ஒரு கண்டுபிடிப்பு என்பது மனிதனின் தேவைகளால் நிர்ணயிக்கப்படுகிறது என்பது பொது வரை முறை. அதனடிப்படியில் எமது ஊர் மாணவன் ஒருவன் சென்ற வருடம் இடம்பெற்ற புத்தாக்கப் போட்டிக்காக தயாரித்த ஒரு கருவியை தங்களுடன் பகிர நினைக்கிறேன்.
இந்தக் கருவியானது அம்மாணவனுக்கு merit certificate தர சான்றிதழைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
யாழ்ப்பாணத்திலுள்ள உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியைச் சேர்ந்த சசிக்குமார் குமணன் என்ற பத்தாம் தர மாணவனே இக்கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரனாவார். இவரது தந்தையார் ஒரு ஆசிரியராவார். நடுத்தர வசதியுள்ள இக்குடும்பத்தைச் சேர்ந்த இம்மாணவன் வெறும் 150 ரூபாய் செலவுடன் இக்கருவியை செய்து முடித்திருக்கிறான்.
இதன் செயற்பாடு என்னவென்றால் தோட்டம் போன்ற இடங்களின் வேலிகளுக்கு இதன் ஒரு அந்தத்தை மட்டும் கொடுத்தால் போதும். தோட்டத்தின் தடுப்பு வேலியில் ஒரு அதிர்வு ஏற்படுவதை வைத்துக் கொண்டு இந்தச் சிறிய கருவியை ஒலி எழுப்பச் செய்ய முடியும்.
மேலும் விளக்கம் காணொளியில் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவனுடனான கலந்துரையாடல் அடுத்த காணொளியில் இணைக்கப்பட்டுள்ளது.
(மீண்டும் ஒரு பதிவில் எமது ஊர் மாணவன் ஒருவன் தயாரித்துள்ள இன்னுமொரு கருவியுடன் சந்திக்கிறேன்)
23 கருத்துகள்:
வணக்கம் மச்சி,
குமணனுக்கு வாழ்த்துக்கள்,
இந்த தகவலை எம்மோடு பகிர்ந்து கொண்ட உனக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.
உண்மையில் ஆச்சரியமான கண்டு பிடிப்பாக இருக்கிறது. முன்பு வயல் காவலுக்கு அப்பரும், ஐயாவும் பரண் கட்டி காத்திருந்திருக்கிறார்கள். அப்போது இக் கருவி கிடைத்திருந்தால் எப்படி இருக்கும்?
சுதா உண்மையிலேயே அவரை பாராட்ட முன்னர் உங்களை பாராட்டுகிறேன்.. இப்படியான முத்துக்களை நீங்கள் அறிமுகம் செய்யாவிடில் எங்களுக்கு அவரை பற்றி தெரிந்திருக்காது ..!! மாணவனுக்கு வாழ்த்துக்கள்.. இவருக்கு இந்த பதிவின் முலம் அவரின் புதிய கண்டு பிடிப்புக்களுக்கு மற்றவர்கள் உதவ முன் வந்தால் சந்தோசம்!!
சசிகுமாருக்கு வாழ்த்துகளும்..அவரை உலகுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கோடு அவரைப் பற்றிய பதிவை இட்ட உங்களுக்கு பாராட்டையும் மனதார தெரிவித்துக் கொள்கிறேன்..
வாவ்! சூப்பர் கண்டுபிடிப்பு. அதை அப்படியே வேலியில் பொருத்திக் காட்டியிருந்தா நல்லா இருந்திருக்குமே.
ஊடகத்தை சரியாக பயன்படுத்தி இருக்கீங்க நண்பா.....
மேலும் விளக்கம் காணொளியில் அழிக்கப்பட்டுள்ளது. ://////
சுதா, நீங்கள் தான் ஒரு விஞ்ஞானி எண்டு பார்த்தா, ஊரில இருக்கிற எல்லா குட்டிக் குட்டி விஞ்ஞானிகளையும் தேடிப்பிடித்து அறிமுகப்படுத்துறியள்!
நல்ல முயற்சி! அந்தத் தம்பிக்கு வாழ்த்துக்கள்! - :-)
மேலும் விளக்கம் காணொளியில் அழிக்கப்பட்டுள்ளது.////
இதைக் கொஞ்சம் கவனியுங்கள் சுதா!
அளிக்கப்பட்டுள்ளது என்று வரும்!
அருமையான பகிர்வு அண்ணா. நம் ஊர் மாணவர்களின் திறமையை கட்டாயம் வெளிக்கொண்டுவர வேண்டும். குமணனுக்கும் உங்களுக்கும் பாராட்டுகள்.
குமணனுக்கு ஊக்கம் கொடுத்தமைக்கு நன்றி. குமணனுக்கு எனது வாழ்த்துக்கள்
"சிறுபான்மையினரை விழுங்கும் சிறுபான்மையினர்"
http://rockettamilnews.blogspot.com/
முதலில் குட்டிக்கண்டுபிடிப்பாளன் குமணனிற்கு வாழ்த்துக்கள். மதி நம்மவர் திறமைகளை வெளிக்கொண்டுவரும் உங்க பணிக்கும் வாழ்த்துக்கள்.
திக்கெட்டுமாய் விரவியுள்ள
தமிழர்கள் அனைவருக்கும்
தித்திக்கும் நாளாய் அமைந்திட
இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!
கண்டுபிடிப்பாளர் சசிகுமார் குமணனுக்கு வாழ்த்துக்கள்.
நல்லா இருக்கு..எதோ பையன் இந்தளவு செய்திருக்கானே என்று சந்தோசப்படுங்கள்..இன்னமும் வசதி வாய்ப்பிருந்தால் பல விஞ்ஞானிகள் உருவாவார்கள்!!
ஐநூறு போலோவேர்ஸ் வாழ்த்துக்கள்..ஒரே நேரத்தல் இருவருக்கு ஐநூறு போலோவேர்ஸ்!!
இந்த மாணவனுக்கு எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்...
இவரை அறிமுகபடுத்திய உங்களுக்கு நன்றிகள்...
வாழ்த்துக்கள் சகோதரா,,,, நன்றி சுதா,,,,
சி.குமணன் அவர்களுக்கும், பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் பாராட்டுக்கள்! தொடர்க! நன்றி!
பகிர்வுக்கு நன்றி சகோ
உள்ளுர் இளம்விஞ்ஞானிக்கு என் வாழ்த்துகள்
Mirukankalin irappai thavirkalam sutru sulalin samanilaiyai pathikakkalam enru sonnathu highlight panavendiyam
நல்ல முயற்சி... குமணனுக்கு வாழ்த்துக்கள்...அறிமுகபடுத்திய உங்களுக்கு நன்றி...
நம் ஊர் மாணவர்களின் திறமையை கட்டாயம் வெளிக்கொண்டுவர வேண்டும். குமணனுக்கும் உங்களுக்கும் பாராட்டுகள்.
உண்மையில் பாராட்டப்படவேண்டிய விடயம் அந்த மாணவனுக்கும் என் வாழ்த்துக்கள்,அவனின் எதிர்காலத்தில் இன்னும் பல கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ளவும் வாழ்த்துக்கள்..
குமணனுக்கு என் வாழ்த்துக்கள்.அதுவும் எம்மூர் கண்டுபிடிப்பு எனும் போது இன்னும் பெருமையாக இருக்கிறது.
கருத்துரையிடுக