வணக்கம் உறவுகளே
இந்த வருடமே என் திரை உலகப்பயணத்தில் முழு மூச்சாகத் தொழிற்பட்ட ஆண்டாகும். வரும் ஆண்டு எப்படி அமையுமோ எனத் தெரியாமையால் ஒரு காலப்பதிவாக நான் மீளத்தட்டிப்பார்க்கும் போது இருக்கட்டுமே என இப்பதிவை பதிந்து வைக்கிறேன்.
யாருமே இந்தளவு படைப்புக்களில் மற்றும் இந்தளவு கலைஞர்களுடன் இணைந்து ஒரு வருடத்தில் பணியாற்றியிருக்க முடியாது என்ற ஒருவித தலைக்கனமற்ற இறுமாப்புடனேயே இப்பதிவை பகிர்கிறேன்.
1. ”சுவர் தேடும் சித்திரம்” காணொளிப்பாடல்.
- இப்பாடல் பிரான்சில் இடம்பெறும் ஒளிக்கீற்று போட்டிக்காக செய்யப்பட்டு அப்போட்டியில் ”நடுவர் தெரிவு விருது” பெற்றதுடன் குழந்தை நட்சத்திரத்துக்காக nominate ஆகியிருந்தது.
- சுடர் விருதில் சிறந்த பாடல் இயக்குனருக்கான விருதையும் சிறந்த பாடலாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
- வேல்ஸ் விருது விழாவில் 7 துறைகளுக்கு nominate ஆகியிருந்ததுடன் சிறந்த பாடகருக்கான விருதையும் பெற்றிருந்தது.
”இப்பாடலானது வேறு ஒரு இசையமைப்பாளரின் பாடலுக்காக காணொளி செய்யப்பட்டு போட்டியின் 3 நாட்களுக்கு முன்னர் அவர் தனது பாடலை தன் இயக்கத்தில் அனுப்ப முடிவெடுத்ததால் 3 நாட்களில் உருவாக்கப்பட்ட ஒலிவடிவத்துக்கு மீள் காட்சி எடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தது”
பாடல் தொடுப்பு - https://www.youtube.com/watch?v=5ZZKP0NR0cw&index=1&list=PLvypgJcFnUlM--gTlUoI-wPw0dOxpABVf
2 . ”மிச்சக்காசு” குறும்படம்.
2013 ம் ஆண்டு ரொக்கட் ராஜா, துலைக்கோ போறியள் குறும்படத்துக்கு பிறகு தயாரிப்பாளர் இல்லாமல் ஒதுங்கியிருந்த நேரம் திரைக்கதையை மட்டுமே நம்பி சாம்சுங் கைப்பேசியில் உருவாக்க முடிவெடுத்து உருவாக்கிய 4 நிமிடக் குறும்படம். இக்குறும்படத்தை ஈழத்திரை இணையத்தளம் விலை கொடுத்து அதன் உரிமத்தை வாங்கி வெளியிட்டிருந்தது.
இலங்கைக்கு வந்திருந்த ஜேர்மானிய இயக்குனர் அலெக்சான்டர் ரைடல் இக்குறும்படத்தை தன்னுடைய நாட்டினருக்கு காட்ட என அனுமதி பெற்று பெற்றுச் சென்றிருந்தார்.
ஈழத்துக் குறும்படம் ஒன்றுக்கு இந்தியாவின் பெரிய ஊடகம் ஒன்று விமர்சனம் வழங்கியது இதற்கு தான் முதன் முறை என பல இந்தியரால் பாராட்டப்பட்டிருந்தது. "THE HINDU" இதழில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
எனக்கு பெரிய அடையாளம் ஒன்றைக் கொடுத்த இக்குறும்படம்
- AAA விருது விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும்
- சுடர் விருது விழாவிலும்
-இளமை விருது விழாவிலும் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும் பெற்றிருந்தது.
படத் தொடுப்பு - https://www.youtube.com/watch?v=yrMBar0cnM4&list=PLvypgJcFnUlPqFf2Dh0GCsGHB7XE7KDwb&index=2
3. ”தொடரி” குறும்படம்.
10 சோடி கால்களையும் ஒரு சொடி கைகளும் மட்டுமே நடித்திருந்த இந்த 4 நிமிடக் குறும்படத்தையும் கைப்பேசியிலேயே எடுத்து முடித்திருந்தோம்.
சிறந்த ஒலியமைப்புக்காக இப்படம் பலரது பாராட்டைப் பெற்றிருந்தது.
படத் தொடுப்பு - https://www.youtube.com/watch?v=tiRhVCeDkIY&list=PLvypgJcFnUlPqFf2Dh0GCsGHB7XE7KDwb&index=5
4. ”தழும்பு” குறும்படம்.
ஒரு முன்னாள் போராளியின் இந்நாளைய மன வடுவை காட்டும் இக்குறும்படத்தை பிரான்ஸ் நாவலர் விருது விழாவுக்காக எடுத்திருந்தோம். பலத்தை சர்ச்சைகளுக்குள் என்னை சிக்க வைத்த இக்குறும்படத்துக்கு பல முன்னாள் போராளிகளின் நேரடியானதும் தொலைபேசியூடானதுமான பாராட்டு பெரிய அங்கீகாரமாக அமைந்தது.
- நாவலர் விருது விழாவில் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தது.
- ரதி விருது விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றுக் கொடுத்திருந்தது.
படத் தொடுப்பு - https://www.youtube.com/watch?v=yQrBLcRJLOw&list=PLvypgJcFnUlPqFf2Dh0GCsGHB7XE7KDwb&index=4
5. ”கொண்டோடி” குறும்படம்
வன்னியில் இருந்து மீண்டு வந்த பெண்ணொருவர் மீது சமூகம் நோக்கும் தப்பான பார்வையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இக்குறும்படம் ஒரு உண்மைச் சம்பவத்தை முதல் முதல் காட்சிக்கு கொண்டு வந்தமைக்காக பலரால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
படத் தொடுப்பு - https://www.youtube.com/watch?v=9bIaVGeAA98&list=PLvypgJcFnUlPqFf2Dh0GCsGHB7XE7KDwb&index=1
6. ”கரகம்” ஆவணப்படம்
வல்வெட்டித்துறை கம்பர்மலையை சேர்ந்த மிக மூத்த கலைஞரான கந்தையா விசியரத்தினம் அவர்களை வைத்து முழுமையாக உருவாக்கப்பட்ட 28 நிமிடங்களைக் கொண்ட இவ் ஆவணப்படத்தை கரவெட்டி பிரதேசர் செயலகம் தயாரித்திருந்தது.
7. ”சுவர் தேடும் சித்திரம்” குறும்படம்
சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் உருவாக்கப்பட்ட இக்குறும்படம் கைவிடப்பட்டிருந்தது. ஆனால் அடுத்த வருடம் இக்குறும்படம் வெளியிடப்படும்.
8. தண்ணீர் சம்மந்தமாக நான் உருவாக்கிய ”FINAL DROP" ஒரு நிமிடப்படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.
இவை தவிர இந்த ஆண்டும் தொடர்ந்து 4 வது வருடமாக ”தாத்தா” குறும்படம் வெளியிட முடியாமல் ஏமாந்து அடுத்த ஆண்டுக்குள் நுழைகிறேன்.
இவை தவிர நண்பர்களின் படங்களாக.
1. ”குறுவட்டு” குறும்படம்.
அமெரிக்க நிறுவனம் ஒன்றால் நடாத்தப்படும் 48 மணித்தியாலக் குறும்படப் போட்டியில் சகோதரன் லோககாந்தனின் ராஜேஸ்ரோன் நிறுவனத்தில் சார்பில் லோககாந்தனுடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி படமாகும். அத்துடன் ஒரு பாத்திரத்திலும் நடித்திருந்தேன்.
- இக்குறும்படமானது சிறந்த படத்துக்கான விருதையும் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெற்று அதில் உழைத்த 14 பேருக்கும் பெருமை சேர்த்து அமெரிக்கவரை இறுதிப் போட்டிக்காக சென்றிருக்கிறது.
பட முன்னோட்டம் - https://www.youtube.com/watch?v=Q4V9q1BdO4Q&index=2&list=PLvypgJcFnUlPLbDIUCq22lPJuh_iEp7ru
3. பிறேமின் இயக்கத்தில் ”போலி” குறும்படம்.
இக்குறும்படத்தில் பிச்சைக்காரனாக நடித்தமைக்காக திருவணோர் ரோல்கிஸ் நிறுவனத்தால் சிறந்த நடுவராக பிரதி அமைச்சர் பிரபா கணேசன் மூலம் விழா ஒன்றில் கௌரவிக்கப்பட்டேன்.
படத் தொடுப்பு - https://www.youtube.com/watch?v=IClEKlJTfiI&list=PLvypgJcFnUlO6aTXuOSJRvWE0npP_0K4d&index=1
4. துவாரகனின் இயக்கத்தில் ”பிரபல இயக்குனர்”
ரஜீவனின் கதையான இக்கதையை வைத்து துவாரகனால் இயக்கப்பட்டிருந்த இந்த horror குறும்படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.
பட முன்னோட்டம் - https://www.youtube.com/watch?v=_oXVfMD1J5Q&index=1&list=PLvypgJcFnUlPLbDIUCq22lPJuh_iEp7ru
5. சன்சிகன் இயக்கத்தில் ”அகமுகி” குறும்படம்.
இன்னும் வெளியிடப்படாத இக்குறும்படத்தில் இரண்டு வெவ்வேறு பாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருந்தேன்.
பட முன்னோட்டம் - https://www.youtube.com/watch?v=nmqI7-zwxlo&list=PLPwmD5Jm3fOiZPnIALBCuepG55kAvQR3t&index=2
6. என் சிறுகதை ஒன்றை இயக்குனர் N.S ஜனா குறும்படமாக எடுத்திருந்தார்.
7. ஜசிதரன் இயக்கத்தில் ”எண்ணங்கள்”
ஒளிப்பதிவாளர் ஜசிதரன் அண்ணாவால் வட்டக்கச்சி பகுதியில் வைத்து இயக்கப்பட்ட இக்குறும்படத்துக்கான பின்கள வேலைகள் நடந்த வண்ணம் உள்ளது.
8. லோககாந்தன் இயக்கத்தில் நடைபெறும் ”யாழ்தேவி” படப்பிடிப்பு இப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அத்துடன் அவருடைய இயக்கத்தில் அமைந்த இளவரசர்கள் குறும்படம் பின்கள வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
9. தங்கை ”மதுசாவின்” இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ”நிழல் பொம்மை” குறும்படம் அடுத்த ஆண்டு வெளியிடப்படும்.
மேலே நான் குறிப்பிட்டுள்ள இப்படைப்புக்காக என்னோடு பலர் உழைத்திருக்கிறார்கள். தனித்தனியே நன்றி சொல்ல முடியாமைக்கு மன்னிக்கவும். என் வெற்றிக்கு காரணமாக இருந்த உங்களுக்கு நன்றிக்கடனுடன் என்றும் உங்களுடனேயே பயணிப்பேன்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
இந்த ஆண்டு நவராத்திரி விழாவுக்காக நான் இயக்கி நடித்திருந்த நகைச்சுவை நாடகத்திற்கான தொடுப்பு - https://www.youtube.com/watch?v=tLkO6wpi1mE&index=1&list=PLvypgJcFnUlMKufFE9e7yoQOvJ2SgHCBk
இந்த ஆண்டு நான் வழங்கியிருந்த பேட்டிகள் தொடர்பான தொடுப்பு -
தினக்குரல் - http://www.mathisutha.com/2014/12/mathisiutha-interview.html
ஈழத்திரை - https://www.youtube.com/watch?v=btMCg4Tsoec&index=2&list=PLvypgJcFnUlNpPva-GaN-NPcUJE8_nb7Z
ரூபவாகினியின் நேத்ரா தொலைக்காட்சி - https://www.youtube.com/watch?v=HHlCnggZrKw&index=1&list=PLvypgJcFnUlNpPva-GaN-NPcUJE8_nb7Z

5 கருத்துகள்:
கருத்துரையிடுக