உலக அரங்கில் நகரும் அரசியல் நகர்வுகளில் அடுத்ததாக சூடு பிடிக்க இருப்பது தமிழக தேர்தல் களமாகும்.
அண்மையில் ஒரு இந்திய நண்பர் என்னிடம் அளவளாவும் போது ஒரு கேள்வியைத் தொடுத்திருந்தார் அதாவது தமிழகத்தில் எனக்கு வாக்குரிமையிருந்தால் கலைஞருக்கா அல்லது செல்விக்கா வாக்களிப்பீர்கள் என்று கேட்டார். நான் பதில் சொல்லவில்லை அதையே என் நண்பர் சிலரிடம் கேட்டேன். அத்தனை பேரிடமிருந்தும் நாகரிகமான பதில் கிடைக்கவில்லை. நான் கூட அதற்கு விதிவிலக்கல்ல.
அப்புறம் ஏன் இந்தத் தலைப்பு என்று யோசிக்காதிங்க இந்தப் பரந்து கரு வானத்தில் கூட ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்கள் தான் எமை கவரும் அது போல் தான் இதுவும்.
அந்தத் தருணம் வன்னியின் போர் உச்சத்தை அடைந்திரா விட்டாலும் இடப் பெயர்வும் பண நெருக்கடியும் வாட்டி வதைத்த தருணமாகும். மிக இக்கட்டான ஒரு நெருக்கடி குடும்பச் செலவுகளை பராமதிப்பதென்பது பெரும்பாடாக இருந்த தருணமாகும் அந்த நேரத்தில் தான் பாசம் கொண்ட எம் தமிழ் நாட்டு ரத்த உறவுகளால் எமக்கு “இந்திய மக்களிடமிருந்து” என்ற பேரில் பொதிகள் அனுப்பப்பட்டன.
அந்த நேரத்தில் அது எமக்கு பெரும் உதவியாக இருந்தது அதில் அரிசி, சீனி, பருப்பு போன்ற உலர் உணவுப் பொருட்களும். சவர்க்காரம், சேலை, வேட்டி, சாரம் போன்றவற்றுடன் பெண்களுக்கு முக்கியமான சில துணிகளும், ஒரு பானையும் இருந்தது. (இன்னும் இருந்தது என்று சொன்னார்கள் யாருக்குமே வராததால் தெரியவில்லை).
இந்த இடத்தில் தான் கருணாநிதியின் சமயோசிதம் வெற்றி கொள்கிறது. அவர் தமிழனை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் அதனால் தானோ தெரியவில்லை அரிசிப் பையில் 1000, 1500, 2000 இலங்கை ரூபாக்கள் வைக்கப்பட்டிருந்தது இதில் ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால் இது எல்லோருக்கும் வைக்கப்படவில்லை.
இந்த விடயம் பரிமாறியவர்களுக்கு பின்னர் தான் தெரிந்திருக்க வேண்டும். இந்த ஒரே ஒரு சின்ன விசயம் தான் வன்னித் தமிழன் மனதில் கருணாநிதி மீது இருக்கும் வெண் புள்ளிகளாகும். அதற்காக அம்மாவையும் குறைத்துச் சொல்ல முடியாது காரணம் அவர் ஆட்சிக்கு வந்திருந்தால் நிச்சயம் தமிழீழம் பெற்றுக் கொடுத்திருப்பார். இம் முறை ஆட்சிக்கு வரப் போகிறார் போல அது தான் பெரிதாக அதைப் பற்றி கூறவில்லை.
தேர்தல் ஆணையகமே
எம் மனங்களும் வாக்கிட
ஆசை கொள்கிறது
பெட்டிகளை அனுப்பு
நிரப்பியனுப்புகிறோம்
வாக்குகளால் அல்ல
எம் மனம் போல் தேய்ந்திட்ட
செருப்புகளால்.
45 கருத்துகள்:
எனக்குத்தான் இன்று சுடுசோறு..........ஹ ஹ ஹ ஹா
அருமையான பகிர்வு..நண்பரே
எனது வலைப்பூவில்: சேற்றை வாரியிறைக்கும் வடிவேலு! வீடியோ
///ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால் இது எல்லோருக்கும் வைக்கப்படவில்லை.///
இதில் எனக்கும் வருத்தம் தான்.. இருந்தாலும் சிலருக்காவது கிடைத்திருக்கிறதே...
எனது வலைப்பூவில்: சேற்றை வாரியிறைக்கும் வடிவேலு! வீடியோ
///அதற்காக அம்மாவையும் குறைத்துச் சொல்ல முடியாது காரணம் அவர் ஆட்சிக்கு வந்திருந்தால் நிச்சயம் தமிழிழம் பெற்றுக் கொடுத்திருப்பார்//// அம்மா ஓட்டுக்காக என்னவும் சொல்லுவார்..ஐயா என்னவும் செய்வார் ...
///தேர்தல் ஆணையகமே
எம் மனங்களும் வாக்கிட
ஆசை கொள்கிறது
பெட்டிகளை அனுப்பு
நிரப்பியனுப்புகிறோம்
வாக்குகளால் அல்ல
எம் மனம் போல் தேய்ந்திட்ட
செருப்புகளால்./// super
நல்ல பதிவு சகோ ...
ம்ம்ம்ம்ம் கடந்ததை நினைத்து பார்க்கையில் வருத்தமாகத்தான் உள்ளது
சரியான நேரத்தில்..சரியான,அழுத்தமான பதிவு...
ஆனாலும்கூட கோபம் கோபம்தான்
வணக்கம் சகோதரம், இந்தப் பதிவின் ஒவ்வோர் வரிகளும் கருணாநிதியினதும், அம்மாவினதும் உச்சியில் சம்மட்டியால் அடிப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
அதனால் தானோ தெரியவில்லை அரிசிப் பையில் 1000, 1500, 2000 இலங்கை ரூபாக்கள் வைக்கப்பட்டிருந்தது இதில் ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால் இது எல்லோருக்கும் வைக்கப்படவில்லை.//
எனக்கு கிடைத்த பையில் பணம் இருக்கவில்லை. நீங்கள் கொடுத்து வைச்ச ஆளப்பா.
தேர்தல் ஆணையகமே
எம் மனங்களும் வாக்கிட
ஆசை கொள்கிறது
பெட்டிகளை அனுப்பு
நிரப்பியனுப்புகிறோம்
வாக்குகளால் அல்ல
எம் மனம் போல் தேய்ந்திட்ட
செருப்புகளால்.//
இதனை விட வேறு வார்த்தைகள் தேவை இல்லை.. எங்களின் கடந்த கால அவல வாழ்க்கையினைச் சுட்டுவதற்கு.
இதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு எப்போது புரியப் போகிறது சுதா. அவர்கள் தானே மக்களின் வாழ்வில் தங்கள் மக்களை வாழ வைக்க நினைக்கிறார்கள்.
தான் வாழத் தமிழினம் அல்லாடிய வேளையில் கலைஞர்
தமிழகத்தில் மானாட மயிலாட பார்த்து மகிழ்ந்திருந்தார்!
வலி நிறைந்த வாக்கு வலிக்கிறது மாப்ள!
தங்களின் வேதனை நியமானது...
உங்கள் வலிகள் புரிகிறது.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அமோக வெற்றி பெரும். கருணாநிதி ஒரு சுயநலவாதி. அந்த ஆழ நம்பாதீங்க..
அரிசிப் பையில் 1000, 1500, 2000 இலங்கை ரூபாக்கள் வைக்கப்பட்டிருந்தது இதில் ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால் இது எல்லோருக்கும் வைக்கப்படவில்லை//
அங்கிய்மா...இருந்தாலும் இன்னும் பல உதவிகள் தடுக்கப்பட்டு விட்டன
அருமையான பகிர்வு
//நிரூபன் said...
தான் வாழத் தமிழினம் அல்லாடிய வேளையில் கலைஞர்
தமிழகத்தில் மானாட மயிலாட பார்த்து மகிழ்ந்திருந்தார்!//
நண்பரே தவறுகள் எல்லாமே எம்முடையவை... இதில் இன்னொருவரை நொந்து பயனில்லை நண்பா
சிறந்த பதிவு
காலத்திற்க்கு ஏற்ற சிறந்த பதிவு
அந்த வேதனைகளை யாராலும் மறக்க முடியாது.
தொடருங்கள்.
அந்த தாத்தாவிற்கு எப்போதுமே தமிழ் தலைவர் என்ற பதவி எங்கே கரிகாலன் தட்டிச்சென்று விடுவானோ என்ற பயத்தில் செய்த குள்ளநரித்தனம் தான் உணவு அனுப்பியதும் உண்ணாவிரதம் இருந்ததும்.இரவில் எல்லாமே சிரிப்புத்தானே கலைஞர் tv இல் அவர்பாணியில் கடைசி ஆசை பதவியில் உயிர்போகனும் போல அதுதான் மீண்டும்போட்டியிடுவது. (எனது வலையில்(விடைகொடுங்கள் நினைவுகளே. )
எப்போது தான் அரசியலுக்கு ஓய்வுதியம் வருமோ தெரியவில்லை. அப்போது என்றாலும் இந்த மனுசன் வீட்டுக்கு போவார் என்று சொல்ல முடியாது....என் அப்படி ஒரு அரசியல் வாரிசு என்னும் கிடைக்கவில்லையா.....பிறக்கவில்லையா.. எப்படியோ மற்ற பேய்களை விட இந்த பிசாசு பறவாயில்லை..
அந்தப் படமும் கவிதையும் , சிலருக்கு அந்த படத்தில் இருப்பதாலேயே அடிப்பது போல் இருக்கும்.
அருமை
// அதற்காக அம்மாவையும் குறைத்துச் சொல்ல முடியாது காரணம் அவர் ஆட்சிக்கு வந்திருந்தால் நிச்சயம் தமிழீழம் பெற்றுக் கொடுத்திருப்பார். //
உங்கள் நம்பிக்கை சீரியசான இடுகையில் கூட கிச்சுகிச்சு மூட்டுகிறது...
அம்மா மட்டும் என்னவாம்? வோட்டுக்காக எதையும் சொல்வார். ஆனால் செய்ய மாட்டார்.
அருமையான பதிவு. அம்மா ஆட்சிக்கு வந்திருந்தால் தமிழீழம் அமைந்திருக்காது என்பது எனது வாதம். பசித்தவன் ஒருவனுக்கு ஒரு வேளை உணவிட்டாலும் அவன் சிறந்தவனே.. அவ்வகையில் கலைஞர் பல உதவிகள் செய்துள்ளார். அம்மாவும் செய்துள்ளார். ஒரு வேளை இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாக இருந்திருந்தால். இன்று இலங்கைத் தமிழருக்கு குறைந்தது ஒரு மாநிலமாவது கிடைத்திருக்கும். குறைந்தபட்ச கல்வியும், நிம்மதியும் கிடைத்திருக்கும். பல லட்சம் பேர் இறந்திருக்க மாட்டார்கள் என்பது எனதுக் கருத்து.... ஊழலும், அரசியலும் இருந்திருக்கும்... திமுகவும் அதிமுகவும் அங்கும் இருந்திருக்கும் ....
இந்தப் பரந்து கரு வானத்தில் கூட ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்கள் தான் எமை கவரும் /
o.k.. நட்சத்திரம் நன்றாக மின்னுகிறது.
சரியான நேரத்தில் வந்த சரியான பதிவு சுதா..
அட... என்ன ஆக்ரோசமான பகிர்வு..? கருணாநிதி படிக்க நேர்ந்தால் தூக்கில் தொங்கிவிடுவாரே?
கோபத்தை குறைச்சுக்குங்க சுதா.. (சூப்பர் பதிவு..) ....
அருமையான பதிவு சுதா..
super :) ..
போங்க பாஸ் ..நம்ம ஆளுங்களுக்கே இப்ப உள்ள பிரச்சனை கலைஞர் அல்ல .ஸ்ரீலங்கா கப் வெல்லுமா இல்லையா எண்டது தான் .. காமன் லயன்ஸ் என்ற கோசங்களில் புரட்ச்சி வெடிக்கிறது .. கப் வேண்டதும் மனித உரிமை அதிகாரிகளும் தமிழர்களும் மகிழ்ச்சி வெள்ளத்திலை டான்ஸ் ஆட போறாங்க .. கருணாநிதி கவிதை எழுதுவாரு ..
இம் முறை ஆட்சிக்கு வரப் போகிறார் போல அது தான் பெரிதாக அதைப் பற்றி கூறவில்லை..............
//////////////////////////////////////
தெளிவாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் அம்மாவை பற்றி ...............
//அட... என்ன ஆக்ரோசமான பகிர்வு..? கருணாநிதி படிக்க நேர்ந்தால் தூக்கில் தொங்கிவிடுவாரே?
போங்க பாஸ் ........இவுங்கல்லாம் செருப்புல அடிச்சா கூட வாங்கிக்குவாங்க ஓட்டுக்காக .......
AROOKARA...
ஆஹா..நாம திரும்ப வந்துட்டோம்ல!!!! சிறிய ஒரு இடைவெளியின் பின்.
உங்கள் உள்ளத்து உண்ர்வுகளை நச்சென்று பதிவு செய்திருக்கீங்க.
மிக அருமையான பதிவு சகோ.
மன்னிக்கவும் பிந்திய கருத்துரைக்கு.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் எப்பவுமே செய்யலாம்தானே.தேர்தல் காலத்தில மட்டும்தான் செய்யணுமா?எல்லாமே வெறும் நடிப்பு.
வணக்கம் தோழர் மது சுதா,
இவர்களால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள வலியில் கொஞ்சமும் குறைந்ததல்ல இவர்களால் நாகல் பெரும் வலியின் அவஸ்தை.
உங்களது வலை முகவரியினை எனது வலையின் முகப்புப் பக்கத்தில் வைத்திருக்கிறேன். இனி அவ்வப்போது பார்ப்பேன். மிக்க நன்றி தோழர்.
""இதில் ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால் இது எல்லோருக்கும் வைக்கப்படவில்லை.
இந்த விடயம் பரிமாறியவர்களுக்கு பின்னர் தான் தெரிந்திருக்க வேண்டும்."""" அருமை....
எனக்கொரு வோட்டு தரலாமே தமிழக தேர்தலில்...நான் யாருக்கு ஒட்டு போடுவேன் சொல்லுங்கள்???
நாளை இங்கு வாழப்போவது நம் செல்வங்களே என்பதால், இந்த தேசமும் எம் தமிழ் நாடும் போகின்ற திசை நினைத்து ... என்ன சொல்ல?
கொஞ்சம் இங்கும் வாங்களேன்!
http://sagamanithan.blogspot.com/
இரண்டு விதமான கருது உண்டு சம்ஜோசிதம் கருதி நான் சொல்லவில்லை
இறுதியாய் இருக்கும் கவிதையும், அதற்கான படமும் சுளீர்..
கருத்துரையிடுக