வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
இன்றைய காலகட்டத்தில் பெரிய பெரிய இணையத் தளங்களுடன் போட்டி போடும் அளவுக்கு வலைத் தளங்கள் வளர்ந்துள்ளது போல பெரிய பெரிய முதலீட்டுப் படங்களுடன் போட்டி போடும் அளவுக்கு குறும்படங்கள் தமக்கென தனியிடத்தைப் பிடித்துள்ளது.
அதிகளவான படங்கள் இந்தியாவிலிருந்து வெளியானாலும் இலங்கையிலிருந்தும் பல படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஆண்டு மட்டும் 50 ற்கு மேற்பட்ட குறும்படங்கள் வெளியாகியிருந்தது.
அந்த வகையில் இலங்கைப் பதிவுலகத்திலிருந்தும் ஒரு குறும்படத்தை வெளியிடும் முயற்சியில் பதிவர் கூல்போய் கிருத்திகன் மிக நீண்ட காலமாக முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு சரியான துணையின்மையால் நீண்ட காலம் அது கிடப்பிலேயே இருந்தது.
இறுதியாக பதிவர் ஜனா அண்ணாவின் மகளுடைய பிறந்த நாள் விழாவில் அந்த திரைக்கதையை கூறி எடுக்கப் போகிறேன் என ஆணித்தரமாகக் கூறியவர். ஒரு நாள் இரவு போன் போட்டு “மதிசுதா நாளைக்கு துவங்கப் போகிறேன் நேரம் கிடைத்தால் ஒரு தடவை வந்திட்டுப் போங்கோ“ என்றார்.
நானும் பெரிதாக நினைக்காததால் என்பாட்டுக்கு வேலைக்கு போய் விட்டேன். திடிரேன போன் வரத்தான் கேட்டது நினைவுக்கு வர அந்த நேரம் கொட்டும் மழையாகையால் போட்டிருந்த சேட் நனைந்தாலும் என இன்னுமொரு சேட்டை பையினுள் வைத்துக் கொண்டு ஓடினேன்.
அங்கே பார்த்தால் எனக்கும் ஒரு முக்கிய வேடமாம். பிறந்து இதுவரை காலத்தில் பல மேடை நாடகம் இயக்கி நடித்திருந்தாலும் கமரா முன் போய் நின்றது என்றால் கல்யாண வீடு மற்றும் பூப்புனித நீராட்டு விழா போன்றவற்றில் மட்டுமே.
முன்னோட்டத்தை கிழே இணைத்துள்ளேன்.
படத்தில் மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவை
1. யாழ்ப்பாணம் அரசகட்டுப்பாட்டுக்கு கிழே வந்த பின்னர் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்காத அதன் மையப்பகுதியில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக பஸ் நிலையத்தின் மையப்பகுதியில் தீபாவளி சனக் கூட்டத்தினுள்ளே கொட்டும் மழையில் ஐந்து ஆறு retake எடுத்து பல காட்சிகளை படமாக்கப்பட்டிருக்கிறது.
2. படம் பிடிக்கவே அனுமதி கிடைக்காத புதிய சங்கிலியன் சிலையடியினில் காட்சிகள் படமாக்கியமை. என பல விடயங்களை குறிப்பிடலாம்.
சங்கிலியனின் அரண்மனை வாசல், மந்திரிமனை, யாழ் நூலகம், கசூர்ணா கடற்கரை, நல்லூர் கந்தசுவாமி கோயில், நல்லூர் பாரதியார் சிலை, யாழ் வைத்தியசாலை முகப்பு, வேம்படி மகளீர் கல்லூரி, யாழ்ப்பாணம இந்துக் கல்லூரி என பல முக்கியமாக இடங்களில் படப்பிடிப்பை மேற்கொண்டிருந்தோம்.
மிகுதியை படத்திலேயே காணுங்கள்.
குறுப்படம் சம்பந்தமான மேலதீக தகவல்களை கீழே உள்ள தொடுக்கில் உள்ள முகநூல் பக்கத்தை லைக் பண்ணுவதன் முலாம் நீங்கள் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்ளலாம்.
CLICK HERE
மேலதிக கொசுறு ஒன்று - இப்படத்தில் வரும் விபத்துக் காட்சி ஒன்றுக்கு மங்காத்தாவில் அஜித் பயன்படுத்தியது போன்ற மோட்டார் சைக்கிள் ஒன்று யாழ்ப்பாணத்தின் மோட்டார் சைக்கிள் ஓட்ட சாகசக்காரர் ஒருவர் மூலம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
குறுப்படம் சம்பந்தமான மேலதீக தகவல்களை கீழே உள்ள தொடுக்கில் உள்ள முகநூல் பக்கத்தை லைக் பண்ணுவதன் முலாம் நீங்கள் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்ளலாம்.
CLICK HERE
மேலதிக கொசுறு ஒன்று - இப்படத்தில் வரும் விபத்துக் காட்சி ஒன்றுக்கு மங்காத்தாவில் அஜித் பயன்படுத்தியது போன்ற மோட்டார் சைக்கிள் ஒன்று யாழ்ப்பாணத்தின் மோட்டார் சைக்கிள் ஓட்ட சாகசக்காரர் ஒருவர் மூலம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
46 கருத்துகள்:
கருத்துரையிடுக