இந்த வாடிய மலரிலிருந்து
மொத்த இதழ்களும் விழுந்தாலும்
காம்பாய் நீயிருக்கும் வரை
இந்த விதை உதிராது#அக்கா
உன் முந்தானை நுனியில் கட்டி வைத்துக் கொள்
பறந்து போய்விடும்.
என் மனதல்ல உன் மானம்.
என்றோ ஒரு நாள்
குட்டி போடும் என
புத்தகத்துள்வைத்த மயிலிறகை
இவ்வளவு நாளும் தேடி அலைந்தேன்
நேற்றுக் காயப்பட்டே
அறிந்ததோ தெரியவில்லை
ஓடி வந்து மருந்திட்டுப் போகிறது
சிப்பிக்குள் இருந்து
முத்துக்கள் பிடுங்கப்படுகிறது
சிப்பியில் சிலை செய்த சிறுவனுக்கு
உலகச் சிறப்பு விருது
முத்தோ
பணக்காரன் பெட்டியில்முடங்கிக் கிடக்கிறது
வெற்றிலை சாத்திரி சொன்னான்
நீ உயிரோடிருக்கிறாயாம்
எங்கே என்றேன்தெரியலியாம்
உன் வெற்றிலையில்என் மனது தெரியாதா ?
18 கருத்துகள்:
படங்களும், படத்திற்கேற்ற கவிதை வரிகளும் அழகு...
பாராட்டுக்கள்...
(த.ம. 1)
சில்லறை வரிகள் அனைத்தும் சிறப்பு.
த.ம. 2
இவை சில்லறை வரிகளில்லை அண்ணா. வைரவரிகள். முதலாவது கவிதை உங்க அக்காவுக்காக(முந்தி ஒரு பதிவில் படித்திருக்கிறேன்) எழுதியிருக்கிறீங்க போல? அருமை.
குப்பையில் கிடந்தாலும் முத்துக்கள் முத்துக்கள் தானே.......
பொறுக்கியெடுத்தாலும் கவிதைகள் அழகான ரசிக்கக் கூடியதாக இருக்கிறது சகோ
மனங்கவரும் துளிப்பாக்கள்
அருமை சகோதரரே...
///
உன் முந்தானை நுனியில் கட்டி வைத்துக் கொள்
பறந்து போய்விடும்.
என் மனதல்ல உன் மானம்.
///
செம செம! (TM 3)
வெற்றிலைச் சாத்திரிக்கு !ம்ம் அருமையான உணர்வைச் சொல்லும் வரிகள்
arumai!
vaazhthukkal!
நல்ல கவிதைகள்.வாழ்த்துக்கள்
வணக்கம் மச்சி,
குட்டி கவிதைகளும், அதற்கேற்ற படங்களும் கலக்கல்!
தொடர்ந்தும் இடைக்கிடை இவ்வாறான படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்
மனம் கவர்ந்த வரிகளில் அழகான கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.
Kalakkira machi valthukkal. Alaku serthu rasanai kuddi amaitha kavithaikal
சிப்பிக்குள் இருந்து
முத்துக்கள் பிடுங்கப்படுகிறது
சிப்பியில் சிலை செய்த சிறுவனுக்கு
உலகச் சிறப்பு விருது
முத்தோ
பணக்காரன் பெட்டியில்முடங்கிக் கிடக்கிறது
அநீதியின் கண்களைப் பிடுங்கும் கவிதை
கவரிகள் இது அருமை சகோ!...தொடர வாழ்த்துக்கள் .
அருமையான கவிதைகள்...
எல்லாமே சூப்பர்.
முத்தான வரிகள் ரசிக்கும் படியாக இருந்தது.
சில்லறை வரிகள் அல்ல! சிறப்பான வரிகள்! பாராட்டுக்கள்!
இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in
குட்டிக்ஃகட்டியாய் அனைத்து வரிகளும் அழகு
கருத்துரையிடுக