாவற்றையும் காமடியாகப் போட்டுவிட்டு சிராஜ் இலைமடித்ததை மட்டும் சீரியஸாகவே போட்டிருந்தார் அதற்க்கு விளக்கம் கேட்ட சிட்டிஷன் ஆஷிக்கிற்க்கு பதிலுக்கு பின்னூட்டமிட்ட சகோ ஒருவரின் கமண்டை போய்ப் பாருங்கள் நான் மோபைல் போனில் எழுதுவதால் காப்பி பேஸ்ட் செய்யமுடியவில்லை பிறகு இந்த இலைமடிப்பு தமிழர் கலாச்சாரமாக எனக்குத் தெரியவில்லை அது ஒரு இந்துக்கலாச்சரமாகவே தோண்றுகின்றது ஏனென்றால் முஸ்லீம்களிடம் இந்த 16ம் நாள் பழக்கமே முஸ்லீம்களிடம் இல்லை 40தான் இருக்கிறது அதிலும் இலையை நம்பக்கமாகத்தான் மடிப்போம் அதிலும் இப்போதல்லாம் பேப்பர் பிளைட்வந்து விட்டதால் இனிவரும் காலங்களிலாவது நமக்குள் இதுபோன்ற பிரச்சினைகள் வராமலிருக்கட்டும்
@"என் ராஜபாட்டை"- ராஜா
@ஆட்டோமொபைல்
நன்றி சகோதரங்களே
கந்தசாமி கந்து...
கந்து நீ அடையாளம் கண்டதால் உன்னை திசை திருப்பவே ஒரு உல்டா அடிபடுகிறது
Yoga.S.
ஐயா ஒரு அடிப்படை அறிவையாவது இவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டாமா?
தனிமரம்
நான் ரவுடி நான் ரவுடி என்று சொல்பவரைப் போலவே செய்கிறார்கள்
அல்லக்கை ஆப் மொள்ளமாரி
நல்ல காலம் சிவனின் வரலாறு ஆண்டுகளுடன் குறிப்பிடப்பட்டதால் தப்பி விட்டார்
இக்பால் செல்வன்
நன்றி அண்ணா.. நான் முன்னர் சொன்னது போல நீங்கள் அந்த ஓய்வு எடுக்காமல் இருந்திருந்தால் பல பிரச்சனைகளுக்கு எப்பவோ தீர்வு வந்திருக்கும்
நெற்கொழுதாசன்
உண்மை தான் சகோ.. இப்படியான சடங்குகளை ஆவணப்படுத்தியே தீரவேண்டும்
விழித்துக்கொள்
திண்டுக்கல் தனபாலன்
நன்றி சகோதரங்களே
அஞ்சா சிங்கம்
வணக்கம் சகோ.. என் உங்கள் கருத்தை நீக்கினீர்களோ தெரியவில்லை.
பிரச்சனையை வளர்க்காமல் இருக்கவா? அல்லது எனது புளொக்குடன் ஏதாவது இதா?
மாத்தியோசி - மணி
நன்றி மணி அண்ணே....
நாயகன் கமல் பாணியில் தான் அடிக்கடி சொல்லவேண்டியிருக்கிறது
வவ்வால்
இன்னும் சில நூற்றாண்டுகளில் இம் மார்க்கத்தின் நிலை காணும் போது தெரியுமுங்க
காரிகன்
அரேபியன் சொல்வது தானே அவர்களுக்கு தாரக மந்திரம்
கும்மாச்சி
மிக்க நன்றி சகோ... தொழில் காரணமாக இப்போ யாருடைய புளொக்கிற்கும் வர முடிவதில்லை பெரிய மனதுடன் மன்னிக்கவும்
தொழிற்களம் குழு
சகோ உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்...
இருந்தாலும் அவர்கள் துள்ளும் போது எப்படி விலத்தி போவது
abdul hakkim
சகோ பிரச்சனைகளில் இருந்து சுமூகமாகப் போவதே என் விருப்பமும் ஆனால் அவர்களின் நோக்த்தை கண்டும் காணாதது போல போக முடியவில்லை...
இது இந்து மதச் சடங்கு என்பது அப்பட்டமான பொய்.. இஸ்லாத்துக்கு மாறியவர்கள் தம் பரம்பரியச் சடங்குகளை மறந்திருக்கலாம் ஆனால சில கிறிஸ்தவ சகோதரர்களும் இதை பின்பற்றுகிறார்கள். அப்படியானால் இது கிறிஸ்தவ சடங்கா?
சகோ நடுநிலையாக எழுதுவதாகச் சொல்லும் நீங்கள் முஸ்லீம்களை தறவிறக்கப்பட்டவர்கள் என்று சொன்னீர்களே அதற்க்கு பதில் சொல்லுங்கள்
முஸ்லீம்கள் தறவிறக்கப்பட்டவரர்கள் என்றால் இந்தியாவில் உள்ள இந்து மதமும் கிறிஸ்துவமும் தறவிறக்கப்பட்டதுதான் அம்பேத்கர் சொன்னதுபோல் இந்தியாவின் உன்மையான மதம் புத்த மதம் மட்டுமே
@abdul hakkim
வணக்கம் சகோ பிந்திய பதிலுக்கு மன்னிக்கவும்...
தாங்கள் அறிந்த வரலாற்றில் எங்கோ வழு இருக்கலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் புத்தர் என்பவர் சித்தார்த்தன் என்ற ஒரு இந்து தானே.. இதை நான் சொல்லவில்லை அவர்களது மூல நூலான மகாவம்சமே சொல்கிறது...
இலங்கையில் இன்று கூட மிகிந்தலை போன்ற புத்த கோயில்களில் (இது தான் இலங்கையில் புத்த மதம் முதல் முதல் ஆரம்பமாகிய இடம்) இந்து கோயில்களும் கட்டப்பட்டிருக்கிறது..
சகோ அப்படிப்பார்த்தால் இந்து மதத்திற்க்கு முன்பே சைவம் வைனவம் போன்ற மதங்களெல்லாம் இந்தியாவில் இருந்திருக்கின்றன நான் சொல்வது புத்தமதம் மட்டுமே இந்தியாவில் உண்டான மதம் இந்துமதம் ஆரியர்கள் கைபர் கனவாய் வழியாக இங்கு கொண்டுவரப்பட்டதுதான்
மதங்களையும் நாத்திகம் கம்யூனிஸம் போன்ற அனைத்து கொள்கைகளின் மூலத்தைத் தேடிப்பார்த்தால் நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது இடங்களிலும் அவைகள் தறவிறக்கப்பட்டவைகளாத்தான் இருக்கும் எனவே அங்குள்ள மன்னின் மைந்தர்கள் எந்தக்கொள்கையை ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் உனர்வுகளுக்கு மதிப்பழிக்கவேண்டும் இறுதியாக திருக்குர்ஆனின் போதனை ஒன்றைக் கேளுங்கள் (ஒரு கூட்டத்தாரின் மீது நீங்கள் கொண்ட வெறுப்பு நீதி செலுத்துவதிலிருந்து உங்களைத் தடுத்திடவேண்டாம்) திருக்குர்ஆன்
@abdul hakkim
வணக்கம் சகோ இந்து மதத்துக்கு வக்காளத்து வாங்குமளவுக்கு நான் மதவாதியில்லை. ஆனால் தரவிறக்கப்பட்ட கதைக்காகச் சொல்கிறேன்.
நபி அவர்களால் குர்ஆன் எழுதப்படுவதற்கு முன்னரே இந்திய இலங்கையில் இந்துமதம் இருந்ததற்கான ஆதாரங்கள் புராணங்களில் குறிப்பிடப்பட்டதுடன் சுவட்டு ஆதாரங்களும் இருந்திருக்கிறது
நான் கூர் ஆனை ஆர்வத்தோடு அறிய முனைந்த ஒருவன். இது சம்மந்தமாக சகோ ஹைதர் அலி, ஆமினா போன்றோரிடம் எல்லாம் பல தடவை எனக்கான விளக்கங்களை பெற்றிருக்கிறேன்..
இன்று நான் இந்நிலைக்கு தள்ளப்பட்டதற்கு இந்தியாவில் உள்ள ஒரு பதிவர் குழுவே காரணமாகிவிட்டது...
அவர்கள் நிறுத்தியிருந்தால் எதுவுமே நடந்திருக்காது இப்பதிவை படித்து பாருஙங்கள்
http://www.mathisutha.com/2012/05/r.html
சகோ தமிழ் இனையங்களிலும் சரி அகில உலக அளவிலும் சரி அவரர்களின் கொள்கைகளைப் பரப்புவதுதான் அந்தந்தக் கொள்கையுடையோரின் லட்சியமாக இருக்கிறது அந்த வகையில் தமிழிழ் நான் உட்பட மற்றுள்ள முஸலீம்களும் எழுதுகிறோம் இதில் என்ன தவறு உள்ளது அதேபோல் கம்யூனிஸத்தைப் பறப்ப தமிழிழ் எத்தனையோதளங்களும் நாத்திகத்தைப் பறப்ப எத்தனையோ தளங்களும் இந்துமதத்தைப் பறப்ப சில தளங்களும் கிறுஸ்துவர்களுக்குப்பல தளங்கள் உள்ளது மற்றுள்ள கொள்கைகளுடன் ஒப்பிட்டு நம்முடைய கொள்கைகளின் சிறப்பை எடுத்துச் சொல்வதில் என்ன தவறுஉள்ளது
நீங்கள் முஸ்லீம் பதிவர்களைப் பற்றி சொல்வதுபோல் மற்றுள்ள மதங்களை தாறுமாறாக முஸ்லீம் பதிவர்கள் விமர்சிக்கின்றார்களா அல்லது மற்றுள்ளவர்களால் இஸ்லாம் தாறமாறாக விமர்சிக்கப்படுகின்றதா என்று நடுநிலையுடன் சிந்தித்துப்பாருங்கள் இஸ்லாத்தை எதிர்ப்கதற்கென்றே தமிழிழ் இதில் பிண்ணூட்டமிட்டவர்கள் உட்பட சிலர் முழுநேர வேளையாக உள்ளார்களே அதையெல்லாம் என்ன சொல்வது
//மற்றுள்ள கொள்கைகளுடன் ஒப்பிட்டு நம்முடைய கொள்கைகளின் சிறப்பை எடுத்துச் சொல்வதில் என்ன தவறுஉள்ளது
//
வில்லங்கமே ஒப்பிடுரதுல ஆரம்பிக்ரதுதான ,தெரியாம கேட்குறேன் , நீங்க ஒரு வழியில கும்பிட்டா அடுத்தவன் வேற வழியில கும்பிடுறான் , ஒப்பிட ஆரம்பிச்சாலே நான் தான் பெரிசு பாத்தியான்னு
சண்டைக்கு கூபிடுவதுதான் அர்த்தம் ....வழி வேற வேறானாலும் எல்லோரும் ஒரு இறுதி இடத்தை அடைந்தால் போதும் என்று நினைப்பவனே பெரிய மனிதன் , அதை விட்டு விட்டு நான் தான் பெரியவன் என் முறை தான் 'அறிவியல்' ? முறை என்று பீற்றிக் கொள்பவன் ஒரு மூடனே! உன் மதத்தில் சிறப்பு இருந்தால் உன் மதத்தை மட்டும் விளக்கு அதை விட்டு விட்டு ஒப்பிட ஆரம்பிபதேன்பது , வர்த்தக விளம்பரங்களில் பிராண்ட் எக்ஸ் , பிராண்ட் ஒய் விட சிறந்தது என்று போட்டி போட்டு விற்கும் சந்தையா மதம் ...அதற்கே பல நாடுகளில் தடை உள்ளது தெரியுமா ....இதில் வெக்கமிலாமல் ஒப்பிடுவது தவறு என்று கேட்கிர்ரீர்களே ,
படிப்பது ஒன்று நடப்பது ஒன்றா பண்பு ? மீண்டும் சொல்கிறேன் , இலை மதிப்பதில் அடுத்தவர்க்கு குறிப்பால் உணர்த்தும் நடைமுறை ஒரு குறிப்பால் உணர்த்தும் முறை...நீ செய்வது தவறு, நல்லிணக்கம் அவசியம் என்று சொன்ன முஸ்லிம்களைப் பார்த்து ,உன் மார்க்கம் இப்படிதான் சொன்னதா என்று அவர்களை மதத்தை காட்டி விரட்டியவர் ஆஸிக், ஆனால் மதத்திற்கும் இந்த பதிவிற்கும் சம்பந்தமில்லை என்று சப்பை கட்டு கட்டிவிட்டால் சரியாய் போய் விடுமா..தேவை இல்லாமல் புதுகை அப்துல்லாவை வர வைத்து விட்டு, பின் அவரிடம் முஸ்லிம்களிடம் மற்றவர்களை நன்றாகப் பேசச் சொல்லுங்கள் என்கிறார், ஆக அவரின் உள்நோக்கம் வேறே ...இப்படி அடுத்தவரை சீண்டிக் கொண்டே இருப்பதால் மற்றவர்கள் தன் மதத்தை நோக்கி வரவேண்டும் என்ற அவரின் கனவுக்கு அவரும் அவர் குழுமமும் சொந்தக் காசில் ஆப்பு வைத்துக் கொள்வதற்கு சமானம் என்பதை உங்கள் போல் பெரியவர்கள் ஏன் எடுத்து விளக்கக் கூடாது.... மரியாதை தானாக வர வேண்டும், பயமுறுத்தி வர வளைத்தால் அப்படி செய்பவர்களுக்கே அது வினையாக முடியும் , இதற்கு தனியாக புக் எதுவும் தேவை இல்லை !
சகோ ஒப்பீடு இல்லாமல் எந்த ஒன்றின் சிறப்பையும் புரிந்து கொள்ளமுடியாது அவை நாகரீகமாகவும் அறிவிப்பூர்வமாகவும் இருக்கும்வரை இவையெல்லாம் பிண்ணூட்டங்களின் மூலம் பேசக்கூடிய விஷயமல்ல
எது எப்படி இருந்தாலும் பதிவர்களுக்குள் சில நாட்களாக நடந்த கசப்பான நிகழ்வுகளையெல்லாம் மறந்து விட்டு வருங்கால சந்ததியனருக்கு பயனுள்ள வகையில் தமிழ்ப்பதிவுலகம் முன்னோக்கி நகர வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு தமிழ்பதிவுலகம் நடைபோடட்டும்
//சகோ ஒப்பீடு இல்லாமல் எந்த ஒன்றின் சிறப்பையும் புரிந்து கொள்ளமுடியாது அவை நாகரீகமாகவும் அறிவிப்பூர்வமாகவும் இருக்கும்வரை இவையெல்லாம் பிண்ணூட்டங்களின் மூலம் பேசக்கூடிய விஷயமல்ல
//
மறுபடியுமா முடியலடா சாமி!
//எது எப்படி இருந்தாலும் பதிவர்களுக்குள் சில நாட்களாக நடந்த கசப்பான நிகழ்வுகளையெல்லாம் மறந்து விட்டு வருங்கால சந்ததியனருக்கு பயனுள்ள வகையில் தமிழ்ப்பதிவுலகம் முன்னோக்கி நகர வேண்டும்
//
அதைதான் நான் சொல்கிறேன்....மத நல்லிணக்கத்துடன் , அனைவரின் மதமும் சமமே என்று, உலகில் அனுபவிக்க ஆயிரெதேட்டு இருக்கையில் , புக்கை பிடித்து தொங்கிக் கொண்டிராமல் வாழ்வை ஆனந்தமாக வாழ்வோம் , ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு , இதிலாவது மாற்றுக் கருத்து இருக்காது என்று ஒரு நப்பாசையுடன் அன்பன் இளையதாசன் ...ஓவர் அண்ட் அவுட். ....டாட் !
@abdul hakkim
சகோ பதிவுலகத்தில் நடக்கும் பல விடயங்கள் நீங்கள் அறியவில்லை என நினைக்கிறேன்.
உதாரணத்துக்கு வாஞ்சூர் என்பவர் தான் ஒர குழு செய்த தனிப்பட்ட விரோதத்திற்காக அவர்கள் மன்னிப்பு கேட்ட பின்னரும். யாழ்ப்பாணத்தாரின் மேல் இந்திய முஸ்லீம்களுக்கு இனத்துவேசத்தை ஊட்டி வருகிறார். இதை உங்கள் இஸ்லாமிய அமைப்புகள் கண்டு கொள்ளாவில்லை. முதல் அந்த ஓட்டைகளை அடைய முயற்சியுங்கள் சகோ அதன் பின்னர் எம்மோடு சமரசம் பேசலாம்
@IlayaDhasan
நல்ல கேள்விகள் சிலதை கேட்டிருக்கிறீர்கள் சகோ பதில் கிடைத்ததும் சந்திக்கிறேன்
மிகச் சரி.
வாழையிலை பற்றிய விடயம் இன்றுதான் எனக்குத் தெரியும்.. நன்றி மதி.. அதைவிட சொல்லவந்த கருத்தும் மிகச் சரியானவையே.
கருத்துரையிடுக