கொலை வெறியர் நாட்டில்
தமிழ் மகளாய் பிறந்தது
நீ செய்த பாவமில்லையே
மனம் பதைக்கிறது தாயே
நாம் கூட
இந்த தேசத்தில் பிறந்தவரிடமே
மண்டியிட்டுப் பிழைக்கிறோம்
உங்கள் ஈனப்பிறப்பில்
எங்கோ பிறந்தவளுக்கு
கை கட்ட வைத்துவிட்டார்களே
ஒற்றை உயிர் போனதற்கா
இத்தனை கொலைகள்
உம் பசி எப்போ ஆறும்
நிறுத்துங்கள் உறவுகளே
அவனுக்கு பசித்த உணவை
அவனே தெரிந்தெடுக்கும் போது
நீரே என் அறியாமல் கொடுக்கிறீர்
எம் திலகமே
உன்னோடு முடியட்டும்
இந்த அவலச் சாவு.
42 கருத்துகள்:
ஒற்றை உயிர் போனதற்கா
இத்தனை கொலைகள்
உம் பசி எப்போ ஆறும்//
ம்........மௌனங்களாய் எம் வலிகள், வார்த்தைகள் வழியே உருகி வந்து விழுகின்றது,
இனியும் வேண்டாம் இப்படி ஓர் முடிவு,
தாய்த் தேசமே....இப்படியான முடிவை உன்னிடமிருந்து நாம் எதிர்பார்க்கவில்லை.
நண்பரே!எவ்வளவு பெரிய மனபாரத்தை உள்ளுக்குள் புதைத்து கொண்டுள்ளீர்கள்
நண்பர் நிருபன் அவர்களின் பதிவை படித்த பின்புதான் எல்லா உண்மையும் எங்களுக்கு புரிந்தது.தமிழகமே உங்கள் பின்னால்.எங்களால் முடிந்த அளவு போராடுவோம்.பார்த்தீர்களா சகோதரி செங்கொடியின் போராட்டத்தை.உங்கள் அண்ணன் யார் என்பதை மார்தட்டி கூறுங்கள்.
சகோதரி செய்த செயலை தயவு செய்து யாரும் அங்கீகரிக்காதீர்கள். அதுவே இன்னொருவருக்கு முன்மாதிரியாய் போய்விடும்.
///நிறுத்துங்கள் உறவுகளே
அவனுக்கு பசித்த உணவை
அவனே தெரிந்தெடுக்கும் போது
நீரே என் அறியாமல் கொடுக்கிறீர்/// சரிதான். இதற்க்கெல்லாம் அந்த கொடியவர்கள் மனமிரங்க மாட்டார்கள்..
அந்தப் பெண்ணின் செயல் முட்டாள்தனம். அதை நியாயப்படுத்த விரும்பவில்லை நான். எப்படியும் நம் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.
நிதர்சனமான வரிகள்
அன்பான தமிழகத்து உறவுகளே..இப்படிபடியான உங்கள் தியாகங்களை தயவுசெய்து நிறுத்துங்கள்.
:'(
நல்ல வரிகள் சகோ.... வடநாட்டவர் உருட்டும் பகடைகளாக உள்ளோம் தமிழகத்தில்...
தமிழர்கள் ஆழ்க்குயின் அகத்தே தமிழ் தேசம் பயனித்துக் கொண்டிருக்கிறது ...
உறவுகளின் இது போன்ற முடிவுகள் தீர்வாகாது.வருத்தமாகவே உள்ளது.
//கொலை வெறியர் நாட்டில்
தமிழ் மகளாய் பிறந்தது
நீ செய்த பாவமில்லையே
மனம் பதைக்கிறது தாயே//
நண்பரே நான் எழுத நினைத்ததை நீங்கள் கவிதையாக அழுதுயிருக்கிறீர்கள்.
இதை படித்தபோது எனது கண்கள் உடைந்துவிட்டன
போதும் செத்தது போதும் நிறுத்து
இந்த கையாலகாத சகோதரனை மன்னித்து விடு
Very sad. . .
முதல்வருக்கு அதிகாரம் இருந்தாலும் கூட, //வைகோ, திருமா, ராமதாஸ் // வெற்றுக்கூட்டத்தின் ஆரவாரத்துக்கு செவி சாய்க்க கூடாது. இவர்களுக்கு அரசியல் செய்வதற்கு இலங்கை தமிழர் பிரச்சினை தானா கிடைத்தது? இவர்களால் ஆவேசம் ஊட்டப்பட்டு ஒரு பெண் நேற்று அநியாயமாய் தீக்குளித்தார். பாழாய்ப்போன கழகங்கள் என்று அரசியலில் இறங்கினவோ அன்று முதல் தமிழ்நாட்டை பீடை பிடித்து விட்டது. வெத்து கூச்சலும், ஆரவராமும் வெறும் பேச்சிலேயே மக்களை மயக்கி சிந்திக்க விடாமல் செய்வதும் தான் இவர்களின் பாணி. குறிப்பட்ட சாதியை எதிர்த்து கட்சி ஆரம்பித்த இவர்கள் நாளடைவில் ஜாதி வெறியை தூண்டி, ஜாதி தீ பற்றி எரிய வகை செய்த பாவிகள். இன்று தமிழர் தமிழர் என்று கூக்குரலிடும் இவர்களுக்கு உள்ளூர் தமிழர்களின் பிரச்சினைகள் கண்ணில் படாதது ஏன்? . இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே சரியாக தெரிந்து கொள்ளாமல், அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக இவர்கள் செய்யும் ஆர்பாட்டத்துக்கு தான் ஒன்றும் செய்ய முடியாது என்பதை ஆணித்தரமாக சொன்னது அருமை. அதே சமயம் இந்த கூட்டம் இதை சாக்காக வைத்து மேலும் உணர்ச்சியை தூண்டாமல் பார்த்துக்கொள்வதும் முதல்வரின் கடமை. நேற்று தீக்குளித்த பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரண நிதி அளிக்காமலும் இருக்க வேண்டும். அப்படி இந்த வெத்து சோறுகளின் வெறும் கூச்சலுக்கு பயந்து நிவாரண நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்று முதல்வர் இறங்கினால் இவர்களுக்கு கொண்டாட்டமாகி விடும். இதுவும் ஒரு மறைமுக மிரட்டலே. இதற்கு இயல்பிலேயே துணிவு நிறைந்த முதல்வர் துணை போகக்கூடாது. இந்த விவகாரத்தில் ஒரு மாநில அரசு எப்படி செயல்பட்டு மத்திய அரசுக்கு ஒத்துழைக்க வேண்டுமோ, அப்படியே செயல்படுவது தான் நல்லது.
அது உணர்வின் வெளிப்பாடு...ஒரு அரசியல் வாத்திக்காக நடக்காதது தான் அதில் ஒரே நிம்மதி...
எம் திலகமே
உன்னோடு முடியட்டும்
இந்த அவலச் சாவு.
மரண தண்டனைக்கு எதிராக ஒரு மரணம். . .ஒன்று மட்டும் நிச்சயம் உயிர் விலை மதிப்பற்றது. . .இதற்கு ஈடாக எந்த நிவாரணத்தையும் தந்துவிடமுடியாது. . .
உயிரை எடுக்க வேண்டாம் தானே இந்த போராட்டம் சகோதரி.. இதற்காக நீ உயிரை விட்டால் போராட்டம் செய்யும் அனைவருக்கும் மன வருத்தத்தை தராதா... இந்த நாடு உயிர் தியாகம் செய்தவர்களை மறந்து செய்தியை வேறு ஒரு பிரச்சனையால் மறைத்து இப்பெரும் தியாகத்திற்கு அர்த்தம்ற்றதாகி விட்டுவிடும்... பாவிகளின் கையில் அதிகாரம் இருக்கும் வரையில் நாம் மேலும் போராட வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது எனவே இனியும் சகோதரர்களே சகோதரிகளே உயிரை மாய்க்க வேண்டாம் ஒற்றுமையுடன் போராடுவோம்....
தயவு செய்து தமிழக உறவுகள் மீண்டும் மீண்டும் இப்படியான தியாகம் செய்து நம் மனதில் அடங்காத தீயை ஏற்றிவிடாதீர்கள்!
ஆழமான கவிதை துயரத்தை மதி பதிவு செய்திருக்கிறார் இதுவே முடிந்த இறுதி தீக்குளிப்பாக இருக்கட்டும்!
அன்பரே
சகோ நிரூபன் பதிவால்
தங்களைப் பற்றி அறியமுடிந்தது
உங்கள் சோகத்தில் நானும்
பங்கு கொள்கிறேன்
இம் மனநிலையிலும்
சகோதரி சொங்கொடியின்
உயிர் தியாகம் பற்றி மனித
நேயத்தோடு எழுதிய கவிதைக்கு
தலை வணங்குகிறேன்
புலவர் சா இராமாநுசம்
ஒரு உயிரை விடுவதை விட ஒன்று திரளுங்கள்........செய்து முடியுங்கள்...
உயிர் கொடுக்க துணிந்த உங்களால் ஒன்று திரள முடியாதா...
சகோ... நாங்கள் தோள் கொடுக்கிறோம் உம்மோடு.... கவலைப்படாதே... ஆண்டவனை நம்புவோம்...
இனியும் இது போல் யாரும் செய்யத்துணிய வேண்டாம்!உயிர் பலி வேண்டாம் என்று உணர்துவதர்க்கே இங்கே உயிர் விட வேண்டிய அவலம்!
நம்உணர்வின் வெளிப்பாட்டை போராட்டத்தில் காட்டுவோம்!
சகோ!நாங்கள் இருக்கிறோ தோள் கொடுக்க!நல்லதே நடக்கும்!
நமக்கு இப்போது தோள் கொடுக்கவே ஆள் தேவை..உயிர் கொடுக்க அல்ல.
ஏன்னப்பா இப்பிடி செய்கிறீர்கள்.. நாங்களே அந்த மூன்று உயிர்களை காப்பாற்ற போராடுகிறோம்.. இப்பிடியான செயல் உண்மையான விடயங்கள மறைக்கசெய்யும் என்பதை இந்த நல்ல உள்ளங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டுகிறேன்..
நிஜ வரிகள்.
என்ன சொல்வது என்றே தெரியவில்லை :(
பிரணவன் said...
மரண தண்டனைக்கு எதிராக ஒரு மரணம். . .ஒன்று மட்டும் நிச்சயம் உயிர் விலை மதிப்பற்றது. . .இதற்கு ஈடாக எந்த நிவாரணத்தையும் தந்துவிடமுடியாது. . .
..... உண்மை.
செம்மலர் தியாகம் தீப்பற்றி எரிந்து தமிழர் நெஞ்சில் கனல் மூட்டட்டும்.
விடுதலை ஒன்றே நிவாரணம்
வலிதரும் கவிதை வரிகள் சகோ .உங்கள் நிலை அறிந்து மிக வேதனை அடைந்தேன் .உங்கள் புனிதத் தாயின் கண்ணீராவது ஒரு நல்ல தீர்வைக் கொடுக்காதா என்று என் மனம்
பதறுகின்றது .என்சொல்வேன் சத்தியம் செத்துவிட்டது போலும் உணரத்தோன்றுகின்றது சகோ ...........
நன்றி துயரிலும் நன்றி மறவாத தங்கள் செயலுக்கு ....
(நிறுத்துங்கள் உறவுகளே
அவனுக்கு பசித்த உணவை
அவனே தெரிந்தெடுக்கும் போது
நீரே என் அறியாமல் கொடுக்கிறீர்)உண்மை வரிகள் மிகச் சரியான வரிகள் .தமிழன் உயிர் குடிக்க பல அரசுகள் ஒன்றாக இயங்கிவருகிறது. அந்த வகையில் எந்த தமிழன் இறந்தாலும் அவர்களுக்கு சந்தோசம் எனவே எந்த தமிழனும் தமது இன் உயிரை இழக்கவேண்டம்.
(ஒற்றை உயிர் போனதற்கா
இத்தனை கொலைகள்
உம் பசி எப்போ ஆறும்)see http://sarujan-sarujan.blogspot.com/2011/08/blog-post_26.html
வேதனை
உன்னோடு முடியட்டும் இந்த அவலச்சாவு
//செங்கோவி said...
நமக்கு இப்போது தோள் கொடுக்கவே ஆள் தேவை..உயிர் கொடுக்க அல்ல//
உண்மை!
அன்பு தம்பி சுதா
அத்தாயின் எண்ணம் தற்காலிகமாக வெற்றி அடைந்துள்ளது அது நிரந்தரம் ஆக வேண்டும். ஆனால் ஓரு மரணத்தை தடுக்க வேறு மரணங்கள் வேண்டாம். இது நிச்சயமாக எவருக்கும் நிம்மதியை தரமாட்டாது.அம்மாவின் முகத்தை பார்த்து எப்படி எதை கதைப்பது என்று தெரியால் இருந்த எனக்கு இச்சிறிய கால இடைவெளி மன தென்பைத் தந்துள்ளது.
இன்று, நீ செய்தது கூட
ஒரு உயிர்கொலை ஆகிவிட்டதே!
நிதர்சன வரிகள்.
உள்ளம் உருகி உன்னைத் தொழுகிறேன்...........
மிக்க நன்றி உறவுகளே உங்கள் வருகையாலும் உக்குவிப்பாலும் இந்த ஆக்கமானது பிரபலமாகியுள்ளது .
இது தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த மூன்று அன்பு உறவுகளுக்குமாக எழுதப்பட்ட கவிதை .இது என் தமிழ்த்தாய் உறவுகளான அந்த அன்பு நெஞ்சங்களுக்கு
சமர்ப்பணம் ,சமர்ப்பணம் சமர்ப்பணம் ...
@அவசரம்: 3 பேரின் தூக்கு தண்டனையை எதிர்ப்போர் கவனத்திற்கு!
http://arulgreen.blogspot.com/2011/09/3.html
♔ம.தி.சுதா♔ கூறியது...
// //முதன்மை கற்றவாளிகள் பிடிபடாத நிலையில் ஏனைய சாதாரண குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிக்கலாமா? உதாரணத்திற்க ராஜீவ் கொலைக்கு குண்டு தயாரித்தவரை பிடிக்கவில்லை ஆனால் பற்றி வாங்கி கொடுத்தார் என ஒரு பெட்டிக்கடைககாரன் சாட்சியை வைத்து ஒருவருக்கு தூக்கு. அந்தளவு இந்திய சட்டம் மட்டமானதா ?// //
இந்த வழக்கில் ஏராளமான தவறுகள் இருக்கின்றன. இப்போது காலாவதியாகிவிட்ட தடா சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதே இவ்வளவு குளறுபடிகளுக்கும் காரணம்.
கீழ்நீதிமன்றத்தில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டனர். அதுவும், அவர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டதே தவறு எனக்கூறி விடுவிக்கப்பட்டனர். அதற்குள் அந்த நிரபராதிகள் 10 ஆண்டு சிறைத்தண்டனையை முடித்திருந்தனர். இதற்கு யார் பொறுப்பேற்பது? "அந்தளவு இந்திய சட்டம் மட்டமானதா ?" என்கிற உங்களது கேள்விக்கு இதுவே பதிலாக அமையும்.
'குற்றம் செய்யாதவனை தண்டித்தோமே என்கிற குற்ற உணர்ச்சியில் அந்த கணமே மாண்டுபோனான் பாண்டிய மன்னன்' என்கிறது சிலப்பதிகாரம். சிலப்பதிகாரக் காலத்தில் நாம் இப்போது வாழவில்லை!
முட்டாள் தனமான முடிவுகளை ஒருபோதும் ஆதரிக்க கூடாது......
கண்டிப்பாக எவ்வுயிராயினும் விலைமதிப்பற்றதே.........
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மையான வரிகள்
இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5
தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5
கருத்துரையிடுக