வணக்கம் அன்புச் சகோதரங்களே சேமம் எப்படி ?
இன்று இரண்டு விடயப் பரப்பை உள்ளடக்கிச் சந்திக்கிறேன். சரி வாருங்கள் உள்ளே போவோம்.
இலங்கையில் மிக விரைவாக பரவலடைந்து வரும் தொலைத் தொடர்பு வலையமைப்புக்கள் பல்வேறுபட்ட மாற்றங்களுடன் பலருக்கு அறிமுகமாகின்றது. நாங்கள் நேர்மையானவர்கள் அதிகமா வெட்டுறதில்லை என பீற்றிக் கொள்ளும் டயலக் வலையமைப்பு சம்பந்தமான விழிப்புணர்வு விடயத்துடன் சந்திக்கிறேன்.
முதலாவது RINGING TONE சம்பந்தமான விடயம் ஒன்றைப் பார்ப்போம். இந்த வசதியானத முற்கொடுப்பனவு பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர் இருவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இவர்களது இணையத்தளம் போனால் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது அதாவது செயற்படுத்தற்கட்டணம் 50 ரூபாவும் மாதாந்த வாடகை 30 ரூபாவும் தான். அதைத் தான் படம் காட்டுகின்றது. இந்த விதி முற்கொடுப்பனவு வாடிக்கையாளருக்கு மட்டும் தான் வழங்கப்பட்டிருக்கிறது. பிற்கொடுப்பனவு வாடிக்கையாளருக்கு சேவைக்கட்டணமாக 50 ரூபா அறவிடப்படுகிறது. நம்மவர் பில்லை ஒழுங்காகப் பார்ப்பதில்லை என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. மொத்தமாகப் பார்த்தால் வரிகளும் உள்ளடங்கலாக முற்கொடுப்பனவு வாடிக்கையாளருக்கான கட்டணம் 39 ரூபா, பிற்கொடுப்பனவு வாடிக்கையாளருக்கான கட்டணம் 98 ரூபா இது பலருக்குத் தெரியாது.
சரி அது அப்படியே இருக்கட்டும் நீங்கள் ஒரு பாட்டை மாற்றினால் ஆரம்பத்திலேயே அந்த மாதத்திற்கான கட்டணம் அறவிடப்படும். அனால் முதல் இருந்த பாடல் செயலிழக்கமாட்டாது அதற்கான கட்டணமும் மாதம் மாதம் அறவிடப்படும். இது பற்றி எங்குமே அறிவுறுத்தப்படவில்லை.
அடுத்தது இணைய இணைப்புத் தொடர்பானது
BROAD BAND இணைய இணைப்பிற்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது இது வரவேற்கத்தக்கதே. நான் 2 ஜீபி தான் பாவிக்கிறேன். (என்னடா இவன் இந்தக் கொஞ்சமாய் வச்சிருக்கானே என்று நினைக்காதிங்க இவங்கட இணைப்பு வேகத்தில மாதம் முழுக்கப் பாவித்தாலும் இது முடியாது) இதற்கான கட்டணம் 690 ரூபாவாக இருந்தது ஆனால் இப்போது 490 ரூபாவாக மாற்றியுள்ளார்கள் சந்தோசமே அனால் எனது பில்லில் காசு குறையலா ஏன் எனக் கேட்டேன் அதற்கு தற்போது 3 ஜீபி 690 ஆகா மாற்றப்பட்டுள்ளதாம் அதனால் எனக்கு 3 ஜீபியாக மாற்றப்பட்டுள்ளதாம். அட நாதரிப் பய புள்ளைகளா நான் உங்களிட்டை 690 ற்கு இணைய இணைப்பு கொடு என்று சொன்னேனா ? அல்லது 2 ஜீபி கொடு என்று சொன்னேனா ?
இந்த விறுத்தத்தில் அவர்களது இணைய வேகம் 7.2 mbps வரை போகுமாம். யாராவது கேட்டால் சிரிப்பாங்கள்.
சகோதரங்களே அவதானமாக இருங்க இது எனக்கு ஏற்பட்ட அனுபவம் என்பதால் அறிய முடிந்தது உங்களுக்கும் இருக்கும் அதை மற்றவங்களுக்கும் பகிருங்க நாமும் நல்லாயிருக்கணும் எம்மைச் சுழ உள்ளவங்களும் நல்லாயிருக்கணும். நான் நல்லாயிருக்க வாக்கைப் போடுங்க மற்றவங்க நல்லாயிருக்க இதை எல்லோருக்கும் பகிருங்க..
தயவு செய்து இந்த பதிவர்களை பற்றி விபரம் தாருங்கள்.
மகாதேவன் V.K – இவர் தகவல் துளிகள் என்னும் வலைத் தளத்தை கட்டார் எனும் இடத்தில் இருந்து எழுதி வந்தார் வாரத்துக்கு 5 மின்னஞ்சலாவது பாசமாய் போடுவார் திடீரென இவரது எந்த தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.
GSR - ஞானசேகரன் என்ற இவர் என்னில் மிகவும் பாசமுடைய ஒருவர் இந்த வருடம் பிறந்ததற்கு இன்னும் பதிவே போடல புரியாத கிறுக்கல்கள் என்ற வலைத்தளத்தில் அருமையான கணணித் தகவல்களைப் பகிர்ந்து வந்தார். இப்போ எந்தத் தொடர்புமே இல்லை
தயவு செய்து விபரம் தெரிந்தவர்கள் பகிருங்கள்.
குறிப்பு - உறவுகளே இன்று முதல் எனது தளத்தின் பெயர் நான் ஆரம்பத்தில் வைக்க நினைத்தது போல !♔ மதியோடை ♔!என்றே மாற்றப்படுகிறது...
குறிப்பு - உறவுகளே இன்று முதல் எனது தளத்தின் பெயர் நான் ஆரம்பத்தில் வைக்க நினைத்தது போல !♔ மதியோடை ♔!என்றே மாற்றப்படுகிறது...
60 கருத்துகள்:
கருத்துரையிடுக