வியாழன், 18 ஜனவரி, 2018

வரவு செலவுப் பதிவுக்கு உதவும் mobile மென்பொருள்

PM 9:34 - By ம.தி.சுதா 4


வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

பழைய காலங்களில் கணக்கெழுத ஒரு கொப்பி வைத்திருப்போம். பச்சை மட்டையுடன் உள்ளே pink நிறத்தில் வரவுக்கு ஒரு வரி செலவுக்கு ஒரு வரி எனக் கோடிடப்பட்டிருக்கும்.

ஆனால் காலப் போக்கில் நாளுக்கு நாள் நகரும் எங்களால் அதை காவுவது சிரமமான போது கையில் கைப்பேசிகளும் உதித்ததால் அதன் note pad இல் சேமித்துக் கொள்வோம். ஆனால் திறண்பேசிகளுக்கென கணக்கியல் தொடர்பான பல இலவச மென்பொருட்கள் குவிந்து கிடக்கிறது.

நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க நான் பாவித்த ஒரு மென் பொருளின் விபரத்தை இடுகிறேன். ஆரம்பத்தில் பல மென் பொருட்கள் இட்டு சோதித்த பின்னரே இந்த மென்பொருளைத் தொடர ஆரம்பித்தேன். இதன் சாதக பாதகங்களை சுருக்கமாகத் தருகிறேன்.

சாதகம்
1) உடனுக்குடன் எமது வரவு செலவுகளை தரவேற்றிக் கொள்ளலாம்.
2) எமது google drive and dropbox  இல் backup எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
3) விரும்பிய கணக்குகளை மட்டும் excel வடிவில் மற்றையவர்களுக்கு mail செய்து கொள்ளலாம்.
4) இதே மென்பொருள் android and iphone இலும் இருப்பதால் நாம் திறன்பேசிகள் மாறிக் கொண்டாலும் backup மூலம் இன்னொரு இடத்துக்கு மாறிக் கொள்ளலாம்.
5) ஒரே மென்பொருளில் எமது வெவ்வேறு வகையான கணக்குகளை தனித்தனியே நிர்வகிக்கலாம் (வீட்டுச் செலவு , தொழில் நிறுவனச் செலவு)

பாதகம்
1) android அளவுக்கு iphone இல் இதன் திறன் குறைவு அதாவது iphone இல் இதனுடன் எம் மின்னஞ்சலை இணைக்க முடியாது ஆனால் google drive and dropbox இணைக்க முடியும்.


நினைவுக்கு வந்தவையை குறிப்பிட்டிருக்கிறேன் ஆனால் எனக்கு ஒப்பீட்டளவில் expense manager என்ற இந்த மென் பொருள் தான் மிக மிக உபயோகமானதாக உள்ளது.

தரவிறக்குவதற்கான தொடுப்பு

அன்ரோயிட்

https://play.google.com/store/apps/details?id=com.expensemanager

ஐபோன்

https://itunes.apple.com/us/app/ez-expense-manager/id866932213?mt=8


படங்களின் மேல் சொடுக்குவதன் மூலம் பெரிதாக்கிப் பார்க்கலாம்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

இந்தப் பதிவு பிரயோசனமானதெனக் கருதினால் உங்கள் நண்பருக்கும் பகிருங்கள்.

என் பதிவுகளுடன் இணைந்திருக்க கீழுள்ள பேஸ்புக் like பொத்தானை சொடுக்கிச் செல்லவும்.

www.facebook.com/mathisuthaofficial/









About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

4 கருத்துகள்:

தனிமரம் சொன்னது…

சேமம் எப்படி? பயன் உள்ள கணக்கியல்த்துறைக்கு அவசியமான பகிர்வு.

ம.தி.சுதா சொன்னது…

@தனிமரம்
நன்றி அண்ணா

Unknown சொன்னது…

அவசியமான மென்பொருள்

Mohamed சொன்னது…

அருமை நண்பரே

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top