செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

ஈழத்தில் இருந்து ஒரு அழகு பாடல் ”அஞ்சல”

8:39 PM - By ம.தி.சுதா 5

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

எந்த ஒரு படைப்பாளி செய்யும் படைப்புக்களும் முற்று முழுதான நிறைவானதாக இருப்பதில்லை ஆனால் குறைகளை கண்டு கொள்ளத் தேவையில்லை எனக் கடக்க வைக்கும் படைப்பாக இருந்தாலே அது வெற்றி பெற்ற படைப்புத் தான்.
அந்த வகையில் அண்மையில் வெளியாகி என் மனதைக் கவர்ந்த படைப்பாக நான் காண்பது அஜினோவின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ”அஞ்சல” பாடலைக் குறிப்பிடுவேன்.
ராகம் இசைக்குழு வின் பாடலிசைக்கு குமணனின் வரிகளல் அருள் தர்சன் , நிக்சன் குரல்களில்  உறுதியான அத்திவாரமிட்டு பாடலை காதுகளால் ரசிக்க வைக்க கண்களுக்கு வஞ்சகம் செய்யாமல் நிசாந்தன் கமராவால் புகுந்து விளையாடியிருக்கிறார்.
ஜேய் இன் கத்தரிக்கோல் காட்சிகளை அழகாகவே அடுக்கியிருக்கிறது. காட்சி அசைவுக்கு றெக்சன் முற்று முழுதாக ஆக்கிரமித்து முத்திரை பதித்துள்ளார்.
பாடலின் இடையிடையே எட்டிப் பார்க்கும் சிறுவர்கள், பின்னுக்கிருந்து பார்க்கும் சிறுவர்கள், சந்தை நடத்தை என காட்சி விபரிப்புக்கள் பார்வைக்கு சலிப்பில்லாமலே கொண்டு செல்கிறது.
பாடலில் எனக்கு உறுத்தியவை இரு விடயங்களே, கிரேன் ல் அமைத்த காட்சிக்காக ஆசைப்பட்டு பாடலில் அருமையாக இருந்த மற்றைய காட்சிகளின் தரத்தை smooth இல்லாத இக்காட்சி கெடுத்து விடுகிறது.
றெக்சன் அருமையாக ஆடியிருந்தாலும் சில இடங்களில் குழுவுடனோ பாடலுடனோ ஒட்டாமல் ஆடி விட்டிருப்பது பயிற்சி போதாமையோ அல்லது படப்பிடிப்பு அவசரமோ என சிந்திக்க வைத்தாலும் என்னைப் பொறுத்தவரை அஞ்சல என்ற பாடல் கண்கவர் பாடலே
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
(என் பதிவுகளுடன் இணைந்திருக்கு... இப்பதிவின் கீழ் வரும் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து இணைந்திருங்கள்)

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

5 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

பாடலின் இசையும் காட்சிகளும் மிக அற்புதம். ஊரின் பெருமையை சொல்வது இன்னும் ஒரு சிறப்பு.. வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yarlpavanan சொன்னது…

தங்கள் திறனாய்வை வரவேற்கிறேன்.
நம்மாளுங்க முயற்சிகளை ஊக்கப்படுத்துவோம்.

தனிமரம் சொன்னது…

அருமையான பாடல்.

நல்ல பாடல் மதி.

அருமையான பாடல்.. தொடர்ந்து இன்னுமின்னும் வளருங்கள் வளர்ச்சிப்பாதையில்.. வாழ்த்துகள்..

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top