ஞாயிறு, 25 நவம்பர், 2012

அவுஸ்திரேலிய கடல் பயணங்களும் தீராத சந்தேகங்களும்

10:57 PM - By ம.தி.சுதா 5


ஈழப் போரின் பின்னான காலப்பகுதியானது இளமை, கல்வி, தொழில் மற்றும் பணம் போன்றவற்றை தொலைத்த இளையவருக்கு ஒரு வெறுமையான சூனியத்தைக் காட்டினாலும் ஓரளவு பொருள் வசதியோ ஆள் உதவியோ கிடைத்தவருக்கு பிரகாசத்தைக் காட்டியது.

அதில் முதல் கட்ட பெரும் எடுப்பாக அமைந்தது கனடாவுக்கான கப்பல் பயணமாகும். அதிலும் போரின் பிடியில் மீண்டு தப்பி போனவர்களை விட போர் சாராத பகுதியில் வாழ்ந்து போன தமிழர்களே அதிகம். அதன் பின்னர் வழமையான ஏஜன்சிகள் மூலம் அப்பப்போ யாராவது சிலர் போய்க் கொண்டிருநதாலும் இவ்வருட ஆரம்பத்தில் நடை அவுஸ்திரேலிய பயணங்கள் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்திச் சென்றது. ஆனால் இவை ஒன்றும் முதலாவது பயணமல்ல இதற்கு முன்னரும் பல வருடங்களாக கடலால் போய் அகதி அந்தஸ்து பெற்று வாழ்பவர்கள் உள்ளார்கள்.
ஆனால் அந்த பருவகாலத்திற்குரிய பயணங்களின் ஆரம்பத்தில் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த ஒரு சிலரே உருண்டு பிரண்டு பணத்தை திரட்டி பயணிக்க அதனோடு அப்போர்வையை போர்த்திக் கொண்டு எம்மவர் வழமையான பயணத்தை ஆரம்பித்தார்கள்.

3, 4 லட்சங்களுடன் ஆரம்பித்த பயணமானது 15 லட்சங்களையும் கடந்து நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் பல போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டு வாயை மூடி வாழ்பவர்களின் தொகையும் மிக மிக அதிகமாகவே மாறிவருகிறது.
அண்மையில் திருகோணமலை சென்ற போது ஒரு நபர் தனது pulser 180 மோட்டார் சைக்கிளை ஒரு லட்சத்தி முப்பதினாயிரத்திற்கு அவசரமாக விற்றுச் சென்றதாக சொன்னார்கள். நான் நினைத்தேன் பழைய சைக்கிள் என்றபடியால் தான் அவ்வளவு விலை போயிருக்கிறது என்று. ஆனால் இரண்டு லட்சத்து அறுபதாயிரத்துக்கு எடுத்து 7 மாதமே ஆனா சைக்கிளை அவ்விலைக்கு விற்று விட்டு ஒருவர் போகிறாரென்றால் அவர் துணிவை என்னவென்று சொல்வது.
இதே போன்று முல்லைத்தீவு போன்ற பகுதிகளிலும் மலிவாக வாகனங்கள் கிடைக்கிறது மட்டுமல்லாமல் மிக மலிவாக மிகத் தரமான போன்களையும் பெறக் கூடியதாக உள்ளது.

இதனிடையே அகதி அந்தஸ்து கோரி பயணிப்பவர்களில் பல சிங்களவர்களும் பயணிப்பது தான் அவுஸ்திரேலியாவின் சட்டங்களில் இவ்வளவு ஓட்டை உள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஏனென்றால் திருப்பி அனுப்பப்பட்டவர்களில் அப்படி யாரும் வந்ததாகவே தெரியவில்லை.
ஆனால் சில வாரங்களாக விருப்பின் பேரில் நாடு திரும்புகிறார்கள் என்ற பேரில் பலர் திரும்பி வருகிறார்கள். அப்போது என்னிடம் இருந்த பெரும் கேள்வி என்னவென்றால் இத்தனை லட்சங்களைக் கட்டியதுமல்லாமல் இரண்டு வாரங்களுக்கு மேலாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணித்து அங்கே 3 நேரச் சாப்பாட்டுடன் ஒரு மணித்தியால கணனியையும் விட்டு விட்டு ஏன் இவர்கள் விரும்பித் திரும்ப வேண்டும்.

ஒன்றில் அவர்கள் அங்கே அகதி அந்தஸ்து மற்றவர்களுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட கூலிகளா? அல்லது பணத்துக்காக படகுகளை ஓட்டிச் சென்றவர்களா? இப்படி பல கேள்விகள் இருந்தாலும் அவுஸ்திரேலியாவில் பல ஓட்டைகள் இருக்கின்றது என்பது பயணிக்க காத்திருப்பவருக்கு ஒரு தென்பைக் கொடுக்கின்றதே தவிர அந்த ஓட்டைகள் மூடப்படுமா அல்லது திறந்தே இருக்குமா என்பது எக்கணத்திலும் தீர்மானிக்க முடியாத ஒன்றாரும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

5 கருத்துகள்:

Unknown சொன்னது…

இத்தனை லட்சங்களைக் கட்டியதுமல்லாமல் இரண்டு வாரங்களுக்கு மேலாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணித்து அங்கே 3 நேரச் சாப்பாட்டுடன் ஒரு மணித்தியால கணனியையும் விட்டு விட்டு ஏன் இவர்கள் விரும்பித் திரும்ப வேண்டும்////////

உண்மை சகோதரா.!!!
.........அவுஸ்திரேலியா கடற்பயணம் இலங்கை மக்களை பொறுத்தவரையில் இன்றும் பல மர்மங்களை கொண்டதாகவே காணப்படுகிறது...
நன்றி

koomaganblogspot.fr சொன்னது…

ஈழப் போரின் பின்னான காலப்பகுதியானது இளமை, கல்வி, தொழில் மற்றும் பணம் போன்றவற்றை தொலைத்த இளையவருக்கு ஒரு வெறுமையான சூனியத்தைக் காட்டினாலும் ஓரளவு பொருள் வசதியோ ஆள் உதவியோ கிடைத்தவருக்கு பிரகாசத்தைக் காட்டியது/// இதுதான் உண்மை மதி சுதா பகிர்வுக்கு நன்றி

koomaganblogspot.fr சொன்னது…


உங்கள் அனுமதியுடன் இதை யாழ் இணையத்தில் இணைக்கின்றேன் நேசமுடன் கோமகன்

Yoga.S. சொன்னது…

பகல் வணக்கம்,சுதா!எங்கள் மனத்தைக் குடையும் கேள்வியை பட்டவர்த்தனமாக பொது வெளியில் கேட்டிருக்கிறீர்கள்.பகிர்வுக்கு நன்றி!

எஸ் சக்திவேல் சொன்னது…

> அல்லது பணத்துக்காக படகுகளை ஓட்டிச் சென்றவர்களா?

பத்திரிககைச் செய்திகளின்படி, திரும்பிச் சென்றோர் ஓட்டிகள், மற்றும் உதவியாளார்கள். ஆனாலும் திருப்பிச் சென்றவர்களில் தமிழரும் உள்ளனர்.

http://www.theherald.com.au/story/1173226/asylum-denied-a-penalty-waits-at-home/

http://www.kochie.com.au/the-real-benefits-for-asylum-seekers-in-australia

http://www.theaustralian.com.au/national-affairs/immigration/forced-returns-of-sham-refugees-as-sri-lankans-deported/story-fn9hm1gu-1226522377530

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top