வணக்கம் உறவுகளே
இன்றைய பதிவில் மீண்டும் ஒரு சிறுவனின் கருவியுடன் சந்திக்கிறேன். இவனும் எனது ஊரைச் சேர்ந்தவனாகும்.
உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் 7 ம் தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் அற்புதராசா அட்சரன் என்ற இம் மாணவன் உழுந்து, பயறு போன்றவற்றின் கோதுகைளை பிரிப்பதறகான இக்கருவியை வானொலிக்குப் பயன்படும் சாதாரண மோட்டரைக் கொண்டு செய்திருக்கிறான். இதனுள்ளே இருக்கும் மோட்டரில் உலோகத்தால் ஆனா சிறகு இணைக்கப்பட்டுள்ளது இதன் முலமே அவற்றின் கோதுகள் பரிக்கக் கூடியதாக உள்ளது.
மேலும் விபரங்கள் காணொளியில் இணைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவன் தற்போது ஈக்கு வானம் என்ற வெடியை எய்வதற்கான ஒரு சிறு கருவியை செய்யும் முயற்சியில் இருக்கிறான். அதுபற்றியும் காணொளியில் இணைக்கப்பட்டுள்ளது.
சென்ற வருடம் புத்தாக்கப்பபோட்டிக்காக இவனும் கொழும்பு சென்று merit certificate ஐ பெற்றிருக்கிறான்.
சென்ற பதிவில் நான் அறிமுகப்படுத்தியிருந்த இன்னுமொரு கண்டுபிடிப்பாளரை இத்தலைப்பை சொடுக்குவதன் மூலம் அறியுங்கள்
தோட்டப்பயிரைக் காக்கும் இலகு கருவி (உள்ளூர் கண்டுபிடிப்பு)
இப்படியான ஆர்வமுள்ள மாணவரை உற்சாகப்படுத்த வேண்டியது எமது ஒவ்வொருவரதும் கடமையாகும். இதில் ஒரு கசப்பான உண்மை என்னவென்றால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இம்மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டி உதவுவதற்கு எம் ஊரில் எவரும் முன்னிற்பதில்லை. யாழ்மாவட்டத்தில் இந்த ஊரில் ஏறத்தாழ 25 குடும்பங்களே இருந்தாலும் இந்த ஊரைப்பிறப்பிடமாகக் கொண்ட 50 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் புலம் பெயர் தேசத்தில் இருக்கிறது.
அதற்காக எமது ஊர் பின் தங்கிய பிரதேசம் என யாரும் கணக்கிட வேண்டாம். பலர் இங்கிருந்து பல்கலைக்கழக பட்டம் பெற்றுள்ளார்கள். சென்ற மாதம் ஒரு மாணவி விநாடி வினா போட்டியில் யாழ்மாவட்டத்திலேயே முதல் பரிசு பெற்றிருக்கிறார். வருடாவருடம் ஒருவராவது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்துகிறார்கள்.

இவை எல்லாம் இப்படி இருந்தும் 2 வீட்டில் மாத்திரமே இயங்கு நிலையில் உள்ள கணனி இருக்கிறது. இவர்களுக்கு உதவும்படி நேரடியாகக் கேட்ட போதும் எந்த வெளிநாட்டவரும் இது பற்றி செவிசாய்ப்பதே இல்லை. சென்ற வருடம் ஒருவர் தானாக முன்வந்து மாணவருக்காக 100 டொலர்களை அனுப்பியிருந்தார். ஆனால் இம்முறை யாரும் சல்லிக் காசு அனுப்புவதற்கு முன்வரவில்லை.
இதில் என்னை நெருடிய விடயம் என்னவென்றால் இதே மக்களிடம் ஆலயத்திற்கு என பணம் கேட்ட போது 50 லட்சத்திற்கு மேல் திரட்டிவிட்டார்கள். கடவுளுக்கு பயப்படும் அளவுக்கு ஏன் மனச்சாட்சிக்கு பயப்படவில்லையோ தெரியவில்லை. கடவுளை கல்லில் பார்க்காதீர்கள் மனிதனுக்குள் தேடுங்கள்.
++++====++++===++++===++++===++++===++++===++++===++++===++++===
ஒருவாறு மாதத்திற்கு 5,6 பதிவுகள் என்ற விகிதத்தில் 150 வது பதிவை அடைந்து விட்டேன். ஏன்டா நல்ல நாள் அதுவுமா வம்பு பேசுகிறாய் என எண்ணத் தோணுதா என்ன செய்வது மனதில் பட்டதை சொல்வதற்கு எது நல்ல நாள் பெருநாள். எனது 100 வது பதிவை சுமூகமாகக் கடந்தாலும் எனது 50 வது பதிவும் பெரிய அக்கப் போருடன் தான் கடந்தேன் (இலங்கை கதை திருடிய பிரபல இயக்குனர்..) அது தான் இப்பதிவிலும் குறைவைக்கவில்லை.
என் வலைத்தளத்திற்காக தொடரும் 500 followers ற்கும், ஒரு பதிவுக்கு 2043.14 என்ற சராசரி பார்வையை பெற்றுத் தந்த மூன்று லட்சம் பார்வையாளருக்கும் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து மோத வேண்டிய இடத்தில் மோதியும் அரவணைக்க வேண்டிய இடத்தில் அரவணைத்தும் கரம் கொடுத்துத் தூக்கும் உறவுகளுக்கு என் கோடான கோடி நன்றிகள்.
நட்பு என்பது இந்த உலகத்தில் ஒரு விலைமதிப்பற்ற பிணைப்பு அதை பெற்றுத் தந்த என் வலைத்தளத்திற்கும் என் நன்றிகள்..
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

38 கருத்துகள்:
சகோதரா தங்கள் 150வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.பயணம் மேலும் தொடரட்டும். சிறுவனின் சாதனை மகிழ்வு தருகிறது. அற்புதராசத அட்சரனுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் அவன் திறமைகள் வளர இறை அருள் கிட்டட்டம்.
வேதா. இலங்காதிலகம்
http://kovaikkavi.wordpress.com
இப்படியான வளரும் பயிர்களை வெளி உலகுக்கு கொண்டுவரும் உங்களுக்கு வாழ்த்துக்கள் தலைவரே ;) தொடர்ந்து இந்த முயற்சியையும் பதிவுலகின் ஊடே கொண்டு செல்லுங்கள்.
///இதில் என்னை நெருடிய விடயம் என்னவென்றால் இதே மக்களிடம் ஆலயத்திற்கு என பணம் கேட்ட போது 50 லட்சத்திற்கு மேல் திரட்டிவிட்டார்கள்./// கோவிலிலே இந்த நிதியை வைத்து என்ன செய்கிறார்கள்? நம்ம ஊர் பக்கமும் இதே நிலை தான். இது பற்றி கதைக்க போனால் சண்டைக்கு தான் வருவார்கள்; ஒழுங்கான பரிபாலன சபை இருந்தால் இவ்வாறு சேகரிக்கும் நிதிகளை ஊரின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்!
உங்கள் பதிவுலக பயணம் தொடர வாழ்த்துக்கள்.
தொடர்க உங்களது பணி.அற்புதராசா அட்சரன்க்கு எனது வாழ்த்துக்கள் ((.கடவுளை கல்லில் பார்க்காதீர்கள் மனிதனுக்குள் தேடுங்கள்.)) மிக சரியான கருத்து .எமது மக்களை திருத்த முடியாது !
நல்ல விடயம்.முயற்சியும் திறமையும் மிக்கவர்களுக்கு உதவ யாரும் முன்வராவிட்டாலும் இப்படியான அறிமுகம் அவர்களுக்கு ஒரு புதுத் தெம்பை அளிக்கும்.
கோயிலுக்கும் ஐயருக்கும் கொடுப்பார்கள்.ஆனால் இல்லாதவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள்.அதுதானே நம்மவரின் பிறவிக்குணம்.ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம்தான்.
வணக்கம் ம.தி.சுதா!நூற்றைம்பது பதிவு கண்ட பெருந்தகைக்கு வாழ்த்துக்கள்!இன்னுமின்னும்,பல நூறு பதிவுகள் அளித்திட இறைவன் அருள்புரிவான் என நம்புகிறேன்!
ஊருக்காக தான் கோவில் கட்டுவார்கள், கோவிலுக்காக ஊர் இல்லை. இதை நம் ஊர்களில் இருக்கும் இந்த கோவில் நிர்வாகங்களும், அதன் பெரும் தலைகளும் புரிந்து கொண்டால் கோவில் இல்லாத ஊர்களிலும் குடி இருக்கலாம்.
ஊரை காக்க வேண்டும் என்று கோவில்களை கட்டுகிறார்கள். ஆனால் கடவுள் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பதை தம்மாலும் செய்யமுடியும் என்பதை மட்டும் உணர மறுக்கிறார்கள்.
உண்மையிலே இந்த கோவில் நிர்வாகத்தினருக்கு ஊருக்கு நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் உங்கள் பதிவை படித்த பின்னாவது சற்று திருந்துவார்கள்.
வணக்கம் தம்பி!
நான் இதில் ஒன்றுமே சொல்லபோவதில்லை ஏன் என்றால் நான் சொல்ல நினைத்ததை கந்தசாமி சொல்லிவிட்டார்..!!
என்னிடம் காசிருந்தால் கட்டாயம் கோவிலுக்கு கொடுக்கமாட்டேன் இப்படியனவர்களுக்கே கொடுப்பேன்..!!
150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!
நன்பனில் சொல்லப்படும் மெசேஜ் தான் ஞாபகம் வருகிறது. பையனை தொடர்ந்து அந்த பாதையிலேயே பயணிக்க விட வேண்டும்.
////இதில் என்னை நெருடிய விடயம் என்னவென்றால் இதே மக்களிடம் ஆலயத்திற்கு என பணம் கேட்ட போது 50 லட்சத்திற்கு மேல் திரட்டிவிட்டார்கள். கடவுளுக்கு பயப்படும் அளவுக்கு ஏன் மனச்சாட்சிக்கு பயப்படவில்லையோ தெரியவில்லை. கடவுளை கல்லில் பார்க்காதீர்கள் மனிதனுக்குள் தேடுங்கள்.
////
மிகவும் வருந்த தக்க விடயம் பாஸ்
உங்கள் 150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ்
150-வது பதிவுக்கு வாழ்த்துகள் . நீங்க சொல்லி இருப்பதுபோல திறமை உள்ள மாணவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை.
திறமைகள் எங்கு இருப்பினும் வெளி வரணும் - பகிர்வுக்கு நன்றி - 150வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
Live Demo திருத்தப்பட்டது சகோதரா
வணக்கம் மச்சி,
முதலில் 150 வது பதிவினை பல்வேறு சிரமங்களின் மத்தியில் எழுதியிருப்பதற்கு வாழ்த்துக்கள்.
மச்சி, நீ நினைப்பது போல இங்கே யாரும் கடவுளுக்குப் பயந்து கோவிலுக்கு உதவி செய்வதில்லை.
கோவிலுக்கு உதவி செய்தால் உபயகாரர் என்ற பெயரின் கீழ் தமது பெயர் வரும் என நினைத்துத் தான் உதவி செய்கிறார்கள் என நினைக்கிறேன்.
சே...கேவலமாக இருக்கு எமது சமூகத்தினை நினைத்தால்.
இவர்கள் எல்லாம் எப்போது திருந்தப் போகிறார்களோ?
பொதுச் சேவைக்கு உதவலாம், கல்லூரி மாணவர்களுக்கு உதவலாம்.
அவர்களிலும் இறைவனைத் தேடலாம் என்பதை மறந்த முட்டாள்கள் தான் கோவிலுக்கு வாரி வளங்கும் வள்ளல்கள்.
அண்ணே இப்படிபட்ட திறமையானவர்களை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களை மேலும் மேலும் முயற்சி செய்ய தூண்டலாம்...
பகிர்வுக்கு நன்றி...
150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் மதி மேன்மேலும் பதிவுலகிலும்...சொந்த வாழ்விலும் சிறப்புற இறைவனை வேண்டுகிறேன்...இளம் கண்டுபிடிப்பாளரை சமூகம் ஊக்க படுத்தவேண்டும் என்கிற உங்களின் ஆதங்கம் புரிகிறது....!
சிறுவனின் கண்டுபிடிப்பை ஊக்குவித்தமைக்கு பாராட்டுகள் சகோ...
மேலும் இது போன்ற கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவியுங்கள்....
150வது இடுகைக்கு வாழ்த்துக்கள் சகோ...
தத்தித் தத்தி வந்தாலும் அனைத்தும் சிறப்பானவையே.....
முதலில் 150 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ. மாணவர்கள் நோயுற்றோர் அரவணைப்பு தேவைப்படுவோர் போன்றோருக்கு உதவ மனமில்லாதவங்கள் கோவில் உண்டியலுக்குள் பணமாகவோ தங்கமாகவோ நிரப்பி ஒவ்வொரு கோவிலிலும் கோபுரம் என்ற பெயரில் கல்லு மலை எழுப்பி உபயம் என்ற பெயரிட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் உள் நாட்டு புலம்பெயர் கனவான்கள் இருக்கும் வரை எமது சமூகம் எப்படி சொந்தக்காலில் நிற்க முடியும்? ஒரு 10 ரூபா பேனாவுக்கே இங்குள்ள சிறார்கள் வெள்ளைக்காரனிடம் கையேந்தி நிற்கும் அவலம் புலம்பெயர்ந்து தம் இருப்பையும் வாழ்வையும் உறுதிப்படுத்திவிட்டு சொந்த நாட்டுக்கே சுற்றுலாப் பயணம் வரும் பிரகிரதிகளுக்கு எப்படி புரியும்?
இந்த மனச்சாட்சியை விற்றுவிட்ட கசவார மனிதர்கள் இலங்கை வரும்போது நுவரெலியா கசூரினா கடற்கரை என்று வெள்ளைக்காரன் போல சுற்றுலா செல்லும் இடங்களின் பட்டியலுடன் வருகிறார்களே தவிர 4300 சிறார்கள் தங்கியுள்ள எந்தெந்த சிறுவர் இல்லங்களுக்கு சென்று எவ்வளவு உதவி புரிய வேண்டும் என்ற பட்டியலுடன் யாரும் வருவதில்லையே.கோவில்களில் கல்லுமலை எழுப்பி இரவு பகலாக அலறும் ஒலிபெருக்கிகளையும் ஏட்டிக்கு போட்டியான இசைக்கோஸ்டிகளையும் நடத்தி தமது ஆடம்பரத்தை பறையடிப்பு செய்து விட்டு போவதே இவர்களது இனப்பற்று.
கச கசன்னு எழுதாம தேர்ந்தெடுத்து மணி மணீயான போஸ்ட்டா போடும் சுதா 150* வாழ்த்துகள்
அட்சரனுக்கு வாழ்த்துக்கள்.
மதிசுதாவின் 150 ஆவது பதிவுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
முதலில் 150 பதிவுகளை எட்டியதற்கு வாழ்த்துக்கள். மேலும் பல நல்ல பதிவுகளுடன் விரைவிலேயே ஆயிரம் பதிவுகளை தொட வாழ்த்துக்கள்.
நானும்கூட கந்தசாமி, கட்டான் அவங்களது பக்கம்தான் மக்களுக்கு வேண்டிய உதவிகளை முடிந்தவரை செய்வேன் கோயிலுகளுக்கு செய்வதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே கொண்டிருக்கிறேன். இதனால் தாயகத்தில் எனது ஊர் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் குருக்கள் பலருக்கும் என்னை அவ்வளவாகப் பிடிக்காது.
மதி இவ்வளவுதூரம் நல்லவிடாங்களை முன் எடுக்கவிரும்பும் நீங்கள், உங்கள்போன்ற எண்ணமுள்ள ஏனையவரையும் சேர்த்து ஒரு சமூகசேவை அமைப்பை உருவாக்கி உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு உதவிகள் சென்றடைய செய்யலாமே.
அண்ணா இன்னமும் நம்மூரில் திறமைசாலிகள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் உதவுவதற்குதான் யாரும் இல்லாமல் போய்விட்டார்கள். 150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இம்மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டி உதவுவதற்கு எம் ஊரில் எவரும் முன்னிற்பதில்லை. இதுவே உண்மை தங்கள் 150 வது பதிவை மிக அருமையாக பகிர்ந்துள்ளமைக்கு நன்றி
Congrats Mathi!
வணக்கம் மதி,
அருமை. இவ்வாறான பல தட்டிக்கொடுக்கும், பயன்மிக்க, அருமையான பதிவுகளை தொடர்ந்தும் தரவேண்டும் என வாழ்த்துக்கிறேன். அத்தோடு, 150 ஆவது பதிவை கடக்கும் உங்களிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் ஆக்கபூர்வமான எழுத்துக்கள் தொடரட்டும்.
150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மச்சி! இன்னும் தொடர்ந்து எழுது! உனக்காக காத்திருக்கும் வாசகர்களை அடிக்கடி பட்டினி போடாதே சுதா!
முதலில் 150ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..... நல்ல முயற்சி தொடரட்டும் உங்கள் பணி
இ்ப்பதிவு எரியும் விளக்கிற்கு
தூண்டு கோல் ஆகும்
தங்களின்,150,வது பதிவுக்கு
வாழ்த்துகள்
என் வலையின் புதிய முகவரி;-
http://www.pulavarkural.info/2012/02/blog-post.html#comment-form
புலவர் சா இராமாநுசம்
கருத்துரையிடுக