Featured Articles
All Stories

வியாழன், 28 ஏப்ரல், 2011

தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)


         வணக்கம் உறவுகளே முன்னையா பதிவான பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்  இலும் சொன்னேன் இதிலும் சொல்லிக் கொண்டே நகர்கிறேன் நான் ஒரு தேநீர் பிரியன் (அடிமை என்பதே சரியானது).
         இந்த விடயத்தை நண்பர் குருபரன் தான் நினைவுக்கு கொண்டு வந்திருந்தார். நன்றி குரு. வாருங்கள் பதிவிற்குள் நுழைவோம்.
             தேநீரென்பது சிலருக்குப் பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது. அத்துடன் அது தயாரிப்பதற்கு கட்டாயம் சீனி மற்றும் தேயிலை அத்தியாவசியமான பொருட்களாகிறது. அதன் கிக்கிற்கு காரணமே தேயிலை தான் அனால் தேயிலை கொஞ்சம் விலை கூடிய பொருள் பல தடவை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கிடைப்பதே இல்லை. அதற்கு தீர்வு தரும் ஒரே வழி என்ன தெரியுமா ? கீழே வாருங்கள்....
12:05 AM - By ம.தி.சுதா 40

40 கருத்துகள்:

சனி, 23 ஏப்ரல், 2011

பதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...

வணக்கம் உறவுகளே....

                     நான் ஏன் இப்படி ஒரு பதிவை எழுத வேண்டும் எனக்கே மனமில்லை தான். என் பதிவுகளுக்காக பலரிடம் பல வார்த்தைகளில் ஏச்சு வாங்கியிருக்கிறேன் ஆனால் நான் யாரையும் ஏசப் போவதில்லை காரணம் என் எழுத்துக்களுக்கு நான் தான் சொந்தக்காரன் என் தாயாரல்ல. நான் இப்போதிருக்கும் நிலமை தங்களுக்கே தெரியும் பதிவுலகத்திலிருந்து விலத்தியே இருக்கிறேன் தட்டச்சுக் கூட மடியில் வைத்தே தட்டச்சிட வேண்டிய நிலை. சரி அப்படி என்ன தான் நடந்தது.
                  முந்த நாள் (வியாழன்) எனது இரண்டு பதிவுக்கு அந்த கற்புக்கரசி SON OF BITCH என அடித்திருந்தார். இதே வாக்கியத்தை ஒரு ஆண் பாவித்தால் கூட ஓரளவு ஏற்றுக் கொண்டிருப்பேன் காரணம் பல அந்நிய நாட்டுவாசிகளுக்கு குடியுரிமை பெறுவதற்காக சொந்த நாட்டுக்காரன் சொற்றிலேயே மண்ணள்ளிப் போட்டு வாழ்கிறார்கள் அவர்களுக்கு வன்னியின் உண்மை நிலவரம் சொல்லி மற்றவருக்கு போர் மீது உள்ள பற்றுதல் மாயையை அழிப்பது எள்ளளவும் பிடிக்காது அதனால் அப்படி ஏசக் கூடும். அம்மா நாட்டுப்பற்றாளரே உங்கள் கோபத்தை என் மீது காட்டுங்கள்.
          உண்மையாக இது வரை எந்தவொரு யாழ்ப்பாணத்துப் பெண்ணும் தூசணம் சொல்லி நான் கேட்டதில்லை (அதற்காக மற்ற ஊரை சுட்டலிங்க அந்தப் பொண்ணும் யாழ்ப்பாணம் தான் அதனால் சொல்கிறேன்) சில வேளை அந்நிய நாட்டு வாசம் அந்த பழக்கவழக்கத்தை பழக்கியிருக்கலாம்.
           இதே பெண் தான் சென்ற மார்கழி வீட்டு வாசலில் கோலம் போடுறதை விட்டு மங்குனி அமைச்சர் மற்றும் சேட்டைக்காரன் புளொக்கில போய் காறித் துப்பி தலையில் சாணியால் தப்பி அனுப்பப்பட்டார்.
         இந்த உலகத்திலேயே சுதாவின் கருத்துக்களுக்குப் பயந்து கருத்து மட்டுறுத்தலுக்கு மாறிக் கொண்ட ஒரே பதிவர் இந்த இரட்டைச் சத பிஞ்ச இடுப்பழகியாகத் தானிருக்கும். தம்பி கூர்மதியன் கூட அவரோட புளொக்கில் என்ன நடந்தது என கேட்டிருந்தார் (அந்த கருத்தையும் காக்கா கொண்டு போயிட்டுது) நான் நாகரிகமாகவே சொன்னேன்
   
             “என்னை ஏசுவதற்கு தங்களுக்கு 100 வீத உரிமையிருக்கிறது காரணம் என் எழுத்துக்களுக்கு நான் தான் உரிமையாளன் ஆனால் என் அம்மாவல்ல” அதற்கவர் வலைச்சரத்தில் பதிலிட்டிருந்தார் “தனக்கு யாரும் அறிவுரை சொல்லத் தேவையில்லையாம்”.

ஏன் நான் கடுப்பானேன்.
         நேற்று காலை (வெள்ளிக் கிழமை) என்னை வைத்தியசாலை அழைத்துச் செல்லும் நண்பன் வராத காரணத்தால் சரி யாருக்காச்சும் சுடு சோறு கொடுப்பமா என போனால் சிபி செந்தில்குமாரின் பதிவு தட்டுப்பட்டது அங்கே(பதிவின் தொடுப்பிற்கு இங்கே சொடுக்குங்கள்) நானும் , விக்கி உலகமும், நிரூபனும், சீபி யும் கும்மியடித்துக் கொண்டிருந்தோம் அப்போ நிரூபன் திடீரென கேட்டார் எங்கு சுதா உங்களது புறோபைல் வருகுதில்லை என்றார். பதை பதைத்தப் போய் டாஸ்போட்டை திறந்தால் ஏதோ தவறு என சொன்னது புளொக்கை பார்த்தேன் அந்த யுஆர்எல் இல் புளொக் இல்லை என்றது. குழம்பி விட்டேன் உடனே நிருபனை உதவி கேட்டேன் எனது கடவுச் சொல்லைக் கொடுத்தேன் அதற்கு முன் எனது மெயிலில் இருந்து sign out all other sessions ஐ கொடுத்தேன் நிருபனின் வேகம் என்னை சிலிர்க்க வைத்தது ஏற்கனவே சூரியாகண்ணன், சசிக்குமார் போன்றவர்களின் புண்ணியத்தில் எனது நிரந்தர கைப்பேசி இலக்கம் மற்றும் கடவுக் கேள்வி என்பவற்றைக் கொடுத்திருந்தேன் அதுமட்டுமல்ல மாற்றீட்டு மின்னஞ்சலும் நினைவில் இருந்தது 2 நிமிட போராட்டம்.. ஒரு சத்திர சிகிச்சை செய்யும் மன நிலை 2 மணித்தியாலம் போல இருந்தது காதலி, குழந்தை, நண்பன் எல்லாம் என் புளொக் தானே. கூகுல் நிருபனை கேட்ட verification code எல்லாவற்றையும் அனுப்பிக் கொண்டிருந்தேன். நிருபன் சொன்னார் இப்போ ஓடிப் போய் புளொக்கின் பயனர் பெயரை மாற்றுங்கள் என்றார். அவர் நுழையும் போது சரியாக ஒரு நிமிடத்திற்கு முன் அவஸ்திரேலியாவின் பேர்த் நகரிலிருந்து உள் நுழைந்திருக்கிறார்களாம்.
            திருடரே புளொக்கை திருடினால் முதலில் only me கொடுப்பதை விட கணக்கை உங்கள் வசப்படுத்தணும் அதுக்குப் பிறகு நீங்கள் விருப்பம் போல edit பண்ணலாம். ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் அவுஸ்திரேலிய மகாராணியாரே நாங்கள் காட்டுக்குள் தான் வளர்ந்தவர்கள் அனால் அதி உச்ச நாகரீகமும் உலகில் பிழைப்பை ஓட்டக் கூடிய தொழில் நுட்ப அறிவும் கொண்டவர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

எங்களுக்குள் நடந்த பிரச்சனை என்ன ?
1 - வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல் என்ற பதிவை சென்ற வருடம் போர்க்கால சூழலில் நாங்கள் பட்ட அவலத்தை போருக்கெதிரான பிரச்சாரத்திற்காக எழுதியிருந்தேன்.
   அவர் கருத்தை பார்த்தீர்களா ?
                நான் பிரபுதேவா காதலித்த பெண்களை பற்றி எழுதுகிறேனாம். உங்களால முடிஞ்சால் எழுதுங்கஅப்புறம் ஏன் பொறாமை “ஐயர் வீட்டில் கோழி முட்டை விற்கக் கூடாதென அவுஸ்திரேலிய ஐதிகம் சொல்லுதா ?”
         ஹலோ மேடம் நாங்க பெயரெடுக்கணுமுண்ண வன்னி என்று பெயர் மட்டும் போடத் தேவையில்லை காரணம் அதன் கந்தக நெடி மாறாத மனிதர்கள் உங்களைப் போல் இங்கு பூசி மெழுகிக் கொண்டு இருந்துவிட்டு விமான நிலையத்தில் விசா குத்திய பிறகு நாட்டுப் பற்று ஒட்டிக் கொண்ட மனிதர்களில்லை எழுத வெளிக்கிட்டால் சில வேளை உங்க குடியுரிமையிலும் மண் விழலாம் மறந்திடாதிங்கோ.
      புலிகள் இருக்கும் வரை பொத்திக் கொண்டிருந்தவர்களாம் நாங்கள். எங்களைப் பற்றி கதைக்க முதல் உங்களைப் பற்றி சிந்தியுங்கள் பற்றுக் கொண்ட நீங்கள் மட்டும் என் தூர தேசம் ஓடினீர்கள்.

2 - சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு என்ற பதிவில் எம் மாற்றீட்டுத் திறமையை காட்ட முகாமில் சில மக்கள் செய்யததை எழுதியிருந்தேன். 
Son of a bitch.

வன்னி என்று போட்டாலே எல்லோரும் வந்து படிப்பார்கள் என்ற எண்ணத்தில் யாரோ ஒரு மடையன் எழுதி இருப்பதை யாருமே தட்டிக் கேட்பதில்லையா? 

பிறந்த பிள்ளைக்கு போட கொலோன் கிடைப்பதே கஷ்டம். இதில இவர் சாராயம் காய்ச்சுவாராம். 
கசிப்பு காசிறவங்களை இயக்கம் பிடிச்சு சிறையில் போடுவது தெரியாதா? 
யாரோ ஒரு லூசன் இப்படி செய்ததை வன்னி மக்கள் எல்லாம் செய்த மாதிரியான மாயையை ஏற்படுத்தும் படி எழுதி இருப்பது கண்டனத்துக்குரியது. 
இதில் சிலதைச் சொல்லலாம் பலதை சொல்ல இயலாதாம்.”


வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய புண்ணியவானை சொல்லவேண்டும். இந்த மாதிரி கண்றாவியான எழுத்து கண்ணில் படாமல் இருந்திருக்கும். 

பாடித்த இரண்டு பதிவுகளுமே போதும் எவ்வளவு புரட்டு இங்கே இருக்கிறது என்று. இதற்கு மேலும் படிப்பதற்கு விருப்பமில்லை. 

என் உடனடி ரியாக்சனை உமக்கு தெரியப்படுத்திய ஒரு சின்ன சந்தோசத்துடன் போகிறன். 
சகோதரம் என்று எல்லாம் என் பதிவில் வந்து பின்னூட்டம் போடவேண்டாம். இப்படி ஒரு சகோதரம் இருந்தால், அவனை கொல்லுவேனே தவிர விட்டுவைக்க மாட்டேன்.

              இது மட்டுமல்ல நான் வன்னி மக்களை கேவலப்படுத்துகிறேனாம் என வலைச்சரத்தில் கூறியிருக்கிறார். திருமதி அவர்களே நான் நுனி கிளையில் இருந்து அடி கிளையில் வெட்டினால் உமக்கென்ன. விளங்குகிறது எங்களின் நிழலில் தானே உங்க பொளப்பு ஓடுது. அவா எதுவும் எழுதுவாவம் தப்பில்லை ”நசமா போக” ”கண்ட கழுதைக்கெல்லாம் எழுதும் விக்கிபீடியா” இதெல்லாம் அவரது வசனம் தான் அப்படியானால் அந்த கழுதைகள் பட்டியலில் தானே வன்னி மக்களும் விக்கிபீடியாவில் இருக்கிறார்கள்.
              என் அம்மா பற்றி கதைக்க யாருக்கும் தகுதியில்லை முதலில் நீங்கள் ஒரு பெண் தானா என பரி சோதித்துக் கொள்ளங்கள்.
       எங்கள் வீரத்தை விமர்சிக்க உங்களுக்கு தகுதியில்லை எதற்கும் நீங்கள் ஒரு நல்ல மனநல வைத்தியரை பார்க்கலாம். ஏனெனில் ஒரு பெண் கடைசி வரையும் இப்படி கதைக்க சந்தர்ப்பமே இல்லை.
     நான் அக்கா தங்கையென மதிக்கும் சகோதரிகளே தாய்க் குலங்களே என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் எனது இச்செயற்பாட்டுக்கு என்ன காரணம் என தங்களுக்கு விளங்கியிருக்கும்.
        நான் எதிரியாக இதுவரை கருதாதா அம்-மணியே என் கணக்கை மட்டுமல்ல ஒற்றை hair கூட தங்களால் பிடுங்க முடியாது. நாங்கள் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டவர்கள், தன்னம்பிக்கை உள்ளவர்கள், மனிதநேயம் கொண்டவர்கள் முக்கியமாக கடவுளை நம்புபவர்கள். நேற்று எனக்கு உதவிய கடவுளுக்கும் அந்த நேரம் கடவுள் போல வந்து அடையாளம் கண்டு காப்பாற்றிய நிருபனுக்கும் கோடி நன்றிகள் அத்துடன்

     சோர்ந்திருந்த என் கரங்களுக்கு இந்தளவு பலம் கொடுத்து இவ்வளவு தட்டச்சிட வைத்து மீண்டும் பதிவுலகம் கொண்டு வந்த அவுஸ்திரேலியாவில் உள்ள பிரபல பெண் பதிவர் அனாமிகா துவாரகனுக்கும் என் நன்றிகள். உங்களை தமிழ் மணம் வாக்குப்பட்டை அன்புடன் அழைக்கிறது ஒடியாருங்கள்.
          நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் அடங்கமாட்டோம் அங்கு நடந்த அநீதிகளை உலகக்குக் காட்ட வைக்கத் தான் எங்களை கடவுள் தப்ப வைத்தவன் அவனுக்கான நன்றிக்கடனாகவாவது கடைசி வரை கத்திக் கொண்டே இருப்போம். நாங்கள் வேலியைப் பற்றி கதைத்தாலென்ன மாட்டைப் பற்றிக் கதைத்தாலென்ன நாங்கள் பயிர்களின் பிரதிநிதிகள்...

”மன்னிப்புக் கேட்கத் தெரிந்தவன் மனிதன் மன்னிக்கத் தெரிந்தவன் கடவுள்”
என் அம்மா எனக்கு கடவுள் தான்..


குறிப்பு - இந்த அம்மணியிடம் 27 கருத்துக்கள் இட்டேன் அத்தனையும் பிரசுரிக்கப்படவில்லை அதன் பிறகே பதிவிட வேண்டும் என முடிவெடுத்தேன். யாரும் சந்தேகிக்க வேண்டாம் இவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் உருவம் கொண்டவர் தான். நீங்கள் என் அம்மாவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டால் இந்தப் பதிவை தணிக்கைப்படுத்த தயாராகவே இருக்கிறேன்.

131 கருத்துகள்:

வியாழன், 21 ஏப்ரல், 2011

பதிவர்களுக்கு லட்ச ரூபாய் போட்டி (அவசர பதிவு)

             எமக்குத் தெரிந்த ஒரு விடயத்தை பத்து நபர்களிடம் பகிருவதில் வரும் சந்தோசமே ஒரு தனி ரகமாக இருக்கிறது. என்னடா இவனை ஒரு புளொக்கிலயும் காணக்கிடைக்கலியே ஊட்டுக்குள்ளால் வந்து பதிவு மட்டும் போடுறானே என நினைக்கிறீங்களா ? சில சந்தோசங்கள் பல வலிகளை பறக்கச் செய்யும். அதே போலத் தான் இதுவும். எனது சுடு சோறை பெற இன்னும் ஓரிரு வாரங்கள் பொறுத்திருங்களேன்.
11:34 AM - By ம.தி.சுதா 29

29 கருத்துகள்:

சனி, 16 ஏப்ரல், 2011

என் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..




இந்தப் பதிவை தட்டச்சிட உதவிய அருமை அக்காவிற்கு முதலில் நன்றி சொல்லி தொடர்கிறேன்.

இந்த வரிகளை
உனக்காய் பிரசவிப்பதில்
பெருமை கொள்கிறது
என் பேனா
என்னை பிரசவித்தவள் தான்
நீயெனும் போது
வார்த்தைகளை மறைக்கிறது
பொறாமையாய் இருக்கலாம்.

74 கருத்துகள்:

புதன், 6 ஏப்ரல், 2011

ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom


     இந்த உலகமானது மனிதனின் கண்டு பிடிப்புக்களால் எந்தளவு எழுச்சியடைகிறதோ அந்தளவு வீழ்ச்சியும் அடைகிறது. அதில் எமக்கு அதிசயமாக பல விடயம் இருக்கிறது.
        இவன் என்னடா அடிக்கடி கதிர் வீச்சைப் பற்றியே கதைக்கிறானே என குழம்பாதீர்கள் காரணமிருக்கிறது நான் ஒரு நாயாக பிறக்க வேண்டியவன் மனிதனாக இருக்கிறேன்... (யாரப்பு சொன்னது இப்பவும் அது தானே) சின்னக் கதிர் வீச்சுக் கூட எனக்கு ஆகாது கைப்பேசி கூட பரம எதிரி.. முக்கியமான ஓரிருவருடன் தான் அதிகமாய் கதைப்பேன்.. அதற்கு மேல் மண்டை பிளக்கும்...

44 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top