வணக்கம் உறவுகளே
சுகநலங்கள் எப்படி ?
வாசிப்புப் பழக்கம் என்பது தற்போதைய காலத்தில் மிக மிக அருகி வருவதற்குக் காரணம் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி தான் காரணம் என்றாலும் அதில் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தவை மின்னூல்களாகும்.
அளவுக்கதிகமாக காவத் தேவையில்லை, கைக்கடக்கமாக mobile phone , Tablets என்பவற்றில் படிக்கலாம் என்றிருந்த நிலையில் சந்தைக்குள் புகுந்த இன்னொரு விடயம் தான் kindle ல்கள் ஆகும்.
மற்றைய சாதனங்களை விட கண்ணுக்கு பாதிப்புக் குறைந்தது என்ற விளம்பரத்தோடு வாசிப்புப் பிரியர்களின் கைகளை அலங்கரிக்க ஆரம்பித்திருந்தாலும், அதன் விலையானது எல்லா மட்டத்தினருக்கும் தக்கதாக அமையவில்லை.
இதே வேளையில் தான் amazon kindle கள் ஆனது தனது செயலியை கைப்பேசிகளுக்கும் மாற்றீடுகளுடன் அளித்தது. அப்போது தான் நானும் அதை தரவிறக்கி பயன்படுத்த ஆரம்பித்தேன்.
வழமையாக புத்தகங்களின் அனுபவத்தை மின்னூல்களால் கொடுக்க முடிவதில்லை என்பதால் நானும் முடிந்தவரை தவிர்த்து வந்திருக்கிறேன் ஆனால் இந்த செயலியில் வாசிக்கும் போது கிடைக்கும் அனுபவமானது இன்னொரு ரசனைக்குரியதாக அமைந்திருந்தது.
இடது பக்க கீழ் மூலையில் புத்தகத்தை படித்து முடிப்பதற்குரிய பருமட்டான நேரம் காண்பிக்கப்படும் அல்லது அது அவ் அங்கத்தை படித்து முடிப்பதற்கான நேரமாகவும் அமைந்திருக்கும்.
அல்லது location க்குரிய இலக்கத்தைக் காட்டிக் கொண்டிருக்கும்.
அதே போல வலது பக்க மூலையில் புத்தகத்தின் எத்தனையாவது வீதத்தை படித்துக் கொண்டிருக்கிறோம் என்பது காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்.
அது போல வலது பக்க மேல் மூலையில் எமது தற்போதைய நேரத்தைக் காட்டிக் கொண்டிருக்கும்.
நல்ல ஒரு அனுபவத்தைக் கொடுக்கும் இந்த டிஜிட்டல் வளர்ச்சிகளின் பின்னே இருக்கும் ஆபத்துக்களும் முக்கியமானது.
நாம் என்னத்தைப் படிக்கிறோம். எதில் அதிக ஆர்வம் செலுத்துகிறோம் என்பதை ஏதாவது குற்றச் செயல்களின் போது ஆராய்வதற்கு எமது வாசிப்பும் ஏதுவாக அமையும்.
நாம் என்ன கொலை செய்வதற்கா திட்டம் போடுகிறோம் இல்லைத் தானே, படிப்பது இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் தானே என்பது தான் இப்போதைக்குள்ள மனத்திருப்தி. ஆனால் நான் என்ன செய்கிறேன் என்பதை இன்னொருவன் அவதானித்துக் கொண்டிருக்கிறான் என்பது தான் சின்ன மனப்பயம்.
android மற்றும் ios கைப்பேசிகளில் நான் பாவித்துப் பார்த்து விட்டேன். நீங்களும் முயற்சியுங்கள்..
அமேசனில் ஒரு நாளைக்கு சராசரி 20 புத்தகமாவது இலவசமாக பார்வைக்கு வைக்கிறார்கள்.
தரவிறக்கி வைத்துக் கொண்டால் நேரம் அமையும் போது படித்துக் கொள்ளலாம். தற்போது முக்கிய எழுத்தாளரான லக்சுமி சரவணகுமாரின் ரூஹ் நாவல் இலவசமாகக் கிடைக்கிறது. சில நாட்களுக்கு முன் சிவராஜ் இன் வஜ்ரவியூகம் என்ற அருமையான திரில்லர் நாவல் இலவசமாக கிடைத்திருந்தது. இது தான் நான் முதல் முதல் படித்த கின்டில் புத்தகமாகும்.
இப்போது எனது கின்டில் நூலகத்தில் 72 புத்தகங்கள் வாசிப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. வழமையாக ஒவ்வொரு நாளும் 30 நிமிடத்தை வாசிப்புக்கு ஒதுக்கிக் கொண்ட நான் இப்பொது ஒரு மணித்தியாலம் ஆக்கியிருக்கிறேன். என்ன ஒரு சிக்கல் என்றால் தூக்க நேரம் தான் குறைந்து செல்கிறது. எங்களுக்கெல்லாம் இனி மனிதப்பிறபு் இல்லைத் தானே படிப்பதெல்லாம் இப்பிறப்பில் தான் படிக்க முடியும். அதனால் பரவாயில்லை படித்துக் கொள்வோம்
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
தொடர்ந்தும் என் பதிவுகளுடன் இணைந்திருக்க இந்தப் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்
https://www.facebook.com/mathisuthaofficial/
https://www.facebook.com/mathisuthaofficial/
4 கருத்துகள்:
அருமையாகச் சொல்லி உள்ளீர்கள்...
உண்மையும் கூட...
அருமையான பதிவு
https://tamilmoozi.blogspot.com/2020/04/blog-post_27.html?m=1
சிறப்பான பதிவு
சிந்திப்போம்
கருத்துரையிடுக