Featured Articles
All Stories

புதன், 28 மார்ச், 2012

என் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பதிவு

முற்குறிப்பு - இதை படித்து முடித்தவரிடம் ஒரு அன்பான வேண்டு கோள் படித்து முடித்ததும் 3 தரம் துப்பி (உமிழ்ந்து) விடுங்கள்
         ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருந்திருப்பாள் என்று சொல்வார்கள். இந்தக் கருத்தானது என் வாழ்க்கையில் 100 வீதம் நானே உணர்ந்து கொண்ட உண்மையாகும்.
12:35 AM - By ம.தி.சுதா 38

38 கருத்துகள்:

புதன், 7 மார்ச், 2012

விதவைகளின் விழி விதைகளை உலகறிய வைக்கும் ஒரு ஈழப் படைப்பு

    நாளைய தினம் மார்ச் 8ம் திகதியாகும். உலகப் படைப்பின் முக்கிய ஜீவன்களான பெண் குலத்தை போற்றும் ஒரு சர்வதேச தினமாகும். இத்தினத்தில் ஈழத்துக் கவிஞரான நெடுந்தீவு முகிலனின் “வெள்ளைப் பூக்கள்” படைப்பு அரங்கேறுகின்றது.
  ஈழக் குறும்படங்கள் பல ஆரம்பிக்கப்பட்டாலும் அதில் பங்கேற்கும் கலைஞர்களின் ஆணவம், அகங்காரம் என பற்பல தனிப்பட்ட திமிர்களால் பல படங்கள் முடங்கிப் போன நிலமையில் நெடுந்தீவு முகிலனின் முயற்சியும் அவரது குழுவின் ஒற்றுமையும் ஒரு சிறந்த படைப்பொன்றை வெளிக் கொணர இருக்கிறது.
   விதவைப் பெண்களின் வாழ்வைச் சித்தரிக்கப் போகும் இப்படத்தில் பதிவரான கிருத்திகன் கதாநாயகனாகவும், இந்து கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இக் குறும்படானது மகளிர் தினமான நாளை 8 ம் திகதி காலை 10.35 மணிக்கு யாழ் மணிக்கூட்டு வீதியில் அமைந்துள்ள ஞானம்ஸ் ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளது.
அழைப்பிதழ்
      இதில் பல பிரபலங்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
இத்திரைப்படத்தில் இன்னுமொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் என் மிகப் பெரும் அபிமானத்திற்குரிய இசையமைப்பாளர் இசைப்பிரியன் அவர்கள் மீண்டும் தன் இசையாலும் குரலாலும் என்னைக் கட்டிப் போட்டு விட்டார். அத்துடன் படத்தை இயக்கும் முகிலனும் தனது வழமையான பாணியில் சில சில்லறை வரிகளாலேயே சேவிகளுக்கு தேனூற்றிச் சிதைத்து விட்டிருக்கிறார்.
  பலத்த எதிர்பார்ப்புடனும் பலரது ஏகோபித்த ஆதரவுடனும் வர இருக்கும் வெள்ளைப்பூக்களை ஸ்பரிசிக்க நானும் செல்கிறேன்..

12 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top