வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
சம்பவம்
இசைத்துறையில்
இன மொழி பேறுபாடின்றி அனைவராலும் ரசிக்கப்படுபவர்களில் இளையராஜாவும் மிக முக்கியமானவர்.
அப்படிப்பட்ட இசைஞானியை கனடிய தேசத்தை பிரதானமாகக் கொண்டியங்கும் TRINITY என்ற பொறியியல்
நிறுவனம் கனடாவின் மிகப்பெரும் அரங்கங்களில் ஒன்றான rogers centre ல் பெரிய செலவீட்டுடனும் மிகப்
பெரும் பண வசூலுடனும் நிகழ்ச்சிக்காக அழைத்திருக்கின்றது. இவரோடு திரையுலகின் மிகப்
பெரும் பாடகர்களும் பங்கேற்க உள்ளார்கள்.
மேலே இடைவெளியில் உள்ள பாடகர் யாரென்று கணிக்க முடிகிறதா? முடியாவிடில் எனது தனிமடலுக்கு வாருங்கள். |
வழமையாக இப்படியான
நிகழ்ச்சிகள் நடக்கும் போது சிலர் தாமாகவே ஈழப் போராட்டத்துக்காகவும் கொஞ்ச நிதியை
ஒதுக்குவார்கள். அல்லாவிடில் குறிப்பிட்ட குழுவொன்றால் இதற்கான பணம் வசூலிக்கப்பட்டு
ஈழத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆனால் 2009 ற்குப்
பிறகு இந்த நிலமை தலைகீழக மாறியதுடன் பலர் சுயலாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு நிகழ்ச்சிகளை
நடாத்த ஆரம்பித்தனர். ஆனால் இப்போதும் சிலர் இதிலிருந்து ஒரு பகுதியை ஈழ மக்களின் மேம்பாட்டிற்காக
ஏதாவது அமைப்பூடாகவோ அல்லது தன்னிச்சையாகவோ ஒரு தொகைப் பணத்தை வழங்கி வந்திருக்கின்றனர்.
இச் செயற்பாட்டினால்
ஈழத்தை சாக்காக வைத்து பண வசூலிப்பில் ஈடுபட்டு வந்தவர்களின் பிழைப்பில் பெரும் பாதிப்பை
ஏற்படுத்தியது. அதே ஆதிக்கம் தான் இந்நிகழ்வில் மூக்கை நுழைத்திருக்கின்றது.
ஆனால் நேற்றைய
தினம் நான் முகநூலில் பகிர்ந்திருந்த மடலானது ஒரு பெரியவரால் உருவாக்கப்பட்டிருந்தாலும்
அம்மடலை சில விசமிகளே மின்னஞ்சல் ஊடாக விநியோகித்து வருவது மட்டுமல்லாமல் அந்நிகழ்ச்சிக்கெதிராக
பல வழிகளில் சதி வலைகளைப் பின்னியும் வருகிறார்கள்.
அந்நிறுவனத்தைச்
சார்ந்த ஒரு பிரமுகருடன் தொடர்பை ஏற்படுத்திய போது அறிய முடிந்த விடயங்கள் இவை தான்.
விடுதலைப் புலிகள்
அமைப்பின் பெயரை பயன்படுத்தி வரும் கனெடியக் குழு ஒன்று இவர்களிடம் பண வசூலிப்பிற்காக
அணுகியிருக்கின்றது. ஆனால் இந்நேரம் உங்கள் அமைப்பிற்கு கொடுக்க வேண்டிய தேவை இல்லை.
என உறுதியாக கூறிய பின்னர் பல வழிகளில் முயன்றும் முடியாத நிலையில் பல்வேறு வகையில்
கனடிய மக்களிடையே பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இறுதியாக இவர்கள் எடுத்துள்ள
ஆயுதம் என்னவென்றால் நிகழ்வு நடைபெறும் கார்த்திகை மாதமானது மாவீரர் நாள் அனுஷ்டிக்கும்
மாதம் என்பதால் இம்மாதம நிகழ்த்தக் கூடாது என நேரடியான அழுத்தத்தையும் பிரச்சாரத்தையும்
வழங்கி வருகிறார்கள்.
முன்னணி வரிசைக்கான ரிக்கட்டுக்கள் அனைத்தும் விற்கப்பட்டதன் பின்னர் இந்தப் பரப்புரை எடுபடுமா என்ற கேள்விகளுக்கு அந்நாட்டு ரசிகர்களே
முடிவெடுக்க வேண்டும்.
பிற்சேர்க்கை
ஒரு முதியவர் எழுதிய
மடல் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். உண்மையில் அவர் உணர்வையும் ஈழமக்களுக்கான ஆர்வத்தையும்
வரவேற்கிறேன். இருந்தாலும் ஐயா இளையராஜாவிடம் நாம் எமக்கு உதவி செய் என்று கேட்பதில்
எந்த வகையில் நியாயம். எத்தனை ஈழத்தவரே தம் மக்களை மறந்து போய் வாழ்கையில் நல்ல வசதியாக
வாழ்கையில் அவரிடம் இரப்பது எமக்கான தன்மானக்கேடாகவே என்னால் உணர முடிகிறது என்பதை
இச்சிறியவன் தன் உணர்வுக்கெட்டிய வகையில் கூறிக் கொள்கிறேன்.
நன்றியுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
(இப்பதிவை இணையத்தளங்கள் பயன்படுத்த விரும்பின் பயன்படுத்தலாம். ஆனால் சின்ன வேண்டுகொள் mathisutha56@gmail.com என்ற முகவரிக்கு தங்கள் பதிவுத் தொடுப்பைத் தெரியப்படுத்தி உதவவும்)
6 கருத்துகள்:
கருத்துரையிடுக