புதன், 28 ஆகஸ்ட், 2013

துலைக்கோ போறியள் குறும்படம் உங்கள் பார்வைக்கும் விமர்சனங்களுக்குமாக..

4:09 PM - By ம.தி.சுதா 9


வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
என் குறும்படக் கனவுக்கு தீனி போடுவதற்காக இருக்கும் வளங்கள் பொருளாதாரா வசதிகளைக் கொண்டு என்னால் இயன்ற அளவுக்கு இப்படைப்பை படைத்திருக்கிறேன்.
இது சம்மந்தமான வெளிப்படையான கருத்துக்களையும் விமர்சனங்களையும் தங்களிடம் எதிர் பார்ப்பதற்காகவே இப்படைப்பை துணிந்து வெளிக் கொணர்கிறேன்.
இன்னுமொரு படைப்பை படைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவை எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இப்படைப்பை படைப்பதற்காக என்னோடு எந்தவித எதிர் பார்ப்புமின்றி உழைத்தவர்கள் தொடர்பாக முன்னோட்ட வெளியீட்டுப் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன் (பதிவுக்கான தொடுப்பு இங்கே)

சில தனிப்பட்ட சிக்கல்கள் காரணமாக இக்குறும்படத்தை குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளிக்கொணர முடியாமல் போனமைக்காக சிரம் தாழ்ந்து அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.


என சிலவற்றை பூரண திரைக்கதையுடன் கைவசம் வைத்திருந்தாலும் காலம் நேரம் அதற்கான பொருளாதார வசதி கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் ஒரு படைப்புடன் சந்திக்கிறேன்.
குறிப்பு - படைப்புகளுக்காக இணைய விரும்புவோர் இணைந்து கொள்ளலாம். அத்துடன் மேற்குறிப்பிட்ட திரைக்கதை தேவைப்படுபவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

குறும்படத்திற்கான தொடுப்பு இது தான்
http://www.youtube.com/watch?v=ocIKF_H1q_E&feature=player_embedded

படம் இதோ

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

You might also like:

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

9 கருத்துகள்:

K சொன்னது…

மச்சீ, படம் பார்த்துவிட்டேன்! இதற்கான விமர்சனத்தை நாளை என் ப்ளாக்கில் எழுதுகிறேன்! கையில் திரைக்கதைகளை வைத்திருக்கிறாய்! வாழ்த்துக்கள்! எனக்கும் ஒரு படத்தை தயாரிக்க ஆர்வம் இருக்கிறது...! இதுபற்றி உன்னுடன் தனிப்பட பேசுகிறேன்!!

என்றைக்கும் போல, உன் முயற்சிகள் எல்லாத்துக்குமே என் வாழ்த்துக்கள் இருந்துகொண்டே இருக்கும்!!

Unknown சொன்னது…

மூன்று தடவை பார்த்தேன் தம்பி அருமையான சுருக்கமான கதை தம்பி (10:38 நிமிடங்கள் போதாது என்ற ஏக்கம்) உண்மையில் புகழுக்காக வீண் செலவு செய்வதைப் தவிர்த்துவிட்டு பாதிக்கபட்ட எமது மக்களின் பசியைப் போக்குவதற்க்கு அனைவரும் சிந்தித்து செயட்ப்படவேண்டும்.

உங்கள் ஒவ்வொரு முயற்ச்சியும் முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஒரு எடுத்துகாட்டு! வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

அண்ணா மிகவும் நன்றாக இருக்கிறது நான் இரண்டு தடவை பார்த்திருக்கிறேன் இதில் நீங்கள் ஒரே நேரத்தில் எவ்வளவோ விசயத்தை வெளிக்காட்டியிருக்குறிங்க பிரமாதம் அதுவும் எமது மொழியில் கேட்க்கும் போது அளவிட முடியாத ஆனந்தம் .உங்களின் நடிப்பும் முகபாவனையும் இயற்க்கையாகவே இருக்கிறது பார்க்கும் போது சிரிப்பு வருகிறது .
ஆனால் என்ன ஏரம்பு மாதிரியான ஆட்களின் செயலை நினைக்கும் போது தான் மன வருத்தமாக இருக்குறது நடப்பதை அப்படியே காட்டியிருக்குறிங்க

வெளிநாடுகளில் இருந்து வந்து தனது பணத்திமிரை காட்டுவோருக்கும் செருப்படி .

எப்படி இருந்தாலும் இருக்கட்டும் ஆனால் .............
நீங்கள் இப்ப துலைக்கோ போரியல்

Unknown சொன்னது…

நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்தேன் எதிர்பாராமல் பார்த்தது முதல் சுவாரஸ்யம்.
படத்தில் நடித்திருக்கின்றீர்கள் என்பதைவிட எல்லோருக்கும் பிடித்திருக்கின்றீர்கள் என்பதே சரியாக படுகிறது.
இன்றைய யாழ்ப்பாணத்தின் நடைமுறை போக்கை அப்படியே வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது துலைக்கோ போரியள்..... முடிந்தால் அடுத்த படைப்பில் உங்களுடன் இணைய ஆசை. வாழ்த்துக்கள் அண்ணா!! :)

Unknown சொன்னது…

அருமையாக இருந்தது,வாழ்த்துக்கள்! எதிர்பாராத திருப்பங்களுடன்,கதை நகர்த்திய விதம் அருமை,வாழ்க!வளர்க!!!

ஆத்மா சொன்னது…

வெளிநாடு இருந்து வந்தால்
ஒன்னு கடையைக் கட்டுறயள்
இல்லாட்டி கோயிலைக் கட்டுறயள்
மிஞ்சி மிஞ்சிப் போனால் கல்யாணத்தைக் கட்டுறயள்

MaThi Sutha இது நல்ல நகைச்சுவையாக இருந்தாலும் இதில் சுதாவின் ஆழமான ஒரு கருத்தும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணம் மூலம் அல்லது வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அதிகமான பணத்தினை கோயில்களுக்காக செலவிடுவது எனும் விடயத்தில் இயக்குனர் சுதாவிற்கு நீண்ட நாட்களாக உடன்பாடில்லை என்பதனை ரொம்ப நாளைக்கு முன்னர் பேஸ்புக்கில் நடந்த ஒரு விவாதத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.

அந்தக் கருத்தினை நகைச்சுவையோடு கலந்து சொன்னவிதம் பிடிச்சிருக்கிறது... அதே கருத்தினை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக பிரிதொரு இடத்திலும் சொல்லியிருக்கலாம். அதாவது வெளிநாட்டுப் பார்சல் கொடுக்கச் செல்லுமிடத்தில் அந்தப் பெரியவர் மூலமும் இந்தக் கருத்தினை வெளிப்படுத்தியிருக்கலாம்.

எத்தனையோ மக்கள் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக் கூட வழியில்லாமல் இருக்கும் நிலையில் கோடி கோடியாக பணத்தினை கட்டடங்களுக்கும் கோயில்களுக்குமென செலவிடுவது அவசியம் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

எப்படியோ சமூகத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகள் மற்றும் கேளிக்கைகளுக்காக பணத்தினை வாரி இறைத்தல் என்பவை இக் குறும்படத்தின் பின்னர் குறையும் என எதிர்பார்க்கிறேன்

நல்லதொரு படைப்பினைத் தந்த குழுவினருக்கு மனதார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

HamSon சொன்னது…

மதிசுதாவின் இயல்பான நடிப்பு பாராட்டத்தக்கது. நகைச்சுவாக சொன்ன சில சமூக பிரச்சினைகள் பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது வெளிப்படை. பின்னணி இசை அடிக்கடி வாயில் முணுமுணுக்க வைக்கிறது. இந்த படைப்படைபின் பங்காளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....

Unknown சொன்னது…

பட முடிவில உங்கள அடிச்ச 'ஆளை' நான் ஒருக்கா சந்திக்க வேணும்!

test சொன்னது…

'துலைக்கோ போறியள்?'

'இந்தளவிற்கு எதிர்பார்க்கவில்லை' - இதுமட்டுமே படம் பற்றி முதலில் கூறியிருந்தேன். எம் நாட்டவரிடம் கற்றுக் கொண்ட பாடங்கள் அப்படி! மதிசுதாவின் முகபாவனைகள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக எதிர்பார்க்காத திருப்பமாக, "அவற்ர ரேட்டுக்குத் தர ஏலாது".
போஸ்டர் பார்த்தபோதே கவர்ந்தது. நண்பரிடமும் அதுபற்றிக் கூறியிருந்தேன். வாழ்த்துக்கள் மதுரன்!

உறுத்தலான காட்சி, தண்ணீர் கொடுப்பது! யாழ்ப்பாணத்தில் இன்னும் அந்த பாகுபாடு இருக்கிறதா? தொண்ணூறாம் ஆண்டிலேயே இல்லாது போய்விட்டதாக ஞாபகம். நான் அப்படியொரு காட்சியைப் பார்த்ததில்லை. ஒருவேளை மனதுக்குள் மட்டும் வைத்துக் கொண்டிருந்தவர்கள் புலிகள் இல்லாதபோது மீண்டும் ஆரம்பித்திருக்கலாம்.

தாராளமான பண உதவி, தொழில்நுட்ப வசதி கிடைக்கும் பட்சத்தில் எந்தவித தயார்படுத்தலும் இல்லாமல், காமெராவைத் தூக்கிக் கொண்டு படமெடுக்க போகும் நம் உறவுகள் படைத்த(?!) அபத்தக் குப்பைகளையெல்லாம் பார்த்துத்தொலைத்த எனக்கு தோன்றியது...

போதுமான பண, தொழில்நுட்ப வசதிகள் கிடைக்கும் பட்சத்தில் இன்னும் நல்ல படங்களை மதிசுதா மற்றும் குழுவினரால் நிச்சயமாகக் கொடுக்கமுடியும்!
வாழ்த்துக்கள்!!

மொத்தப் பக்கக்காட்சிகள்

1214979

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்