செவ்வாய், 8 ஏப்ரல், 2014

இலங்கை குறும்படத்துறையில் மொபைல் புரட்சியோடு எம் படைப்பு

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
முற்குறிப்பு - இது ஒரு சுயபுராண ஆக்கமாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் “மிச்சக்காசு“ என்ற குறும்படத்தை வெளியிட்டிருந்தோம் இக்குறும்படம் sumsung s3 மொபைலில் படமாக்கப்பட்டு sumsung galaxy tab ல் இசை அமைக்கப்பட்டும் இருந்தது.
இப்படைப்பில் மதுரன், துவா, மதீசன், சங்கர், சுதேசினி, சுஜிதா போன்றோர் உழைத்திருந்தார்கள்.
பல்வேறு பட்ட நாடுகளில் இருந்தும் பல்வேறுபட்ட துறைசார்ந்தவர்களிடம் இருந்தும் இப்படைப்புக்கு பாராட்டுக் கிடைத்தது ஒரு எதிர் பார்க்காத வெற்றி ஒன்றாகும்.
அதிலும் தென்னிந்திய இயக்குனர் ஒருவரின் பாராட்டுக்கிடைத்தது மிகப் பெரும் சந்தோசமாக இருந்தது.
குறிப்பாக உள் நாட்டிலேயே ஒரு சில ஊடகங்கள் தவிர மற்றைய எதுவும் கவனிக்கத் தவறிய படைப்பு ஒன்றை இந்திய ஊடகங்கள் கவனத்தில் எடுத்தது வியப்பை அளித்தது.
உ+ம் - சில நட்களுக்கு முன்னர் THE HINDU பத்திரிகையில் விமர்சனம் ஒன்று வெளியாகியிருந்தது.
அத்துடன் சிறந்த திரைக்கதைக்கான விருது ஒன்றையும் இக்குறும்படம் பெற்றுக் கொடுத்திருந்தது.
அதை விட எமக்கு பெருமை அளித்த விடயங்களில் ஒன்று MRTC ன் ஆவணப்பட செயலமர்விற்கு வந்திரந்த ஜேர்மனிய இயக்குனர் அலெக்சாண்டர் ரைடல் இப்படைப்பைப் பார்த்து வியந்து அளித்த கருத்துக்கள் தான். இப்படைப்பின் தரத்தை தனது நண்பர்களுக்கு காட்ட என அப்படைப்பை தன்னொடு எடுத்துச் சென்றதும் மிக முக்கிய சம்பவமாகும்.
அவர் கருத்தக்கள் இவ் ஒலித் தொடுப்பில் இருக்கிறது

 

இக்குறும்படத்துக்கு வெளிப்படையான கருத்துக்களைத் தந்ததோடில்லாமல் பகிர்ந்து எமக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்.

மிச்சக்காசு குறும்படத்தைக் காண


இப்படைப்பை வழங்கிய அதே குழுவினர் “ஆய்வம்“ என்ற பெயருடன் இன்று இரவு 7 மணிக்கு “தொடரி“ என்றதொரு வித்தியாசமான படைப்புடன் உங்களை சந்திக்கிறார்கள். இக்குறும்படத்தில் 10 சோடி கால்களும் ஒரு சொடி கைகளும் மட்டுமே நடித்திருந்தமை குறிப்பிடத் தக்க விடயமாகும்.


நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

13 கருத்துகள்:

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

வணக்கம்,ம.தி.சுதா!நலமா?///இந்தியப் பத்திரிகை மட்டுமல்ல,இலங்கைப் வணக்கம்,ம.தி.சுதா!நலமா?///இந்தியப் பத்திரிக்கை மட்டுமல்ல,இலங்கைப் பத்திரிகையும்(வீரகேசரி) உங்கள் 'மிச்சக் காசு' குறும்படத்தை விமர்சித்ததே,பார்க்கவில்லையா?பார்க்க;நம்மவர் களம்: மிச்சக்காசு குறுந்திரைப்படம்
Saturday, 29/03/14.///'தொடரி' குறும் படத்தையும் எதிர்பார்த்து.................நன்றி!பத்திரிகையும் உங்கள் 'மிச்சக் காசு' குறும்படத்தை விமர்சித்ததே?பார்க்க;நம்மவர் களம்: மிச்சக்காசு குறுந்திரைப்படம்
Saturday, 29/03/14.///'தொடரி' குறும் படத்தையும் எதிர்பார்த்து.................நன்றி!

ம.தி.சுதா சொன்னது…

@Subramaniam Yogarasa said...

வணக்கம் ஐயா நலமாக இருக்கிறிங்களா. அப்பப்போ பதிவு போட்டால் மட்டும் தான் சந்தித்துக் கொள்கிறோம்.

ஃஃஃஃசில ஊடகங்கள் தவிரஃஃஃஃ என்று தான் ஐயா போட்டிருந்தேன், சுடர்ஓளி, வீரகேசரி, தமிழ் இதழ் மட்டுமே இக்கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது மற்றவை எவையும் கண்டு கொள்வதே இல்லை. :)

பெயரில்லா சொன்னது…

unkal kurumpadam mikavum nanraaka ullathu.tamilnaadil irunthu varum anekamaana kurumpadankalai paarkkum pothu, athu oru padamaakave therium. aanaal unkal kurumpadam, yathaarthathamaai ullathodu, kadaisiyil enkalai vaai vittu sirikka vaiththu vittathu.

naan ithai ellorudanum pakirnthu konden.

unkal muyartsi thodara nal vaazththukkal

தனிமரம் சொன்னது…

வணக்கம் ஐயா தங்களின் புதிய படைப்பைக் காணும் ஆவலில்!ஊடகம்கள் சில இன்னும் கண்டுகொள்ளாமையைத்தான் செய்கின்றது.

Neechalkaran சொன்னது…

மகிழ்ச்சி சகோதரரே.வாழ்த்துக்கள்

ம.தி.சுதா சொன்னது…

@Krishnapillai Manivannan said

மிக்க நன்றி உறவே

@நேசண்ணா
நன்றி அண்ணா வெளியிட்டாச்சு பாருங்கோ.

ம.தி.சுதா சொன்னது…

@நீச்சல் காரன் said

மிக்க நன்றி சகோ

வாழ்த்துக்கள் சுதா...
தொடரட்டும் உங்கள் படைப்புக்கள்...

ம.தி.சுதா சொன்னது…

@சே. குமார் said...
மிக்க நன்றி அண்ணா

Unknown சொன்னது…

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்,ம.தி.சுதா!நலமா?////முக-நூல் வெறுப்பின் உச்சம்.இங்கே சந்திப்போம்,பிள்ளையார் அருள் கிட்டினால் நேரிலும்!

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்

வலைச்சர தள இணைப்பு : டெலிபோன் தொல்லை!!!!!!!!

Unknown சொன்னது…

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top