இந்த வாரமும் ஒரு வில்லங்கப் பதிவோடு சந்திக்கிறேன்.
பதிவின் நோக்கம் – இந்தப பதிவு பலருக்கு சங்கடத்தை எற்படுத்தலாம் (நான் உட்பட) ஆனால் இப்படியும் ஒரு குறுக்கு வழியிருக்கிறது என்பதை பலர் அறிய வேண்டும் என்பதற்காகவே இப்பதிவு இடப்படுகிறது.
இணையம் என்பது இன்றைய காலத்தில் மனித முன்னேற்றத்தின் பெரும் பங்காளியாகவே இருக்கிறது. இங்கே எந்தளவு நன்மையிருக்கிறதோ அதே போலத் தீமையும் தாராளமாகவே இருக்கிறது. எள்ளைப் போட்டால் பொறுக்கலாம் சொல்லைப் போட்டால் பொறுக்கேலாது என்பார்கள் அப்படியிருக்கையில் எழுத்தைப் போட்டால் எப்படி இருக்கும்.
நான் கூட எனது ஆரம்ப பதிவு நாட்களில் சிறி என்பவர் எழுதிய சுஜாதாவின் பத்துக் கட்டளைகள் என்ற பதிவை அவரது கருத்துப் பெட்டியில் எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு எடுத்துப் போட்டேன் அனால் போட்ட அடுத்த வாரம் தான் அது தப்பு எனது தனித்துவம் போய் விடும் என உணர்ந்து தூக்கினேன் (யாரும் சுட்டிக்காட்டாமலேயே)
சரி விசயத்திற்கு வருவோம். நாம் வழமையாக ஒரு வலைத்தளம் பிடித்திருந்தால் அதில் followers ஆகியிருப்போம் அதன் பின்னர் dash board ல் வரும் பதிவுகளை படித்துக் கருத்திடுவோம். ஆனால் அதை விட google reader போனால் எமக்கு பெரிய அதிசயம் காத்திருக்கும் அங்கே போவதற்கு எமது கூகுல் ஐடி தான் தேவை. இல்லாவிடில் எமது மெயிலின் மேலேயே அதற்காக தொடுப்பு இருப்பதை அவதானிக்கலாம். அங்கே போய் பெரிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை நாம் வாசிக்க விரும்பும் வலைத்தளத்தின் பெயர் மேலே சொடுக்கி விட்டு அதன் பின் all post என்றிருக்கும் பொத்தானை சொடுக்கினால் சரி அப்புறம் எமது ஆதி முதல் அந்தம் வரை வந்து நிற்கும்.
பின் தொடர இடம் தராதவர்கள் புளொக் அனால் ஒரு சின்ன வேலை தான் செய்யணும் அவர்களது புளொக் அட்ரசை கொண்டு வந்து add a subscription என்பதைச் சொடுக்கி விட்டு அதனுள் இட்டீர்களானால் சரி தங்கள் ரிடருக்கு உடனுக்குடன் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும்.
இதில் இருத்து தப்பிக்க ஒரு சிறு வழி தான் இருக்கிறது. நாம் பதிவிடும் போது jump break போட்டுப் பதிவிட்டால் கொஞ்சம் தப்பித்துக் கொள்ளலாம்.
நான் கூட இதுவரை தப்பு என்று உணர்ந்து 5 பதிவுகளுக்கு கிட்ட அழித்திருக்கிறேன் (5 ம் எனது சொந்தப் பதிகள் தானுங்கோ) சொதித்துப் பார்ப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியது பெரிசாய் ஒன்றுமில்லிங்க என்னை பின் தொடருங்கள் அதன் பின் கூகுல் ரீடர் போய் பாருங்கள். என் வண்டவாளங்களும் தண்டவாளத்தில் ஏறி நிற்கும்.
மொத்தத்தில் சொல்லப் போனால்
பழமொழி -
”அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது போல”
”அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது போல”
புதுமொழி -
”கருத்துப்பெட்டி அன்றே கொல்லும் கூகுல் ரீடரோ நின்று கொல்லும்”
”கருத்துப்பெட்டி அன்றே கொல்லும் கூகுல் ரீடரோ நின்று கொல்லும்”
அடியேனின் குறுக்கு மூளைக்குள் எட்டிய ஒரு சின்னக் கண்டுபிடிப்பு. யாரும் திட்டாதிங்கப்பா நீங்களும் முயற்சி செய்த புதிதாய் ஏதாச்சும் சொல்லித் தாருங்கள்
நன்றிச் செதுக்கலுடன்..
அன்புச் சகோதரன்
48 கருத்துகள்:
Sudusoru enakuththan
காட்டானுக்கு இப்பிடியான விடயங்களை பற்றி சொல்லித்தாருங்கள்.... குறுக்கு வழியானால் குசியாகிடுவான் காட்டான்.. இவையெல்லாம் தொழில் மூலதனங்கள்...!!??
காட்டான் குழ போட்டான்(முதல் குழ?)
மாப்பிள அதிக ஓட்டு வாங்குவதற்கு அல்லது நாங்களே போடுவதற்கு ஏதாவது வழி இருக்கா..? இருந்தால் நானே கள்ளவோட்டு போட்டு என்ர மனிசியிற்ற பீத்திக்களாம்...!!??
அம்மாடி இப்பிடியும் வழி இருக்கா??பூந்து பூந்து நோண்டுறீங்க போல ஹிஹி
எனக்கு தேவையான விடயம் பாஸ் டைமிங்கா வந்திருக்கு... நன்றி பாஸ்
எதுக்குப்பா ஆரம்பத்திலயே உங்க குத்தாட்டத்த போட்டிங்க,,,, ஹி ஹி
என்ன சுதா அண்ணா தமிழ்10 இல இணைக்கவில்லையா?
மக்ஸா பதிவு! அதோட முதல் அனிமேசன் படம் கலக்குது!
எங்கட தொழி்ல்நுட்ப பதிவர் மதுரன் பிடிக்க பிளான் போடுறீங்க போல???
அனுபவங்களை அழகாகச் சொலியிருக்கிறீர்கள்.
நல்ல டெக்னிகல் சமாச்சாரம்..
இப்படி வேற இருக்குதா.........
நான் கனக்க பதிவை அளித்தனான் அப்ப அதெல்லாம் பார்க்கலாம்...
ஓம் மச்சி, இந்த முறையால் ஆபத்து என்று தான் என் பதிவினைஉ Allow blog feed என்ற பகுதியில் Jump Break வைத்திருந்தேன், பின்னர் தமிழ்நண்பர்கள் திரட்டியின் வேண்டுகோளுக்கமைவாக முழுப் பதிவுகளும் திரட்டப்படும் வண்ணம் மாற்றினேன்.
தற்போது மீண்டும் பதிவுகளைக் காப்பி பண்ணத் தொடங்கி விட்டார்கள்.
சோதித்து பார்கிறேன் சகோ
இனி தப்பிக்க முடியாதுன்னு சொல்லுங்கோ :))
//”கருத்துப்பெட்டி அன்றே கொல்லும் கூகுல் ரீடரோ நின்று கொல்லும்”//
கண்ணை ஏமாற்றினாலும் கருத்துபெட்டியை ஏமாற்ற முடியாது என்பதை அழகாக சுட்டிகாண்பித்திருக்கிறீர்கள்...நன்றி
இது கொஞ்சம் பதிவர்களுக்கு சிக்கலானது தான். பப்பிளிஷ் பண்ணின பிறகு நாம் அந்த பதிவை அழித்தாலும் ரேடரில் தொடர்ந்து இருக்கும்..
நல்ல தகவல் சுதா.
நல்ல தகவல் thanks!
நோட் பண்ணிக்கிறன்
mee the firstu..enakuthan sudu sooru..
புதிய தகவல். நன்றி நண்பா!
புதிய தகவல்...
அழகாகச் சொலியிருக்கிறீர்கள்.
நல்ல தகவல் மதி ஆனால் இவற்றை சோதித்துப் பார்க்கும் அளவு தொழில்நுட்பம் தெரியாது எனக்கு ! என் முன் பதிவுகளைப் படித்தால் எழுத்துப்பிழைகளுக்கு ஊரே வந்து கும்மியடிக்கும் தனிமரம் தாங்குமோ?!!
மதி இப்படி எல்லாம் ஆடுவாரோ கலக்கல் ஆட்டம் எப்படி வித்தைகள் இப்படி தோன்றுகின்றது.
//பதிவிடும் போது jump break போட்டுப் பதிவிட்டால் கொஞ்சம் தப்பித்துக் கொள்ளலாம்.// முழுதாக தப்பிக்க வலி இல்லையா ?
எதற்காக இந்த தளம் ? நோக்கம் ? ஒன்று செய்யுங்கள் .அனைவரிடமும் சேருங்கள் .
ஆரம்பத்தில் மதி கொதிநிலை பதிவாளர் என்ற அபிப்பிராயம் எனக்கு இருந்தது .இப்போதெல்லாம் பார்ட்டி மிகஜாலியான ஆள் என்று உணர்கின்றேன் சந்தோசமாக இருக்கிறது உங்களின் ஒவ்வொரு பதிவையும் பார்க்கும் போது!
கருத்தில் எழுத்து பிழை மன்னிக்கவும் . வழி இல்லையா சுதா ?
இப்படி தங்கச்சிக்கே முதலில் சுடுசோறு கொடுத்தால் நான் எப்ப பால்கோப்பி கேட்பது இதை நிரூவிடம் பஞ்சாயத்து செய்ய விடப்போறன் !
ஆமா சுதா! பார்த்தேன்! :-)
வலைத்தள நண்பர்களுக்கு வணக்கம்.
இந்த வலைத்தளத்தில் நான் புதிதாக எதுவும் இடுகையிடப் போவதில்லை...
அப்புறம் எதுக்குன்னு கேக்கறீங்களா?
வாங்க... வந்து பாருங்க... பிடிச்சிருந்தா பழகலாம்...
http://blogerjunction.blogspot.com/2011/07/blog-post_31.html
நல்ல தகவல்
புதுசு புதுசா கண்டு பிடிக்கிறீங்க. நோட் பண்ணிக்கிறேன் நண்பா.
சகோ இதுவும் நல்ல வழிதானே.
இப்படி ஒண்ணு இருக்கோ?
ஆஹா இப்படி ஒன்று இருக்கா
எனக்கு இது புது தகவல்
தேங்க்ஸ் பாஸ்
உடம்பு முழுக்க மூளை இருந்த இப்படியான ஜோசனைகள் தான் வரும்
பகிர்வுக்கு நன்றி சுதா
ஹா ஹா எப்படில்லாம் யோசிக்கிறாங்கப்பா
வில்லங்கந்தான் போங்கள்.. ;-)
புதுசு புதுசா சொல்ரீங்க குறிச்சு வச்சுக்கரேன் சமயத்தில் உபயோகப்படும்.
நல்ல விஷயந்தான் சொல்லியிருக்கீங்க ,
பதிவர்களுக்காக- பதிவரால்- பதிவர் தென்றல் மாத இதழ். மேலும் விவரங்களுக்கு என் வலைத்தளம் வருக...
சசிக்குப்போட்டியா இப்போ பிரகஷ், மதி எல்லாரும் களம் இறங்கிட்டாங்களே? ஆளாளுக்கு டெக்னிக்கல் பதிவா போட்டூத்தாக்கறாங்க..!@!!!!!!!!!!!!!!!!
Nice information
நல்ல தகவல்
//கருத்துப்பெட்டி அன்றே கொல்லும்
கூகுல் ரீடரோ நின்று கொல்லும்”//
புதுமொழி சொல்ல வந்த சேதி நன்றாய் புரிகிறது..
அந்தப் பதிவை அழிப்பதற்கு முன்பே ரீடரில் subscribe செய்தால் மட்டுமே அந்த வகையில் பதிவைக் காண முடியும். அப்படி ரீடரில் சேமிக்கப்பட்டத்தையும் திருத்த அதை edit செய்ய்தாலே போதும். இந்த ரீடர் பதிவு உதவலாம்
தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html
வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக