உலக நாகரீகமானது எவ்வளவு முன்னேற்றம் அடைந்து சென்றாலும் சில பெண்களுக்கான சில அடிப்படைக் குணங்கள் மாறாமலே இருக்கிறது. இவை நகரப்பகுதிகளில் குறைவாக இருந்தாலும் கிராமப்புறங்களில் கணவர்மாராலேயே அடக்க முடியாத ஒரு நோயக மாறியிருக்கிறது.
அப்படி என்ன நோய் என்று புரியாமல் விழிக்கிறீர்களா? போட்டி போட்டுக் கொண்டு ஆண் பிள்ளைகளைப் பெறுவது. அவர்கள் வாயசுக்கு வர முன்னரே சீதண விபரத்தை அறிவிப்பது. அதன் பின்னர் அவன் காதலிக்கும் பெட்டை பற்றி ஒரு வதந்தி கிளப்பி அவளை பிரித்து விட்டு மகனை நல்ல விலைக்கு விற்றுவிட்டு ஊரில் உள்ள பெண்பிள்ளைகள் பற்றி கதை கட்டுவது இது தான் அவர்களுக்கு இருக்கும் தீர்க்கப்படாத வியாதியாகும்.
இதற்கெல்லாம யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை.
இப்பதிவுக்கான காரணம் இது தான்.... நான வாழும் சமூகம் ஒன்றில் ஒரு அக்கா ஒருவர் அயலூர்காரர் ஒருவரை காதலித்தார். இதில் அந்த வீட்டில் எவருக்கும் உடன்பாடில்லை அதனால் அடுத்த கட்டம் என்ன எதிர்ப்புத் தானே... ஆனால் இங்கு நடந்தது சற்று வித்தியாசமானது. அந்த அக்காவுக்கு எல்லோரும் ஆலோசனை கூறியும் கேட்பதாயில்லை. ஆனால் வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்கவும் இல்லை.
அதீத எதிர்ப்பு காட்டினால் வெளியேறி குடும்ப மானம் போய் விடும் என்பதற்காக ஒரே ஒரு விதி போட்டார்கள். நீ போனால் எமக்கும் உனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அந்தளவுமே நடந்தது. அவர் காதலித்த ஆடவர் , ஆலயத்தில் திருமண ஒழுங்கை எல்லாம் செய்து விட்டு அதிகாலையே வாகனத்தில் வீட்டுக்கு வந்தார். அந்த அக்காவின் தாயாரே ஏற்றி அனுப்பி வைத்தார். காலையே திருமணம் முடிந்துவிட்டது. அத்துடன் அவரும் தனது புகுந்த வீடு போய்விட்டார்.
உறவுகளே உங்களிடம் ஒரு கேள்வி?
இதை ஓரு பெண் வீட்டை விட்டு ஓடிவிட்டார் என்றா வாய்க்கு வந்தபடி கூறுவது. குடும்ப கௌரவத்திற்காகத் தான் குடும்பத்தார் கடைசி நிமிடம் வரை மிக மிக நாகரீகமாக நடந்து கொண்டார்கள். அதே சமூகத்தை சேர்ந்த நீங்கள் எலும்பில்லாத நாக்கால் இப்படியா கதைப்பது.
அதிலும் ஒருவர் என் காது பட கூறினார். இப்படி ஒரு நிலமையில் நான் தாயாக இருந்தால் மருந்து குடித்து செத்திருப்பேனாம். தாயே காலம் இன்னும் உருண்டு முடியவில்லை உன் மகனும் மாற்றான் சமூகத்தில் மணம் முடிக்கும் போது உயிருடன் தானே இருந்து பார்க்கப் போகிறாய்
தாய்க்குலமே தயவு செய்து உலகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் உங்கள் குழந்தை போல நோக்குங்கள். சிலவேளை அவர்கள் தப்பிழைத்திருந்தாலும் மறைத்துத் தான் கதைக்க வேண்டும் ஏனென்றால் இது ஒரு சந்ததியின் எதிர்காலத்தை மாற்றும் விடயமாகும்.
குறிப்பு - தலைப்பானது கிராம மொழி வழக்குக்கு அமைவாக அமைக்கப்பட்டுள்ளது.
படங்கள் - நன்றி கூகுல்
குறிப்பு - தலைப்பானது கிராம மொழி வழக்குக்கு அமைவாக அமைக்கப்பட்டுள்ளது.
படங்கள் - நன்றி கூகுல்
14 கருத்துகள்:
//அவன் காதலிக்கும் பெட்டை பற்றி ஒரு வதந்தி கிளப்பி அவளை பிரித்து விட்டு மகனை நல்ல விலைக்கு விற்றுவிட்டு ஊரில் உள்ள பெண்பிள்ளைகள் பற்றி கதை கட்டுவது இது தான் அவர்களுக்கு இருக்கும் தீர்க்கப்படாத வியாதியாகும்.
பெண்களுக்கான சில அடிப்படைக் குணங்கள் மாறாமலே இருக்கிறது. இவை நகரப்பகுதிகளில் குறைவாக இருந்தாலும் கிராமப்புறங்களில் கணவர்மாராலேயே அடக்க முடியாத ஒரு நோயக மாறியிருக்கிறது.//
உன் கருத்து முற்றிலும் உண்மைதான் அண்ணா.இப்படிப்பட்ட பெண்களைப் பார்க்கையில் நானும் ஒரு பெண் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறேன்.இதை மாற்ற முயன்று நானும் தோற்றுப் போயிருக்கிறேன்.
நீங்கள் சொல்வது போல் இன்னும் கிராமப்புறங்களிலே நிறைய பேர் இருக்கிறார்கள்.. இன்னும் 19-ஆம் நூற்றாண்டை விட்டு, அவர்கள் வெளியே வரவில்லை... (த.ம். 2)
உலகம் உருண்டு உருண்டு முன்னேறினாலும் இவர்கள் அப்படியே...!
நிச்சயமாய் வதந்திகளை வளர்ப்பது ஒருவித நோய்.கண்டித்துக்களைணப்பட வேண்டியதை தான்.
அதெல்ல்லாம் மாத்த முடியாது பாஸ்! யாரெல்லாம் எவ்வளவு முயற்சி செய்தாங்கன்னு தெரியும்தானே! திருந்த மாட்டாங்க!
தன் வீட்டு கூரையை மேயாமல் மற்றவர்களின் பீலி சரியில்லை என்பவர்கள் இவர்கள்........ கதைச்சுப் பிரியோசனம் இல்லை நம்மவர்களின் சில வேலைகளை,
இதுபோல் செய்கிற தாயானாலும் தந்தையானாலும் செருப்பாலே அடிக்க வேண்டும். வளர்ந்து ஆளான பிறகும் மகன்களை தன் சொத்து போல பாவிப்பது பெண்ணாதிக்க திமிர் மட்டுமே. குடி கெடுக்கிறது யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு தைரியமா ஒரு முடிவு எடுத்து இளைஞர்கள்சுயமா சிந்தித்து செயல் படனும். தாய் என்கிற குடும்ப சமூக அந்தஸதை அதிகார துஷ்பிரயோகம் செய்கிற பேய்களை அறவே ஒதுக்கி தூர விலக்கிட வேண்டும்.
பெண் வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டார் என்ற கலாச்சாரங்கள் கருமாந்திரம் எல்லாம் எப்போங்க வந்துச்சு !!! இடையில் வந்து ஒட்டியவை தான் !!! பண்டைய தமிழர்கள் இதனை அழகாக உடன் போக்கு என்றார்கள். அதனை அசிங்கமாக நினைப்பதும் இல்லை , கௌரவ கொலைகள் நடப்பதும் இல்லை ..... அன்றிருந்த நாகரிகம் கூட இன்று நமக்கு இல்லை ..
நல்ல பதிவு சகோ.
unmai ayya!
nalla karuthu!
நகரத்தில் கொஞ்சம் மாறுதல் தெரிகிறது
கிராமங்கள்தான் இன்னும் தன்னை மாற்றிக் கொள்ளாமல்
தன்னையும் கஷ்டப்படுத்திக் கொண்டு
சமூகத்தையும் கஷ்டப்படுத்திக் கொண்டு உள்ளது
சிந்திக்கத் தூண்டும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
கட்டுப்பாடுகளில் ஊறிய சமுகம் மாற்றத்தை ஜீரணிக்க காலம்பிடிக்கும் பாஸ்!
பரவலாக எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடக்கிறது. இதை செய்யும் பல பெண்கள் தாங்களும் ஒரு பெண் என்பதை மறந்து விடுகிறார்கள்.
இன்னும் கடந்த நூற்றாண்டை விட்டு அவர்கள் வெளியே வரவில்லை போல..நல்ல ஆதங்கம்...
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் அண்ணா. தாங்கள் கண்ணாடிவீட்டுக்காரர்கள் என்பதை மறந்து விட்டு கல்லெறிவார்கள். இதில் பெண்பிள்ளை பெற்றவர்களும் அடக்கம்.
கருத்துரையிடுக