திங்கள், 14 மார்ச், 2011

வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்

12:04 PM - By ம.தி.சுதா 83


                கவி உலகமே இன்று ஒருவரின் வார்த்தைகளுக்குள் கட்டுப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அந்த வார்த்தைகளுக்கு ஏற்புடையவர் வைரமுத்துத் தான்.காரணம் அந்தளவு வார்த்தை ஜாலங்களுக்குச் சொந்தக்காரர் தான் இந்த வைரமுத்து. 
      அவர் பிரபலம் என்ற காரணமோ தெரியல அல்லது அவர் குண இயல்பு அப்படியோ தெரியல அவர் மீது அடிக்கடி குற்றச் சாட்டுகள் எழுந்த வண்ணமே இருக்கிறது.
   கடந்த வாரம் நடந்த சம்பவம் உண்மையா ? அல்லது ஊடகங்களின் மிகைப்படுத்தலா எனத் தெரியவில்லை. 

     அரும்பு மீசை குறும்பு பார்வை திரைப்படத்தில் வைரமுத்துவும், கார்த்திக் நேத்தா என்ற புது கவிஞரும் பாடல் எழுதியிருந்தார்கள். பாடல் வெளியிட்ட விழா நடைபெறு் வேளையில் வைரமுத்து தனது புத்தக வெளியீடு ஒன்றுக்காக மதுரை செல்ல வேண்டிய சூழ் நிலை வந்து விட்டதால் பாடல் வெளியிட்டு விழாவிற்கு வர முடியல அனால் தனக்காக இன்னொருவரை மேடையேறுவதை அவர் அனுமதிக்கவில்லையாம். அது மட்டுமல்ல பாடல் இறுவட்டு அட்டையில் கார்த்திக் நேத்தாவின் பெயரையும் இட வேண்டாம் என்றாராம் இதற்கு என்ன காரணம் என எனக்கு விளக்குங்களேன்

கார்த்திக் நேத்தாவின் வரிகள்
புத்த மரம்
அரச மரம் மட்டுமே போதி மரம்
புத்தனாக இருந்தால்.

எல்லா மரங்களும் போதி மரங்களே
பறவையாக இருந்தால்.

மரணம்

நீந்திக் கொண்டிருப்பவை
மீன்கள் என்று
பூனைக்குத் தெரிவதில்லை
நீந்துபவை மீன்கள் இல்லை என்றும்
அது நம்பிவருகிறது .
உண்மையில்
பூனைகளுக்கு பிடித்துப் போனது
மீன் இல்லை
மரணம் .

      ஒரு முறை யுகபாரதி வழங்கியிருந்த பேட்டியிலும் குறிப்பிட்டிருந்தார். கணையாழியில் அவர் வேலை செய்யும் போது ஒரு பத்திரிகை சம்பந்தமாக சந்தித்த போது இலக்கிய விவாதங்களில் இருவரும் வாதிட்டுக் கொண்டார்கள் அப்புறம் எல்லாம் முடிந்து பத்திரிகையாளர் எல்லோரும் போன பிறகு தான் அவரை கூப்பிட்டு பாராட்டினாராம். அவர் தன்னை அத்தனை பேர் முன்னாடியும் ஏன் பாராட்டல என கூறியிருந்தார்.

         2008 ம் ஆண்டு இடம் பெற்ற மகனின் திருமண நிகழ்வில் எந்தவொரு இளம் கவிஞருக்கும் அழைப்பிதழ் வழங்கப்படவில்லை அதை விட முக்கியம் சினேகன் போன்றவர்கள் இவருடைய உதவியாக இருந்தவர்கள் அப்படியானால் இவர்களுக்கிடையே என்ன பிரச்சனை ?

    ஒரு படத்திற்கான முழு பாடலையும் ஒரு கவிஞர் தான் எழுதணும் என்று விதியில்லாத தருணங்களில் கூட இவர் முழு பாடலும் தனக்குத் தான் வேண்டுமென்று கேட்பதில் நியாயமிருக்கிறதா (அது படக்காரர் சார்ந்த விடயமாகவே இருக்கட்டும் 5 ல் ஒரு பாடலை இளையவருக்கு விட்டுக் கொடுத்தால் என்னவாம்)

         இத்தனைக்கும் இவரது இத்தனை செயற்பாட்டையும் கார்க்கி மேலயும் காட்டுவாரா ?
    அவர் கவிஞர் என்ற கோணத்தில் மட்டும் என்னால் பார்க்கப்படுவதால் பெரியளவு தாக்கம் எற்படவில்லை அதே இடத்தில் அவருக்கு பின்னர் நல்ல கவிஞர்கள் எமக்குத் தேவையில்லையா அல்லது அவர்களும் மழுங்கடிக்கப்படப் போகிறார்களா இதற்கு பதில் சொல்லவேண்டியது யார் ?
         எப்போதும் இதற்கு எதிர்மாறாகவே பதிவுலகம் இருக்கிறது காரணம் ஒரு சிலரை தவிர மற்றைய எல்லா பதிவர்களும் புதியவர் ஒருவரைக் காண்டால் ஆர்வத்தோடு ஓடிச் சென்று வரவேற்கிறார்கள் அதிலும் எடுகோளாக எடுத்துக் கொண்டால் வலைச்சரம், தீராத பக்கங்கள் மாதவராஜ், பதிவர் ஜனா போன்றோர் முக்கியப்படுத்தப்பட வேண்டியவர்கள் இது சின்ன உதாரணமே இதன் மூலம் பல பதிவர்கள் வளர்ச்சி கண்டிருக்கிறார்கள்.
    நான் குறுகிய காலத்திற்குள் கொஞ்சமாவது முன்னுக்கு வந்ததற்கு இவர்களும் காரணமாகும் அத்துடன் சீபி செந்தில்குமார், மாத்தியோசி ரஜீவன், நல்ல நேரம் சதீஸ்குமார், நாஞ்சில் மனோ போன்றோருடன் இந்தப் பட்டியல் நீண்டே செல்கிறது இது திரையுலகில் எந்தளவு சாத்தியப்படுத்தப்படுகிறது என யாராவது விளக்கிச் செல்லுங்கள்.

குறிப்பு - என்னை வைரமுத்துவிற்கு எதிரானவன் என்று யாரும் தப்புக் கணக்கு போட வேண்டாம் சந்தேகங்களை மனதில் வைப்பதை விட போட்டுடைப்பது நல்லதல்லவா ? ஒரு சிலர் மனதில் வைத்திருக்கும் சந்தேகங்களால் தான் பல விரிசலே இப்போதும் இருக்கிறது... தன் மகனை ஒழித்து வைத்துக் கொண்டு ஊரான் பிள்ளையை உனக்கு வெட்கமில்லையா ? ரோசமில்லையா ? என போருக்கழைத்த கவிஞரின் புத்தகங்களையே விரும்பிப் படிக்கும் எனக்கு வைரமுத்துவிடம் வெறுப்பதற்கு என்ன இருக்கப் போகிறது.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

You might also like:

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

83 கருத்துகள்:

ஆஹா இன்றும் எனக்கே ..........

ஆஹா இன்றும் எனக்கே ..........

wait

சமுத்ரா சொன்னது…

திறமை இருக்கும் இடத்தில் கர்வமிருக்கத்தான் செய்யும்...

மனம் திறந்து கருத்துக்களை எழுதியிருக்கிறீர்கள்.பர்ராட்டுக்கள்.

யோசிக்க வேண்டிய விஷயம்தான் மக்கா....

சுதா eஅவசரமாக வேலைக்கு கிளம்புவதால், வைர முத்து iபற்றி பிறகு எழுதுகிறேன்!



சுதா உங்களது வெற்றிக்கு நான் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை! உங்களிடம் திறமை இருக்கிறது! அதனால் தான் முன்னுக்கு வந்துள்ளீர்கள்! அதுமட்டும் அல்ல நீங்கள் குறுகிய வட்டத்துக்குள் இருக்காமல் உங்கள் நண்பர்கள் வட்டத்தை பெருக்கியுள்ளீர்கள்! ஈகோ பார்க்காமல் எல்லோருடனும் பழகுகிறீர்கள் இவைதான் வெற்றிக்கு காரணம்!



இன்னும் சொல்ல ஆசை! நேரமில்லை சுதா! வேலை வேலை!!

காலம் எல்லாவற்றிற்கும் பதில் வைத்து இருக்கிறது.....
வேற என்னத்தை சொல்ல....

வைரமுத்து ஏற்கனவே அறிவுமதியின் கவிதைகளை அபேஸ் பண்ணியவர்தான்

Unknown சொன்னது…

யோசிக்க வேண்டிய விஷயம்!

செல்வா சொன்னது…

உங்களை வைரமுத்துக்கு எதிராக எல்லாம் யாரும் நினைக்க மாட்டங்க .. சந்தேகங்களைக் கேட்பது நல்லதுதானே . ஆனா எனக்கு அது பற்றித் தெரியாது. ஆனா எனக்கு ரொம்ப பிடிச்ச கவிஞர் வைரமுத்து.

ADMIN சொன்னது…

என்ன அப்பூ.. சொல்றீங்க..!! மெய்யாலுமா?!!!

ADMIN சொன்னது…

நெனச்ச ஒடனே எழுதித் தள்ளிட்டீங்க...அப்படித்தானே..! பலே.. நீர் ரொம்ப தைரியசாலிதான்.. போலும்..! மனசுல நெனச்சத 'பட்'னு போட்டு ஒடைக்கறவங்களக் கண்டா எனக்கு ரொம்ப புடிக்கும்..!

திறமை இருக்கும் இடத்தில் கர்வமிருக்கத்தான் செய்யும்..

இருப்பினும் கர்வம் வாழ்வின் பின் நிலைகக்கு தள்ளி விடும்

Kiruthigan சொன்னது…

அகா... தமிழ்லீக்ஸ் மதிசுதா ஆய்ட்டீங்களே..!!!
யாருமே தப்பமுடியாது போலிருக்கு...
துணிவுக்கு ஒரு சல்யூட்...

வைரமுத்துஜால்ரா முத்து
தலைக்கனம் பிடித்தவர் ஏனைய கவிஞர்களை மதிப்பதில்லை. இதற்கு மேல் என்ன சொல்வது.

வைகை சொன்னது…

படைப்பாளியின் படைப்புகளை மட்டும் ரசிக்க கற்றுக்கொண்டால் இதுபோன்ற குழப்பங்களை தவிர்க்கலாம்!

காரியம் உள்ள இடத்தில் வீரியமும்
இருக்கும். கவிஞர்களுக்கு வீரியம் அதிகமாகவே இருக்கும்போல இருக்கு.

alex paranthaman சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

மனம் திறந்து கருத்துக்களை எழுதியிருக்கிறீர்கள்.பர்ராட்டுக்கள்.

ரேவா சொன்னது…

நினைத்தை எழுத்தில் வடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரம்.....பாடல் இறுவட்டு அட்டையில் கார்த்திக் நேத்தாவின் பெயரையும் இட வேண்டாம் என்றாராம் இதற்கு என்ன காரணம் என எனக்கு விளக்குங்களேன்////.உள்ளிருக்கும் அவர் மனதிற்கே உண்மை புரியும்,,,

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோதரம், எப்படி நலமா? பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எல்லாம் எப்படியிருந்தது?

இனி விடயத்திற்கு வருகிறேன்.
கவிஞர்களுக்கு இயல்பாகவே கர்வம் இருப்பது இன்றியமையாதது என்று கூறுவார்கள். இதனை விட கவிஞர்களிடத்தே வித்தகச் செருக்கும் இருக்கும் என்று கூறுவார்கள். எல்லாக் கவிஞர்களிடத்தும் நான் என்ற அல்லது நானே எல்லாவற்றிலும் முதன்மை பெறவேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே இருக்கும். இவ் வித்தகச் செருக்கை விட வைரமுத்துவிடம் தான் என்ற இறுமாப்பு அகந்தை மேலோங்கியிருப்படதை யாராலும் மறுக்க முடியாது.

வைரமுத்துவின் ஆரம்ப காலங்களில் அவர் பச்சையப்பன் கல்லூரிகளில் படித்த பிற்காலப் பகுதியில் சினிமா வாய்பிற்க்காக ஏறி இறங்கும் போதும், ஆரம்ப காலங்களில் கவியரங்குகளில் கலந்து கொள்ளும் போதும் அவரிடம் ‘’தான்’ என்கின்ற அகந்தை இயல்பாகவே இருந்திருக்கிறது.

இதற்கு எடுத்துக்காட்டாக அவரது நூலான ’இதுவரை நான்’ எனும் நூலில் கவியரசு கண்ணதாசனைச் சந்திக்கச் சென்று நீண்ட நேரம் காத்திருக்கும் பொறுமையற்றவராகத் திரும்பி வந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த விடயம், வளர்த்த கடா முகத்தில் குத்துவது போல ‘தன்னை சினிமாவில் உயர்த்திய இளையராஜாவுடனான’ இவரது முரண்பாடும், பிரிவும்!

வைரமுத்து காரில்லாது, சினிமாவில் காலடி எடுத்து வைத்துப் பாட்டெழுதத் தொடங்கிய அதே காலப் பகுதியில் ‘இளையராஜா தான் தன்னுடைய காரில் இவரை ஏற்றி எல்லா இடமும் அழைத்துச் சென்றிருக்கிறார்.

ஆனாலும் பிற்காலத்தில் ஏற்பட்ட விரிசல்களின் காரணமாக இவ் வைரமுத்து சொன்ன ஒரு வார்த்தை ‘இசைஞானியே உன்னை நம்பி நானும் இல்லை!
என்னை நம்பி நீயும் இல்லை! என்பதாகும்!

Unknown சொன்னது…

திறமை இருக்கும் இடங்களில் இது மாதிரி விஷயங்கள் இருக்கக்கூடும்.. வைரமுத்துவிற்கு இது போன்ற சர்ச்சைகள் புதிதல்ல..

நிரூபன் சொன்னது…

மேலே உள்ள பின்னூட்டத்தின் தொடர்ச்சி.

இவ் வைரமுத்து கே.ஜே ஜேசுதாசுடனும் முரண்பட்டிருக்கிறார். ‘பாடி அழைத்தேன் உன்னை.. இதோ எனும் பாடலினூடக..

முன்பு ஜேசுதாஸ் போன்றோருக்குப் பாடல்களை ஆங்கிலத்தில் எழுதித் தான் பாடக் கொடுப்பார்கள். உதாரணத்திற்கு
பாடியழைத்தேன் என்றால்
paadiyazhaiththen..

இப் பாடலில்
‘’கோயிலில் தேவிக்குப் பூஜை.. அதில் ஊமத்தம் பூவுக்கேன் ஆசை..

அதனை koyilil thevikku poojai

என்று எழுதியதை அவர் கோயிலில் தேவைக்கு பூஜை என்று பாடியிருக்கிறார். எத்தனை தடவை சொல்லியும் ஜேசுதாஸ் அவர்களால் திருத்த உச்சரிப்பைத் திருத்த முடியாத போது வைரமுத்து கடுப்பாகி நான் இருப்பதா இல்லை இவர் இருப்பதா? என முரண்பட்டு பாடகரை மாற்றச் சொல்லிக் கேட்டுள்ளார். பின்னர் இசையமைப்பாளர் பிணக்கினைத் தீர்த்து வைத்து ஜேசுதாஸே அப்பாடலைப் பாடினார்.

இதழ் சுந்தர் சொன்னது…

ஒரு கவிஞனுக்கு முக்கிய தேவை - மொழி பற்று ,சிந்தனை எல்லை தாண்டிய கற்பனை இதையெல்லாம் மீறி கர்வம் என்ற ஒரு குணாதிசியம் இருக்கவே செய்கிறது அந்த வகையில் வைரமுத்துவிற்கு சொல்லவே வேண்டாம் அதையும் மீறி..........
அவருக்கு..... தான் ஒரு அரசாங்க கவி என்பதில் அதீத பெருமை உள்ளதற்கு நீங்கள் சொன்ன சில நிகழ்வுகள் எடுத்துக்காட்டாகும்....
(இதில் தவறொன்றும் இல்லையென தான் எழுதிய பெய்யனப் பெய்யும் மழை என்ற படிப்பில் எழுதியிருக்கிறார் )....
அதற்காக வளரும் இளம் கவிஞர்களுக்கு வழி விடாமல் முந்தி வர பார்ப்பது ......சலசலக்க செய்கிறது

http://buildappu.blogspot.com/

நிரூபன் சொன்னது…

சுதா, இதே வைரமுத்து தான் தான் எல்லா இடத்திலும் முதன்மையாக இருக்க வேண்டும் எனும் கர்வத்தின் அடிப்படையில் பாடல் எழுதுவதாக இருந்தால் தானே எல்லாப் பாடல்களை எழுத வேண்டும் எனும் கர்வத்தோடு ஏனைய கவிஞர்களை உதாசீனம் செய்து முழு வாய்புக்களையும் தன்னகத்தே தட்டிப் பறித்தவர்.

இளையராஜா- பாரதிராஜா- வைரமுத்து கூட்டணியில் வெளிவந்த பாடலகளையும் அன்று முதல் 2003களின் பிற்பகுதி வரை வைரமுத்து தானே எல்லாப் பாட்டினையும் எழுதுவது எனும் மரபினைக் கையாண்டு வந்துள்ளார்.

Unknown சொன்னது…

மற்றவர்களை பாராட்டுவது என்பது இயல்பாக வரவேண்டிய விஷயம்.
அப்புறம் எல்லோரும், எல்லோரையும் பாராட்ட வேண்டிய அவசியமில்லையே.
வைரமுத்து சில குறிப்பிட்ட நபர்களை அதிகமாக பாராட்டுவது உண்டு. (கலைஞர், ரஜினி...)

கார்த்திக் நேத்தா இந்த பட்டியலில் இல்லை அவ்வளவு தான்...

Unknown சொன்னது…

//ஒரு படத்திற்கான முழு பாடலையும் ஒரு கவிஞர் தான் எழுதணும் என்று விதியில்லாத தருணங்களில் கூட இவர் முழு பாடலும் தனக்குத் தான் வேண்டுமென்று கேட்பதில் நியாயமிருக்கிறதா//

ஹா ஹா ..

ஷங்கரின் படங்களில் வாலியுடன், பாடல்களை பகிர்ந்துக்கொண்டிருந்தாரே....

நிரூபன் சொன்னது…

வைரமுத்துவின் இக் கர்வம் காரணமாகத் தான் கவியரசர் கண்ணதாசன் எனும் பட்டத்தினைப் பார்த்துப் பொறாமை கொண்டு, பொங்கியெழுந்து அவரை விட நான் என்ன குறைவா எனும் அடிப்படையில் ‘கவிப்பேரரசர்’ எனத் தனக்குத் தானே பட்டப் பெயர் சூடிக் கொண்டவர்.

இளங் கவிஞர்கள் வரிசையில் பா.விஜய் அவர்களின் முதல் நூலுக்கு அணிந்துரை கேட்பதற்காக அவர் வைரமுத்துவை நாடிச் சென்ற போது- அணிந்துரை கொடுக்காது அலையவைத்து நாட்களை நகர்த்தித் தட்டிக் கழித்தவர். இதனால் மனமுடைந்த பா.விஜய் அவர்கள் இறுதியில் வேறு உள்ளூரில் மட்டும் நன்கு பிரபலமான கவிஞரிடம் அணிந்துரை வேண்டியிருந்தார்.

எல்லோரையும் ஏற்றி விட வேண்டும், புதியவர்களைத் தட்டிக் கொடுக்க வேண்டும் எனும் எண்ணம் இவருக்கு இருந்தால்; மனந் திறந்து பா.விஜயினையோ அல்லது அவரை நாடிச் சென்ற ஏனைய கவிஞர்களான சினேகன், முத்துக்குமார் போன்றோரையோ சினிமாவின் சூட்சுமங்களை, வேறு பல அனுபவங்களைக் கற்றுக் கொடுத்து ஏற்றி விட்டிருக்கலாம் தானே/ வளர்த்திருக்கலாம் தானே?

நீங்கள் சொல்வது உண்மைதான் .
இளையராஜாவிடம் பிரிந்தபோதே அவரை பற்றிய முரண்பாடுகளும் தொற்றிக்கொண்டன
1.அரும்பு மீசை குறும்பு பார்வை ஆடியோ விழா
இது கவிதைகாரனுக்கு சொந்தமான கர்வம்
2. யுகபாரதி வழங்கியிருந்த பேட்டி
நேரமின்மையும் தானே ரசிக்கும் ஒரு விஷயத்தை விளம்பரமாக்க கூடாதென்பதுவும் காரணமாக இருக்கலாம் .
3.மகனின் திருமண நிகழ்வில்
தன்னை தேடிவரும் முக்கியமானவர்களுக்காக மட்டுமே அழைப்பு விடுத்து ,மற்றவர்களின் சந்திப்பை தவிர்க்க விரும்பி இருக்கலாம் .
4. ஒரு படத்திற்கான முழு பாடலையும் ஒரு கவிஞர் தான் எழுதணும்
அந்த படத்தின் கதையில் ஒன்றி முழுபாடலை தானே தரவேண்டும் என்று இருக்கலாம் .
ஆனால் இயந்திரனில் அது எடுபடவில்லை
3. எனக்கும் அவருக்குமிடையிலும் கூட பல நாட்களாக குழப்பம்
இங்குதான் பதில் .நாம் எழுத்தை மட்டுமல்லாமல் எழுதுபவன் மேலும் சதா கண்காணிப்பை செலுத்திக்கொண்டு இருப்பதுவுமே ஒரு சாபமாக படுகிறது .

நிரூபன் சொன்னது…

இதழ் சுந்தர் said...
இதில் தவறொன்றும் இல்லையென தான் எழுதிய பெய்யனப் பெய்யும் மழை என்ற படிப்பில் எழுதியிருக்கிறார் )....
அதற்காக வளரும் இளம் கவிஞர்களுக்கு வழி விடாமல் முந்தி வர பார்ப்பது ......சலசலக்க செய்கிறது //

சகோதரம் பெய்யெனப் பெய்யும் மழையில் வைரமுத்து கவிதைகளை மட்டும் தான் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்களில்’ தான் இவ்வாறான தகவலைச் சொல்லியிருக்கிறார்.

பெய்யெனப் பெய்யும் மழையில் வைரமுத்துவின் கவிதைகள் மட்டுமே தொகுக்கப்பட்டிருக்கிறது.

நிரூபன் சொன்னது…

இன்னொரு விடயம் ‘தன்னை விட வாலி முன்னோக்கிச் சென்று எங்கே திமுக வின் செல்லப் பிள்ளையாகி விடுவாரோ எனும் அடிப்படையில் அலைந்து திரிந்து கலைஞரிடம் கருணாநிதியிடம் சென்று தனது நூலினைப் படிக்கச் சொல்லிக் கொடுத்து பின்னர் கலைஞரின் செல்லப் பிள்ளையாக மாறியவர்.

வைரமுத்துவை நேர்காணல் செய்யும் போது ஒரு சில இடங்களில் இவர் தனது மேதாவித்தனத்தை நிகழ்சித்தொகுப்பாளர்களிடமும் காட்டியிருக்கிறார்.

எங்கே அன்பு நெஞ்சங்களே! சொல்லுங்கள். இன்றைய இளங்கவிஞர்களில் யாருடைய நூலுக்காவது வைரமுத்து அணிந்துரையோ அல்லது திறனாய்வு விமர்சனமோ செய்திருக்கிறாரா?
ஏன் அவரால் செய்ய முடியாது? அவரிடம் மறைந்திருக்கிற கர்வம் தானே இதற்கான காரணம்?

பொன்மணி வைரமுத்துவின் நூலுக்கும், கார்க்கியின் நூலுக்கும் உரைகளை வழங்கும் வைரமுத்துவால் அவர்களை விட நன்றாக எழுதும் ஏனைய கவிஞர்களுக்கு ஏன் உரை வழங்க முடியாமற் போனது?

நிரூபன் சொன்னது…

சுதா நீங்கள் வைரமுத்துவின் பாடல்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்.

நான் வைரமுத்துவின் முதல் நூலிலிருந்து இன்று வரை வெளி வந்த நூல்கள் அனைத்தையும் தேடிப் தேடிப் படித்திருக்கிறேன். அதுவும் பெரும்பாலான நூல்களை பண நெருக்கடி மிகுந்த காலப் பகுதியிலும் கூட வாங்கிப் படித்திருக்கிறேன். வன்னிப் பகுதியில் இருந்த காலங்களில் சில காலம்(பாதை பூட்ட முன்) சிறிலங்கா புத்தகசாலைக்குப் போய்(கே.கே.எஸ் வீதி) நிறைய புத்தகங்களை வாங்கி பஸ்ஸில் ஏற்றியும் கொண்டு சென்று படித்துள்ளேன்.

அந்தளவு ரசனை அவரது எழுத்துக்களில் இருந்தது. ஆனாலு அவரது ஒரு சில பாடல் வரிகளுடன் நானும் முரண்படுகிறேன்.

நிரூபன் சொன்னது…

வைரமுத்துவின் பாடல்
வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம்....

இதில் ஒரு வரியில்
‘’அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்குச் சீப்பாக இருப்பேன் - இல்லைச் செந்தாமரைப் பாதத்தில் செருப்பாக இருப்பேன்...,

என்று எழுதியுள்ளார்.

இன்னொரு பாடலில் அன்பே அன்பே கொல்லாதே....
தேவதை குளித்த துளிகளை அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்...

இவ்விரு பாடல்களைப் பற்றியும் ஊடகவியலாளர்கள் கேட்ட போது;
ஏன் இப்படி எழுதினீர்கள்? நடை முறை வாழ்விற்குச் சாத்தியமாகுமா என்ற போது இலாவகமாக மழுப்பல் பதில் சொல்லித் தப்பிய பெருமையும் இவ் வைரமுத்துவிற்கே சாரும்.

வைரமுத்து திரைத் துறைக்குள்ளே திருக்குறள் தன்னைப் புகுத்து, இலக்கியத் தமிழைப் பாடல்களினூடு இனிமையாய்த் தந்தவர் என்பதால் அவரது பாடல்களையும் நான் நேசிக்கிறேன். ஆனாலும் அவரது தவறுகளை விமர்சிக்கவும் விமர்சகன் என்ற ரீதியில் கடமைப்பட்டுள்ளேன்!

நிரூபன் சொன்னது…

முக்காலா..,முக்காபல்லா என்று பாட்டெழுதி விட்டு முக்காலாவிற்கு விளக்கமளிக்க முடியாது
முற்றியும் முற்றாமலும் இடை நடுவில் நடுவில் நிற்கும் காதலை முக்காலா என்று கூறலாம் என விளக்கமளித்தவர் தான் வைரமுத்து.

வாலியுடன் ஒப்பிடும் போது வைரமுத்திவுவின் பாடல்களில் மட்டுமே கண்ணதாசனுக்குப் பின் இலக்க்ய நயம் அதிகமாக இன்றைய கால கட்டத்தில் காணப்படுகின்றது. இன்றைய இளங்கவிஞர்களும், வாலியும் கூட புதுக் கவிதையினூடே பாடல்களில் புதுமை செய்தாலும், வர்ணனைகள், அணிகள் என இலக்கிய நயத்தில் புதுமை செய்த, செய்து கொண்டிருக்கிற பெருமை வைரமுத்துவிற்கே உண்டு.

உதாரணமாக..
இளைய நிலா பொழிகிறது... எனும் பாடலில்
’முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ.... என்று உயர்வு நவிற்சி அணியினையும்

தகிட ததுமி... தகிட ததுமி...
எனும் பாடலில்

இருதயம் அடிக்கடி இருந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்கிறது என்பேனா- என் பேனா?
எனச் சிலேடையால் கவிச் சித்திரம் தீட்டிய பெருமையும் இவருக்கு உண்டு. இன்னும் இன்னும் நிறையப் பாடல்களைக் குறிப்பிடலாம்.

ஆனாலும் இந்த வைரமுத்துவிற்கு ஈழப் போராட்ட காலத்தில் ஒருகாலமும் இல்லாத அக்கறை எப்போது வந்தது தெரியுமா?

நிரூபன் சொன்னது…

ஈழப் போராட்டம் நடந்து, மக்களெல்லாம் கொத்துக் கொத்தாக மடிந்த போது அக்கறைப்படாத வைரமுத்து, பாடல்களையோ, பொருளுதவியையோ செய்யாத வைரமுத்து, பாடல்கள் எழுதப் புலம் பெயர் தமிழர்க்ள் கேட்ட போதும் புறக்கணித்து தன் இமேஜ் போய்விடும் எனத் தட்டிக் கழித்த வைரமுத்து 2004ம் ஆண்டு சமாதான காலப் பகுதியில் சுனாமி ஏற்பட்ட போது தருணம் பார்த்து வீழமாட்டோம் எனும் பெயரில் இசைத்தட்டு வெளியச் சம்மதித்தார். அதுவும் புலம் பெயர் தமிழர்களின் உதவியுடன் இவ் அல்பம் மிகுந்த பிரயத்தனத்துடன் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நான் வன்னியில் வானொலியில் வேலை செய்த காலப் பகுதியில் புயலடித்த தேசம் எனும் இறுவட்டிற்கான பாடல்களை எழுதிதித் தரச் சொல்லி வைரமுத்துவைப் புலம் பெயர் தமிழர்கள் தொடர்பு கொண்டார்கள். இறுதியில் அவர் தட்டிக் கழித்த பின்னர் தான் ஏனைய தமிழக கலைஞர்களையும் பாடகர்களையும் வைத்து இவ் இறுவட்டினை வெளியிட்டார்கள்.

வைரமுத்துவிற்கு உண்மையா அக்கறை இருந்தால் அறிவுமதி, மு.மேதா முதலியோர் தமிழர்கள் மீது அனுதாபப்பட்டு கவிதையினூடாக கண்ணீர் சிந்திய காலப் பகுதியில் வைரமுத்து 1983ம் ஆண்டு கலவரத்திற்காக மட்டும் ஒரே ஒரு கவிதையினை வாந்தியெடுத்துள்ளார். அதன் பின்னர் அவரது தமிழுணர்வு கலைஞரை மையப்படுத்தியே இருந்ததே தவிர ஈழத் தமிழர்களை நியாயப்படுத்தினால் புறக்கணிக்கப்படுவேன் எனும் காரணத்தால், ஈழத்தமிழர்களைப் பற்றி ஏதாவது கூறினால், பாடலாக வெளியிட்டால் கலைஞரிடமிருந்து ஓரங்கட்டப்படலாம் எனும் சுயநலத்தின் அடிப்படையில் தானே
சுனாமியின் போது வீழமாட்டோம் எனும் அல்பத்தினை வெளியிட்டு, அவ் அல்பத்தினூடகச் சிறிது புரட்சியினையும் தூவ முற்பட்டார்?

நிரூபன் சொன்னது…

வீழ மாட்டோம் எங்கள்
இலட்சியத்தில் நியாயம்
இருக்கிறது வீழ மாட்டோம்
எங்கள் உடலில் உண்மையின்
பலம் இருக்கிறது வீழமாட்டோம்
எத்தனை முறை வீழ்கிறோம்
என்பது முக்கியமில்லை
அத்தனை முறையும் எழுகிறோம்
என்பதே முக்கியம்
சாக மாட்டோம் பீனிக்ஸ் பறவைகள் நாங்கள், எரித்தாலும்
சாம்பலின் கர்பத்திலிருந்து மீண்டும் ஜனித்து விடுவோம்
சாக மாட்டோம், சாவே எங்கள்
சாப்பாடானதால் சாக மாட்டோம்
.......................
‘ஆழி திரண்டு
அலை கடல் எம்மைத் தின்றாலும்
ஊழி திரண்டு உயிர்களை எல்லாம் உண்டாலும்
சற்றும் எங்கள் தலைகள் மண்ணில் சாயாதே!
ஒற்றைத் தமிழன் உள்ள வரைக்கும் ஓயாதே!(நினைவில் நின்ற கவி வரிகளை வைத்து எழுதுகிறேன்)

மாணிக்க விநாயகம் இவ் வைரமுத்துவின் பாடலைப் பாடியுள்ளார். இழவு வீட்டிலும், சுனாமியில் அவலப் பட்டு, உயிரிழந்து உடமையிழந்து எங்கள் உறவுகள் நின்ற போது இழவு வீட்டில் சுனாமி அனுதாப, இரங்கற் பாடலினூடாக புரட்சியினையும் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடித்த இந்த வைரமுத்துவை என்ன சொல்வது?

நிரூபன் சொன்னது…

ஆகவே வைரமுத்துவினை விட இன்றைய கால கட்டங்களில் பல கவிஞர்கள் முன்னணியில் திகழ்கிறார்கள். முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இனி இதனை அவராகவே உணர்ந்து விலகி வழி விடுவார் என நினைக்கிறேன்.

Unknown சொன்னது…

திறமை இருக்குமிடத்தில் கர்வம் இருக்கலாம், ஆனால் இவருக்கு தலைக்கனம் இருக்குமோ என தோன்றுகிறது...

நிரூபன் சொன்னது…

நான் குறுகிய காலத்திற்குள் கொஞ்சமாவது முன்னுக்கு வந்ததற்கு இவர்களும் காரணமாகும் அத்துடன் சீபி செந்தில்குமார், மாத்தியோசி ரஜீவன், நல்ல நேரம் சதீஸ்குமார், நாஞ்சில் மனோ போன்றோருடன் இந்தப் பட்டியல் நீண்டே செல்கிறது இது திரையுலகில் எந்தளவு சாத்தியப்படுத்தப்படுகிறது என யாராவது விளக்கிச் செல்லுங்கள்.//

சுதா உங்களிடமும் ஒரு நல்ல பண்பு உள்ளது. என்னைப் போன்ற புதிய பதிவர்களை ஓடோடி வந்து ஊக்கப்படுத்துவதையும் நான் வலையுலகில் கண்டுள்ளேன். இந் நேரத்தில் உங்களுக்கும் நன்றிகள்.

திரையுலகில் இப்போது இந்தப் பருப்பெல்லாம் அவியாது என நினைக்கிறேன். ஏ.ஆர் ரகுமானுடன் கூட ’எங்கே எனது கவிதையெனும் பாடலில் தனது பாடல் வரிகளை விட தாளவாத்தியங்கள் மிஞ்சி விட்டதாக முரண்பட்டு சிறிது காலம் ரகுமானிற்கும் பாடலெழுதாது இருந்தவர் தான் இவ் வைரமுத்து.

இந்தக் காலத்தில் பழைய பழம் புளிக்கும் என்பது போல வைரமுத்துவின் பாடல்களுக்கு உள்ள மவுசு குறைந்து வருகிறது என்றே சொல்லலாம், இப்போதெல்லாம் புதிய கவிஞர்களை வைத்தே பாடல்களை எழுதுகிறார்கள்.

வைரமுத்துவிற்கு ஒரே படத்தினைக் கொடுத்து பாடல்களை எழுதுவதிலும் பார்க்க வேறு கவிஞர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுப்பதிலே தான் திரையுலகம் நாட்டம் காண்கிறது எனலாம்.

arasan சொன்னது…

நண்பா ,,,,

உங்களின் எண்ணங்களை எங்களோடு
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ,..
இந்த உலகத்தில் தான் மட்டுமே வாழனும் என்று நினைக்கும் பொது தான்
இப்படி பிரச்சினை ....

தனிமரம் சொன்னது…

கருத்தாளம்மிக்க கவிதை தரும் வைரமுத்துக்கு புதிய கவிஞர்கள் மேல் எப்போதும் பகையுணர்வுதான் தன்புகழுக்கு  இவர்கள் மிஞ்சிப்போய்விடுவார்கள் என்ற பயம்தான் இளையராஜாவை விட்டு ரகுமானுடன்  ஜோடியாகி அவருடனும் முட்டிமோதினார்.பழனிபாரதியை ஆங்கிலம் அதிகமாக எழுதுவதாக வறுத்தெடுத்தார் அவர் மகன் இன்று அதுதானே செய்கிறார்.வித்யாசாகர் புதியவர்களை அதிகமாக பயன்படுத்தவதால் இவருடன் அளவாகத்தான் சந்தர்பம் கொடுபார் எல்லாம்தான் எழுதோனும் என்ற பேராசைதான் புதியவர்களை வழிமொழியாமல் தடங்கள் செய்கிறார்.பா.விஜய் கருனாநிதியுடன் நெருக்கமாகிவருவதால் சந்தர்பம் கிடைக்கும்போதெல்லாம் புதியவர்களிடம் அதிக தேடல் இல்லை என்று குறைகூறுகிறார்.இவ்வளவு இழப்பை தாங்கிவாழும் ஈழத்தவருக்கு குரல்கொடுத்தாரா!கருனாநிதிக்கு முகஸ்துதிபாடமட்டும் பின்னிற்கமாட்டார் இவரை ஓரு பாடல் ஆசிரியர்.வார்த்தையாலம் தெரிந்த வியாபாரி என்று சொல்லலாம்.

நிரூபன் சொன்னது…

தன் மகனை ஒழித்து வைத்துக் கொண்டு ஊரான் பிள்ளையை உனக்கு வெட்கமில்லையா ? ரோசமில்லையா ? என போருக்கழைத்த கவிஞரின் புத்தகங்களையே விரும்பிப் படிக்கும் எனக்கு வைரமுத்துவிடம் வெறுப்பதற்கு என்ன இருக்கப் போகிறது.//

சுதா உங்களைப் போலத் தான் நானும் அவரின் ஆக்கங்களை விரும்பிப் படித்ததுண்டு. இவரிடத்திலும் வைரமுத்துவிடம் உள்ளே அதே கர்வமும், தான் என்னும் அகந்தையும் காணப்படுகிறது. தன்னைத் தானே அக்காலப் பகுதியில் தமி..ஈழ..த்தின் ஆஸ்தான கவிஞர் எனச் சொல்லிக் கொண்டு திரிந்தவர்.

அதுவும் எந்த இறுவட்டுக்கள் வெளி வருவதாக இருந்தாலும் அவை தனக்கு ஊடாக, கலைபண்பாட்டுக் கழகத்தினூடாக வெளியாக வேண்டும் எனும் இறுமாப்போடு செயற்பட்டவர்.

இது பின்னர் வானொலி நிறுவனத்தாரால் இறுவட்டுக்களை வெளியிட வேண்டும் என வெளியீட்டுப் பிரிவு உருவாக்கிய போது உடைத்தெறியப்பட்டது. வெளிச்சம் சஞ்சிகை முதல், அனைத்து வெளியீடுகளையும் தானே செய்ய வேண்டு. தான் தான் கலை கலாச்சார நிகழ்வுகளில் முன்னுக்கு நிற்க வேண்டும் எனும் காரணத்தில் செயற்பட்டு ச.வே பஞ்சாட்சரத்துடனும், கிளிநொ..தூயவன் அரசறிவியற்...கல்லூரி மாணவர்களுடனும் முரண்பட்டு அடிக்க வெளிக்கிட்டுப் போய் இவர் தலமை...இடம் சரணாகதியடைந்தமையும் இவ் விடத்தில் நினைவில் கொள்ளத்தக்க வேண்டிய விடயம்.

இந்த உள் கூத்து, இவரின் எல்லாவற்றிலும் தன்னைப் பிரகடனப்படுத்தி, தானே இவற்றுக்கெல்லாம் முன் நிற்க வேண்டுமென்ற காரணத்தால் தான் ச.வே பஞ்சாட்சரம் கூட தனக்கிருந்த இலக்கிய பணிகளையெல்லாம் விட்டு விட்டு சகிக்க முடியாது கனடாவிற்கு புலம் பெயர்ந்தார்.

நாவண்ணன், முல்லை அன்பன், முல்லை செல்வன்.. எனப் பல கவிஞர்கள் இவரால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். புதுவையை விட தமிழறிவில் நாவண்ணனிற்கு அதிகமாக இருந்தாலும், மேலுடத்தின் செல்ல நாய்க்குட்டியாக புதுவை இருந்ததால் நாவண்ணன் அதிகம் வெளித் தெரியாத அல்லது வெளி உலகால் அடையாளம் காணப்படாதவராக மறைந்து விட்டார்.

நிரூபன் சொன்னது…

நிரூபன் said...
தன் மகனை ஒழித்து வைத்துக் கொண்டு ஊரான் பிள்ளையை உனக்கு வெட்கமில்லையா ? ரோசமில்லையா ? என போருக்கழைத்த கவிஞரின் புத்தகங்களையே விரும்பிப் படிக்கும் எனக்கு வைரமுத்துவிடம் வெறுப்பதற்கு என்ன இருக்கப் போகிறது.//

சகோதரம், தனது மகளை லண்டனிலும் மகனை தட்டிக் கேட்க யாருமில்லாதவர் எனும் நினைப்பில் ஊரெல்லாம் நீல நிற மோட்டார் சைக்கிளில் அலைய விட்டு விட்டு,

‘பெற்றதாயை மற்றொருவன் எட்டி உதைக்கையில் சுமந்து பெற்ற
பிள்ளை சும்மா இருப்பானாயின் அவன் பிள்ளை அல்லப் பெருங் கோழை..
கட்டிய மனைவியை இன்னொருவன் அடிக்கும் போது
கணவன் பார்த்துக் கொண்டிருப்பானாயின் அவன் புருஷன் அல்லப் பொன்னையன்...
என்றெல்லாம் பாடினவர் தானே நம்மவர். இவர் பற்றி இன்னும் நிறைய எழுதலாம். ஆனாலும் பதிவுக்கு தொடர்பில்லாத காரணத்தால் நிறுத்துகிறேன்.

துளசி கோபால் சொன்னது…

நிரூபனின் பின்னூட்டங்கள் வழியாக ஒரு புதையலே கிடைத்துள்ளது.

நன்றி நன்றி

நிரூபன் சொன்னது…

நிரூபன் said...
நிரூபன் said...
தன் மகனை ஒழித்து வைத்துக் கொண்டு ஊரான் பிள்ளையை உனக்கு வெட்கமில்லையா ? ரோசமில்லையா ? என போருக்கழைத்த கவிஞரின் புத்தகங்களையே விரும்பிப் படிக்கும் எனக்கு வைரமுத்துவிடம் வெறுப்பதற்கு என்ன இருக்கப் போகிறது.//

சகோதரம், நான் நாட்டிற்காக வாழ்வேன், நாடே எனக்கு முக்கியம் என்று சொல்லி விட்டுச் சமாதான காலத்தில் தனக்கென்று ஏதுமில்லையே எனப் புலம் பெயர் சமூகத்திடம் கையை விரிக்க, உடனே நோர்வேயிலிருந்து

‘’ஆடையின்றி குளிரினிலே அம்மணமாய் குளிக்கிறோம்
அன்னைத் தமிழை உங்கள்
அழகு கவிகளிலே காண்கிறோம்....
எனத் தொடங்கும் ஒரு நீண்ட வாழ்த்துக் கவியையும் அனுப்பிப் பணமும் அன்பளிப்பாகச் செய்தார்கள். இது பற்றி ஒரு நீண்ட பதிவே போடலாம்.

என்னட்டை மட்டும் வன்னியிலை இருக்கும் போது தனியொரு வீட்டிலை இணைய வசதி இருந்து உந்த வலைப் பதிவு பற்றியும் தெரிந்திருந்தால் எப்பிடி இருந்திருக்கும்?

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

வணக்கம் நண்பரே ...
எனது வலைபூ வருகைக்கு நன்றி ..
நானும் உங்கள் வலைப்பூவில் இணைக்கிறேன்
கலாதமததுக்கு மன்னிக்கவும் . . .

பெயரில்லா சொன்னது…

பாடல் இறுவட்டு அட்டையில் கார்த்திக் நேத்தாவின் பெயரையும் இட வேண்டாம் என்றாராம் இதற்கு என்ன காரணம் என எனக்கு விளக்குங்களேன்//
சினேகன்,பா.விஜய்,முத்துக்குமார் போன்றோர் வைரமுத்துவின் பல தடைகளுக்கு பின்னரே முன்னேறினர் என்பது வரலாறு....அனைத்துபாடலும் நானே எழுதுவேன் என்பது அவர் பிடிவாதம்..இதனால் பல புது கவிஞர்கள் வாய்ப்பு இழந்திருக்கின்றனர்

TamilTechToday சொன்னது…

www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com

ஆகுலன் சொன்னது…

கவிஞ்சர்களுகும் வாரிசு கலாசாரமா....

Amudhavan சொன்னது…

என்னுடைய தளத்தில் உள்ள 'வைரமுத்துவின் சர்ச்சையைத் தூண்டும் பேச்சுக்கள்' பதிவையும் படித்துப் பாருங்களேன்.

vanathy சொன்னது…

தம்பி சுதா, திறமை இருக்கு அதனால் தலைக்கணம் இருக்கு. அவரின் எழுத்துக்களை மட்டும் நான் ரசிப்பேன். மற்றும்படி அவரின் சொந்த வாழ்க்கை, பொது வாழ்க்கை பற்றி கேள்விப்பட்டதில்லை.

இவரை போல இன்னும் நிறைய இருக்கிறார்கள். நமக்கு ஏன் இந்த வம்பு?

இன்றைய பதிவில், ஹீரோ நிருபன்தான்! எவ்வளவு தகவல்களை தெரிந்து வைத்துக்கொண்டு பொழந்து கட்டுகிறார்! துணிச்சலும் வேறு!



நிருபனாகட்டும், சுதாவாகட்டும் அல்லது இறுதிவரை வன்னிக்குள் இருந்து, படாத துன்பங்களைஎல்லாம் பட்டுவிட்டு வந்தவர்கள் அனைவரும், வலையுலகில் தனித்துவமாய் சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள்! நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!





நிரு, சுதா, எனக்கும் தலைக்கனம் புடிச்ச கலைஞர்களை கண்டால் வாந்திதான் வரும்! கிளிநொச்சி ரோட்டு முழுக்க விலை கூடின பிக்கப்புல சுத்தித் திரிஞ்ச அந்த உலைக்களக் காரரை எனக்கும் பிடிப்பதில்லை! ' தகடு ' வைக்கிறதில நம்பர் வன்! ஒருமுறை இவருக்கு

' ஒட்டக் காத்துப் போன ' கதை உங்களுக்குத் தெரியுமா சுதா, நிரு?

நிரூபன் சொன்னது…

ஒட்டக் காத்துப் போன கதை நினைவில்லை சகோதரம் ஓட்ட வடை. கொஞ்சம் விரிவாகச் சொல்லலாம் தானே?

Jiyath சொன்னது…

எனக்குத் தெரியல.

Namy சொன்னது…

Payirumuthu kosukkaga inathai kattikkodukkum oru 'throgi'. Ivrgalukkellam tamil enbadu oru tholil. Tamilanukkaga padada ivargalelam tamilukkaga padugirargalam. Tamilan irundal dhane tamil irukkum. Idu pol katti kodutgu valvadai vida ....koo ... Valalam. Enda ungalukkellam vera tholile illiya? Tamil ... Tamil nu enda Tamilana sagadikkiringa?

தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். உண்மையிலேயே அருமையான பதிவு இது வாழ்த்துக்கள் சார்.

சரியாத்தான் கேட்டிருக்கீங்க...! வைரமுத்துவிற்கு தலைக்கனம் அதிகம் என்றுதான் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இளையராஜாவுடனான பகைக்கு ஒருவேளை வைரமுத்துவின் பங்களிப்புதான் அதிகமோ? எப்படியோ இதனால் நாம் இழப்பதுதான் அதிகம்!

வடலியூரான் சொன்னது…

எனக்கு இவை புதிய தகவ்லாகத் தெரிகின்றன நண்பரே. உமது ஆழமான அலசலுக்கு நன்றி

ம.தி.சுதா சொன்னது…

///// நிரூபன் said...
ஒட்டக் காத்துப் போன கதை நினைவில்லை சகோதரம் ஓட்ட வடை. கொஞ்சம் விரிவாகச் சொல்லலாம் தானே?//////

சகோதரம் விடுங்க விடுங்க அது நீல மோட்டார் சைக்கிள் இந்தியா போக போய் பிடிபட்ட கதையாக்கும்....

நானும் வந்துள்ளேன்..

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஒரு தனி மனிதனின் பண்பினைச் சிதைக்க
இரண்டு விஷயங்கள் போதும்
ஒன்று வித்தகச் செறுக்கு
மற்றோன்று அதிகார நெருக்கம்
இரண்டும் இப்போது அவரிடம்
அதிகம் உள்ளது
இதில் ஏதோ ஒன்று குறையும்போது
அவர் பார்வை பெறுவார்
அதுவரை நாமும் பார்வையற்றவர்போல்
அவரை கண்டுகொள்ளாது இருப்போம்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

டக்கால்டி சொன்னது…

Super...மொத்தத்தில் பல கவிஞர்கள் கலைஞருக்கோ அல்லது அடுத்த முதல்வருக்கோ ஜால்ராக்கள் தான்...
நா.முத்துக்குமாரை எனக்கு பிடிக்கும்

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

தங்கள் பதிவும்,பின்னூட்டங்களும் வைரமுத்து அவர்களைப் பற்றி நிறைய தெரியப்படுத்தியுள்ளது.

Unknown சொன்னது…

நலம் எப்படி இருக்கீங்க நண்பா
சற்று தாமதம்
நல்ல இருக்கு பதிவு

உங்கள் சந்தேகம் நியாயமானது

பிரபலம் ஆனதினாலான நிலமைகள் தான் இவை அதே துறைசார்த்நத வர்களுக்கு வளமையாக ஏற்படும் ஈகோதான்

ஹேமா சொன்னது…

சுதா...இயல்பாகவே கலைஞர்களிர்களிடம் இருக்கும் கர்வம் இவரிடம் இன்னும் அதிகமாக.
இவரைப்போல உள்ளவர்களின் பெயர்ப்பட்டியலே பெரிதாகப் போடலாம் !

Unknown சொன்னது…

Your query has been answered by Reetha, View here to see the answer http://businessvartha.blogspot.com/2010/01/add-top-commentators-widget-in-blog.html

சிவகுமாரன் சொன்னது…

நான் வைரமுத்துவின் ரசிகன். ஆனாலும் அவர் கொஞ்சம் திமிர் படைத்தவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பொன்மணி வைரமுத்துவை , வளரவிடவில்லை அவர் . காரணம் என்ன ?

எல்லா மரங்களும் போதி மரங்களே
பறவையாக இருந்தால்.//
yes.True.

Pranavam Ravikumar சொன்னது…

அருமை.. !

தமிழ் உதயம் சொன்னது…

தானே சிறந்த கவிஞன் என்று சொல்வதற்கும், தானும் சிறந்த கவிஞன் என்று சொல்வதற்கும் நிறைய வித்தியாசமுள்ளது. வைரமுத்து முதல் ரகம்.

S.T.Seelan (S.Thanigaseelan) சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
S.T.Seelan (S.Thanigaseelan) சொன்னது…

சந்தேகங்கள் இருக்கும் போது தான் புதியன பிறக்கிறது, தேடல்கள் அதிரிக்கின்றது.... நிற்க்க தலையில் உங்களுக்கு கனம் இருந்தால் தான் தலைக்கனம் இருக்கும் தப்பே இல்லை.. வைரமுத்து வாரிசுகளை உருவாக்க இல்லை என்பபது புரியவில்லை ஏனென்றால் நானும் அவருக்கு வாரிசே.. மடியில் வைத்து பாடம் சொல்லும் உலகமா இது? மடிக்கணணி போதும் உலகை வலம்வர.. படி படி உலகைப்பிடி.. உன்னையும் உலகம் சுத்தும்.....என்றுதான் சொல்லுவேன் அதனால்தான் நான் தலையில் கனத்தை ஏற்றுகிறேன், விமர்சனத்தில் நேரத்தை செலவிட மறுக்கிறேன்...//நான் குறுகிய காலத்திற்குள் கொஞ்சமாவது முன்னுக்கு வந்ததற்கு இவர்களும் காரணமாகும்// ,இது எனக்கும் பொருத்தமே, அது உங்களுக்கும் சாரும்...

வாழ்துகள்..
சீலன்,
http://vellisaram.blogspot.com/

goma சொன்னது…

சந்தேகமே வேண்டாம் நீங்கள் எழுதியவை அத்தனையும் உண்மையாக வாய்ப்பு இருக்கலாம்.புகழும் பணமும் மனிதனை குருடனாக்கும்

ஜானகிராமன் சொன்னது…

நண்பரே. என்னைப் பொருத்தவரையில் வைரமுத்துவை ஒரு நல்ல கவிஞர். நல்ல மனிதர் அல்ல. சராசரி மனிதனுக்குள்ள ஈகோவும் தற்பெருமையும் அவருக்கும் இருக்கிறது.

நான் ஒரே ஒரு விடயத்தை மட்டும் கூற விரும்புகிறேன்.. கவிஞர் - பாடலாசிரியர் இந்த இரண்டும் இரு வேறுபட்ட விடயங்கள்... ஆகவே இன்றுடன் ஒன்றை கலப்பதை தவிர்க்கவும்... வைரமுத்து ஒரு சிறந்த பாடலாசிரியர் ஆனால் அவரையே மிகச்சிறந்த கவிஞர் எனும்போது சினிமாவுக்கு பாடல் எழுதாத பலர் புறக்கணிக்கப் படுவதை நீங்கள் உணர்வதில்லையா??

ARV Loshan சொன்னது…

வைரமுத்துவின் கவிதைகளையும் பாடல்களையும் நான் ரசிக்கிறேன்..
ஆரம்ப காலத்தில் இதனால் அவரையும் ரசித்தவன் நான்.

பின்னர் கொஞ்சம் அனுபவம் வர அவர் மீதான மயக்கம் குறைந்துவிட்டது.
ஆனாலும் அவரது ஞானச் செருக்கு பல இடங்களில் பிடித்தே இருக்கிறது.
கமல் சொன்னது போல திமிர் தான் அறிவாளிகளின் கேடயமோ? ;)

//குறிப்பு - என்னை வைரமுத்துவிற்கு எதிரானவன் என்று யாரும் தப்புக் கணக்கு போட வேண்டாம்//

இது பொய் என்கிறேன் நான்..
http://www.facebook.com/arvloshan/posts/157450480952876
மதி சுதா அன்று போட்டுள்ள குறிப்பைக் கவனியுங்கள்.. ;)


வைரமுத்து பற்றி இவ்வாறு பல்வேறு சம்பவங்கள் வெளிவருகின்றன.. உண்மையாக இருக்கலாம்.
ஆனால் தனி மனித வழிபாடு எமக்குத் தேவையில்லையே. மனிதரிடமிருந்து வரும் கவிதைகளை மட்டும் ரசிப்போம்.. பாடல்களையும்.

மதுரகன் சொன்ன விடயத்தை மறுக்கிறேன்.
வைரமுத்துவின் பல கவிதைகள் மிகச் சிறந்தவையுமாகும். எனவே சிறந்த கவிஞர்களில் ஒருவராகவும் அவரை ஏற்கலாம். தப்பில்லை.



LOSHAN
www.arvloshan.com

Prabashkaran Welcomes சொன்னது…

தாங்கள் எழுப்பியிருக்கும் கேள்விகள் நியாயமான்வை . புகழ் உச்சத்தில் என்றுமே யாரும் நிரந்தரமாக இருக்க முடியாது காலத்திற்கு அனைவரும் பதில் சொல்லவேண்டும் இதை புரிந்தவர்கட்கு நிம்மதி கிடைக்கும் இல்லையென்றால் இப்படிதான்
writerprabashkaran.blogspot.com

Unknown சொன்னது…

உன் முகவரியை வைரமுத்து முதுகில் ஏனடா எழுதுகிறாய்

murali சொன்னது…

PONMANI HIS WIFE IS VERY FAMOUSE IN HER YOUNGER AGES. SHE IS MORE TALENTED .AFTER MARRIAGE SHE WAS NOT ALLOWED BY VAIRAMUTHU TO SPEAK OR WRITE.

thiyagarajan.s சொன்னது…

சாதாரணமாகவே வைரமுத்து "தான்" என்ற அகந்தையும் கண்ணதாசன்,வாலிபோன்ற முனோடி கவிஞர்களிடம் பொறாமையும் கொண்டவர்.கண்ணதாசனின் மறைவிற்குப் பிறகு தன்னிடம் பாடல் எழுதும்படி கேட்டு வருபவர்களிடம் இனி பட டைட்டிலில் தன்பெயரை கவிஞர் வைரமுத்து என்று போடக்கூடாது கவிப்பேரரசு (அதாவது கண்ணதாசனை கவியரசு கண்ணதாசன் என்று டைட்டிலில் போடுவார்கள்.இவர் அவரைவிட பெரியவர் என்று காட்டவேண்டும் என்பதற்காக)கவிப்பேரரசு வைரமுத்து என்று போடவேண்டும் என்றுகூறியவர்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்