வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

கல்வி ஆர்வலரை அடிமைப்படுத்தும் இலங்கைத் தளம்



         இணைய உலகென்பது எமக்குத் தேவையான அனைத்தையும் வாசல் வந்து கதவைத் தட்டித் தந்துவிட்டுச் செல்லும் அளவுக்கு பெரும் வளர்ச்சியடைந்தள்ளதுடன் அனைத்து மக்களிடமும் சென்றடைந்துள்ளது.
இணையத் தேடல்களில் ஆங்கிலம் சார்ந்த தேடல்களை தேடல் பொறியில் தட்டியதும் கண் முன் முழு விளக்கத்துடனும் விரிந்திருக்கும். ஆனால்
அதே இடத்தில் ஒரு தமிழ் விடயத்தை தேடுவதென்றால் அது எங்கெங்கோ சென்று நிற்கிறது. இணையத்தில் தமிழ் விடயம் தேட முற்படுகையில் உலகத் தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவிற்கு அழைத்துச் சென்றாலும் அங்கு தமிழ் தகவல்கள் பூரணமாகக் கிடைப்பதில்லை.
      அதிலும் அறிவியல் விடயத்தைத் தேட வெளிக்கிடும் போது பல தடவைகள் ஏமாற்றமே எஞ்சியிருக்கும். அப்படியான ஒரு ஏமாற்றத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு தமிழில் உருவாக்கப்பட்டுள்ள தளம் ஒன்று இருக்கிறது. இங்கே பல விடயங்களை நாம் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதுடன், அளவுக்கு பெரிதான கட்டுரைகளோ, அலட்டல் விடயங்களோ இல்லை. எதைப் பெறச் சென்றோமோ அதை ஆழமாகவும் சுருக்கமாகவும் அறிந்து திரும்பக் கூடியதாக உள்ளது.
    உதாரணத்திற்கு ஹிட்லரின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் அந்தளவு விடயத்தையும் எப்படி இவ்வளவு சுருக்கமாக விளக்கியுள்ளார் என அந்த எழுத்தாளரை வியந்து பார்க்க வைக்கிறது.
     அதே போல் அறிவியல் விளக்கமும் அப்படியானதே. பாம்பு பால் குடிக்குமா? இல்லையா? என நானும் நண்பனும் இரண்டு மணித்தியாலம் அலட்டிய விடயத்தை 2 நிமிடத்தில் விளங்கப்படுத்தியுள்ளார்கள்.
    கல்விக்காக மட்டுமே முதன்மை பெற்று இலங்கையில் இருந்து இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தின் நிறுவுனர் ஒரு வலைப்பதிவர் என்பது எமக்கும் ஒரு பெருமையான விடயமாகும். இ-தமிழ் என்ற வலைப்பதிவின் செந்தக்காரராக இருப்பதுடன் பல நல்ல பதிவுகளையும் தந்த சுதர்சன் என்பவர் தான் இத்தளத்தின் சொந்தக்காரர் ஆவார். அவருடன் இணைந்து பலர் இதற்காக அரும்பாடுபட்டு உழைத்து வருகிறார்கள்.
அவர்களோடு சேர்ந்து உழைக்க முடியாவிட்டாலும் என்னாலான ஒரு சிறிய உதவி இது தான்.
    அவருடன் தொடர்பு கொண்டு இத்தளம் பற்றி வினவிய போது அவர் இதன் நோக்கம் பற்றி கீழக்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தமிழர்களின் அடிப்படை கல்வி அறிவு, சமூக அபிவிருத்தி வளர்ச்சி போன்றவற்றை அடிப்படை நோக்காக கொண்டு, அறிவுத்தேவைகள், கல்வி சார்ந்த அனைத்தையும் இலவசமாக பெறக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

*முக்கியமா ஒரு சமூகத்துக்கு பல்வேறு துறையில் அடிப்படை அறிவை வழங்குவதன் அதனை வளர்ச்சி பாதையில் இட்டு செல்ல முடியும் என்பது நோக்கு . அனைவருக்கும் ஒவ்வொரு விடயத்திலும் அடிப்படை அறிவு இருக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இது உருவாக்கப்பட்டது . 

உதாரணமா ஒவ்வொருக்கும் சட்டம் ,சுகாதாரம் ,அமைப்புகள் பற்றி அடிப்படை தெரிஞ்சிருக்கணும் . ஏன் எதற்கு என்ற கேள்வி பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்றோம் . 

முக்கியமா கல்வி அறிவு தொடர்பான பாடங்களையும் நவீன முறையில் வழங்குகிறோம் . 

***எதிர்காலத்தில்*****

உயர்தர கல்வி வீடியோக்களை முழுவதுமாக செய்து முடிப்பது தான் நோக்கம். மற்றும் தகவல்களை இன்னும் நவீன முறையில் வழங்குவோம் ***

வாசிக்கும் பழக்கத்தை தமிழர்களிடையே கொண்டுவர முயற்சி செய்துகொண்டிருக்கோம் .

     இத்தளம் ஆனது மேலும் பல விடயங்களை தந்து எமக்கான அறிவுப்பசியை தீர்க்கும் என்ற நம்பிக்கை இருப்பதுடன் இன்னும் சில வருடத்தில் பல மாணவர்களையும் ஆசிரியர்களையும் தன்னகத்தே அடிமைப்படுத்தப் போவது திண்ணம் என்பதையும் என் எதிர்வுகூறலாக தங்களிடம் பரிந்துரைக்கின்றேன். இன்னும் பற்பல அம்சங்களை உள்ளடக்கியுள்ள இத்தளம் பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் அதன் பாதையை மட்டும் காட்டி விடுகிறேன் உள் நுழைந்து பார்த்த பின்னர் முடிவெடுங்கள்.
அத்தளத்திற்கான தொடுப்பு இதோ – www.ewow.lk
இதன் பதிவேற்றங்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் - http://www.facebook.com/ewowlk

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

10 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தமிழ் என்று கூகுளில் தேடிப்பாருங்கள்

முதல் முடிவு ???????

K.s.s.Rajh சொன்னது…

நல்ல பகிர்வு பாஸ் அந்த தளத்தின் உரிமையாளருக்கும் அதை இங்கே பகிர்ந்த உங்களுக்கு பாராட்டுக்கள்

வலையுகம் சொன்னது…

சகோ மதிசுதா அவர்களுக்கு நல்ல அறிமுகம்

//கல்விக்காக மட்டுமே முதன்மை பெற்று இலங்கையில் இருந்து இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தின் நிறுவுனர் ஒரு வலைப்பதிவர் என்பது எமக்கும் ஒரு பெருமையான விடயமாகும். இ-தமிழ் என்ற வலைப்பதிவின் செந்தக்காரராக இருப்பதுடன் பல நல்ல பதிவுகளையும் தந்த சுதர்சன் என்பவர் தான் இத்தளத்தின் சொந்தக்காரர் ஆவார். அவருடன் இணைந்து பலர் இதற்காக அரும்பாடுபட்டு உழைத்து வருகிறார்கள்.//

அவர்களின் உழைப்பையும் சமூக சேவைகளையும் போலித்தனம் சிறிதும் இல்லாமல் மனமார வாழ்த்துகிறேன் இந்த நல்ல செய்தியை பகிர்ந்த உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் நன்றிகள்

Gobinath சொன்னது…

நான் இந்தத்தளத்தை Bookmark செய்து வைத்திருக்கிறேன். அருமையான தளம்.

Mahan.Thamesh சொன்னது…

உண்மைதான் சகோ . இந்த தளத்தினை நானும் பார்த்து வருகிறேன் . மிக சிறந்த பயனாக மாணவர்களுக்கும் , அறிவியல் ஆர்வலர்களுக்கும் உதவும் / பகிர்வுக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

பகிர்வுக்கு நன்றி நண்பரே...அந்த தளத்தின் உரிமையாளருக்கு பாராட்டுக்கள்...

Yoga.S. சொன்னது…

வணக்கம் ம.தி.சுதா! நீண்ட இடைவெளிக்குப் பின் அருமையான தகவலுடன் வந்திருக்கிறீர்கள்.நன்றி!!!

காட்டான் சொன்னது…

வணக்கம் தம்பி!
பயன் மிக்க தகவல் பகிர்ந்ததற்கு வாழ்த்துக்கள்!!

தனிமரம் சொன்னது…

நலமா சுதா?
வித்தியாசமான பதிவும் விந்தையும் மிக்க அறிமுகமும் நன்றி அறிமுகத்திற்கு.

Unknown சொன்னது…

தகவலுக்கு நன்றி நன்றி தம்பி

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top