வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
இப்பதிவானது என்னால் விளக்கம் பெற முடியாமல் போன ஒரு குறும்படப் போட்டி தொடர்பாக வரையப்படும் பகிரங்க மடலாகும். அவ்வானொலிக்கு தொடர்பு எடுத்தாலும் அறிவிப்பாளருடனேயே பேச முடிகிறது. பாவம் அவரது கடமை நேரத்தில் என் போன்ற சந்தேகப் பிசாசுகளுக்கு எப்படி விளக்கம் கொடுக்க முடியும். தயவு செய்து அதன் வேறு பிரதிநிதிகள் யாராவது இருப்பின் எனக்கு விளக்கம் தந்து உதவவும்.
வாருங்கள் விடயத்துக்கு
வெற்றி வானொலி world tamil shortfilm festival என்ற போட்டிக்காக தை மாதம் 1 ம் திகதி வரைக்கும் குறும்படங்களை கோரி இருக்கின்றது. அதன் விதிமுறைகளிலும் அதன் விண்ணப்ப படிவங்களிலும் எனக்கு பல இடத்தில் தெளிவில்லை அதையே முன் வைக்கிறேன்.
1. ஃஃஃஃஃகுறுந்திரைப் படத்தில் பங்கு பற்றும் நடிகர்கள் மற்றும் அதன் குழு சார்ந்த
இயக்குனர்,இசையமைப்பாளர்,படப்பிடிப்பாளர், ஏதோ ஒரு குறுந்திரைப்
படத்தினூடாகவே போட்டியில் பங்குபற்றமுடியும்.மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட
திரைப்படங்களில் ஒருவராவது அந்த குழு சார்ந்து பங்கு பற்றும் போது அது
அவதானிக்கப்படுமிடத்து அந்த நபர் அல்லது குழு சார்ந்து வந்த முதல்
குறுந்திரைப் படமே போட்டிக்குள் எடுத்துக்கொள்ளப்படும்.ஃஃஃஃஃ
உதாரணத்திற்கு கடந்த 4 மாதத்திற்குள் மட்டும் நான் 9 குறும்படங்களில் நடித்திருக்கிறேன் (துலைக்கோ போறியள், மிச்சக்காசு, தொடரி, போலி, தாத்தா, இளவரசர்கள், விட்டில்கள், உறவு தேடும் உயிர், (ஒன்றின் பெயரை சொல்ல அவ் இயக்குனரின் அனுமதியில்லை). இதில் 5 குறும்படங்கள் நான் இயக்கியவை. ஆகவே இவ்விதியால் எம்முடைய 8 படங்கள் ஒதுக்கப்பட இருக்கிறது. ஆகவே இவ் விதி தொடர்பான விளக்கம் தேவைப்படுகிறது.
2. Send your short film through Dropbox or Postal Submission இப்படி விதிமுறையில் கொடுக்கப்பட்டிருந்தாலும் விண்ணப்பப்படிவத்தில்
Postal Submission: Please send a DVD copy of
your film with a completed entry form before the competition deadline. Entries
should be sent to
இப்படித் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அதற்கான சீடியை அனுப்பவே 3000 ஆயிரத்துக்கு மேல் செலவழியும்.
Dropbox ல் பரிமாறுகையில் தாங்கள் பெறுவதில் எந்தச் சிக்கலுமே இருக்காது அப்படியிருக்கையில் ஏன் இப்படி ஒரு வீண் செலவு வைக்கிறீர்கள்???
Dropbox ல் பரிமாறுகையில் தாங்கள் பெறுவதில் எந்தச் சிக்கலுமே இருக்காது அப்படியிருக்கையில் ஏன் இப்படி ஒரு வீண் செலவு வைக்கிறீர்கள்???
3. இலங்கையில் இருந்து அனுப்பப்படும் படங்களுக்கு 5000 ஆயிரம் ரூபாய் கட்டுப்பணம் கோரப்பட்டுள்ளது. இத் தொகை செலுத்துவதற்கு எத்தனை படங்களுக்கு சாத்தியமானதோ தெரியவில்லை. காரணம் வெளிநாடுகளில் இருந்து தயாரிப்பாளர்கள் மூலம் படமெடுப்பவர்களுக்குச் சாத்தியப்பட்டாலும் சொந்தக் காசில் நொந்து நொந்து படமெடுப்பவர்களுக்கு அனுப்புவது சாத்தியமே இல்லை. உதாரணத்திற்கு கைப்பேசியில் எடுத்த (அதற்காக தரக்குறைவானதல்ல 1080p தரம் கொண்ட படங்கள்) எனது “மிச்சக்காசு“ (600/=), “தொடரி“ (400/=) போன்ற படங்கள் மிகச் சொற்பப் பணத்திலேயே எடுக்கப்பட்டவை. எனக்கு அந்தப் பெரிய தொகை கட்டிப் படம் அனுப்ப எப்படி மனம் வரும்.
4. இந்தியப் போட்டியாளர்களுக்கு அந்நாட்டுப்பணத்தில் 3000 ரூபாய் கட்டுப்பணம். யூரியுப்பில் ஒரு நாளைக்கே அங்கிருந்து பல பெரிய பட்ஜெட் படங்கள் உள்நுழைந்து கொள்கிறது. அதனுடன் எம் பாரம்பரியத்தை, பிராந்திய மொழிவழக்கை, உள்நாட்டு இசையை பின்பற்றும் படங்கள் போட்டி போட முடியுமா? என்ற ஐயம் எனக்கிருக்கிறது (இது தனிப்பட்ட கருத்து)
ஆகவே இப்போட்டியில் எல்லா வகையில் பார்த்தாலும் இலங்கையருக்கு சந்தர்ப்பம் குறைவாக இருப்பது போலவே இருக்கிறது. யாராவது வெளிநாட்டுக்காரர் காசு கொடுத்து எடுத்த இலங்கைப்படங்கள் மட்டுமே இந்தப் போட்டிக்குள் எட்டிப் பார்க்கும். என்னைப் போல கைப்பேசியில் படம் எடுத்து வைத்திருக்கும் யாரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத உச்சம் போலவே எனக்கு இப் போட்டி இருக்கிறது.
இவை தான் என் சந்தேகங்கள். அந் நிறுவனம் சார்ந்த யாராவது இந்த சந்தேகங்களை எனக்கு தீர்தருளி உங்கள் போட்டிக் காட்டுப்பாட்டை தளர்த்தி என் போன்ற சக கலைஞர்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
(உதாரணத்திற்காக எனது கைப்பேசிக் குறும்படமான “மிச்சக்காசு“ குறும்படத்தின் ட்ரெயிலரையும் “துலைக்கோ போறியள்“ படத்தையும் இணைக்கிறேன்)
2 கருத்துகள்:
கருத்துரையிடுக