புதன், 1 ஜூன், 2011

எனது பார்வையில் இலங்கை பதிவுலகமும் VETTRI FM in அங்கீகாரமும்

வணக்கம் உறவுகளே..
சேமம் எப்படி ?
இன்று இரு விடயங்களுடன் சந்திக்கிறேன்.
இதற்கு துணை புரிந்த BLOGGER.COM ற்கு மிக்க மிக்க நன்றிகள். இங்கே என்னால் முடிந்ததை பட்டியல்ப்படுத்துகிறேன். இங்கே கூட தரவு வழுக்களுக்கு சந்தர்ப்பம் உண்டு காரணம் ஒரு பதிவர் தனது profile ல் தனது இடத்தை தமிழில் கொடுத்திருந்தால் புளொக்கர் தவறாகவே பட்டியல்ப்படுத்தும் நான் இங்கே எடுத்த எடுகொள் ஆங்கிலத்தில் கொடுத்திருப்பவர்களையே ஆகும். அதை விட முக்கியம் என்ன தெரியுமா ? இங்கே இருக்கும் அத்தனை மொழிகளுக்குமான பதிவுகளின் கூட்டுத் தொகையே இதுவாகும்.



இலங்கை பதிவர்களின் மொத்த எண்ணிக்கை 335,000 அவர்களை அறிய இங்கே சொடுக்கவும்

கிழக்கிலிருந்து பதிவர்களின் மொத்த எண்ணிக்கை  93  அவர்களை அறிய இங்கே சொடுக்கவும்


தமிழில் கிழக்கிலிருந்து என்று பதிவிடும் பதிவர்களின் மொத்த எண்ணிக்கை  23  அவர்களை அறிய இங்கே சொடுக்கவும்

யாழ்ப்பாணம் பதிவர்களின் மொத்த எண்ணிக்கை  2,100 அவர்களை அறிய இங்கே சொடுக்கவும்

கொழும்பு பதிவர்களின் மொத்த எண்ணிக்கை  2,600  அவர்களை அறிய இங்கே சொடுக்கவும்

தமிழில் கொழும்பு என குறிப்பிட்டு எழுதும் பதிவர்களின் மொத்த எண்ணிக்கை  52  அவர்களை அறிய இங்கே சொடுக்கவும்

திருகோணமலை பதிவர்களின் மொத்த எண்ணிக்கை  96  அவர்களை அறிய இங்கே சொடுக்கவும்

மாவனல்ல பதிவர்களின் மொத்த எண்ணிக்கை  91  அவர்களை அறிய இங்கே சொடுக்கவும்

நுவரெலியா பதிவர்களின் மொத்த எண்ணிக்கை  49  அவர்களை அறிய இங்கே சொடுக்கவும்

சம்மாந்துறை பதிவர்களின் மொத்த எண்ணிக்கை  17  அவர்களை அறிய இங்கே சொடுக்கவும்

பொத்துவில் பதிவர்களின் மொத்த எண்ணிக்கை  04  அவர்களை அறிய இங்கே சொடுக்கவும்


தமிழில் மட்டக்களப்பிலிருந்து என்று பதிவிடும் பதிவர்களின் மொத்த எண்ணிக்கை  05  அவர்களை அறிய இங்கே சொடுக்கவும்


தமிழில் மலையகம் என்று பதிவிடும் பதிவர்களின் மொத்த எண்ணிக்கை  02  அவர்களை அறிய இங்கே சொடுக்கவும்



வடக்கு என்று பதிவிடும் பதிவர்களின் மொத்த எண்ணிக்கை  79  அவர்களை அறிய இங்கே சொடுக்கவும்


வவுனியா என்று பதிவிடும் பதிவர்களின் மொத்த எண்ணிக்கை  27  அவர்களை அறிய இங்கே சொடுக்கவும்


அம்பாறை என்று பதிவிடும் பதிவர்களின் மொத்த எண்ணிக்கை  90  அவர்களை அறிய இங்கே சொடுக்கவும்


காரைதீவு என்று பதிவிடும் பதிவர்களின் மொத்த எண்ணிக்கை  02  அவர்களை அறிய இங்கே சொடுக்கவும்





என்னால் முடிந்தளவு தொகுத்துத் தர முயற்சித்திருக்கிறேன் இது பற்றி தங்களுக்குத் தெரிந்திருந்தாலும் பகிருங்கள்.. அத்துடன் இப்பதிவை எழுதுவதற்கு நேற்று இரவு தூண்டுதலாக இருந்த கானா பிரபா அண்ணனுக்கும் மிக்க நன்றி

எனது பதிவை யூத்புல் விகடனில் பிரசுரித்த விகடனுக்கும் மிக்க நன்றி

அதே போல் என்னை பதிவர்களைக் கொண்டு கேள்விகள் கேட்க வைத்து சங்கடப்படுத்தி சந்தோசத்திலாழ்த்தியா தமிழ்வாசி பிரகாசிற்கும் மிக்க மிக்க நன்றி பேட்டிக்கான தொடுப்பு இதோ...


வெற்றியின் நாளொரு தள அறிவிப்பை அறியாத இலங்கையர் குறைவாகவே இருப்பீர்கள். அத்துடன் தற்கால நிலமையில் பதிவர்களுக்கு இடம் கொடுக்கும் ஒரு தமிழ் ஊடகமாக இருப்பதில் பதிவர்களாகிய நாம் பெருமிதப்பட்டுக் கொள்ளலாம். முன்னர் தினக் குரல் பத்திரிகை சந்தர்ப்பம் கொடுத்தாலும் இப்போ அந்தப் பக்கமும் நிறுத்தப்பட்டுள்ளதால் புதியவர்கள் பலர் இலைமறைகாயாகவே வாழ்கிறார்கள்.
பெரிய பெரிய தளங்களை அறிமுகப்படுத்தும் வெற்றியில் தனிப்பட்ட ஒருவனால் போடி போக்காக கிறுக்கப்படும் எனது வலைத் தளத்திற்கு இந்தளவு அங்கீகாரமும் மகுடமும் கிடைத்ததை நான் அதிசயத்துடன் பெருமையாக கூறிக் கொள்கிறேன். அந்த மகுடத்தை கேட்டுப் பாருங்கள் உறவுகளே

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

101 கருத்துகள்:

Mathuran சொன்னது…

ஐ சுடுசோறு

Mathuran சொன்னது…

வித்தியாசமான ஒரு முயற்சி…. வாழ்த்துக்கள்

Mathuran சொன்னது…

இதன் மூலம் பல இலங்கை பதிவர்களை அறிந்துகொண்டேன். மிக்க நன்றி அண்ணா

Mathuran சொன்னது…

யாழ்ப்பாணத்தில் 2100 பதிவர்களா? அதிசயமாக இருக்கின்றது

புலம்பெயர் உறவுகளே ஏன் இப்படி?

ஆதிரை சொன்னது…

:-))))))))))))))

Mohamed Faaique சொன்னது…

மலையகதிலிருந்து 2 பேர்தானா??? அதுவும் சுட்டி திறக்க மறுக்கிரது..
எங்களையெல்லாம் பதிவர்களா ஏற்றுக் கொள்ள மாட்டீங்களா?? (போட்ரதே மொக்கை அதுக்கு அங்கீகாரம் வேறா’னு அடிக்க வர கூடாது)

Admin சொன்னது…

நல்ல முயற்சி தோழா, இது இன்னுமொரு தளத்திற்கு இலங்கை பதிவர்களை இட்டுச்செல்லலாம். அதோடு இலங்கை பதிவர்களிடையேயான ஒற்றுமை இன்னும் அதிகரிக்கும்

Bavan சொன்னது…

ஆகா.. 335000 இலங்கைப் பதிவர்களா?..
பகிர்வுக்கு நன்றி சகா..:-))

//வெற்றி -நாளொரு தளம்//

:-))

பெயரில்லா சொன்னது…

யாழிலே இரண்டாயிரம் வலைபதிவர்களா! ஆச்சரியம் தான்..
எதிர்காலத்தில் இன்னமும் களைகட்ட வாய்ப்பு உள்ளது...

பெயரில்லா சொன்னது…

வெற்றியில் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பாஸ்...
அத்தோடு வெற்றியின் சேவை தொடர வாழ்த்துக்கள்...

நிரூபன் சொன்னது…

மாப்பிளை, பதிவர்கள் தொகையினைப் பற்றிய வித்தியசாமான பதிவினைத் தந்திருக்கிறீங்க.

நன்றிகள் மச்சி..

வெற்றியில் நாளொரு தளத்திற்கு வாழ்த்துக்கள் சகோ.
வெற்ற் எப் எம் இன் சேவை தொடர்ந்தும் இடம் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

anuthinan சொன்னது…

மதி அண்ணே உங்கள் தேடல் எங்களுக்கு சில வேலைகளை சுலபமாக்கிகிறது உங்கள் தேடல் தொடர என் வாழ்த்துக்கள்

Mahan.Thamesh சொன்னது…

இலங்கையில் இத்தனை பதிவர்களா வியப்பூட்டும் தகவல் . ஆனால் நீங்கள் சொல்வது போல் எல்லாமே இலைமறை காயாகதான் உள்ளார்கள் என நினைக்கேறேன்

K. Sethu | கா. சேது சொன்னது…

தாங்கள் தொகுத்துள்ள தரவுகள் எல்லாம் blogger.com ஐ பயன்படுத்தும் பதிர்வர்கள் பற்றி மட்டும் தானே? அல்லது ஏனைய (wordpress.com...) வலைபதிவுத் தளங்களையும் உள்ளடக்கியா?

கலக்கல் தரவுகள், உங்கள் பேட்டி வாசித்தேன் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.

ARV Loshan சொன்னது…

ஆகா..
மினக்கெட்டுத் தரவுகள் தேடி இருக்கிறீர்கள். ஆனால் ஆங்கிலத்தில் கொழும்பு என்று போட்டுள்ள எம் போல் சிலர் எதிலேயும் இல்லையா? :(

வெற்றியின் விடியலின் - நாள் ஒரு தளம் :) //
எங்கள் கடமை என நான் நினைக்கிறேன்.. :)
பாராட்டுக்கு நன்றிகள் சகோ..

நாளை இது பற்றி விடியலிலும் சொல்கிறேன் :)

வடலியூரான் சொன்னது…

:)))))
வாழ்த்துக்கள் வித்தியாசமான் முயற்சிக்கு

பெயரில்லா சொன்னது…

உங்கள் முயற்சி பாராட்டப்படவேண்டியது.
இலங்கைப்பதிவர்களாகிய நாம் எல்லோரும் சேர்ந்து பதிவர்களை அவர்களின் பதிவுகளுக்கு ஏற்ப; ஏன் வகைப்படுத்தி வலைத்தொகுப்பு சாரல் ஒன்றை உருவாக்கி வாசகர்களுக்கு வழங்கக் கூடாது? அது வாசகர்களுக்கு பெரும் உதவியாக அமையும்.காலவிரயத்தையும் குறைக்கு மல்லவா? உங்கள் கருத்தை கூறுங்கள்.

கவி அழகன் சொன்னது…

வாழ்த்துக்கள் தம்பி சுதா இது உங்களுக்கு ஒரு உந்து சக்தியாய் இருக்கும்

நண்பா.... மிக சிறந்ததொரு பதிவு இது. உங்கள் நாட்டு பதிவர்களை உலகிற்கு தெளிவாக எடுத்துரைதுள்ளீர்கள்.

Angel சொன்னது…

வாழ்த்துக்கள் .அருமையான பகிர்வு .

ஹேய் நானும் வந்துட்டேன்....

எப்பூடி.. சொன்னது…

குறிப்பிட்ட ஒலிநாடாவில் கூறியவற்றிற்கு தாங்கள் முழு தகுதியானவர், வாழ்த்துக்கள்.

ஷஹன்ஷா சொன்னது…

அட இது நல்லா இருக்கே.. வித்தியாசமான தொகுப்பு... ரொம்பவே கஸ்டப்பட்டு உள்ளீர்கள்.. மிக்க நன்றி அண்ணா..இலங்கை பதிவர்களை அறிய உதவியமைக்கு..


வெற்றியின் நாளொரு தளம் அறிமுகம் சரியான அங்கீகாரமே. தொடர்ந்து பணி சிறக்க கிடைக்கும் உந்து சக்தி.

@லோஷன் அண்ணா இன்று இவ்விடயம் பற்றி தாங்கள் விடியலில் சொன்ன பின்பே பதிவை படித்தேன்..நன்றி

Unknown சொன்னது…

thank you for your information's!

தனிமரம் சொன்னது…

வாழ்த்துக்கள் உங்களின் தரமான வலையை வெற்றி fm இல் அறிமுகப் படுத்தியவர்களுக்கு . மேலும் இவ்வளவு இலங்கைப் பதிவர்கள் இருக்கிறார்களா!
எப்படி எல்லாம் பதிவு போடுகிறது என்று எங்களுக்கு வழிகாட்டும் உங்களை போன்றோர் முன் உதாரணம்! பால்கோப்பி தருவீர்களா!

ஆகுலன் சொன்னது…

இலங்கையில் இவ்வளவு பதிவர்களா,,,,அவ்வ்வ்.....

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரம் மற்றும் மேலும் எனக்கு தெரிந்த மட்டக்களப்பு பதிவர்களின் வலைப்பக்க முகவரிகள் சில இங்கே:

http://sidaralkal.blogspot.com/

http://vellisaram.blogspot.com/

http://sangarfree.blogspot.com

http://ilayanilassf.blogspot.com/

Unknown சொன்னது…

@ யாழ்ப்பாணம் பதிவர்களின் மொத்த எண்ணிக்கை 2,100 அவர்களை அறிய இங்கே சொடுக்கவும்

கொழும்பு பதிவர்களின் மொத்த எண்ணிக்கை 2,600 அவர்களை அறிய இங்கே சொடுக்கவும்//


நல்ல நிலை.

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் சுதா

பெயரில்லா சொன்னது…

இலங்கை பதிவர்கள் பற்றிய புள்ளி விவரம் அசத்தல்

Unknown சொன்னது…

பார்ரா!!! இவ்ளோ பேரா???
நிறைய தேடியிருக்கிறீர்கள்!
நன்றி!!
வெற்றியின் அங்கீகாரத்துக்கு வாழ்த்துக்கள்!

SShathiesh-சதீஷ். சொன்னது…

தகவல்களுக்கும் நாளொரு தளத்துக்கும் வாழ்த்துக்கள்...ஆறின சோறு எனக்கு

S.T.Seelan (S.Thanigaseelan) சொன்னது…

@ மகாதேவன்-ஏ.மு ,உங்களை மனமார மதிக்கின்றோம், மிக்க நன்றி உங்கள் கண்களுக்கு எங்களை தெரிந்து கொண்டமைக்கு......................

இரண்டு ஒரு பதிவுகளுடன் விளையாடி வைத்திருக்கும் பதிவர்களை மட்டக்களப்பு பதிவர்கள் என்று சொல்லி அறிமுகப்படுத்தி....எங்களை எதிலும் போடாமல் விட்டிருக்கும் உங்கள் புத்திசாலித்தனத்தையும், நல்ல மனதையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை அன்பர் சுதா அவர்களே.. நன்றி

Ashwin-WIN சொன்னது…

பாராட்டுக்கள் மதிசுதா மச்சான். விஜய காந் தோத்திடுவார் உங்க புள்ளிவிபரத்துல.
அப்புறம் உங்களோட ஒரு கணக்குவழக்கு இருக்கு. ஒழுங்கா நல்லபிள்ளையாட்டம் குழுமம் பக்கம் வாங்கோ.

இதன் மூலம் பல இலங்கை பதிவர்களை அறிந்துகொண்டேன். மிக்க நன்றி.....

நல்ல பதிவு நிறைய பு்தி யவர் களை
தெரிந்து கொள்ள முடிந்தது

சிசு சொன்னது…

யாழ் ஆச்சர்யப்படுத்துகிறது.
வவுனியா, வடக்கு, அம்பாறை... எல்லாம் நம்பிக்கையூட்டுகிறது.

புதிய தகவல்களையும், புதிய பதிவர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கும் நல்ல பதிவு.

சிசு சொன்னது…

தங்கள் வலைப்பக்கத்திற்கு புதிதாக இன்றுதான் வந்தேன்...
படித்துத் தெரிந்து கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன...
ஒரு ரவுண்ட் வரப்போறேன்...........

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

வியப்பான தகவல் நன்றி சுதா
வாழ்த்துக்கள்

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
sinmajan சொன்னது…

வாழ்த்துக்கள் மதி. சுதா

ஹேமா சொன்னது…

வித்தியாசமானதும் வியப்பனதுமான தகவல்கள்.சந்தோஷமாயிருக்கு சுதா !

கார்த்தி சொன்னது…

ஆய் என்ர பெயர் கொழும்பில முதலாவதா நிக்குது. என்ர கணணில இருந்து பாக்கதான் அப்பிடியோ????
எம்மவர்களுக்கு வெற்றிகொடுக்கும் அங்கீகாரம் போற்றதக்கது

உணவு உலகம் சொன்னது…

உள்ளூர் பதிவர்களை உலகறிய செய்துள்ளது உங்கள் முயற்சி.

Sivaloganathan Nirooch சொன்னது…

உள்ளூர் பதிவர்களை உலகறிய செய்துள்ளமை மிகவும் அருமையான ஒன்று.
வாழ்த்துக்கள் அன்புடன்

அன்பு நண்பன் சொன்னது…

வாழ்த்துக்கள் bro...

பதிவுலக கேப்டன் வாழ்க

vanathy சொன்னது…

நல்ல பொறுமை தான் உங்களுக்கு. இவ்வளவு பேர் ப்ளாக் எழுதுகிறார்களா???

ம.தி.சுதா சொன்னது…

மதுரன் said...

/////இதன் மூலம் பல இலங்கை பதிவர்களை அறிந்துகொண்டேன். மிக்க நன்றி அண்ணா/////

நன்றி மதுரன்... முதல் சுடு சோறு பெறுகிறீர்கள் போல

ம.தி.சுதா சொன்னது…

ஆதிரை said...
:-))))))))))))))

00000000000000000000000

மிக்க நன்றி ஆதிரை

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃஃஃஃஃஃஃMohamed Faaique said...
மலையகதிலிருந்து 2 பேர்தானா??? அதுவும் சுட்டி திறக்க மறுக்கிரது..
எங்களையெல்லாம் பதிவர்களா ஏற்றுக் கொள்ள மாட்டீங்களா?? (போட்ரதே மொக்கை அதுக்கு அங்கீகாரம் வேறா’னு அடிக்க வர கூடாது)ஃஃஃஃஃஃஃஃஃ

இல்லிங்க சுட்டி திறக்குது பாருங்க..

உங்க புறொபைலில் அந்நிய நாட்டை போட்டு விட்டு கேட்பது நியாயமா சகோதரம்.. ஹ..ஹ..

ம.தி.சுதா சொன்னது…

கறுவல் said...
நல்ல முயற்சி தோழா, இது இன்னுமொரு தளத்திற்கு இலங்கை பதிவர்களை இட்டுச்செல்லலாம். அதோடு இலங்கை பதிவர்களிடையேயான ஒற்றுமை இன்னும் அதிகரிக்கும்

000000000000000000000000

மிகவும் நெகிழ வைத்த புரிந்துணர்வு மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

Bavan said...

மிக்க நன்றி பவன்

ம.தி.சுதா சொன்னது…

கந்தசாமி. said...

தங்கள் ஆசை நிறைவேறும் மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

நிரூபன் said...

மிக்க நன்றி சகோதரா நன்றி..

ம.தி.சுதா சொன்னது…

Anuthinan S said...
மதி அண்ணே உங்கள் தேடல் எங்களுக்கு சில வேலைகளை சுலபமாக்கிகிறது உங்கள் தேடல் தொடர என் வாழ்த்துக்கள்

000000000000000000000000

நன்றி சகோதரம் இது பலருக்கு உதவினால் சந்தோசமே..

ம.தி.சுதா சொன்னது…

Mahan.Thamesh said...
இலங்கையில் இத்தனை பதிவர்களா வியப்பூட்டும் தகவல் . ஆனால் நீங்கள் சொல்வது போல் எல்லாமே இலைமறை காயாகதான் உள்ளார்கள் என நினைக்கேறேன்

00000000000000000

நிச்சயமாக சகோதரம்.... அவர்களை வெளிக் கொணரவே இம் முயற்சி..

ம.தி.சுதா சொன்னது…

K. Sethu | கா. சேது said...
தாங்கள் தொகுத்துள்ள தரவுகள் எல்லாம் blogger.com ஐ பயன்படுத்தும் பதிர்வர்கள் பற்றி மட்டும் தானே? அல்லது ஏனைய (wordpress.com...) வலைபதிவுத் தளங்களையும் உள்ளடக்கியா?

0000000000000000000000

வணக்கம் ஐயா,
இதில் புளொக்கரில் உள்ளவர் மட்டுமே உள்ளனர் அதுவும் புறொபைலில் இடம் குறிப்பிட்டவர் மட்டுமே..
வருகைக்கு நன்றி ஐயா..

ம.தி.சுதா சொன்னது…

வந்தியத்தேவன் said...
கலக்கல் தரவுகள், உங்கள் பேட்டி வாசித்தேன் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.

0.0.0.0.0.0.0.0.0

நன்றி வந்தி மாமா..

ம.தி.சுதா சொன்னது…

LOSHAN said...
ஆகா..
மினக்கெட்டுத் தரவுகள் தேடி இருக்கிறீர்கள். ஆனால் ஆங்கிலத்தில் கொழும்பு என்று போட்டுள்ள எம் போல் சிலர் எதிலேயும் இல்லையா? :(

வெற்றியின் விடியலின் - நாள் ஒரு தளம் :) //
எங்கள் கடமை என நான் நினைக்கிறேன்.. :)
பாராட்டுக்கு நன்றிகள் சகோ..

நாளை இது பற்றி விடியலிலும் சொல்கிறேன் :)

0ஃ0ஃ0ஃ0ஃ0ஃ0ஃ0ஃ0ஃ0ஃ0ஃ0ஃ0

இல்லியண்ணா வடிவாகப் பாருங்கள் நீங்களும் இருக்கிறீர்கள்

அண்ணா அறிமகம் உங்களுக்க கடமையாயிருக்கலாம் ஆனால் எனக்க பெருமிதப்படும் விசயமல்லவா

வெற்றிக்கு மீண்டும் கடமைப்பட்டவன் ஆக்கி விட்டீர்கள்...

ம.தி.சுதா சொன்னது…

ஈரோடு தங்கதுரை said...
நல்ல பதிவு

00000000000000000

மிக்க நன்றீங்க.

ம.தி.சுதா சொன்னது…

வடலியூரான் said...
:)))))
வாழ்த்துக்கள் வித்தியாசமான் முயற்சிக்கு

00000000000000000

மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

யாழ் மஞ்சு said...

உண்மை எனது விருப்பமும் அது தான் செர்ந்தே முயற்சிப்போம் வாருங்கள்...

ம.தி.சுதா சொன்னது…

யாதவன் said...
வாழ்த்துக்கள் தம்பி சுதா இது உங்களுக்கு ஒரு உந்து சக்தியாய் இருக்கும்

00000000000000

உண்மை தான் அண்ணா மிக்க நன்றி...

ம.தி.சுதா சொன்னது…

தமிழ்வாசி - Prakash said...
நண்பா.... மிக சிறந்ததொரு பதிவு இது. உங்கள் நாட்டு பதிவர்களை உலகிற்கு தெளிவாக எடுத்துரைதுள்ளீர்கள்.

0000000000000000

நிச்சயமாக சகோ நன்றி நன்றி..

ம.தி.சுதா சொன்னது…

angelin said...

MANO நாஞ்சில் மனோ said...

நன்றி சகோதரங்களே...

ம.தி.சுதா சொன்னது…

எப்பூடி.. said...
குறிப்பிட்ட ஒலிநாடாவில் கூறியவற்றிற்கு தாங்கள் முழு தகுதியானவர், வாழ்த்துக்கள்.

000000000000000

அதில் தங்களுக்கும் பங்கிருக்கல்லவா சகோதரா... நன்றி நன்றி

ம.தி.சுதா சொன்னது…

“நிலவின்” ஜனகன் said..

நன்றிடா தம்பி... வெற்றிக்கும் நன்றி..

ம.தி.சுதா சொன்னது…

akulan said...

விக்கி உலகம் said...

மிக்க நன்றி சகோதரங்களே...

ம.தி.சுதா சொன்னது…

Nesan said...
வாழ்த்துக்கள் உங்களின் தரமான வலையை வெற்றி fm இல் அறிமுகப் படுத்தியவர்களுக்கு . மேலும் இவ்வளவு இலங்கைப் பதிவர்கள் இருக்கிறார்களா!
எப்படி எல்லாம் பதிவு போடுகிறது என்று எங்களுக்கு வழிகாட்டும் உங்களை போன்றோர் முன் உதாரணம்! பால்கோப்பி தருவீர்களா!

நன்றி அண்ணா பால் கொப்பி என்ன பனங்கள்ளே (புதிசு) தாறன்..

ம.தி.சுதா சொன்னது…

மகாதேவன்-V.K said...

மிக்க நன்றி அண்ணா நன்றி
அண்ணா இங்கு ஊரின் அடிப்படையில் அவர்கள் புறொபைலில் உள்ளதை கூகுலின் உதவியால் தொகுத்திருக்கிறேன் அண்ணா..

ம.தி.சுதா சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நன்றி அண்ணாச்சி...

ம.தி.சுதா சொன்னது…

ஜீ... said...
பார்ரா!!! இவ்ளோ பேரா???
நிறைய தேடியிருக்கிறீர்கள்!
நன்றி!!
வெற்றியின் அங்கீகாரத்துக்கு வாழ்த்துக்கள்!

0000000000000

மிக்க நன்றி ஜீ நன்றி..

ம.தி.சுதா சொன்னது…

SShathiesh-சதீஷ். said...
தகவல்களுக்கும் நாளொரு தளத்துக்கும் வாழ்த்துக்கள்...ஆறின சோறு எனக்கு

000000000

அட போப்பா சாப்பிட வந்ததே பெரிய சந்தோசம்...

ம.தி.சுதா சொன்னது…

Seelan said...

இரண்டு ஒரு பதிவுகளுடன் விளையாடி வைத்திருக்கும் பதிவர்களை மட்டக்களப்பு பதிவர்கள் என்று சொல்லி அறிமுகப்படுத்தி....எங்களை எதிலும் போடாமல் விட்டிருக்கும் உங்கள் புத்திசாலித்தனத்தையும், நல்ல மனதையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை அன்பர் சுதா அவர்களே.. நன்றி

0000000000000000000

சகோதரம் ஏன் நாம் முன்னேறாமல் இருக்கிறோம் என்பதற்கு தங்கள் பின் ஊட்டம் பெரிய உதாரணம்.. முதல் பத்தியை வாசித்தத் தான் பதில் போட்டீர்களா ?

உங்களை யாரும் புறக்கணிக்கலியே.. இந்தக் குற்றச்சாட்டை கூகுலுக்குத் தான் சொல்லணும்.. உங்களைப் புறக்கணிப்பதற்கு புத்திசாலித்தனம் தேவையில்லை... நான் வழமையாகவே ஒரு முட்டாள் தான் நீங்கள் தப்பாக நினைப்பதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது சகோதரம்...

நான் முட்டாள் என்பதற்கு உதாரணம் இந்தப் பதிவு தான்.. காரணம் புதியவர்களை உலகின் முன் கொண்டு வரணும் என்று நினைப்பது
உங்கள் கண்ணுக்க தவற விடப்பட்டிருந்தால் அறியத் தாருங்கள் என்று போட்டிருப்பது தெரியலியா ?

ம.தி.சுதா சொன்னது…

Ashwin-WIN said...
பாராட்டுக்கள் மதிசுதா மச்சான். விஜய காந் தோத்திடுவார் உங்க புள்ளிவிபரத்துல.
அப்புறம் உங்களோட ஒரு கணக்குவழக்கு இருக்கு. ஒழுங்கா நல்லபிள்ளையாட்டம் குழுமம் பக்கம் வாங்கோ.

000000000000000

மாப்புள வந்தேன் தானே ஹ...ஹ.. விஜயகாந் கணக்கு இதை விட சூசூப்பருப்பா..

சுதா SJ சொன்னது…

சூப்பர் பதிவு அண்ணா,
வித்தியாசமான முயர்சி,
வாழ்த்துக்கள் ^_^

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

ஓ பிரச்சனை இப்படிப் போகுதோ?
நான் பதிவை நன்றாகப் படித்து விட்டுத்தானே மேலும் சில பதிவர்கள் என்று பின்னூட்டம் இட்டேன் சரி எதுவானாலும் நமக்குடையில் ஏற்ப்பட்ட கருத்து பகிர்வுக்காக எனது வருத்தத்தை தெரிவுத்துக் கொள்கின்றேன்.

ம.தி.சுதா சொன்னது…

துஷ்யந்தனின் பக்கங்கள் said...
சூப்பர் பதிவு அண்ணா,
வித்தியாசமான முயர்சி,
வாழ்த்துக்கள் ^_^

...............

மிக்க நன்றி தம்பி..

ம.தி.சுதா சொன்னது…

மகாதேவன்-V.K said...
ஓ பிரச்சனை இப்படிப் போகுதோ?
நான் பதிவை நன்றாகப் படித்து விட்டுத்தானே மேலும் சில பதிவர்கள் என்று பின்னூட்டம் இட்டேன் சரி எதுவானாலும் நமக்குடையில் ஏற்ப்பட்ட கருத்து பகிர்வுக்காக எனது வருத்தத்தை தெரிவுத்துக் கொள்கின்றேன்.

0000000000000000000

அண்ணா ஏன் மனசைப் போட்டுக் குழப்புறிங்கள் நீங்கள் இட்டதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லியே... என்னை கண்டிக்கும் தனிப்பட்ட உரிமை உள்ளவரல்லவா நீங்கள் ஏன் அப்புறம் வருத்தம் தெரிவிப்பான்...

ம.தி.சுதா சொன்னது…

Lakshmi said...
உங்களை வலைச்சரத்தில்
அறிமுகம் செய்திருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது
பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_07.html

00000000000000000000000

என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அம்மா..

ம.தி.சுதா சொன்னது…

போளூர் தயாநிதி said...
இதன் மூலம் பல இலங்கை பதிவர்களை அறிந்துகொண்டேன். மிக்க நன்றி..

000000000000000000

மிக்க நன்றி சகோதரம் இந்தப் பதிவின் மூலம் அநத ஒரே ஒரு பெறுதியை மட்டுமே பெற்றுக் கொண்டேன்...

ம.தி.சுதா சொன்னது…

Lakshmi said...
நல்ல பதிவு நிறைய பு்தி யவர் களை
தெரிந்து கொள்ள முடிந்தது

000000000

மிக்க நன்றியம்மா ரொம்ப சந்தோசமாயிருக்கு...

ம.தி.சுதா சொன்னது…

சிசு said...
தங்கள் வலைப்பக்கத்திற்கு புதிதாக இன்றுதான் வந்தேன்...
படித்துத் தெரிந்து கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன...
ஒரு ரவுண்ட் வரப்போறேன்...........

000000000000000

மிக்க நன்றி சகோதரம் எம் உறவு என்றும் நிலைத்திருக்கட்டும்...

ம.தி.சுதா சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
வாழ்த்துக்கள்

00000000000000000

மிக்க நன்றியுங்க..

ம.தி.சுதா சொன்னது…

யாழ். நிதர்சனன் said...
வியப்பான தகவல் நன்றி சுதா
வாழ்த்துக்கள்

00000000000000

எல்லாம் தேடல் தான் சகோதரம் மிக்க நன்றி...

ம.தி.சுதா சொன்னது…

sinmajan said...
வாழ்த்துக்கள் மதி. சுதா

0000000000

மிக்க நன்றி சின்மயன்..

ம.தி.சுதா சொன்னது…

ஹேமா said...
வித்தியாசமானதும் வியப்பனதுமான தகவல்கள்.சந்தோஷமாயிருக்கு சுதா !

00000000000000

ரொம்ப நன்றியக்கா...

ம.தி.சுதா சொன்னது…

கார்த்தி said...
ஆய் என்ர பெயர் கொழும்பில முதலாவதா நிக்குது. என்ர கணணில இருந்து பாக்கதான் அப்பிடியோ????
எம்மவர்களுக்கு வெற்றிகொடுக்கும் அங்கீகாரம் போற்றதக்கது

0000000000000

ஹ...ஹ.. கார்த்தி இதையும் நான் பிளான் பண்ணிப் பண்ணியதாக சொல்லப் போகிறார்கள் அதை புளொக்கரிடம் கேளப்பா...

ம.தி.சுதா சொன்னது…

FOOD said...
உள்ளூர் பதிவர்களை உலகறிய செய்துள்ளது உங்கள் முயற்சி.

000000000000000

நன்றி சகோதரம் உண்மையான நோக்கம் அது தான்...

ம.தி.சுதா சொன்னது…

சிவலோகநாதன் நிறூஜ் said...
உள்ளூர் பதிவர்களை உலகறிய செய்துள்ளமை மிகவும் அருமையான ஒன்று.
வாழ்த்துக்கள் அன்புடன்

00000000000

மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

அன்பு நண்பன் said...
வாழ்த்துக்கள் bro...

0000000000000

நன்றி சகோதரா..

ம.தி.சுதா சொன்னது…

சி.பி.செந்தில்குமார் said...
பதிவுலக கேப்டன் வாழ்க

0000000000000

யோவ் இதுக்கள்ள நீ வேறயா..

ஹ...ஹ.. நன்றீப்பா..

ம.தி.சுதா சொன்னது…

vanathy said...
நல்ல பொறுமை தான் உங்களுக்கு. இவ்வளவு பேர் ப்ளாக் எழுதுகிறார்களா???

000000000000000

மிக்க நன்றீக்கா..

வித்தியாசமான தொகுப்பு..பாராட்டுக்கள் சுதா

பெயரில்லா சொன்னது…

தமிழையும் தமிழனையும் சாகவிடாமல் காத்து வரும் அத்தனை இலங்கைப்பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்...

உங்களுக்கும் நண்பரே...

K.s.s.Rajh சொன்னது…

வாழ்த்துக்கள் சகோ...லோஷன் அண்ணாவின் முயற்சி பாராட்டப்படவேண்டியது...அவரும் ஒரு பதிவராக இருப்பாதால் பதிவர்களின் மன நிலை அவருக்கு நன்றாக தெரியும்,பல புதிய பதிவர்களின் தோற்றத்துக்கு இது வழிவகுக்கும்..

நான் கூட லோஷான் அண்ணாவின் கிரிக்கெட் பதிவுகளை வாசித்து அவரது எழுத்துக்களால் கவரப்பட்டு நாமும் பதிவு எழுதினால் என்ன என்று நினைத்துதான் பதிவுலகில் வந்தேன் என்னப்போன்ற பல பதிவர்களுக்கு இவன் இன்பிரேஷான்..

K.s.s.Rajh சொன்னது…

அய்..வவுனியாவில் இருக்கும் 27 பதிவர்களில் நானும் இருக்கின்றேன் சந்தோசமாக இருக்கு...

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top