என்னோட அம்மா
ரொம்பவே பாவம்
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்
தேயிலை போட்டதால் தான்
தேநீர் என உணர்ந்தும்
மனதால் மட்டும் சீனி போடுகிறார்
இரு முறை உப்பிட்ட குழம்பில்
கொஞ்சம் தந்து கேட்கிறார்
உப்பிட்டேனா என பார்த்து சொல் என்று
ரொம்பவே பாவம் அம்மா
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்
ஆசையாய் வைத்த கறியில்
ஒரு கறியேனும் போட மறந்து போய்
இரண்டாம் தடவை உண்ணென
குழந்தையாய் கெஞ்சுகிறார்
மணிக்கூட்டு அலாரத்துக்கு கூட
மணிக்கொரு சாத்திரம் வைத்து
தன் மனசை தேற்றுகிறார்
ரொம்பவே பாவம் அம்மா
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்
பெற்றெடுக்கா பிள்ளைகளான
பல்லிகளுக்கு உணவளிக்க
தனியாய் ஒரு மின்குமிழ்
ஒதுக்கி வைத்திருக்கிறார்
பல்லி மிச்சம் வைத்த
ஒற்றை பூச்சியேனும்
அடிக்கடி எட்டிப் பார்க்கும்
ஏதாவது ஒரு உணவுக்குள்
ரொம்பவே பாவம் அம்மா
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்
இத்தனைக்குள்ளும்
அறுசுவை உணவே உண்கிறேன்
அத்தனை குறையையும்
தான் சந்தோசமாயிருப்பதாய்
நடித்து அளிக்கும்
பாசம் என்ற சுவையூட்டியால்
அறு சுவை உணவே உண்கிறேன்
ரொம்பவே பாவம் அம்மா
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
ரொம்பவே பாவம்
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்
தேயிலை போட்டதால் தான்
தேநீர் என உணர்ந்தும்
மனதால் மட்டும் சீனி போடுகிறார்
இரு முறை உப்பிட்ட குழம்பில்
கொஞ்சம் தந்து கேட்கிறார்
உப்பிட்டேனா என பார்த்து சொல் என்று
ரொம்பவே பாவம் அம்மா
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்
ஆசையாய் வைத்த கறியில்
ஒரு கறியேனும் போட மறந்து போய்
இரண்டாம் தடவை உண்ணென
குழந்தையாய் கெஞ்சுகிறார்
மணிக்கூட்டு அலாரத்துக்கு கூட
மணிக்கொரு சாத்திரம் வைத்து
தன் மனசை தேற்றுகிறார்
ரொம்பவே பாவம் அம்மா
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்
பெற்றெடுக்கா பிள்ளைகளான
பல்லிகளுக்கு உணவளிக்க
தனியாய் ஒரு மின்குமிழ்
ஒதுக்கி வைத்திருக்கிறார்
பல்லி மிச்சம் வைத்த
ஒற்றை பூச்சியேனும்
அடிக்கடி எட்டிப் பார்க்கும்
ஏதாவது ஒரு உணவுக்குள்
ரொம்பவே பாவம் அம்மா
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்
இத்தனைக்குள்ளும்
அறுசுவை உணவே உண்கிறேன்
அத்தனை குறையையும்
தான் சந்தோசமாயிருப்பதாய்
நடித்து அளிக்கும்
பாசம் என்ற சுவையூட்டியால்
அறு சுவை உணவே உண்கிறேன்
ரொம்பவே பாவம் அம்மா
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
5 கருத்துகள்:
அருமையான கவிதை அம்மா பாவம்!ம்ம்
ரொம்பவே பாவம் அம்மா
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்
நன்றிச் செதுக்கல்..!
வணக்கம் சேர்!நல்லா இருக்கிறீங்களா?///இதெல்லாம் எங்கைய்யா பதுக்கி வச்சிருக்கிறீங்கள்?///அருமையான அம்மா கவிதை.வாழ்த்துக்கள்!
@தனிமரம் said.
நன்றி நேசண்ணா....
@இராஜராஜேஸ்வரி said..
நன்றி அக்கா
@Yoga.S. said...
நன்றி ஐயா சும்மா ஒரு முயற்சி தான்...
கவிதை ரொம்ப அருமை...
வாழ்த்துக்கள் சகோதரா...
கருத்துரையிடுக